May 16, 2010

சாதனை படைத்த இங்கிலாந்தும் சறுக்கிய ஆஸ்திரேலியாவும்.

இது வரை நாட்களாக விறு விறுப்பாக  நடைபெற்ற T 20 உலக கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டி மேற்கிந்திய தீவுகளின் பார்படோசில் நடைபெற்றது..

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை இறுதி நேரத்தில் மைக் ஹசியின் அபரிதமான திறமையால் பறித்துக்கொண்ட ஆஸ்திரேலியாவும். இலங்கையை இலகுவாக தோற்கடித்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன..

இதுவரை எத்தனையோ கிண்னங்கள் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருந்தாலும். இருபதுக்கு இருபது உலக கிண்னத்தை இதுவரை பெற்றிராத அதை பெற்றே தீர வேண்டுமென்ற வேட்கையுடன் மைக்கல் கிளாக் தலைமையிலான பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அனியும்...

இதுவரை சர்வதேச அளவில் உலக  கிண்ணங்கள் பெற்றிராத.. இப்போட்டியை வென்று அக்கனவை நனவாக்க வேண்டுமென்ற வெறியுடன்  கொலிங்வூட் தலைமையிலான இளமையான புது முகங்களுடனான இங்கிலாந்து அனியும்....

கிரிக்கட்டில் ஆதிவாசிகளான இவர்கள் கிரிக்கட் பகையாளிகளும் கூட
மொத்ததில் இது ஒரு குட்டி ஆஸஸ் தொடராகவே நடந்தது..

நானய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து  முதலில் ஆஸ்திரலியாவை துடுப்பெடுத்தாட பனிக்க அதன் படி  முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய ஆஸ்திரேலியா வார்னர் 02 , வொட்சன் 02 ,ஹடின் 01  என ஆட்டமிழந்து வெளியேறினாலும் வழமையைப்போல் யாராவது ஒருவர் அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை பார்வையாளர்களாகிய எங்களைப்போன்ற அனி வீரர்களிடமும் இருந்தது..  அதன் போலவே கிளாக்கும் டேவிட் ஹஸியும் இனைந்து மெதுவாக ஓட்டங்களை அதிகரிக்க.

கிளார்க் 27 ரண்களுடன் ஆட்டமிளக்க பின் வந்த கெமரன் வைட் தனது வழமையான அதிரடியை தொடங்கினார் அடடா இங்கிலாந்தின் நிலை அவ்வளவுதான் என்றிருக்கும் போது.. வைட் 19 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார் நாங்கு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உட்பட பின் ஜோடி சேர்ந்த அண்னன் தம்பிகளால் ஆஸ்திரேலியாவை 147 என்ற இலக்கு வரையே கொண்டு போக முடிந்தது...

டேவிட் ஹஸி 54 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.. Mr.Cricket ஆல் 10 பத்து பந்துகளில் 17 ஓடடங்களை மாத்திரமே பெற முடிந்தது இரண்டு பவுண்டரிகள் உட்பட...

கொலிங்கவூட் உட்பட இங்கிலாந்தின் பதிநொரு வீரர்களிடமும் எப்படியாவது வென்றிட வேண்டும் என்ற ஆக்ரோசம்,வெறி,தாகம், முயற்சி அவர்களின் களத்தடுப்பு பந்துவீச்சுகளில் தெரிந்தது... இவ்வளவு நாளும் ஒரு போட்டியை வெல்ல வேண்டுமென்ற போராட்டக்குனம் ஆஸ்திரேலியா அனியிடம் இருந்தது இன்று அதை இங்கிலாந்து பறித்துக்கொண்டதாகவே நான் உணர்கிறேன்...

இங்கிலாந்து பந்துவீச்சை பொருத்தவரை சைட்பொட்டம், கிரேம் ஸ்வான், ஸ்டுவட் ப்ரோட் மிகச்சிறப்பாகவே செய்திருந்தனர்..   ஸ்வானின் 4 ஓவர்களில் 17 ஓட்டங்கலே பெறப்பட்டன அருமையான பந்துவீச்சு ஸ்டுவட் ப்ரொடின் இறுதி ஓவரில் 7 ஓட்டங்களே பெறப்பட்டன - சயிட் அஜ்மல் போட்டியை பார்த்திருந்தால் நிசசயம் கவலைப்பட்டிருப்பார்..


148 என்பது இந்த மைதானத்தை பொருத்தவரை சிறந்த இலக்கே...
2 ஓட்டத்துடன் லம்ப் ஆட்டமிழக்கவே... ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கடா இங்கிலாந்தின் உலக கிண்ண கனவு அவ்வளவுதான்... என்றிருந்த நிலையில் அதன் பிறகுதான் தொடர்ந்தது ஆச்சரியம் கிரேக் கீஸ்வெஸ்டர் கெவின் பீட்டர்சன் இருவரும் இனைந்து பெற்ற 111 ஓட்ட இனைப்பாட்டம் இங்கிலாந்தின் வெற்றியையும் முதலாவது உலக கிண்ணத்தையும் உறுதிபடுத்தியது...
என்னா அடி.... ஒரு இறுதி போட்டியொன்றில் எந்தவித பதற்றமோ தடுமாற்றமோ இல்லாமல் மிக நேர்த்தியாக நிதானமாக  பீடர்சன்/கீஸ்வெஸ்டர் துடுப்பெடுத்தாடிய விதம் மிக அருமை.. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கண்டாலே தடுமாறும் இலங்கை, இந்திய துடுப்பாட்ட வீரர்கள் கவனித்துக்கொள்ளட்டும்..

இறுதியில் கீஸ்வெஸ்டர் 49 பந்துகளில் 63 ஓட்டங்கள் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்ளடக்கம் இங்கிலாந்துக்கு தேவையான னேரத்துக்கு கை கொடுத்திருக்கிறார் மனிதர்.. வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடிய  மெட் பிரயரை நிறுத்திட்டு ஏன் இவரை உள்ளே கொனர்ந்திருக்காங்கண்டு நினைத்தேன் அது இதுக்குத்தான் என நிறுபித்து விட்டார் மனிதர்...  அடுத்தவர் பீடர்ஸன் இவர் ஆடுகளத்தில் நின்றாலே ஒரு உற்சாகம்தான்
31 பந்துகளில் 47 ஓட்டங்கள் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட, இறுதியில் மோகனும் கொலின்வூட்டு முடித்து வைத்தனர் மூன்று ஒவர்கள் மீதமிருக்கையில்.


ஆஸ்திரேலிய பந்துவீச்சை பொறுத்தவரை பெரிதாக யாரும் பயமுறுத்தவில்லை..  கிளார்க் அவர்ளே முக்கியமான இறுதி போட்டியொன்றில் எப்படி வியூகங்கள அமைக்கவேண்டுமென உங்கள் சீனியரான ரிக்கி பொண்டிங்கிடம் ஆலோசனை பெற்றால் நல்லது..... பாகிஸ்தானுக்கு செல்லவேண்டிய வெற்றியை ஹசியின் மெஜிக் துடுப்பாட்டத்தால் பறித்துக்கொண்டு முதலாவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கனவுகளோடு களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே...

மாற்றமாக இது வரை உலக கிண்ணங்கள் எதனையும் வென்றிராத இங்கிலாத்துக்கு இது மிகப்பெரிய சாதனையே,, சந்தோசமே...  போட்டியை வென்றவுடன் அவர்களின் முகங்களில் தென்பட்ட சந்தோசம் ஆரவாரம் அடடா அடடா..... ஆஸ்திரேலியர்கள் இதனையும் வென்றிருந்தால் அவர்களின் ஆனவம் இன்னும் அதிகரித்திருக்கும் இங்கிலாந்து வென்றதே நலம் என நினைக்கிறேன்..

இறுதிப்போடடியின் நாயகனாக கிரேக் கீஸ்வெஸ்டரும் போட்டித்தொடரின் நாயகனாக கெவின் பீட்டர்சனும் தெரிவானார்கள்... நான்  மேலே சொல்ல மறந்த இன்நொருவர் பயிற்றுவிப்பாளர் அண்டி பிளவர் இவரின் பயிற்றுவிப்பின் கீழ் இங்கிலாந்தின் முன்னேற்றம். இந்த வெற்றியில் இவருக்கும் பங்குண்டு..

மூன்று உலக கிண்ண இறுதிபோட்டிகளில் தோற்று நாடு திரும்பிய இங்கிலாந்து... இம்முறை உலக கிண்ணத்துடன் நாடு திரும்பும் ராஜ மரியாதை கிடைக்கலாம்....

அட மறுபுரத்தில் பெண்கள் உலக கிண்ண இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 83 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் நியுசிலாந்துக்கெதிராக..
ஆஸ்திரேலியா அக்கா மார்களுக்கும் ஆப்புத்தானோ,,,, இன்றைக்கு...


தூங்காமல் நித்திரையை தியாகம் செய்து ஒரு பதிவு போட்டிருக்கேன் ஏதாவது திட்டிட்டு ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க மஹா ஜனங்களே.....

5 comments:

தமிழ் மீரான் said...

அழகிய தமிழாலான தங்கள் விமர்சனம் மிக அருமை.!
ஒரு சில எழுத்துப் பிழைகளில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வாழ்த்துக்கள் நண்பரே.!

SShathiesh-சதீஷ். said...

எனக்கும் சந்தோசம் பந்துக்கு பந்து விளக்கத்துடன் என் பதிவு படித்துப்பாருங்களேன்
http://sshathiesh.blogspot.com/2010/05/t20_16.html

Riyas said...

நன்றி தமிழ் மீரான்
உங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும்...

Riyas said...

நன்றி சதீஸ்..

செந்தழல் ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Related Posts Plugin for WordPress, Blogger...