ஆனாலும் சிலருக்கு பாடசாலை சூழல் என்பதே பிடிக்காது.. புத்தக கல்வி என்றாலே கசப்பாகயிருக்கும் காலையிலேயே எழுந்து சீருடையனிந்து புத்தக மூட்டை தூக்கிகொண்டு பாடசாலைக்கு செல்லவேண்டும். அங்கே சென்றதும் ஆசிரியர்கள் எல்லாமே ஹிடலர்களாகவே தெரிவார்கள்.. அவர்களின் கவனம் முழுவதும் வேறு திசைகளிலேயே இருக்கும் செல்லப்பிரானிகள் வளர்த்தல், விளையாடுதல், ஊர்சுற்றுதல் போன்றவைகளில். படிப்பதைத்தவிர மற்ற எல்லாத்திலும் திறமையானவர்கள் இவர்கள்.. பாடசாலை விடுமுறை கிடைத்தாலே சொர்க்கம் கிடைத்த உணர்வு இவர்களுக்கு. இதைச்சொல்லும் போது பசங்க படத்தில் வரும் "பக்கோடா" உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம் அவர் ஒவ்வொரு மாத லீவு நாடகளை எண்ணுவது செம காமெடி அதிலும் விஜேகாந்த் ஸ்டையிலில் மிமிக்ரி சான்சே இல்ல சூப்பர்..
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் அண்மையில் என்னைப்பாதித்த ஒரு திரைப்படம். புத்தகத்தை கரைத்துக்குடித்தாலும் படிப்பே தலைக்கேறாத ஒரு சிறுவனின் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களையும். அவ்வாறானவர்களுக்கு எவ்வாறு கல்வியை ஊற்றலாம், அவர்களிடத்தில் வேறு என்ன திறமை இருக்கு என்பதனையும் மிக தத்ரூபமாக சொன்ன படம். ஹிந்தியில் வெளியான Taare Zameen Par இது 2007 ம் ஆண்டு வெளியானாலும் அண்மையிலேயே என்னால் பார்க்க முடிந்தது. ஹிந்தி மொழி சுத்தமாக தெரியாது என்பதால் ஹிந்திப்படங்கள் பார்பபது குறைவு. ஆனாலும் இப்படத்தை பார்க்க மொழியே தேவையில்லை அதன் காட்சிகளூடாகவே புரிந்து கொள்ளமுடிகிறது கதையை. இதுவே இப்படத்தின் வெற்றி என்பேன்.
படத்தின் கதையை முழுமையாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை காரணம் நீங்கள் எல்லோரும் இதை பார்த்திருப்பீர்கள் நான்தான் ரொம்ப லேட்டு.(லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவமில்ல)
இப்படத்தின் தயாரிப்பு இயக்கம் எல்லாமே அமீர்கான் என்ற அற்புத கலைஞனுடையது என்று அறிந்ததும் கொஞ்சம் வியந்து போனேன் அவருக்குள் இத்தனை திறமைகளா...அவர் இயக்கிய முதல் திரைப்படமும் இதுவே. ஒரு அனுபவ முதிர்ச்சியுள்ள இயக்குனருக்குரிய நேர்த்தியை இதில் கானலாம். அவவளவு அருமையான திரைக்கதை. படம் தொடங்கியது முதல் முடியும் வரை பார்வையாளனாகிய எங்களை வேறு திசையில் கவனத்தை செலுத்தவிடாமல் இருப்பதே இவரின் வெற்றி எனலாம் ஒவ்வொரு காட்சிகளும் மனதை தொட்டு செல்பவை. பல காட்சிகள் எங்கள் பாடசாலை வாழ்க்கையை ஞாபகபடுத்துகிறது. சில காட்சிகளில் அச்சிறுவனூடாக என்னை நான் கண்டேன். உதாரணம் தண்ணீர் குட்டையில் கப்பல் செய்துவிடும் காட்சி.
இப்படத்தின் பாத்திர தேர்வுகள் எல்லாமே அருமை. அதிலும் கதையின் நாயகனான இசான் என்ற அந்த சிறுவனின் நடிப்பு பாராட்டப்படவேண்டியது. பாடசாலை செல்லும் வழியில் புதினம் பார்த்துக்கொண்டே செல்வது, பாடத்தை கவனிக்காமல் வெளியில் நடக்கும் விஷயங்களை கவனிப்பது, அண்னனிடம் அடம்பிடித்து லீவுக்கடிதம் வாங்குவது. தந்தையிடம் மன்னிப்பு கேட்பது என எல்லா காட்சிகளிலும் கவனத்தை ஈர்க்கிறார்..
இதற்கு இலகுவான வழியொன்றை இயக்குனர் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தில் சொல்லிருப்பார். அதுதான் தன் மனசில் உள்ள எல்லாவற்றையும் கடிதமாக எழுதி சக மாணவர்களைக்கொண்டே வாசிக்க வைப்பது இதன் மூலம் அவர்களின் விருப்பு வெருப்புகள் பிடித்தவை பிடிக்காதவைகள் வெளியில் கொண்டு வரலாம். ஆசிரியர்களும் தங்களின் குறைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பாக்யிருக்கும். இவ்வாறான நடைமுறையை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொண்டாலே போதுமானது.. நான் கல்வித்துறை அமைச்சரானால் இத்திட்டத்தை அமுல்படுத்தலாம் என நினைக்கிறேன் எப்புடி.. கல்விக்கு முடிவில்லை என்பது போல எனது கட்டுரையும் எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறது முடிவில்லாமல்.. கொஞ்சம் பொறுங்க....
இனி Taare zameen க்கு வருவோம்.. படத்தின் இடைவேளையின் போதே அமீர்கான் அறிமுகம் ஆகிறார். அதுவரைக்கும் படத்தின் நாயகன் இசான் என்ற அந்த சிறுவன் தான். வெளியூர் பாடசாலையில் ஹொஸ்டலில் தங்கி படிக்க அனுப்ப போவதை அறிந்த இசான்.
"அம்மா நான் இனி ந்ல்லா படிப்பேன்மா.. நான் படிக்க முயற்சி செய்றன்மா" என சொல்லி A.B.C.D சொல்லிக்காட்டுவதும் அதன் பிறகு ஹொஸ்டலில் விட்டு வந்த பின்பு. குளியலறையில் தனியாக் போய் அழுவதும் கண் கலங்க வைக்கும் காட்சிகள்.
தன் மகனை ஹொஸடலில் விட்டு பிரிந்து வரும் போது கண்கலங்குவதும் வீட்டிற்கு வந்து புத்தகத்தில் உள்ள் சித்திரத்தை பார்த்து கண் கலங்குவதும் தொலைபேசியில் தன் மகனிடம் பேசும் போது பதில் ஏதும் வராததால் மன்ம் உருகுவதும் ஒரு தாயின் உண்மையான் பாசத்தை வெளிப்படுத்தும் அழகான் காட்சிகள்..
அமீர்கான் மாணவர்களிடத்தில் நடந்துகொள்ளும் விதமும். இசானின் பிரச்சினையை அறிந்து அவனை பாடத்தின் பக்கம் ஆர்வமூட்டுவதும் அவனின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதும். இசானின் பெற்றோரை சந்திக்க வருதல், இறுதியில் சித்திர போட்டி ஒழுங்கு செய்தல் என எல்லா காட்சிகளிலும் மனதைத்தொடுகிறார்.
இசானின் அப்பா...இசான் அறிவித்தல் பலகையில் உள்ளதை வாசிக்கும் போது கண் கலங்குவதும் தூர நின்று பார்த்து செல்வதும். சித்திர போட்டியில் முதலாம் பரிசு பெற்ற இசானைப்பற்றி ஆசிரியர்கள் எல்லாம் பெருமையாக சொல்லும் போது தன் மகனை புரிந்து கொள்ளாமல் விட்டுட்டோமே என்ற் நினைப்பில் வருந்தி அழுவதும் கண்களை நனைக்கும் காட்சிகள்...
இப்படத்தில் காதல் கத்திரிக்கா என ஒன்றும் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய பலம். அவுத்துப்போட்டு ஆடும் ஹீரோயினும் இல்லை.
அடுத்தது எஹ்சான் லாயின் இசையில் பாடல்கள் கதையோடு பயனிக்கின்றது. நிறைய பாடல்கள் பின்னனியிலேயே ஒலிக்கிறது எல்லா பாடல்களும் கேட்கும் ரகம். பின்னனி இசையும் பிரமாதம். ஓளிப்பதிவு, எடிட்டிங் போன்றவைகளும் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. படத்தில் தேவையற்ற காட்சிகள் என எதுவும் இல்லை.. மசாலா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது புடிக்காதிருந்திருக்கிலாம்.
காட்சிப்படுத்தப்படும் பெண் உடம்பையும், நாயகனின் சுத்தி சுத்தி அடிக்கும் சாகஸ விளையாட்டுக்களையும் காட்டும் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் படங்களையும் பார்ப்பதைவிட இவ்வாறான படங்களை மொழி புரியாமலேயே பார்க்கலாம்..
மறக்காம ஒரு ஓட்டு குத்திட்டு போங்க நண்பர்களே அப்படியே ஏதாவது சொல்லிட்டும் போங்க..
17 comments:
நல்ல விமர்சனம் ரியாஸ்... இப்ப உள்ள படங்களையுன் கொஞ்சம் விமர்சனம் பண்ணுங்க... அப்புறம் சீக்கிறம் கல்வி அமைச்சர் ஆக வாழ்த்துக்கள்.
இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
நல்லா எழுதிருக்கீங்க.
நல்லா எழுதி இருக்கிங்க ரியாஸ் முக்கியமா.. அந்த கிளைமாக்ஸ் படம் வரையற போது அமீர்கான் தேடும் போது... அவன் வருவதும் அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகளும் கண்களை குளம் ஆக்கும்...
வாழ்த்துக்கள்..
நாடோடி..
//நல்ல விமர்சனம் ரியாஸ்... இப்ப உள்ள படங்களையுன் கொஞ்சம் விமர்சனம் பண்ணுங்க... அப்புறம் சீக்கிறம் கல்வி அமைச்சர் ஆக வாழ்த்துக்கள்.//
ரொம்ப நன்றி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.. இப்ப வரும் படங்களை பற்றி எழுதிட்டாப்போச்சு
ஜாக்கிசேகர்..
//நல்லா எழுதி இருக்கிங்க ரியாஸ் முக்கியமா.. அந்த கிளைமாக்ஸ் படம் வரையற போது அமீர்கான் தேடும் போது... அவன் வருவதும் அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகளும் கண்களை குளம் ஆக்கும்...
வாழ்த்துக்கள்..//
மிக்க சந்தோஷம் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
உங்களைப்போன்ற சீனியர்களிடமிருந்து வாழ்த்து பெருவதே எனக்கு கிடைக்கும் வெற்றிதான்,,,
மிக அருமையான படம். பலதடவை இந்த படத்தை பார்த்து இருக்கேன்.
மிக நல்ல படத்துக்கான, நல்ல விமர்சனம்.
கீப் இட் அப்
நன்றி இராகவன் அவர்களே.. மிக நீண்ட நாளைக்குப்பிறகு ரொம்ப சந்தோஷம்..
மிக அருமையா எழுதியிருக்கீங்க பாஸ். அப்படியே த்ரீ இடியட்ஸும் பாருங்க நல்லா இருக்கும்.
வெகு நாளைக்கு பிறகு என்றாலும்
நல்ல படத்துக்கான,நல்ல விமர்சனம்.
மிக அருமையான விமர்சனம்,நாங்கள் குடும்பத்தோடு இருந்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று,தாரை தாரையாய் கண்ணீர் வடிய இந்த படத்தை பார்த்தேன்,உங்களிடம் நிறைய திறமை இருக்கு,சீக்கிரம் பெரிய ஆளாகிடுவீங்க தம்பி.
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று
அந்த க்ளைமேக்ஸ் பாடல் பார்க்கும் எவரையும் கண்கலங்கச் செய்துவிடும்
//அவுத்துப்போட்டு ஆடும் ஹீரோயினும் இல்லை//
இது போன்ற வரிகளை தவிர்க்கலாமே ரியாஸ். ஒரு படத்தை புகழவேண்டும் என்பதற்காக மற்ற படங்களை தரம் தாழ்த்தி பேச வேண்டாமே...
நல்ல விமர்சனம்!
இதுவரை பார்க்கவில்லை. பார்க்க தூண்டுகிறது உங்க விமர்சனம்.
நன்றி ரகு..
//அவுத்துப்போட்டு ஆடும் ஹீரோயினும் இல்லை//
இது போன்ற வரிகளை தவிர்க்கலாமே ரியாஸ். ஒரு படத்தை புகழவேண்டும் என்பதற்காக மற்ற படங்களை தரம் தாழ்த்தி பேச வேண்டாமே//
இனிமேலும் இவவாரான வரிகளை தவிர்க்கிறேன்..
ஆசியா ஒமர்..
//மிக அருமையான விமர்சனம்,நாங்கள் குடும்பத்தோடு இருந்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று,தாரை தாரையாய் கண்ணீர் வடிய இந்த படத்தை பார்த்தேன்,உங்களிடம் நிறைய திறமை இருக்கு,சீக்கிரம் பெரிய ஆளாகிடுவீங்க தம்பி//
மிக்க நன்றி அக்கா உங்கள் வாழ்த்துக்கு..
நன்றி..
மகாராஜன்
அக்பர்
ப்ரியா..
Nice review Boss! :-)
கதையை இன்னுமொரு கோணத்திலும் பார்க்கலாம், சக மனிதன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை.. இஷான் மேல் அமீர் வைக்கும் நம்பிக்கை தான் கிளைமாக்ஸ் காட்சியில் இஷானை அமீரின் பக்கம் திரும்பவும் வர வைக்கிறது... ஒருவன் மேல் வைக்கும் நம்பிக்கை அவனை உயர உயர பறக்க வைக்கும் என்பதை சுட்டி காட்டும் படம்...
Post a Comment