நன்றி...நன்றி..நன்றி...50 வது பதிவு..

விளையாட்டுத்தனமாக எதையாவது கிறுக்குவோம் என்ற எண்ணத்தில் கிறுக்க ஆரம்பித்தது 50 வரையும் வளர்ந்து நிறபது கண்டு பூரிப்படைகிறேன்.. நான் எழுதுபவற்றையும் ரசிப்பார்களா..? என்ற அவநம்பிக்கையில் ஆரம்பித்து இன்று என் எழுத்துக்களையும் ரசிக்க நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்.. என்னையும் 75 பேர் பின் தொடர்கிறார்கள் என்றெண்ணும் போது நம்பவேமுடியவில்லை..


நமது ஆக்கங்களை நமது பதிவுகளை படித்துவிட்டு அதற்காக பாராட்டும் போதும் வாழ்த்தும் போதும். கிடைக்கும் ஆத்ம திருப்தி சந்தோஷம் வேறெங்கு கிடைக்கப்போகிறது எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த ஆத்ம திருப்தி வேறெங்கும் கிடைக்காது.. அது இந்த வலையுலகத்தில் கிடைக்கிறது உலகெங்கிலிருந்தும் எத்தனையோ அன்புள்ளங்களின் அறிமுகமும் ஆதரவும் மூலமாக.. நமது உணர்வுகளை எண்ணங்களை நம் கருத்துக்களை உள்ளேயே வைத்திருக்காமல் இவ்வாறான முயற்சிகளின் மூலம் வெளியிடும் போது மன அழுத்தமும் குறைகிறது..

அபுதாபிக்கு வந்தபிறகே பிளாக் என்றொரு விஷயம் இருப்பதையே அறிந்தேன்.. அதன்பிறகு வெற்றி FM இனையதள முகவரியினூடாக லோசன் அண்ணாவின் வலைப்பக்கத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரின் பதிவுகளையும் மற்றவர்களின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன்.. ஒவ்வொருவரின் எழுத்துக்களும் எனக்கும் ஆசையைத்தூண்டியது எழுதுவதற்கு.. பிறகு தமிழ்மணத்தில் "பிளாக் ஆரம்பிப்பது எப்படி" என்றொரு பதிவு பார்த்தேன் அதன் மூலம் என் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன்.. என் பதிவுகளை பிறருக்கு கொண்டு சேர்க்கும் தமிழிஸ்,தமிழ்மனம்,தமிழ் 10,உலவு.காம் போன்ற திரட்டிகளுக்கும் பிளாக் சேவையை வழங்கும் கூகுளிற்கும் எனது நன்றிகள்..

நான் இலங்கையர் என்றாலும் அதிகமான தமிழ்நாட்டு நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் பார்க்கும் போது நானும் தமிழ்நாட்டில் பிறந்திருக்ககூடாதா என்ற எண்ணம் எனக்குள்.. வலையுலகத்தில் ஒவ்வொருவரும் தனக்கேயுரியவிதத்தில் சிறப்பாக எழுதி வருகிறார்கள். எல்லோருடைய பதிவுகளையும் படிக்க வேண்டும் ஓட்டு போட வேண்டும் ஆசையிருந்தாலும்.. இருக்கும் வேலைகளுக்குமத்தியில் அது முடிவதில்லை ஒரு நாளைக்கு ஒரு சிலரின் பதிவுகளை மட்டுமே படிக்க முடிகிறது.. இதில் நம்மளை தொடர்ந்து ஆதரிக்கும் சிலரின் பதிவுகளும் சில நேரம் விடுபட்டுப்போவதுண்டு..

ஆரம்பத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கலாம் என்று தொடங்கினாலும் சில கட்டுரைகளையும் எனக்குத்தெரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன்.. தொடர்ந்து கவிதை எழுதினால் பார்ப்பவர்களுக்கும் சலித்துப்போய்விடும் என்றபடியால் ஆங்காங்கே சில மொக்கைகளும் பின் சுவாரஷ்யமான படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கமெண்ட்ஸ் என்ற அடிப்படையிலும் என் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் கண்ட கண்ட இடத்தில் கிறுக்குவது நோயாகிவிட்டது இலங்கை தனியார் வானொலிகளான சூரியன் FM வெற்றி FM போன்றவற்றிலும் பலமுறை ஒலித்திருக்கிறது எனது பிரதிகள் ஆனாலும் உண்மையிலேயே அவை கவிதைதானா என்று எனக்குத்தெரியாது இன்றுவரையிலும்..

பயப்படாதிங்க நாந்தான்..
நீங்கதாள்தான் சொல்லவேண்டும் நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா.. முடிந்தால் சொல்லுங்கள் எவ்வகையான பதிவுகள் அதிகம் பிடித்திருக்கிறது..


உங்களுடைய அன்புக்கு என்னிடம் தருவதற்கு ஒன்னுமில்லை நன்றி என்ற ஒன்றைத்தவிர.. இந்த வண்ணத்துபூச்சியை எடுத்துக்கொள்ளுங்கள் என் அன்புபரிசாக..

2 comments:

Jaleela Kamal said...

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

Meerapriyan said...

50-vathu pathiva...vazhthukal.kavithai padri ungal thazhvu manappanmaiyai neekkkungal-meerapriyan.blogspot.com

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...