September 07, 2010

நகரம் நோக்கி நகரும் எறும்புகள்...!

எங்கு பார்த்தாலும் வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி முன்பு போல் மக்களால் நினைத்தவாறு செலவழிக்கவோ உண்டு மகிழவோ முடிவதில்லை. எல்லாவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் ஆடம்பரத்தை கைவிட்டு சிக்கனத்தை மேற்கொள்ளவேண்டிய நிலை.இதனால் தேவைகளை குறைத்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டனர்.. இந்த நடைமுறையினால தனது அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்த ஒரு பின் தங்கிய கிராமத்து எறும்பு சமுதாயத்தின் கதை.

"முன்பெல்லாம் வீடுகளில் உணவுப்பண்டங்கள் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கும் நாங்களும் கூட்டம் கூட்டமாக சென்று எங்கள் உணவுத்தேவையை தீர்த்து எங்கள் இருப்பிடங்களுக்கும் எடுத்து வந்து வைத்துக்கொள்வோம் இப்ப எல்லாம் உணவு தேடுவதே பெரிய வேலையாகிப்போய்விட்டது" என்றவாறு பல எறும்புகள் பேசிக்கொண்டன. மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழவேண்டியிருப்பதால்.. மழையோடும் வெயிலோடும் போட்டி போட்டுக்கொண்டே வாழவேண்டிய நிலை. அதுவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மிகவுமே பாதித்தது அக்கிராமத்தை.. உணவுக்கே மிகவும் கஷ்டமாகி போய்விட்டது.

இவ்வாறு நாட்கள் செல்ல செல்ல மக்கள் கிராமத்தை விட்டு நகர்புறங்கள் நோக்கி நகர ஆரம்பித்தனர் வேலை தேடும் நோக்கில். இவ்வாறிருக்கும் போது அந்த எறும்புக்கூட்டத்தில் உள்ள அனைத்து எறும்புகளும் ஒன்று கூடி முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது அப்போது ஒரு முதிய எறும்பு பேச ஆரம்பித்தது|"நாம் எல்லோரும இக்கிராமத்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் இது போன்றதொரு பஞ்சமான உணவில்லாத சூழ்நிலை ஒரு போதும் இங்கு ஏற்பட்டதில்லை.. மேலும் நாம் வீடுகளில் உணவு தேடி அங்கும் இங்கும் அலையும் போது மனிதர்கள் விஷம் வைத்து கொல்கிறார்கள்.. கடந்த மாதம் மாத்திரம் ஏராளமான நம் உறவினர்கள் நண்பர்களின் உயிர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது...

இதற்கெல்லாம் ஓரே தீர்வு இங்குள்ள மனிதர்களைப்போல் நாமும் ஏதாவது நகர்ப்புறம் நோக்கி நகரவேண்டியதுதான்.. அங்கு நமக்கான உணவுகள் கிடைக்கலாம் நாம் அங்கு எமது இருப்பிடத்தை அமைத்து சந்தோஷமாக வாழலாம்" என்று அந்த முதிய எறும்பு பேசியது இதற்கெல்லாம் மற்ற எறும்புகளும் தனது சம்மதத்தை தெரிவித்தது.. அதன்படி எப்போது எவ்வாறு ஊரைவிட்டு வெளியேறுவது போன்ற திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.. அதில் முக்கியமாக சில சட்டதிட்டங்களும் கண்டிப்பாக்கப்பட்டன இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஊரைவிட்டு வெளியேறும் முன்பு அந்த எறும்பு சமுதாயத்தின் தலைவனால சொல்லப்பட்ட கட்டளைகள்.

#கூட்டம் கூட்டமாக வரிசையாக ஒழுங்காக ஒற்றுமையாக செல்ல வேண்டும். ஒற்றுமைக்கே உதாரணமாக விளங்கும் நாம் அதை எந்த நேரமும் பின்பற்ற வேண்டும்..
#போகும் வழிகளில் உணவுப்பொருள்கள் இருந்தால் அவற்றை தூக்கிச்செல்லவேண்டும்
#நாங்கள் சிறிதாக இருப்பதால் மனிதர்கள் கண்ணுக்கு புலப்படுவது கடினம் ஆகவே அவர்கள் கால்களுக்கு மிதிபடக்கூடும். அதனால் அவர்கள் வரும் திசையை தவிர்த்து வேறு திசையில் செல்லவேண்டும்.
#மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கவோ அவர்களை தாக்கவோ கூடாது. சில வேளை அவர்கள் உங்களை தொந்தரவு செய்தாலோ கொல்ல முயன்றாலோ உங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அவர்களை தாக்கலாம்.
#போகும் வழிகளில் மனிதர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைபவர்களை தூக்கிச்செல்ல வேண்டும். எங்கள் எடையைவிடவும் கூடுதலான எடையை எங்களால் தூக்க முடியும் என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
#செல்வது நகரம் ஆகையால் அங்கே சனநெரிசல்  அதிகம் இருக்கலாம் ஆகவே அவர்களின் கண்களுக்கு தெரியாமலோ கால்களுக்கு மிதிபடாமலோ செல்ல வேண்டும்.
#அங்கே உள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு கூட்டமாக பிரிந்து செல்ல  வேண்டும். எந்த வீட்டில் அதிக உணவுப்பொருள்கல் கொட்டிக்கிடக்கிறதோ அதை மற்ற கூட்டங்களுக்கு அறியத்தர வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ள வேண்டும் எதிர்கால தேவைக்கு.

என்றவாறு அமைந்திருந்தது அந்த எறும்பு தலைவனின் கட்டளைகள்,
தொடரும் பயணம் நகரம் நோக்கி.....

11 comments:

வெறும்பய said...

எறும்புகளை உதாரணமாக்கி மனிதர்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரைகள்... மிகவும் நன்று,..

ப.செல்வக்குமார் said...

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. எறும்புகளுக்கு அதன் தலைவர் விதித்த கட்டளைகள் அருமை ..

Chitra said...

நல்ல கருத்து.... நல்ல அறிவுரை.

ஹேமா said...

ஐந்தறிவுக்கு உள்ள அறிவு ஆறறிவு உயிரினங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் குறைவாய்த்தானிருக்கு ரியாஸ்.

அப்பாவி தங்கமணி said...

Nice post... very nice thought

ம.தி.சுதா said...

அருமையாக சொல்லியிருக்கிறிர்கள் சகோதரா...

ஹுஸைனம்மா said...

கதை தொடருமா?

Thomas Ruban said...

அருமையான கருத்துகள் பகிர்வுக்கு நன்றி நண்பா...

Riyas said...

வெறும்பய
ப.செலவகுமார்
சித்ரா அக்கா
ஹேமா அக்கா
அப்பாவி தங்கமனி
ம.தி.சுதா
தோமஸ் ரூபன்
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி

Riyas said...

@@@ஹுசைனம்மா
//கதை தொடருமா..?// எறும்பின் பயணம் தொடரும் கதை முற்றும்.

kavisiva said...

நல்லா சொல்லியிருக்கீங்க ரியாஸ்! எறும்புக்கு இருக்கும் அறிவு கூட ஆறறிவு என பீற்றிக் கொல்ளூம் மனிதனுக்கு இல்லதது ஏன் :(

Related Posts Plugin for WordPress, Blogger...