November 12, 2010

இயக்குனர் சேரன்..!

தமிழ் திரையில் பல இயக்குனர்கள் வந்தபோதிலும் கொஞ்சபேரால் மட்டுமே நின்று நிலைக்க முடிந்துள்ளது. என்பதுகளிலிருந்து பார்த்தால் பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,பாலுமகேந்திரா,சுந்தர்ராஜன்,மகேந்திரன்,பாசில் நீண்டு செல்லும் அந்த வரிசையில்.. இயக்குனர் சேரன் அதிகளவு படங்களை இயக்காவிட்டாலும் தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விஷயத்தை அழகாக சொல்லிக்காட்டியிருப்பார்.. அன்மைக்கால இயக்குனர்களில் பெண் உடம்பையும்,ஹீரோயிசைத்தையும் மட்டும் நம்பாமல் கதையை மட்டும் நம்பி படம் எடுப்பவர்களில் இந்த சேரன் என்னை மிகவும் கவர்ந்தவர்..
அவர் இயக்கிய திரைப்படங்களை வரிசையாக நோக்கினால்..


1. பாரதிகண்ணமா.
சேரன் இயக்கிய முதல் படம் இது. 1997 யில் வெளிவந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் சிக்கித்தவிக்கும் காதலை மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார். இதில் பார்த்திபன்,மீனா,விஜயகுமார்,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தினர். வர்த்தகரீதியாகவும் நல்ல வெற்றியைப்பெற்றது இந்தப்படம். இசை தேவா பாடல்களும் ஹிட்.


2. பொற்காலம்.
1998 யில் வெளியான படம். ஊனமுற்றவர்களும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவர்கள் என்ற கருத்தை மிக அழகாக சொன்ன படம். சிறந்த சமூகநல கருத்துக்களும் இதிலிருந்தன, இப்படத்தில் முரளி,மீனா,சங்கவி,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இசை தேவா பாடல்கள் சூப்பர் ஹிட் ( ஊனம்


3. தேசிய கீதம்
இத்திரைப்படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை. இதுவும் 1998 யில் வெளிவந்தது. முரளி,ரம்பா,நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படம் சேரனுக்கு மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்தது.


4.வெற்றி கொடி கட்டு
வெளிநாட்டு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி காலத்தை வீனாக்குபவர்களுக்கு உள்நாட்டிலேயே உண்மையாக உழைத்தால் முன்னேறலாம் என்ற கருத்தைக்கொண்ட அருமையான படம். நல்ல சமூக நல கருத்துகளும் இப்படத்திலிருந்தன இதற்காக சமூக பிரச்சினைகளை அலசிய படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது. இப்படத்தில் பார்த்திபன்,முரளி,மீனா,மாளவிகா,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி கலக்கலாக இருக்கும். இசை தேவா "கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு" பாடல் கருப்பர்களின் தேசிய கீதமாகவே மாறியது.


5.பாண்டவர் பூமி.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு பாசமான குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வால் ஏற்பட்ட மாற்றங்களை சொன்ன படம். இப்படத்தின் கதை ஒரு வீட்டை மையமாக வைத்தே அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் அருன்விஜய்,சமிதா,ராஜ்கிரன்,ரஞ்சித் ஆகியோர் நடித்திருந்தனர். இசை பரத்வாஜ் " அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்" என்ற பாடல் பலரின் விருப்பப்பாடல் இன்றுவரை.


6.ஒட்டோ கிராப்
நாம் கடந்துவந்த வாழ்க்கைப்பாதையினை திரும்பிபார்க்கவைத்த படம்.சேரனுக்கு அதிகளவு புகழை ஈட்டிக்கொடுத்த படம். சேரன் அவரே நாயகனாக திரையில் தோன்றி நடித்த முதல் படம். சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மானில விருது சேரனுக்கு கிடைத்தது. இசை பரத்வாஜ் பாடல்கள் சூப்பர்ஹிட்.. "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடல் நம்பிக்கையின் தேசிய கீதமாகவே மாறிப்போனது இப்பாடலை எழுதியதற்காக பா.விஜய்யிக்கும் பாடலை பாடியதற்காக சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது 
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்....
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.....


7.தவமாய் தவமிருந்து
தன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்த தந்தையின் நினைவுகளை சுமந்த படம். எனக்குத்தெரிந்தவரையில் தந்தையை பற்றி அழுத்தமாக அழகாக சொன்ன படம் இதுதான் என்பேன். சிறந்த குடும்ப நல கருத்துக்களுக்கான படமாக தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது இந்தப்படம். இதில் தந்தையாக ராஜ்கிரனின் நடிப்பு அபாரமாகயிருந்தது. மிக மெதுவான திரைக்கதையும் படத்தின் நீளமும் படத்தின் குறைபாடுகள் எனலாம..


8. மாயக்கண்ணாடி
அளவுக்கதிகம் பேராசை கொள்ளாமல் கிடைக்கும் வேலையை நேசித்து ஈடுபாடுடன் செய்தாலே வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்ற கதையம்சத்தைக்கொண்ட படம் இது. இதில் சேரன் கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நவ்யா நாயர். இசை இளையராஜா "உலகிலே அழகி நீதான் என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.


9. பொக்கிஷம்.
கடிதங்களால் இலக்கியம் கலந்த ஒரு காதல் பயணம். கதை 1970 களில் நடைபெறுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டவிதம் அருமை. இதற்காகவேண்டியே சேரனுக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒளிப்பதிவு பிரமாதம். சபேஷ் முரளியின் இசையில் யுகபாரதியின் பாடல் வரிகளில் பாடல்கள் எல்லாம் கவிதை கலந்த அழகு.. ஒவ்வொரு நிகழ்வுகளையும் சின்ன சின்ன பாடல்களாக அமைத்தது நல்ல ரசனை. மசாலா படவிரும்பிகளுக்கு இப்படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை.


இதைவிட சேரன் சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம்,ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்..
இந்தப்பதிவு எப்படியிருக்கென்று சும்மா சொல்லிட்டுப்போங்க..

13 comments:

Anonymous said...

Good. Thanks for reminding all these movies..

philosophy prabhakaran said...

Thanks for the information... சேரன் நாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டே படம் இயக்குவதிலேயே கவனம் செலுத்தலாமென்று தோன்றுகிறது...

Karuvi Bala said...

Very nice artical, if one person like real life he must like seran also

ரஹீம் கஸாலி said...

சேரன் முதன்முதலில் ஹீரோவாக நடித்தபடம் தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை. அவர் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த முதல் படம்தான் ஆட்டோகிராப்

Riyas said...

@@ Philosophi prabhakaran
@@ Karuvi bala

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

தமிழ் உதயம் said...

சேரனின் வெற்றி பெறாத தேசியகீதம் மற்றும் மாயக்கண்ணாடியும் சிறந்த படங்களே. சொல்ல வந்த விஷயத்தை மிக சரியாக சொல்லி இருப்பார்.

ஹரிஸ் said...

நன்றாக தொகுத்துள்ளீர்கள்..தொடருங்கள்..

Riyas said...

@@ ரஹிம் கஸாலி..

தகவலுக்கு நன்றி..

@@ ஹரிஸ்

வருகைக்கும் கருதத்திற்கும் நன்றி.

Riyas said...

@@ தமிழ் உதயம்.
//சேரனின் வெற்றி பெறாத தேசியகீதம் மற்றும் மாயக்கண்ணாடியும் சிறந்த படங்களே. சொல்ல வந்த விஷயத்தை மிக சரியாக சொல்லி இருப்பார்//

சரியாகச்சொன்னீர்கள்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

வெறும்பய said...

நல்ல தொகுப்பு நண்பா.... சேரன் ஒரு சிறந்த இயக்குனர் என்பதில் எந்த ஐயமுமில்லை...

vijayan said...

ஸ்ரீதர்,A .பீம்சிங்,B .R .பந்துலு, A .P .நாகராஜன் போன்ற நமது பண்பாடு,கலாசாரம் ஆகியவற்றை கெடுக்காத இயக்குனர்கள் வரிசையில் கண்டிப்பாக சேரனுக்கும் இடமுண்டு.வாழ்க அவரது கலைசேவை.

ப.செல்வக்குமார் said...

எனக்கும் இயக்குனர் சேரனைப் பிடிக்கும்க ..
அதிலும் அவரோட ஆட்டோகிராப் மற்றும் பாண்டவர் பூமி எனக்கு ரொம்ப பிடிக்கும் . தவமாய் தவமிருந்து நான் இன்னும் பார்க்கலை .. நான் அதிகமா அவரோட படங்கள் பார்ப்பதில்லை .. நான் அதிகம் விரும்புவது நகைச்சுவைப் படங்களையே .. நகைச்சுவை அப்படின்னா பசங்க படத்துல வருமே அந்த மாதிரி நகைச்சுவைகள்.. எனக்கு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச இயக்குனர்னா பாண்டிராஜ் தான் ..!! ஆனா சேரனையும் பிடிக்கும் ..

மங்குனி அமைச்சர் said...

சூப்பர் Riyas, என்னோட பேவரைட் டைரக்டர் அவர்

Related Posts Plugin for WordPress, Blogger...