விடியல்....!



அதிகாலயிலேயே... எழுந்த ஆப்தீன் இறைவனை வணங்கிவிட்டு மனைவியின் தேநீருக்காய் காத்திருந்தார்...


"இந்தாங்க தேத்தண்ணி....," மனைவியிடமிருந்து...

வெறும் தேநீர்தான் பாலோடு கலந்து பருகுமளவுக்கு வசதியில்லை ஆப்தீன் குடும்பத்துக்கு.

தேநீர் பருகிக்கொண்டே...! " கொஞ்ச நாளா கூலி வேல இல்லாம கையில காசுமில்ல... கடயில போய் கடனுக்கு கொஞ்சம் சாமான் கேட்டா.. ஏதோ பிச்ச கேட்கிறமாதிரி கேவலமா பாக்காங்க...

இடைநடுவே மனைவி... " அதாங்க எனக்கும் ஒன்னும் புரியல்ல சமைக்கிறதுக்கு கூட அரிசி பருப்புன்னு எதுவும் இல்ல... ரெண்டு புள்ளங்கலோட படிப்பு செலவுக்கும் காசு வேணும். இஸ்கூல்லயிருந்து பசியோடு வர்ற புள்ளங்களுக்கு சோத்த குடுக்காம நம்மட கஷ்டமெல்லாம் சொல்லிட்டிருக்கேளுமா... அதுங்களாயவது நல்லா படிக்க வெச்சாத்தான் நம்ம பட்ற கஷ்டம் நாளக்கி அதுங்க படாம நல்லாயிருக்குங்க..!"


தேநீர் கோப்பையுடன்... "முன்னெல்லாம் ஒவ்வொரு நாளும் கூலி வேல செய்தா எவ்வளவாவது காசு கையிலிருக்கும்.. இப்ப அதுக்கும் வழியில்ல. எல்லாத்துக்கும் மெசின் வந்திருச்சி.. நாத்து நட்றதிலிருந்து வேளான்மை அறுப்பு வரையும் எல்லாம் மெசின் போட்டுத்தான் செய்றாங்க.. அதால கூலி வேலக்கி யாரும் ஆட்கள் எடுக்கிறதில்ல.."

" இப்படி எல்லாத்துக்கும் மெசின் வந்துட்டா கூலி வேல செய்ற சனங்க கதி என்னாகுங்க" என்ற மனைவியின் கேள்விக்கு...

"எல்லாத்துக்கும் படைச்சவன் ஒரு வழிய வெச்சிருப்பான் பார்ப்போம்" என்ற பெருமூச்சுடன் தேநீரும் தீர்ந்தது புத்துணர்ச்சி மட்டும் எஞ்சியிருக்க...

'ஹஸினா....' 'என்னங்க....'

"எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனயிருக்கு.." 'என்னங்க அது'

"இந்த கூலி வேலய நம்பியிருக்காம ஏதாவது கைத்தொழில் தொடங்கினா எப்டி..."

'அதுக்கு காசுக்கு எங்கங்க போறது'

"காசெல்லாம் தேவையேயில்ல ஹஸினா... நம்மட உடல் உழப்பிருக்கு, தோட்டத்துல மண் தண்ணியிருக்கு, காட்டுக்கு போனா விறகு இருக்கு. இதெல்லாம் வெச்சி தோட்டத்துலயே செங்கல் செய்து வித்தா நாலு காசு கெடக்கிம்தானே.."


'நல்ல யோசனதாங்க... முயற்சி செய்யாமலே தோற்கிறத விட முயற்சி செய்தே தோற்கிறது.. வெற்றி பெறுவதை விட மேலுன்னு பெரியவங்க சொல்லுவாங்க... முயற்சி செய்துதான் பார்ப்போமே...'


"கட்டிடம் கட்றதுக்கு நம்ம ஊரு சனமெல்லாம் பக்கத்து ஊருக்குப்போய்த்தான் செங்கல் வாங்கிட்டு வர்றாங்க. நாமே செய்து வித்தா வாங்கமாட்டாங்களா என்ன...! நம்ம காதர் நானாகிட்ட செங்கள் செய்ற தட்டச்சு இருக்குன்னு சொன்னாரு நான் இப்பவே போய் வாங்கிட்டு வாறேன்.."


'இருங்க ரொட்டி சுட்டிருக்கேன் சம்பல் செய்து தர்றேன் சாப்பிட்டு போங்க" என்ற மனைவியின் குரலோடு.... தூரத்து வானில் விடியல் தெரிந்தது.......

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் முயற்சித்துப்பார்த்த சிறுகதையொன்று மீள்பதிவாக......

16 comments:

Philosophy Prabhakaran said...

நன்றாக இருந்தது சிறுகதை... அவர்களது செங்கல் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்...


அப்புறம், அது செங்கள் இல்லை செங்கல்...

Riyas said...

நன்றி பிரபா...

வருகைக்கும் தவறை சுட்டிக்காட்டியதற்கும்.

இப்போ மாத்திட்டன்

Chitra said...

நல்லா இருக்குதே... தொடர்ந்து எழுதலாமே!

ஹேமா said...

ரியாஸ்...சின்னக்கதையாயிருந்தாலும் கதையிலும் முயற்சியே முன்னேற்றம் தரும் என்றும் சொல்லி உங்களின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.இன்னும் முயற்சிக்கலாம் துணிவோடு !

எல் கே said...

நல்லாதான் இருக்கு .. ஆமாம் எங்க கொஞ்ச நாளா காணோம்?

Asiya Omar said...

இது மீள் பதிவா ரியாஸ்,முன்பே வாசித்த நினைவு..என்றாலும் கதை அருமை.

ஆமினா said...

கதை அருமையா இருக்குங்க

FARHAN said...

முயற்சி செய்யாமலே தோற்கிறத விட முயற்சி செய்தே தோற்கிறது.. வெற்றி பெறுவதை விட மேலுன்னு பெரியவங்க சொல்லுவாங்க... முயற்சி செய்துதான் பார்ப்போமே...'

//நேத்துல இருந்து தொழில் விடயத்தில் கொஞ்சம் கவலையுடன் இருந்த எனக்கு புத்துணர்வு தந்த வசனம் //

Riyas said...

@சித்ரா அக்கா

@ஹேமா அக்கா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Riyas said...

@எல்.கே

வாங்க எல்.கே லீவுல ஊருக்குப்போயிருந்தேன் அதுதான் ரொம்ப நாள் வரல்ல..

Riyas said...

@ஆசியா அக்கா

@ஆமினா

@பர்ஹான்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

அப்பவும் நல்லாருந்துச்சு; இப்பவும் நினைவுகளை மீட்ட வைத்தது.

எப்பூடி.. said...

கதைக்கு மட்டுமல்ல நிஜத்திலும் அடுத்தவனிடம் கூலிக்கு வேலை செய்வதைவிட ஏதாவது சிறு கைத்தொழிலை குடும்பத்துடன் இணைந்து புத்திசாலித்தனமாக செய்தால் பணமும் அதிகம் கிடைக்கும், அடுத்தவனுக்கு பயப்படாமல் நின்மதியாக தொழில் செய்யலாம். ஒருநாள் அந்த தொழிலே உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சூப்பர் ரியாஸ் பாய். முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வருகிறேன். தொடர்ந்து வருவேன்.

Unknown said...

நண்பரே , அருமை
/// முயற்சி செய்யாமலே தோற்கிறத விட முயற்சி செய்தே தோற்கிறது.///


நல்ல கருத்து . நேர்மையான நோக்கமும் தீவிரமான முயற்ச்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே

தூயவனின் அடிமை said...

கதை அருமையா இருக்குங்க.
நான் இதற்கு முன் விடியலை நோக்கி என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன் ரியாஸ்.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...