கடற்கரைச்சிறுக்கி...!



ஒரு மாலை வேளை
மனசுக்கு சுகம் தேடி
நடந்தன கால்கள்
கடற்கரை நோக்கி...
உடம்பில் மோதி
மனதில் நுழைந்து
சுவாசத்தில் கலந்து
உணர்வை தடவிச்சென்றது
எங்கோயிருந்துவந்த
காற்று...!
எவ்வளவு அமைதி
உனக்குள்
ஏன் பொங்கிஎழுந்து
உயிர்ப்பலி கேட்கிறாய்
உன்னை
உசுப்பிவிடுவது யார்?
உறைத்துக்கொண்டது மனசு
உள்ளுக்குள்...
கடல் அழகானது
அதைவிடவும்
அழகாக அங்கேயொருத்தி
கடலை ரசிப்பதா
அவளை ரசிப்பதா
சண்டையிட்டுக்கொண்டன
கண்களும் மனசும்...
கண்கள் மட்டும்
கடலை ரசிக்க
உதவாக்கரை மனசு மட்டும்
அலைந்தது
அவள் பின்னால்...
அவளைத்தொட்ட காற்று
என்னைத்தொடாதா என
ஏங்கித்தவித்தது மனசு..
சூரியனை விழுங்கும்
கடல் போல்
என்னை விழுங்கியது
அவள் பார்வைகள்
காற்று வாங்க வந்தாளா
மனசு பறிக்க வந்தாளா
அந்த கடற்கரை சிறுக்கி...
கடைசியாய்
ஒரு புன்னகையை மட்டும்
தூக்கிவீசிவிட்டு
தூரச்சென்றுவிட்டால்
வீசிய புன்னகையை
மனசு அள்ளிக்கொணடது
அவள் ஞாபகமாய்...
அவ்விடமே வெறுமையானது
அவள் போன பிறகு
அங்கிருக்க பிடிக்கவுமில்லை
கடலும் மறைந்தது
இருள் போர்வைக்குள்.
கால்கள் மீண்டும்
நடந்தன
வீடு நோக்கி...!


14 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

simple but super poem.m.... sweet memories..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சூப்பர்... தொடரங்கள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

கடற்கரைச் சிறுக்கி...பெயரே அசத்தல்.உங்களை அசத்தியிருக்கிறாள் ரியாஸ்.வரிகள் அழகும் உணர்வும் காதலாய் இருக்கு !

Philosophy Prabhakaran said...

இதுவும் காதல் கவிதை தான்... கடற்கரையின் மீது ஒரு காதல்... அப்படித்தானே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே.. பின்னர் அந்த கடற்க்கரை சிறுக்கியை பார்த்தீர்களா..

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

காதல் கவிதை.அருமை.

தொடரங்கள். வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அசத்தல தலைப்பும் அசத்தல் கவிதையும்.

அரபுத்தமிழன் said...

நல்ல வேளை அப்பெண் பதிவரில்லை. அப்படி பதிவராயிருந்தால்
உங்களைப் பார்த்த நிகழ்வை 'காதல் கிறுக்கன்' என்றோ 'கடற்கைப் பொறுக்கி'
என்றோ ஒரு பதிவை இட்டிருப்பாள் இந்நேரம். :)

அரபுத்தமிழன் said...

வேறு பெயர் வைப்பதாகச் சொன்னீர், இன்னும் வைக்கலயா.

'ரியாஸ் ட்ரீம்ஸின் ரீங்காரம்'

'கடற்கரைக் கவிதைகள்'

'நான் பாடும் பாடல்'

'அரபு மண்ணில் தமிழ் பாடும் குருவி'

இன்னும் எத்தனையெத்தனையோ உண்டு.

செல்வா said...

//கடல் அழகானது
அதைவிடவும்
அழகாக அங்கேயொருத்தி
கடலை ரசிப்பதா
அவளை ரசிப்பதா
//

//அவளைத்தொட்ட காற்று
என்னைத்தொடாதா என
ஏங்கித்தவித்தது மனசு..
//

எப்படிங்க இப்படியெல்லாம் , இரண்டுதடவை படிச்சு பார்த்தேன் .. ரொம்ப அருமையா இருக்கு .

ஆமினா said...

ரொம்ப அருமையா இருந்தது

வாழ்த்துக்கள்

Asiya Omar said...

arumai.

தூயவனின் அடிமை said...

அசத்தல் கவிதை வாழ்த்துக்கள் .

arasan said...

நல்லா இருக்குங்க நண்பரே ...
கவிதை தான் கொஞ்சம் நீளம் ...

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...