January 28, 2011

தேநீர்+நான்+வைரமுத்து

நான் ஒரு தேநீர்க்காதலன். உலகில் எத்தனை எத்தனையோ குடிபாணங்கள் இருந்தபோதிலும் நான் ரசித்துப்பருகுவது தேநீர் மட்டும்தான். ஏனையவைகள் வாயை நனைத்து தொண்டைவழியாக வயிற்றுக்குள் செல்லும் தேநீர் மட்டும் உதடுகளில் பட்டவுடன் இதயம் வரை பரவுகிறது அதன் புத்துணர்ச்சி. கவியரசு வைரமுத்துவுக்கு கூட தேநீர் பிடிக்கும் போல தேநீர் பற்றி மிக அழகான கவிதையொன்றை எழுதியிருக்கிறார். அதில் தேநீர் பருகும் கணங்களை இவ்வாறு சொல்கிறார்.
தேநீர் பருகும் கணங்கள்
சிலநிமிடத் திருவிழாக்கள்
தேநீர்க்கோப்பை
ஒரு
கையடக்க சந்நிதானம்.

உதடுகளில் சூடுகொளுத்தி
கதகதப்பாய் நாவுதடவி
சுவையரும்புகள் ஒவ்வொன்றாய்த்
தொட்டெழுப்பி
இனிப்பு கடந்தொரு துவர்ப்பு பரப்பி
தொண்டையில் நழுவும்போதே
ரத்தக்குழாய்கள் புடைக்க மலர்த்தி 
இருதயத்தின் உணர்ச்சிமயமான பிரதேசத்தை
முறைப்பெண்ணின்
முந்தானைபோல்
சிருங்காரமாய் உரசி
குடலில் விழுந்த மறுகணம்
மூளையின் திரிகளில் அது
சுடர்கொளுத்தும் போது
மோட்சத்தின் பக்கத்து வீதிவரை
சென்று திரும்பும் ஜீவாத்மா.


ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று,ஆகாயம், பூமி இவை யாவும் தேநீரில் உள்ளடக்கம் என தனது கவிதையை தொடர்கிறார் வைரமுத்து.
குவளைத்தேநீரில்
ஐம்பூதம் அடக்கம்
தேயிலைச் செடியின் வேர்வழி புகுந்து
பச்சிலை எங்கும் பரவிய மண்
தேயிலையின் சாரம்வாங்கித்
தன்னிறமிழந்த நீர்.
தேநீர் சுவைக்கத்
தித்திக்கப் பரவிய தீ.
பிஞ்சுத்தேயிலை மணத்தைப்
பிரசாரம் செய்யும் ஒரு துண்டுக்காற்று.
இலை தலைகுளித்த மழைவழியே
துளித்துளியாய் ஆகாயம்.தேநீரை ரசித்து ருசித்து அனுபவித்து இவ்வாறு பருகவேண்டும் என்கிறார் வைரமுத்து அவர்கள்.


பழைய மனைவியின்
முத்தம் போலொரு
சம்பிராதாயமல்ல தேநீர் பருகல்
ஒவ்வொரு மிடரும்
புதிய காதலியின் பசத்தமுத்தம்
இதழ் பருகும்போது
கண்மூடல் போல்
தேநீர் பருகக் கண்மூடவேண்டாமா!


ஆசைக்கோப்பையில் உதடு பொருத்தி
ஓசை மீதுற உருகி உறிஞ்சி
நினைவு மறந்து நிகழ்வு கடந்து
சின்னதாய் ஒரு மரணம் எய்தி
வான்
மண்
இரண்டினிடையே
மேக வெளிகளில்
மிதந்து திரிந்து
பொத்தென்று விழவேண்டும்
பூமியில் மீண்டும்...

பிடிச்சிருந்தா எங்கெல்லாம் ஓட்டுப்பட்டை இருக்குதோ அங்கெல்லாம் ஒரு ஓட்டு குத்திட்டுப்போங்க... அப்படியே ஏதாவது சொல்லிட்டும் போங்க..

7 comments:

மாத்தி யோசி said...

ஏற்கனவே படிச்ச கவிதைதான் இருந்தாலும், நீங்க ஒரு விளக்கம் சொல்லி போட்டு இருக்கீங்க பாருங்க அது சூப்பர்!!

ஷர்புதீன் said...

:)

சி. கருணாகரசு said...

கவிதையை இப்போதுதான் படித்தேன்...ரசித்தேன்...

மதுரை சரவணன் said...

தேநீர் கவிதை அருமை. வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

தேநீர் கவிதை தித்திக்கின்றது.

இளம் தூயவன் said...

நானும் தேனீர் பிரியர் தான் ரியாஸ்.

எம் அப்துல் காதர் said...

சுள்ளாப்பா ஒரு டீ குடிச்ச மாதிரி இருக்கு தல!!

Related Posts Plugin for WordPress, Blogger...