வாங்க தேடுவோம் மனிதனை...?

நாற்பது ஆண்டுகளில்,ஐம்பது ஆண்டுகளில் எண்னை வளம் இல்லாமல் போகலாம்,குடி நீர் இல்லாமல் போகலாம்,உணவு பற்றாக்குறை ஏற்படலாம்,காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கலாம் என சிந்திப்போர் கவலைப்படுவோர் எத்தனையோ பேர் உண்டு இப்பூமியில். என்னையும் சேர்த்துத்தான்.
ஆனாலும் இவை எல்லாவற்றையும் விட மேலாக உலகிலேயே மிக அரிதாக கிடைக்ககூடியதொன்று அதுவும் இன்னும் கொஞ்ச காலத்தில் அவவாரானதொரு வசனம் இருந்ததைக்கூட மக்கள் மறந்திடலாம் அதுதான் "மனிதநேயம்"இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோமா... இதை எங்கே பெற்றுக்கொள்ளலாம்.. அதன் விலை என்ன...?

மனிதம் பற்றி பேசவோ.. மனித நேயம் பற்றி எழுதவோ.. அறிவோ அனுபவமோ வயதோ எனக்கில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் என் மனதில் தோன்றுபவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

அவரவர் மதங்களும் கலாச்சாரங்களும் அவரவர்களுக்கு முக்கியம்தான்.எந்த மதமானாலும் எந்த கலாச்சாரமானாலும் எந்த இனமானாலும் எந்த நாடானாலும் எந்த நிறமானாலும் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற ஒரு புள்ளியில் இனைகிறோம் அல்லவா... அது வெறும் இனைப்பாகயில்லாமல் மனிதநேயம் என்ற பொதுக்கோட்பாட்டுடன் இனைந்தால் மனிதனுடன் மனிதநேயமும் உயிர் வாழும் அல்லவா...

கொடுமைகள்,கொடூரங்கள்,உயிர்ப்பலிகள்,வன்முறைகள்,இரத்தங்கள்,அவலங்கள்,
அகதிகள் எதற்காக... இதற்கெல்லாம் காரனம் எதுவோ... எல்லாவற்றிக்கும் மூலக்காரனம் மனித நேயம் தொலைந்து போனமையே.இது தொடர்ந்தால் மனித உயிர்களும் மலிவாய் போய்விடலாம் இவ்வுலகில்.

மற்றவர்களுக்குக்கு உதவவும் வேண்டாம்.. உணவளிக்கவும் வேண்டாம்.. உயிரோடு வாழவிடுங்கள். அவர்கள் தொடர்வார்கள் அவர்களின் வாழ்க்கையை. பரந்து விரிந்த இந்த பூமியில் எங்கும் கிடைக்கலாம் அவர்களுக்கான உணவோ.. உடையோ.. உறையுலோ...

இதைச்சொல்லும் போது யாழ்ப்பானத்தைச் சேர்ந்த "தமிழினி" எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது இதோ...

ஓசோன் துளைகளை
விட்டு விடுங்கள்
துப்பாக்கி முனைகளின்
துளைகளை
அடைக்கப்பாருங்கள்
பூமி தொடர்ந்தும் சுவாசிக்கும்....

இரத்தமோடும் இப்பூமியிலேதான் பூக்களும் புன்னைகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது வாங்க நிரப்பலாம் இப்பூமியை பூக்களாலும் புன்னகைகளாலும்.வழி செய்வோம் மனிதநேயம் வளர.

நான் சொன்னது சரியா.. பிழையா.. மறக்காமல் சொல்லிட்டு போங்க மகா ஜனங்களே....  இது எனது பதிவுலக ஆரம்ப பதிவுகளில் ஒன்று அப்போது யாரிடமும் சென்று சேரவில்லை அதனால் மீள்பதிவாக இங்கே...

ரிலாக்ஸ் ப்ளீஸ்...


கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் பக்கம் பக்கமாக எழுதி பதிவு போட முடியல்லங்க.. அதனால் ஆங்காங்கே கிடக்கும் புகைப்படங்களை எடுத்து இப்படியான முயற்சி.. இதனைப்பார்த்து நீங்கள் கொஞ்சம் புன்னகைத்தாலே போதும்...

நாங்களும் யோசிப்பம்ல்ல

அப்பாடா ஒருமாதிரி வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாகியாச்சு..

ம்ம்ம்ம் சட்டப்படி வேலை...

என்னத்த சொல்ல...

பயபுள்ள பண்ற வேலையபாருங்க... அடப்பாவமே..

வாங்கின கடன திருப்பிக்கொடுக்காம ரேஸா ஓட்ற இந்தா வாங்கிக்கோ...


நாங்களும் சுடுவோம்ல...

இதைவிட நல்லதொரு இடம் நமக்கு கிடைக்காதப்பா.. இங்கேயே செட்டிலாகிட வேண்டியதான்...

போய் வர்றதுக்குள்ள எவன்யா மரத்த நட்டினது...

எப்பூடி எங்க ஜோடிப்பொருத்தம்...

ஏலே நாங்களல்லாம் அறிவாளிங்ல்ல

நன்றி fropki.com

சேவாக்கின் அதிரடியோடு 2011 உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பம்...!


2011 ICC உலககிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷின் டாக்காவில் கோலாகலமான முறையில் ஆரம்பமானது.இது பத்தாவது உலகக்கிண்ண போட்டித்தொடராகும். இதில் முதலாவது போட்டியாக இந்திய பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 375 என்ற மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சேவாக்,டெண்டுல்கர் ஜோடி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடத்தொடங்கியது. இதில் சச்சின் 28 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.பின் வந்த கம்பீர் 39 ஓட்டங்களை சிறப்பாக பெற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் சேவாக் தனது அதிரடியானதும் பொறுமையானதுமான ஆட்டத்தினால் ஒட்டங்களை குவித்துக்கொண்டேயிருந்தார். 4 ம் இலக்க வீரராக களமிறங்கிய விராத் கோலியும் சேவாக்கும் இனைந்து 4 விக்கெட்டுக்கான இனைப்பாட்டமாக 203 ஓட்டங்களை பெற்றனர்.


இறுதியில் 140 பந்துகளுக்கு முகம்கொடுத்து 48வது ஓவரில் சேவாக 175 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழ்ந்தார்.இதில் 14 பவுண்டரிகளும் 5 சிகஸேகளும் உள்ளடக்கம் 200 ஓட்டங்களை கடந்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவரால் முடியாமல் போனது. கடந்த வாரம் சேவாக்கின் பேட்டியொன்றில் தான் இதுவரை 50 ஓவர்கள் முழுமையாக விளையாடியதில்லை என்றும் இம்முறை முயற்சி செயவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 50 ஓவர் நிறைவடைய 15 பந்துகள் எஞ்சியிருக்கையில் சகீப் அல் ஹசனின் பந்தில் ஆட்டமிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை நின்றிருந்தால் இன்னுமொரு இரட்டைச்சதம் சேர்ந்திருக்கலாம் ஒரு நாள் போட்டி வரலாற்றில்.

இறுதி வரை மிக நேர்த்தியாக துடுப்பெடுத்தாடிய விராத் கோலி 100 ஓட்டங்களை எடுத்தார் இதில் 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் உள்ளடங்கும். அண்மைக்காலமாக இந்தியாவின் இளம் துடிப்புள்ள நம்பகமான துடுப்பாட்ட வீரராக மிளிர்ந்து வருகிறார் இவர்.பங்களாதேஷின் பந்துவீச்சை பொருத்தவரை எவரும் சிறப்பாக பந்துவீசியிருக்கவில்லை. வழமையாக வேக பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சுழல் பந்துவீச்சு மூலம் விக்கட்டுக்களை கைப்பற்றும் பங்களாதேஷ் சேவாக் மற்றும் கோலியின் அதிரடிக்கு முன்னால் எதுவும் எடுபடவில்லை.

பங்களாதேஷின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை 375 என்ற மிகப்பெரிய ஓட்ட இலக்கை பெறுவது சாத்தியமில்லை என ஆரம்பத்திலேயே நினைத்திருக்க கூடும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓட்டங்களை பெறலாம என்ற நோக்கிலேயே துடுப்பெடுத்தாடினார்கள். வழமையாக அதிரடியாக ஆடும் தமீம் இக்பால் இதில் கொஞ்சம் பொறுமையாக விளையாடி 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்தார். என்னும் சிறப்பாக ஆடியிருந்தார். ஏனையவர்கள் இம்ருல் கைஸ் 34, சித்திக் 37, ஷகீப் 55 என ஓட்டங்களை குவித்தார்கள் இறுதியில் 9 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓவர் முடிவில் 283 ஓட்டங்களைப்பெற்றது இந்திய பந்துவீச்சில் அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசிவரும் முனாப் படேல் 4 விக்கெட்டுக்களை பெற்றார். பங்களாதேஷ் மரியாதையான தோல்வியையும் இந்தியா 87 ஓட்டங்களினால் வெற்றியையும் பெற்றுக்கொண்டது.



ஒரு...! 17/02/2011

ஒரு ஜோக்...

அப்பா தன் மகனுக்கு கணக்குப்பாடம் சொல்லிக்கொடுக்கும் போது


அப்பா - 8x9 எவ்வளவுன்னு சொல்லு பார்ப்போம்


மகன் - 70 ப்பா


அப்பா - very good..


அம்மா - என்னங்க 8x9 பதில் 72 இல்லையா.. அவன் 70 ந்னு சொன்னதும் நீங்க very good சொல்றிங்க.


அப்பா - பதில் 72 தான் என்பது எனக்குத்தெரியும். முன்னெல்லாம் அவன் 60 ந்னு சொல்லிட்டுருந்தான் இப்ப விடைக்கு பக்கத்துல வந்துட்டான்னுதான் very good சொன்னேன்.






ஒரு கவிதை... கனவனால் மனைவிக்கு எழுதப்பட்டது.


பசியை படைத்த இறைவன்
உணவைப்படைத்தான்
தாகத்தை படைத்த இறைவன்
தண்ணீரைப்ப படைத்தான்
அமைதியான உலகை படைத்த இறைவன்
உன்னைப் படைத்தான்....


ஒரு பாடல் வரி...


மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா...?


கவிதாயினி தாமரையின் எண்ணத்தில் உதித்த அழகான வரி.. இரவு சீக்கிரம் வருமா மேற்கு திசை நோக்கி நடந்தா.. அப்போ கிழக்கு திசை நோக்கி நடந்தா இரவு லேட்டா வருமா...?


ஒரு குட்டிக்கதை...


ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த மீனவனொருவன். தன் தொழிலுக்காக வேண்டி அதிகாலையிலயே எழுந்து மீன் பிடிப்பதற்கு தேவையான வலை ஏனைய பொருள்கள் உணவு என்பவற்றை எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.


கடற்கரைக்குச்சென்றதும் இருளாகவேயிருந்தது. அது கடலுக்குள் பணிக்க சரியான நேரமாக அவனுக்குப்படவில்லை சரி இன்னும் கொஞ்சம் நேரம் விடியும் வரை காத்திருப்போம் என்றென்னி கடற்கரையில் உட்கார்ந்திருந்தான்.. அப்போது ஒரு பை அவன் கண்ணில் படவே அதை எடுத்து கையை உள்ளே விட்டுப்பார்த்தான் அவை வெறும் கற்களாக தோன்றியது.


பொழுது போக்கிற்காக அதை ஒவ்வொன்றாக கடலில் வீசி எறிந்துகொண்டிருந்தான்.. அவ்வாறு வீசிக்கொண்டிருக்கையில் பொழுது புலப்படவே, அந்தப்பைக்குள் கடைசியாக ஒரு கல் மீதமிருந்தது அதையும் வீசிவிட வெளியே எடுக்கும் போது சூரிய ஒளியின் உதவியுடன் அது வெறும் கல்லல்ல மானிக்ககல்லாக அவன் கண்ணில்பட்டது... அடடா இவ்வளவு நேரமும் நான் கடலுக்குள் வீசி எறிந்த கல் எல்லாம் மானிக்க கல்லாக இருந்திருக்குமோ என்ற கவலை அவன் மனதை குடைந்தது..


இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்...









யாரும் அதிகாலையிலேயே எழுந்திருக்ககூடாது..
 
ஒரு சந்தோஷம்....
 
எனது பதிவுகள் இலங்கையை தளமாக கொண்டு வெளிவரும் சான்றோர்.com எனும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.(எனது அனுமதியுடன்)
ராஜ ராஜ சோழன் நான். என்ற பாடல் பதிவும்
எப்பவோ பெய்த மழைத்துளிகள். என்ற கவிதை பதிவும் என் பெயர், தள முகவரியுடன் வெளியாகியுள்ளது. ஏதோ கிறுக்குகிறோம் என்ற நினைப்பில் கிறுக்கியவைகளுக்கு. இவ்வாறான் அங்கீகாரங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. சான்றோர் இணையத்தளத்திற்கும் நன்றிகள்.
 
ஒரு நெருடல்...
 
ஆச்சரியமான உடலைமைப்கொண்ட சிறுவன் பற்றி நான் கடைசியாக எழுதிய 100 வது பதிவு ஆரம்பத்தில் கிடைத்த ஓட்டுகள் பின்னூட்டத்தினடிப்படையில் மனம் சந்தோஷமடைந்தாலும். இறுதியில் வந்த சில பின்னூட்டங்களினாலும், அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது பூரண சுகத்துடன் இருக்கிறான் என்ற செய்தி அறிந்ததும் அதை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்த பின்னர் பதிவிட்டிருக்கலாமே என்ற எண்ணம் மனதை கொஞ்சம் நெருடியது.. அதனால் அந்த பதிவையே நீக்கி அந்தச்சிறுவன் குணமடைந்த செய்தியை மட்டும் பதிந்திருக்கிறேன்....
 
அதை பின்னூட்டம் வாயிலாக கொஞ்சம் கார சாரமாகவேனும் அறியந்தந்த கவின் என்பருக்கு என் நன்றிகள்..
 
 
 
 

இந்திய சிறுவனுக்கு.......!100வது பதிவு..


இந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது பூரண சுகத்துடன் இருக்கிறான் என்ற செய்தி பின்னர் தெரிய வரவே எனது பழைய பதிவு நீக்கப்பட்டுள்ளது..

கதைகள் பேசும் விழிகள்...!

அங்காடித்தெரு என்ற திரைப்படம் நம் மனங்களை விட்டு எப்படி அகலாமல் இருக்கிறதோ அதேபோல அப்படத்தின் பாடலான "கதைகளை பேசும் விழி அருகே" என்ற பாடல் என் மனதைவிட்டு அகலவேயில்லை. பாடல் வெளிவந்ததுமுதல் இன்றுவரை இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் மனதோடு ஓர் மயக்கம் என்னுள்ளே. சில சோர்வான நேரங்களில் கூட இந்தப்பாடலை கேட்கும் போதும் ஓர் உற்சாகம்.


வாழ்க்கையின் துன்பியலைச்சொல்லப்போகும் படத்தின் ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமாக ஓர் ஆழகான காதல் பாடலில் ஆரம்பிக்க நினைத்த இயக்குனர் வசந்தபாலனுக்கு ஒரு சபாஷ் போடலாம். படத்தின் கதை எதுவும் தெரியாமல் முதன்முதலில் படம்பார்க்க செல்வோருக்கு இந்தப்பாடல் மனதை குளிரவைக்கும். பாடல் முடிந்ததுமே அடுத்ததாக நடக்கும் காட்சிகள் மனதை நெகிழவைக்கும்.

பாடலின் ஆரம்ப வரிகளே ஓர் அழகான கவிதை.. அதற்குச்சொந்தக்காரர் நா.முத்துக்குமார். கண்ணதாசன்,வாலி,வைரமுத்து வரிசையில் பாடல் வரிகளை ரசிக்க வைக்கும் ஓர் சிறந்த பாடலாசிரியர் இவர்.

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே
காய்ச்சல் வருதே....


கதைகளை பேசும் விழி அருகே என பாடல் தொடங்கும்போதே அதற்கேத்தாற்போல் அஞ்சலியின் கண்களை குளொசப்பில் கான்பிப்பது செம அழகு. காதல் பாடல்கள் என்றாலே வெளிநாட்டு ஐஸ் மலைகளிலும் தெருக்களிலும் நடனமாட வேண்டும் என்பதை உடைத்தெரிந்து பாடல் முழுக்க நாயகன் நாயகியின் குறும்புத்தனங்களை கோர்வையாக கோர்த்து பாடல் காட்சி உருவாக்கப்பட்டிருப்பது நல்ல ரசனை.

(ஓ.. கதைகளை பேசும்...)


ஒ.. என்னைக்கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே..
ஒ.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே..


இசை ஜீ.வி.பிரகாஷ் இதமான இசை அன்மையகாலங்களில் இவரின் படப்பாடல்களை ரசிக்க முடிகிறது நிச்சயம் நல்லதொரு எதிர்காலம் இருக்கு இந்த இசை வாலிபனுக்கு. இசைப்புயலின் குடும்பத்திலிருந்து வந்தவராச்சே..

(ஓ.. கதைகளை பேசும்...)



கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா..
உன்னுடன் நாளும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா..
கல்லும் மன்னும் ஓ.. வீடுகளில்லை
ஓ.. அன்பின் வீடே அழிவதுமில்லை
வெறும் தரையில் படுத்துக்கொண்டு
வின்மீன் பார்ப்பது யோகமடா..
உன் மடியும் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையில்லையடி..

பாடல் என்றாலே நாயகனும் நாயகியும் நடனம் ஆடியேதான் தீர வேண்டும் என்ற திரைப்படங்களோடு ஒட்டியிருந்த கூத்தாடி கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்பொழுதெல்லாம் பாடலை காட்சிகளின் பின்னனியிலேயே ஒலிக்கவிடுவது நல்ல மாற்றமாகவே தெரிகிறது. இந்தப்பாடலிலும் அதுபோலவே நாயகனும் நாயகியும் ஓர் இரவில் பயனிக்கும் காட்சியினூடே பாடல் நகர்ந்து செல்கிறது.. அந்தப்பாடல் காட்சி முழுவதிலும் மகேஷ்,அஞ்சலி ஆகியோரின் நடிப்பு குழந்தைத்தனமாகவும் கொஞ்சும் காதல் குறும்புமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மிக அழகு

(ஓ.. கதைகளை பேசும்..)


உனக்குள் தொடங்கி உனக்குள்தானே
எந்தன் உலகம் முடிகிறதே..
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே..
ஓ.. இரவின் மடியில் குழந்தைகளாவோம்
ஒ.. இருட்டின் நதியில் இறங்கிப்போவோம்
நேற்றென்னும் சோகம் நெருப்பாய்
வந்து தீ மூட்டும்..
இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும்
பூக்கள் நீட்டும்..


(ஓ.. கதைகளை பேசும்..).


பாடலை இங்கே பார்க்கலாம்..

வழி தவறிய கவிதைகள்...!

சில நேரங்களில் கவிதையாக எதையோ எழுத தொடங்க.. அதில்  வார்த்தைகள் தடுமாறி எங்கோ போயிடும் அவ்வாறு வழி தவறிய இரண்டு கவிதைகள் இங்கே.. எவ்வாறு இதை முற்றுப்பெற வைப்பதென்பது தெரியாமல் ரொம்ப நாளாக யோசிக்கிறேன்.


ஓர் இரவுப் பொழுதில்...!


இரவுப்போர்வைக்குள் ஒழிந்த

வானம்.

இருளகற்ற வந்த

நிலவு.

மனசின் ஓரங்களில்

ஒரு மென்சோகம்

கிடைக்காத ஒன்றுக்காய்.

கேட்டால் கிடைத்திருக்கலாம்

கேட்கவுமில்லை

கிடைக்கவுமில்லை...

இப்பொழுதெல்லாம்

வரைமுறை தாண்டுவதுதான்

வரலாறாகிறது



முட்டாள்

பூவுக்குள் வாழ்ந்துகொண்டு

வாசம் தேடி அலைகிறேன்

கண்களை துரத்திவிட்டு

கனவுகளை அனைத்துக்கொள்கிறேன்

சூரியனில்லா

பகல் தேடுகின்றேன்

நிலவில்லா

வானம் தேடுகின்றேன்
 

இன்று எனக்கு பிறந்த நாளாம்...!

இன்று எனது பிறந்த நாளாம்.. நான் மட்டுமா பிறந்தேன். ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒவ்வொரு தாயும் இறந்தே பிறக்கிறாள்.அந்தவகையில் என் தாய்க்கும் இனறு பிறந்தநாள்தான் ஆதலால் அன்னையே உன்னை போற்றுகிறேன்..


தாயே
பத்து மாதங்கள் சுமந்தாய்
கருவினிலே..
பல காலங்கள் சுமந்தாய்
நெஞ்சினிலே..
உன் உயிரை
என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை
என் உடலாக்கினாய்...! 

துடி துடித்துப்போனாய்
துயரங்கள் கண்டாய்
தூக்கம் தொலைத்தாய்
என்னை ஈன்றெடுத்தாய்..
சில நிமிடங்கள்
நீயும் இற்ந்தே பிறந்தாய்
வார்த்தைகளினால்
வரைந்திட முடியா
வேதனைகளினால்...!




உலகை கண்டேன்
உன் கண்களினால்
உனர்வுகள் கொண்டேன்
உன் ஸ்பரிசங்களால்..
பாசங்களால்
பரவசம் கொடுத்தாய்.
மழலைச்சிரிப்பால்
மனம் மகிழ்ந்தாய்...!

தாயே
உன் பார்வைகளால்
பசியாருகிறேன்..
உன் வார்த்தைகளால்
கவலை மறக்கிறேன்..
உன் அன்பினால்
நானும் அழகாகிறேன்..

தாயே
உன் பாதங்களுக்கடியில்
சொர்க்கமாம்
சொல்கின்றனர்..
நான் சொல்கிறேன்
உன் மடியில்
புரண்டு விளையாடிய
காலம்தான்
சொர்க்கத்தில் வாழ்ந்த
பொற்காலம்..
   
 ஆகாயம் நோக்கி
பறந்த பறவை
இரை தேடி
பூமிக்கு வருவது போல
நான்
உலகின் எங்கு சென்றாலும்
என் ஞாபங்கள்
மட்டும்
உன்னிடம் வந்து சேரும்..!

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...