March 04, 2011

தண்ணீர் தேசமும் நானும்...!


முன்பெல்லாம் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும். அப்போதைய நிலையில் எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிப்படிக்கும் அளவிற்கு வசதியிருந்ததில்லை. இப்போது பொழுதைக்கழிக்க இனையம் என்ற பொழுது போக்கு சாதணம் இருப்பதனால் அவ்வப்போது மின்னூலாக கிடைக்கும் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அவ்வாறு அண்மையில் வாசித்து வியந்த புத்தகமே கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். இது நான் வாசித்த இரண்டாவது புத்தகம் வைரமுத்துவின். முன்பு வாசித்தது "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்" என்ற புத்தகம் அதிலிருந்தே அவரின் எழுத்துக்களை தேடிப்படிக்கும் ஆர்வம் அதிகமானது.

வாசிக்க வாசிக்க இனிக்கும் தண்மை கொண்டது வைரமுத்துவின் படைப்புகள். அதிலும் அவரின் இந்த படைப்பு முற்றிலும் வித்தியாசமான முயற்சி இதற்காக அதிகமாகவே மெனக்கெட்டிருப்பது வாசித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.இது 1996ம் ஆண்டு ஆனந்தவிகடன் வார சஞ்சிகையில் 24 தொடர்களாக வெளிவந்திருந்தது. வசனக்கவிதை,உரை நடை வடிவிலேயே எழுதப்பட்டிருந்ததால் படிப்பதற்கோ புரிந்துகொள்வதற்கோ எந்தவித இடைஞலும் இல்லை. யாரும் புரிந்து கொள்ளும்விதம் எளிய நடையில் அழகு தமிழில் இலக்கியச்சுவை கலந்த ஓர் அருமையான படைப்பு.

ஆரம்பத்தில் படிக்க தொடங்கும் போது ஏதோ காதலைப்பற்றி மட்டும்தான் சொல்லப்போகிறார் என்ற எண்ணத்துடன் படிக்க ஆரம்பித்தால் காதல், கடல், அறிவியல், மீனவன் வாழ்க்கை என தொடர்கிறது சுவாரஷ்ய பயணம். ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை பார்க்கும் அணுபவம் இதை வாசிக்கும் போது.. வார்த்தைகள் வசனங்களினூடே காட்சிகளை கண்முன்னே கொண்டு வருகிறார் வைரமுத்து. இறுதி பகுதியில் ஒவ்வொரு பக்கத்தை தொடரும் போதும் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பு படபடப்பு அந்த கதாபாத்திரங்கள் போலவே எனக்கும் உண்டானது. அதுதான் ஒரு சிறந்த படைப்பின் வெற்றி.

கடலைப்பற்றி பூகோளத்தைப்பற்றி ஏராளமான அறிவியல் கருத்துக்களை இதில் கானலாம். எனது பார்வையில் பட்ட அவ்வாறான சில தகவல்கள்.

கடல்நீர் இடம்மாறி நிலப்பரப்பில் நின்றால் எல்லா இடங்களிலும் மூன்று கிலோமீற்றர் உயரம் தண்ணீர் நிற்கும்.

ஒரு டன் கடல் தண்ணீர் 0.000004 கிராம் தங்கம் வைத்திருக்கிறது.

பூமியின் தண்ணீரில் 97 வீதம் கடல்கொண்ட உப்புநீர், மீதமுள்ள 3 வீதத்தில் 1 வீதம் பனிமலைகளில் உறைந்து கிடக்கும் நீர், 1 வீதம் பூமிக்கடியில் உள்ள நீர் மீதமுள்ள 1 வீதம்தான் மனித தேவைக்கான நீர்.

ஒவ்வொரு மனிதனும் பருகுவது பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீரைத்தான் என்கிறார்.

தெங்கடலில் தோன்றும் பேரலைகள் 24 மணி 50 நிமிடத்தில் உலகைச்சுற்றி வருகின்றனவாம்.


தண்ணீர் தேசத்திலிருந்து சில துளிகள்.

இந்தப்பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள் வீட்டுப்பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் எங்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள்.பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.

பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி
பயன்படுத்தாத மூளை
மனித குலத்துக்குப்
பாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது
சொந்த
மூளையைக்கூட அடுத்தவன்
மனைவிமாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.
சாதிக்கும் மூளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை.

வாழ்நாளில் 66000 லீட்டர்

தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு
தூங்கினான்.
நான்கு கோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்
35 ஆயிரம் கிலோ உணவு
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மறித்துப்போனான்
இதற்குத்தானா மனிதப்பிறவி..?


தண்ணீர் தேசத்தை டவுன்லோட் செய்ய
இங்கே..கிளிக்

மகா ஜனங்களே ஓட்டுப்போட மட்டும் மறந்துடாதிங்க..10 comments:

Ramani said...

நூல் அறிமுகம் மிக அருமை
ட்வுன் லோட் செய்து படிக்கத்
துவங்கிவிட்டேன் நன்றி
வாழ்த்துக்களுடன்

Jana said...

தண்ணீர்தேசம் பல ஆண்டுகளின் முன்னால் படித்த நினைவுகள். நாமும் அந்த படகில் இருப்பதுபோன்ற உணர்வும், இறுதியில் எதேட்சையாக தண்ணீரை வெளியேற்றும் தகரத்தின் ஒளி, மின்னி விமானத்தின் கவனத்தை ஈர்ப்பதும் அதிசயிக்க வைக்கும் நினைவுகள்.
அப்படித்தானே!

shanmugavel said...

நல்லதொரு அறிமுகம் .நன்றி நண்பரே

Nesan said...

பலவருடங்களுக்கு முன்வாசித்த நூல் இன்னும் ஞாபகம் வரகாரணம் எழுத்து நடை வைரமுத்துவின் பல நூல்களிள் காவி நிறத்தில் ஓரு காதல் எனக்கு அதிகம் பிடித்தது வாசிப்புத்தான் ஓருவனை பூரன மணிதன் ஆக்குது.உங்கள் எழுத்து நடை சிறப்பானது தொடர்ந்து எழுதுங்கள்.

ஜெய்லானி said...

அப்போது தொடராக வரும் போதே ஆவலுடன் எதிர்பார்த்து படிச்சது..அப்போதுதான் அவர் மேல் ஒரு ஈடுபாடே வந்துச்சி...

எத்தனை தடவை படிச்சாலும் மனதை விட்டு அகலாத ஒரு காவியம் தண்ணீர் தேசம் ..

அதிலும் சுண்டெலி.....!!!! , ஒற்றை சாக்லேட் ...மறக்கவே முடியாது :-))))

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க...

♔ம.தி.சுதா♔ said...

உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது... மீண்டும் ஒரு தடவை ரசிக்கணும்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

ஹேமா said...

நன்றி ரியாஸ் !

தோழி பிரஷா said...

பகிர்வுக்கு நன்றி ரியாஸ்

Anonymous said...

review is really good. But, Should you really download the book and read?. We can buy the book instead. It does not cost us much. Vairamuthu will be happy.

Lets stop piracy please.

Related Posts Plugin for WordPress, Blogger...