என்றுமே
அழகானதுதான்
குழந்தைகள் உலகம்
கவலைகள் கிடையாது
கண்ணீர் கிடையாது..
பூக்களால்
செய்யப்பட்ட மனசு
புன்னைகைகளால்
செய்யப்பட்ட அழகு..
அவ்வப்போதாவதாவது
சென்று வாருங்கள்
அவர்கள் உலகத்திற்கு..
அன்பு பாசம் நிம்மதி
அங்கே இலவசம்...
அவர்களோடு கொஞ்சுங்கள்
பேசுங்கள்
சிரியுங்கள்
மழலையாகிவிடுங்கள்
மறந்துவிடுங்கள்
உங்களை...
பிஞ்சு மழலை மொழியை
அனுபவியுங்கள்
உலகின்
அனைவருக்கும் புரியும்
அழகிய மொழியது...
புன்னகை இனிப்புகள்
கொடுங்கள்
இனிக்கும் அவர்கள் மனசு...
பூக்களாய் நேசியுங்கள்
பரிசாய் பெறுங்கள்
புன்னகைகளை...
VOTE PLS..
10 comments:
குழந்தைகள் உலகள் கொஞ்ச நேரம் இருந்தாலே நாம் மனக்குழப்பங்கள் யாவும் விடை பெரும். அருமையாக சொன்னீர்கள்.
அழகிய கவிதை.
பூச்சிரிப்பு கவிதையில்...
நிச்சயமாக உண்மைதான்.அந்த இன்பமான வாந்க்கை எப்போதும் வரப் போவதில்லை..
வாழும் உலகில் நீர்இன்றே-இங்கே
வடித்த கவிதை மிகநன்றே
சூழும் உவகை வெள்ளத்தில்-குழந்தை
செல்வமே பெற்றார் உள்ளத்தில்
மழலைகள் உலகு கண்டாரே-மன
மலர்ச்சியை தம்முள் கொண்டாரே
குழலை இனிதென சொல்லாரே-குறள்
கூறும் கருத்தைத் தள்ளாரே
புலவர் சா இராமாநுசம்
என்றுமே
அழகானதுதான்
குழந்தைகள் உலகம்
கவலைகள் கிடையாது
கண்ணீர் கிடையாது..//
நீங்களும் குழந்தை மனசு உள்ளவர்தான் போல, கவிதையே சொல்லுதே வாழ்த்துக்கள்...
அழகான கவிதை!!பொண்ட் சைஸ் கொஞ்சம் குறைக்கலாம் பாஸ்!
நன்றாக உள்ளது கவிதை சகோ
கவிதை அழகா இருக்குங்க .மழலை உலகம் உண்மையில் நிம்மதியான உலகம்
//அவர்களோடு கொஞ்சுங்கள்
பேசுங்கள்
சிரியுங்கள்
மழலையாகிவிடுங்கள்
மறந்துவிடுங்கள்
உங்களை...
பிஞ்சு மழலை மொழியை
அனுபவியுங்கள்//
வணக்கம் நண்பரே..
இன்றுதான் காண கிடைக்க்ப்பெற்றேன்.நண்பர் முனைவர் அவர்களின் வலைவழியே..
ஒவ்வொரு வரிகளும் அர்த்தமாய், அழகாய், ஆழமாய்...அருமை நண்பரே
இன்றுமுதல் நானும் தொடர்கிறேன்..
நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு..
நட்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
Post a Comment