August 26, 2011

நிர்வாணமாய் நிலவு..!!


நிர்வாணமாய் நிலவு
நாணம் வரவே நகர்கிறாள்
மேகப்போர்வைக்குள்..
வானவெளியெங்கும்
உல்லாசமாய் அலையும்
அழகியவள்..
இரவுக்காதலனோடு
இன்பம் கானவந்த
காதலியவள்....
அவள் காதல் பார்வைகளே
ஒளியாக
காதல் பேச்சில்
தெறிக்கும் எச்சில்களே
பனித்துளிகளாக
உருமாறி வருகிறது
உலகத்திற்கு....
சூரிய ராட்சசனுக்கு பயந்த
இரவின் காவலாளி
இருள் ஓடிவிட
இரவுடனிருந்தவள்
உறவு கலைத்து
விடைபெறுகிறாள்
விடியலுக்கு முன்....
இன்னுமொரு உறவை
இன்னுமொரு இரவை
எதிர்பார்த்து....
எனக்கும் பிடிக்கிறது
அவளைப்போலவே
அந்த இரவை..!!VOTE PLS Tamilmanam and Indli

45 comments:

ஜீ... said...

கலக்கல் பாஸ்!

ஜீ... said...

தமிழ்மணம்?

மைந்தன் சிவா said...

கவிதை கலக்கல்....ஹிஹி தமிழ்மணம் எனக்கும் செட் ஆகல அப்புறமா வாரன்

koodal bala said...

கவிதை சுகமோ சுகம் !

Riyas said...

இந்த காலகாந்தால வருவிங்கன்னு யாருக்கு தெரியும்..

//புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை//

இது தமிழ்மன செய்தி.. இப்ப ரொம்பவே லேட்டு

தினேஷ்குமார் said...

அழகான கவி வரிகள் நண்பரே...

Riyas said...

@ஜீ

வாங்க வருகைக்கு நன்றி

@மைந்தன் சிவா

அப்புறமா வந்து ஓட்டு போடுங்க நன்றி

@Koodal Bala
நன்றி வருகைக்கு

Riyas said...

@தினேஷ்குமார்

வாங்க உங்க முதல் வருகைக்கு நன்றி

நிரூபன் said...

தலைவா தமிழ் மணத்தைக் காணவில்லையே,

நிரூபன் said...

தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாக அமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!
அன்னைத் தமிழகமே, நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?


பின்னூட்டப் பெட்டி மூலம் நான் விளம்பரம் போடுவதில்லை, ஆனாலும் என்னை மன்னிக்கவும்,

நிரூபன் said...

நிலவு எப்போதும் உங்கள் கூடவே இருக்க வேண்டும் என்பதனை அழகாக வர்ணித்து எழுதியிருக்கிறீங்க.

விக்கியுலகம் said...

மாப்ள கவிதை கலக்கல்!

Riyas said...

@நிரூபன்

//தலைவா தமிழ் மணத்தைக் காணவில்லையே//

என்னது கானவில்லையா.. நல்லாபாருங்க மேல இருக்கு..

Riyas said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

Riyas said...

@நிரூபன்

//பின்னூட்டப் பெட்டி மூலம் நான் விளம்பரம் போடுவதில்லை, ஆனாலும் என்னை மன்னிக்கவும்//

மன்னிப்பெல்லாம் எதற்கு தாராளமா போடுங்க பாஸ்

நாங்க ஒவ்வொருத்தர் வீட்ட தட்டியெழுப்பில்ல விளம்பரம் பண்றம்

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை அருமையா வந்துருக்கு ரியாஸ்....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் கவிதை.......

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said...

நினைவுக்கு வந்த கவிதை..

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

பாரதிதாசன்.

முனைவர்.இரா.குணசீலன் said...

நினைவுக்கு வந்த கவிதை..

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

பாரதிதாசன்.

kobiraj said...

அருமையான கவிதை நண்பரே

சே.குமார் said...

கவிதை அருமை.

Admin said...

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

Mohamed Faaique said...

பாஸ்!!!! நீங்க எங்கயோயோயோயோ........ பெய்ட்டீங்க......

உங்க இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப் பட்டுவிட்டன..

கந்தசாமி. said...

அழகான கவி நண்பா ...

M.R said...

அருமையான உணர்வுடைய கவிதை

பகிர்வுக்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் ஒட்டு போட்டாச்சு

யாரோ தமிழ் மணத்துல மைனஸ் ஒட்டு போட்டிருக்காங்க பாஸ்

NIZAMUDEEN said...

நீங்க பிரமாதமாய் எழுதியிருப்பதால் கவிதை கலக்கலாய் உள்ளது.

துஷ்யந்தன் said...

உணர்வுகள் கொப்பளிக்கும் அசத்தல் கவிதை பாஸ்

அந்நியன் 2 said...

கவிதை அருமை.


தமிழ் மAணத்தைக் காணவில்லையே ?

Riyas said...

//தமிழ் மAணத்தைக் காணவில்லையே//

என்னது திரும்பவும் கானவில்லையா..??

தலைப்ப கிளிக் பண்ணுங்க பாஸ் அப்ப தெரியும்

யாருப்பா அது மைனஸ் ஓட்டு போட்றது தவறுதலா போட்டிருப்பாங்களோ அவ்வ்வ்

Riyas said...

// Mohamed Faaique said...
பாஸ்!!!! நீங்க எங்கயோயோயோயோ........ பெய்ட்டீங்க.....//

எங்கயும் போகல்ல இங்கதானே இருக்கேன்.

//உங்க இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப் பட்டுவிட்டன//

நான் என்ன கோரிக்கை வைத்தேன்.

Riyas said...

@ MANO நாஞ்சில் மனோ


@பன்னிக்குட்டி ராம்சாமி

@முனைவர்.இரா.குணசீலன்

தங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

Riyas said...

@ சே.குமார்
@ கந்தசாமி.
@ M.R said...
@ NIZAMUDEEN
@ துஷ்யந்தன்

உங்களின் வருகைக்கு நன்றி நண்பர்களே.

Nesan said...

கவிதை அருமை எப்போதும் நிலவு அழகுதான் !

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான கோணத்தில்..

சூப்பர்...

Mohamed Faaique said...

//
நான் என்ன கோரிக்கை வைத்தேன்.///

VOTE PLS Tamilmanam and Indli

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான
கவிதை

ரெவெரி said...

கலக்கல் பாஸ்...

சக்தி said...

ada kalakkureenga.. salam. eid mubaraq...

அந்நியன் 2 said...

தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.

மாய உலகம் said...

காதல் பேச்சில்
தெறிக்கும் எச்சில்களே
பனித்துளிகளாக
உருமாறி வருகிறது//

கவிதை கலக்கல் நண்பா

மாய உலகம் said...

தமிழ் மணம் 10

ஜில்தண்ணி said...

ரொம்ப நாளுக்கப்புறம் உங்க பதிவுப்பக்கம் வந்தன்...கவிதை ரியலி தாருமாறு..

கவி அழகன் said...

அருமையான கவிதை நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...