September 01, 2011

யாரது, சொல்லாமல் நெஞ்அள்ளி போவது!!காதல் கதை.

 சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த காலம் அது.அலுவலகத்தில் 40 % பெண்களே. அவ்வப்போது எதாவது கிறுக்கி (எழுதி ) காட்டுவேன். அதில் அனைவருக்கும் ஒரு சந்தோசம். உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான் இதை யாரும் மறுக்க முடியாது. படைக்க தெரிந்தவர்களை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.அந்த அலுவலகத்திலும் ஒருத்தி இருந்தாள் அவள் பெயர் நிலா.... மாநிறம், பூசினார் போல தேகம், அறிவும், திறமையும், பொறுமையும், பரிவும், நிதானமும் கலந்த கலவை அவள். லேசான சுருட்டை முடி. அதில் ஒன்றிடண்டு முன்னால் வந்து நிற்கும். அரிதாரம் பூசாத முகம் அவளின் சிறப்பு. சுற்றி இருக்கும் காட்டன் புடவை அவளை சுமக்கிறதா இல்லை அவள் புடவையை சுமக்கிராளா பாப்பையாவை வைத்து பட்டி மன்றமே நடத்தலாம் . அதிராத பேச்சு, நிதான நடை, பளிச் என்ற ஒரு தூய்மை. யாரையும் புண் படுத்தாத மனம்.நான் தேடிய மணியன் செல்வம் ஓவியம் அவள். அவளை நல்ல அழகு என்று சொன்னால் அது பிழை. அதையும் தாண்டி வார்த்தை தேடுகிறேன்.

ஒருமுறை கதிரவனில் புகைப்பட கவிதை போட்டி.எனக்கும் அவளுக்குமான சம்பவங்களை கோர்த்து எனது காதலை சொல்லி கவிதையை எழுதி அனுப்பிவைக்க அதற்க்கு பரிசும் கிடைத்தது . கவிதையை வாசித்தாள் பின் ஒன்றும் சொல்லவில்லை ஏற்று கொண்டாளா இல்லையா தத்தளித்தேன். பதட்டம் உடலிலும் மனதிலும். அலுவலக இளசுகள் ட்ரீட் கேட்க அனைவரும் அருண் ஐஸ் கிரீம் பார் சென்றோம். வட்ட மேசை சுற்றி அமர்ந்து இருந்தோம். என் அருகில் வந்து அமர்ந்தாள். பேசி கொண்டிருக்கும் போதே யாரும் அறியாவண்ணம் இரண்டு பேருடைய ஐஸ் கிரீமையும் மாற்றி கொண்டாள். அவள் தின்ற பாதி இப்பொழுது என் முன்னே. எழுந்து நின்று ஆர்பரிக்க வேண்டும் போல தோன்றியது. முதல் காதல் அது ஏற்று கொண்ட தருணம். வானத்தில் இருந்து என்மேல் மட்டும் மழை பொழிவது போல இருந்தது.காதலித்து பாருங்கள் பட்டென்று பத்து வயது குறைந்து விடும்.
காதல் சுகம் கிடைக்காத மனிதன் உலகில் பாவப்பட்ட ஜீவராசி. காதல் ஒரு அபூர்வ உணர்வு. வரலாற்று ஆசிரியர்கள் போர்களங்களை எவ்வளவு பதிந்தார்களோ அதற்க்கு சமமாய் காதலையும் பதிந்தார்கள். உண்மையான காதல் துணை நினைத்தாலே உடலும் மனதும் பூரிக்கிறது. அலுவலகம் சுகமானது.விடுமுறையை வெறுக்க தோன்றியது. ஆணையும் பெண்ணையும் சேர்த்து படைத்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றி.

மூன்று தங்கைகளுக்கு அக்காள் அவள். தனியார் வேலைக்கு சைக்கிள் ஓட்டிச்செல்லும் தந்தை. . சாலிகிராமத்தில் ஒரு சாதாரண குடும்பம் அவளுடையது. கனவு எல்லோருக்கும் சொந்தம்.காதலும் எல்லோருக்கும் சொந்தம். இதில் ஏழ்மை எங்கிருந்து வந்தது. நாங்களும் வாழ்ந்தோம் சந்தோஷ காதலர்களாய். பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்குகிறது.கடவுள் விரும்பாத வரை அது உங்களை அடைவதில்லை. அவர் விரும்பி விட்டால் தடுக்க எவருமில்லை.

காதல் பூத்து ஒரு வருடம் தாண்டி இருக்காது,ஒரு இரவு பொழுதில் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அலுவலக நண்பர்" நிலா தந்தை இறந்துவிட்டார் மருத்துவமனை வா "என்று. பதறினேன்.மருத்துவமனை சென்றேன். என்ன சொல்வேன் அவளிடம். இது காலில் அடிபட்ட புண்ணா சரியாகிவிடும் என்று சொல்ல. தீராத வலி. வீட்டில் ஆண்கள் இல்லாததால் அலுவலக நண்பர்கள் எல்லா வேலையும் செய்தோம். வீடு வெறிச்சோடியது. அழுகை நிரந்தரமானது. சிறிது நாட்கள் வேலைக்கு வரவேண்டாம் என அலுவலகமும் அலுவலக நண்பர்களும் பண உதவி செய்தார்கள். தினமும் வீடு சென்று வந்தேன். என்னால் ஆனவற்றை செய்தேன்.இப்பொழுது புதிதாய் நிறைய உறவினர்கள் முளைதிருந்தார்கள்

வந்தான் எதிரி சித்தப்பா ரூபத்தில்.நல்ல வரன் என்றும், எதுவும் தரவேண்டாம் என்றும், குடும்பத்தை பார்த்து கொள்வான் என்றும் இன்னும் நிறைய என்றும் என்றும் சொல்லி எங்கள் காதலை தீயிட்டு கொளுத்தினான். இப்பொழுது என்ன அவசரம் என்றாள் " ஆம்பிள்ளை இல்லாத வீடு" என்றார். இப்பொழுது அழுகையுடன் வீட்டில் சண்டையும் சேர்ந்தது. அவள் அம்மா நோய்வாய் பட்டாள்.

ஒரு தீபாவளியின் முந்தய தினம். வீட்டிற்கு அழைத்திருந்தாள். சென்றேன். ஒரு அறையில் அமர வைத்து கதவை அடைத்து கொண்டாள்.தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். தன்னுடைய இயலாமையை சொன்னாள். மூன்று தங்கையை நினைவுட்டினாள். என்ன செய்ய என தெரியவில்லை என்றாள். பின் முதலும் கடைசியுமாய் என்னை முழுமையாக கட்டி பிடித்தாள் அழுதாள் திரும்பி நின்று நான் ஒரு ஜடமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.என்னை மன்னித்துவிடு..போ என்றாள். ஒன்றுமே செய்ய இயலாதவனாக வெளியே வந்தேன். வெளியே வராந்தாவில் அவள் அம்மா. என் அருகில் வந்தவர்கள் சட்டென என் காலை பிடித்து விட்டார்கள்.இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்றார்கள். நான் நிலைகுலைந்து போனேன். என்னம்மா இது...நான் சின்ன பையன் என்னிடம் போய் " என்றேன். அவள் மனசில் ஆசையை வளர்த்து விடாதே என்றார்கள். இல்லை இல்லை என்று தலை அசைத்தவனாக வெளியே வந்தேன். என் அழுகையை மறைக்க வானமும் சேர்ந்து அழுதது.

காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..

நன்றி-புல்லட்பாண்டி..


டிஸ்கி- என்னுடைய  தாய்மை பெண்மை மதிக்கப்படவேண்டியதே என்ற பதிவு. என்ற பதிவு  விகடன் குட்பிளாக்ஸ். பகுதியில் வந்துள்ளதை கண்டு மிக்க மகிழ்ச்சி விகடன் நிர்வாகத்திற்கும் பதிவுலக நண்பர்களுக்கும் ரொம்ப நன்றி..

37 comments:

Mohamed Faaique said...

ஹி..ஹி.. நாமதான் 1ஸ்ட்டு... இருங்க படிச்சுடு வர்ரேன்..

Riyas said...

வந்தாச்சா வந்தாச்சா வாங்க வாங்க..

Riyas said...

எங்க படிச்சிட்டு வரேன்னு சொன்ன ஆள கானோம் அப்பிடியே ஓடிப்போயிடாரா!!அவ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

விகடன் குட் பிளாக் வாழ்த்துக்கள்

நிரூபன் said...

விகடன் குட் ப்ளாக்கில் உங்களின் படைப்பு வெளியானதற்கு வாழ்த்துக்கள் பாஸ்,
தொடர்ந்தும் அடிச்சு தூள் கிளப்புங்க.

நிரூபன் said...

ஐஸ்கீரிமை மாற்றி...செமையா ரசித்துக் குடிச்சிருக்கிறீங்க போல..

நிரூபன் said...

மனதில் புல்லரிக்க வைக்கும் ஆரம்பத்தினைத் தந்து விட்டு, சோகமயமான முடிவில் நிறைவு செய்திருக்கிறீங்க...

வலியினைச் சுமந்து வந்த, இயாலமையில் தோற்ற காதலை வெளிப்படுத்தும் அருமையான படைப்பு. எழுத்து நடை கலக்கல் பாஸ்.

Ramani said...

காதலர்கள் தோற்கிறார்கள்
காதல் தோற்பதில்லை
அதற்கான விளக்கம்போல் அமைந்த
தங்கள் படைப்பு
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 4

Mohamed Faaique said...

////எங்க படிச்சிட்டு வரேன்னு சொன்ன ஆள கானோம் அப்பிடியே ஓடிப்போயிடாரா!!அவ்வ்வ்வ்வ்வ் ////#

பீலிங்க்ஸ் பாஸ்..பீலிங்க்ஸ்.....

சூப்பரா இருக்கு... ஆனால், அவனுக்கு திருமணம் முடித்திருக்கலாமே!! முடிப்பதில் என்ன சிக்கல்`னு சொல்லலயே!!!

K.s.s.Rajh said...

@ஒரு தீபாவளியின் முந்தய தினம். வீட்டிற்கு அழைத்திருந்தாள். சென்றேன். ஒரு அறையில் அமர வைத்து கதவை அடைத்து கொண்டாள்.தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். தன்னுடைய இயலாமையை சொன்னாள். மூன்று தங்கையை நினைவுட்டினாள். என்ன செய்ய என தெரியவில்லை என்றாள். பின் முதலும் கடைசியுமாய் என்னை முழுமையாக கட்டி பிடித்தாள் அழுதாள் திரும்பி நின்று நான் ஒரு ஜடமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.என்னை மன்னித்துவிடு..போ என்றாள். ஒன்றுமே செய்ய இயலாதவனாக வெளியே வந்தேன். வெளியே வராந்தாவில் அவள் அம்மா. என் அருகில் வந்தவர்கள் சட்டென என் காலை பிடித்து விட்டார்கள்.இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்றார்கள். நான் நிலைகுலைந்து போனேன். என்னம்மா இது...நான் சின்ன பையன் என்னிடம் போய் " என்றேன். அவள் மனசில் ஆசையை வளர்த்து விடாதே என்றார்கள். இல்லை இல்லை என்று தலை அசைத்தவனாக வெளியே வந்தேன். என் அழுகையை மறைக்க வானமும் சேர்ந்து அழுதது.

காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்.//

போங்க பாஸ்..இதை படித்துவிட்டு பீலிங்........பீலிங்கா இருக்கு....நீங்களும் வேலைதானே செய்ததாக கூறினீர்கள் ஏன் நீங்கள் அவளை திருமணம் செய்து இருக்கலாம் தானே?
ஒவ்வொறு மனுசனுக்கும் ஒவ்வொறு பீலிங்.....அப்பால இது உங்க சொந்தக்கதையா இப்ப அவங்க எங்க இருக்காங்க?..எப்படி இருக்காங்க? சந்தோசமா இருக்காங்களா?
ஏன் கேட்குறேன்னா நாம லவ்பண்ணினவங்க கூட வாழ்வதை விட அவங்க நல்லா வாழ்வதை பார்ப்பதில் ஒரு சந்தோசம் இருக்கின்றது அல்லவா அதான் கேட்டேன்.

நம்ம கடைப்பக்கமும் ஒரு காதல் கதை ஓடுது.......(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை
http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html

Anonymous said...

காதலன் காதலி தொர்ப்பதுண்டு காதல்கள் எப்பவும் தோற்ப்பதில்லை ....)) டாக்குத்தர் பாட்டு )

குட்பிளாக்கில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்..

Riyas said...

@சி.பி.செந்தில்குமார்.

நன்றி சி.பி சார்

Riyas said...

@Mohamed Faaique


//பீலிங்க்ஸ் பாஸ்..பீலிங்க்ஸ்.....

சூப்பரா இருக்கு... ஆனால், அவனுக்கு திருமணம் முடித்திருக்கலாமே!! முடிப்பதில் என்ன சிக்கல்`னு சொல்லலயே!!//

இதை நண்பர் புல்லட் பாண்டியிடம்தான் கேட்கனும்..
பீலிங்கஸ் வேனாம்.. நன்றி பாஸ்

Riyas said...

@K.s.s.Rajh

வாங்க ராஜ் இது எனது கதையல்ல நண்பன் புல்லட் பாண்டியினுடையது,,

///போங்க பாஸ்..இதை படித்துவிட்டு பீலிங்........பீலிங்கா இருக்கு..//

பீலிங்க் வேனாம் பாஸ்
வருகைக்கு நன்றி.. உங்க கடைப்பக்கமும் நிச்சயம் வருகிறேன்..

Riyas said...

@Ramani

நன்றி ரமனி சார்

Riyas said...

@கந்தசாமி.

நன்றிங்க வருகைக்கும் வாழ்த்திற்கும் டாக்குட்டர் பாட்டு நானும் கேட்டுருக்கேன்..

துஷ்யந்தன் said...

பாஸ் முதலில் விகடனின் அங்கீகாரத்துக்கு என் வாழ்த்துக்கள் பாஸ்.

துஷ்யந்தன் said...

நல்ல ஒரு காதல் புத்தகம் படித்த உணர்வு,
கலகலப்பாக ஆரம்பித்து சோகமாக முடித்துவிட்டீர்கள்

துஷ்யந்தன் said...

முடிவை படிக்கும்போதே தாங்கி கொள்ள முடிவில்லை.. :(
சுக ராகம் சோகம்தானே......... கடைசி பஞ் அருமை நிதர்சனம்.

Anonymous said...

விகடன் குட் ப்ளாக்கில் உங்களின் படைப்பு வெளியானதற்கு வாழ்த்துக்கள் ரியாஸ்...வாழ்த்துக்கள்...கட்டுரைக்கும்...பெருநாளுக்கும்...
இரண்டுக்கும் சேர்த்து பிரியாணி அனுப்பி வைங்க நண்பரே...

புல்லட் பாண்டி + ரியாஸ் ...வாழ்த்துக்கள் கதைக்கு...

M.R said...

தமிழ் மணம் எட்டு

M.R said...

இரண்டு விஷயம் இவ்வுலகத்தில் உண்டு என்பதை வலியுறுத்த சந்தோசமாக ஆரம்பித்து சோகமாக முடிச்சுட்டீன்களா

எழுதிய உழைப்புக்கு நன்றி நண்பா

angelin said...

.//பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்குகிறது.கடவுள் விரும்பாத வரை அது உங்களை அடைவதில்லை. அவர் விரும்பி விட்டால் தடுக்க எவருமில்லை.//

படித்ததில் மிகவும் பிடித்த வரிகள் இது .பகிர்வுக்கு நன்றி

K.s.s.Rajh said...

@
டிஸ்கி- என்னுடைய தாய்மை பெண்மை மதிக்கப்படவேண்டியதே என்ற பதிவு. என்ற பதிவு விகடன் குட்பிளாக்ஸ். பகுதியில் வந்துள்ளதை கண்டு மிக்க மகிழ்ச்சி விகடன் நிர்வாகத்திற்கும் பதிவுலக நண்பர்களுக்கும் ரொம்ப நன்றி//

இப்பதான் பாஸ் உங்கள் இந்தபதிவை பார்த்தேன் நிச்யம் அங்கிகாரத்துக்குறியதுதான்..சகநேரத்தில் என் ப்ளாகும் தெரிவாகி இருக்கு..அப்பதான் இந்தப்பதிவாசித்தேன்..வாழ்த்துக்கள் நண்பா....

முனைவர்.இரா.குணசீலன் said...

காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..

உண்மைதான் நண்பா..

நல்ல பதிவு.

முனைவர்.இரா.குணசீலன் said...

தாய்மை பெண்மை மதிக்கப்படவேண்டியதே என்ற பதிவு. என்ற பதிவு விகடன் குட்பிளாக்ஸ். பகுதியில் வந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள் நண்பா.

Riyas said...

@துஷ்யந்தன்..

வாங்க நண்பா,,

கருத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி

Riyas said...

@ M.R said

@angelin

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

Riyas said...

@K.s.s.Rajh

நன்றி நண்பா,,

Riyas said...

@முனைவர்.இரா.குணசீலன்

வாங்க நண்பரே வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி

மைந்தன் சிவா said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள் தல!

மாய உலகம் said...

எனது காதலை சொல்லி கவிதையை எழுதி அனுப்பிவைக்க அதற்க்கு பரிசும் கிடைத்தது . கவிதையை வாசித்தாள் பின் ஒன்றும் சொல்லவில்லை ஏற்று கொண்டாளா இல்லையா தத்தளித்தேன். //

என் அருகில் வந்து அமர்ந்தாள். பேசி கொண்டிருக்கும் போதே யாரும் அறியாவண்ணம் இரண்டு பேருடைய ஐஸ் கிரீமையும் மாற்றி கொண்டாள். //
பதிவை முழுமையாக படிக்கும் முன்னே...மேற்கண்ட வரிகளை படிக்கும் போதே..ஐஸ்க்க்ரீம் வரை படித்த பொழுதே எனது கண்களில் கண்ணீர் வழிய தொடங்கிவிட்டது... என்னடா ரசிக்கவேண்டிய இடத்தில் கசிய தொடங்கிவிட்டானே என்று பார்க்கிறீர்களா...சத்தியமாக அந்த நிகழ்வு பொறாமை தர வில்லை

மாய உலகம் said...

முடிவு மேலும் சோகமாக்கியது... இறைவனின் மோசமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று... பகிர்வுக்கு நன்றி நண்பரே

சே.குமார் said...

கதை அருமையா இருக்கு...
காதல் வலியை எங்களுக்குள்ளும் இறக்கிச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

நல்லதொரு பதிவு ரியாஸ்

ஜெய்லானி said...

//காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..//

காதலர்கள் தோற்க்க என்ன காரணமுன்னு சரியா சொல்லலையே பாஸ்..!!. சரியான ரூட்டில கொண்டுப்போய் சினிமாத்தனமா முடிச்ச மாதிரி தெரியுது :-(

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

Related Posts Plugin for WordPress, Blogger...