September 14, 2011

சின்ன சின்ன சந்தோஷங்கள்..!!


அன்றொரு இரவு நேரம்
அபுதாபியில்
மல்லிகை சாமான வாங்குவதற்காய்
நண்பனொருவனுடன் சென்றிருந்தேன்
சுப்பர் மார்க்கட் ஒன்றிக்கு..
பொருட்கள் கொஞ்சம்தான் வாங்கி
பில் போட்டுவிட்டு
தள்ளு வண்டியை தள்ள முற்பட்டோம்.
அதற்குள் அங்கு வேலை செய்யும்
பையநொருவன் அதை தள்ளிக்கொண்டு
எங்கள் முன்னால் சென்றான்..
அவனிடம்
டாக்ஸி பக்கித்தில்தான் நாங்களே
கொண்டு போய்க்கிறோம்
என்றோம்..
அவன் கேட்பதாய் இல்லை
பரவாயில்லை நான் கொண்டு வந்து
தருகிறேன் என்கிறான்..
அவன் நோக்கம்
வருபவர்களுகு உதவி செய்து
பொருட்களை ஏற்றிக்கொடுத்தால்
எவ்வளவாவது தருவார்கள் என்பது..
மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்
அவர்களின் நம்பிக்கையே
இந்த "டிப்ஸ்" எனப்படும்
சின்னத்தொகையில்தான்..
இவன் ஏன இதை தள்ளிட்டு வரனும்
நம்ம ரெண்டு பேரு இருக்கம் தானே
இப்ப இவனுக்கு ஏதாவது குடுக்கனும்
நண்பன் பக்கத்தில்
முணங்கிக்கொண்டு வருகிறான்..
பொருடகளை ஏற்றிவிட்டு
எங்கள் முகத்தை பார்த்தான்
நான் ஐந்து திர்ஹம் அவன் கைகளில்
பொத்திவிட்டு
வண்டியில் ஏறிக்கொண்டோம்..
அந்த ஐந்து திர்ஹம் கொடுத்த வேளை
அவன் முகத்தில் கண்ட புன்னகை
இவ்வாறான
சின்ன சின்ன விடயங்களால்கூட
மனிதர்களை சந்தோஷப்படுத்த முடியும்
என உணர்ந்து கொண்டேன்..

24 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பா..

சின்னச்சின்ன அங்கீகாரங்கள் கூட மிகப்பெரிய மகிழ்ச்சியின் திறவுகோல்களாக மாறம் தன்மையுடையன.

நல்ல படைப்பு.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
சிறு துளி பெரு வெள்ளமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியினை அந்தச் சிறுவனின் முகத்தில் கண்டிருக்கிறீங்க.

நல்லதோர் கவிதை.

Mohamed Faaique said...

ஆஹா,.,.. தர்ம பிரபு...

நம்ம நன்பன் ஒருவன் இருக்கிறான். அவன் சொல்வான், நம்ம ஆளுங்க வந்தா (இந்ந்தியா, பாகிஸ்தான், இலங்கை) நான் வண்டிய தள்ளுரதில்லடா.. பிச்சக் காரப் பயலுக/ பொண்ணுங்க... 1,2 திர்கமுக்கு மேல தேராது.. சில வேலை அதுவும் இல்லைனு..

ஆனால் ஒரு விசயம்.. மாசக் கடைசியில், நம்மள அந்தப் பசங்க சம்பாரித்திருப்பார்கள் தெரியுமா???

சென்னை பித்தன் said...

//சின்ன சின்ன விடயங்களால்கூட
மனிதர்களை சந்தோஷப்படுத்த முடியும்
என உணர்ந்து கொண்டேன்..//
உண்மைதான்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

அரசன் said...

நல்லதொரு பகிர்வு நண்பா

suryajeeva said...

உண்மை தான், ஆனால் அங்கு பிழைப்பு நடத்த முடியாத அளவே சம்பளம் கிடைக்கிறது என்பது உங்கள் கருத்துக்களில் தெரிகிறது.. செய்யும் வேலைக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைத்தால் அவன் உங்களிடம் எதிர்பார்க்க போவதில்லை.. தன முதலாளியிடம் உரிமை குரல் எழுப்ப வேண்டியவனின் குரல் வலையை நிறையபேர் இது போல் தான் தெரியாமல் முறித்துக் கொண்டிருக்கிறீர்கள்..

துஷ்யந்தன் said...

நல்ல கவிதை பாஸ்,
உண்மையில் ஒரு சின்ன அங்கீகாரம் உதவிதான் மிக பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கு.

Mahan.Thamesh said...

நல்ல படைப்பு

Jaleela Kamal said...

நல்ல அனுபவம்


http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/onion-capsicum-pizza-bread.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

MANO நாஞ்சில் மனோ said...

உண்மையை பளாரென சொன்னீர்கள் நண்பா தொடருங்கள், சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவிங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான்....

Riyas said...

@முனைவர்.இரா.குணசீலன்

வாங்க முனைவர் அவர்களே.. மிக்க நன்றி.

Riyas said...

@நிரூபன்

வாங்க நிரூபன்.. இது கவிதையெல்லாம் இல்லிங்க மனசுல பட்டத சொல்லிருக்கேன் அவ்வளவே..நன்றி

Riyas said...

@Mohamed Faaique

//ஆஹா,.,.. தர்ம பிரபு.//

அப்பிடியெல்லாம் இல்லைங்க.. நன்றி

Riyas said...

@ சென்னை பித்தன்

@"என் ராஜபாட்டை"- ராஜா

@அரசன்

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி

மாய உலகம் said...

பிறரை சந்தோசப்படுத்திப் பார்ப்பதில் தான் உண்மையான சந்தோசம் என அந்த சிறுவனின் சந்தோசத்தை பார்த்து நீங்கள் சந்தோசப்பட்டதே உணர்த்துகிறது... பகிர்வுக்கு நன்றி நண்பா.

Riyas said...

@suryajeeva

முதலில் வருகைக்கு நன்றி

//கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைத்தால் அவன் உங்களிடம் எதிர்பார்க்க போவதில்லை.. தன முதலாளியிடம் உரிமை குரல் எழுப்ப வேண்டியவனின் குரல் வலையை நிறையபேர் இது போல் தான் தெரியாமல் முறித்துக் கொண்டிருக்கிறீர்கள்//

இப்படியான தொழில்களில் ஈடுபடுவோர் சம்பளத்தைவிட இப்படியான வருமானங்களைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.. அது அவர்களின் தவறில்லை அந்த தொழிலின் தன்னை அவ்வாறானது..

Riyas said...

@
@துஷ்யந்தன்

@Mahan.Thamesh said...

@Jaleela Kamal said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை .

@MANO நாஞ்சில் மனோ s

உங்கள் அனைவரின் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க..

Anonymous said...

உண்மைதான் நண்பா...

பேசாமல் ரியாஸ் ஊரில் தள்ளு வண்டி தள்ள போயிரலாமோ...அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே...:)

Samantha said...

arumayaana kavidhai..very nice ;)

K.s.s.Rajh said...

உண்மைதான் பாஸ் மனிதமனம் சின்னச்சின்னச் சந்தோசங்களிற்காக ஏங்கிக்கிடக்கின்றது.....

Rathnavel said...

சின்ன சின்ன விடயங்களால்கூட
மனிதர்களை சந்தோஷப்படுத்த முடியும்

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...