October 03, 2011

பிரபாகரன் Sir..!

நாம் பிறந்தது முதல் வாழ்க்கை பாதையில். எத்தனையோ நிகழ்வுகளையும் எத்தனையோ மனிதர்களையும் கடந்து வந்திருப்போம். அவ்வாறு நாம் பழகி வந்த கடந்து வந்த மனிதர்களில் சிலர் அந்த தருணங்களிலே மறந்து போவார்கள்.. சிலர் கொஞ்ச காலத்திற்கு மனதில் இருப்பார்கள், சிலர் நாம் வாழும் காலத்திற்கும் நம் மனதோடு வாழ்வார்கள் அவர்களின் நடவடிக்கைகள், மற்றும் அவர்களின் உருவம் நம் கண் முன்னே நிழலாக ஆடும்.. அப்படி மறக்க முடியாத ஒருவர்தான் எங்களுக்கு பாடம் சொல்லித்தந்த பிரபாகரன் சார்..

கல்விக்கும் கல்வி கற்றுக்கொடுப்போருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாணம்தான் இவரின் ஊர். நான் உயர்தரம் படித்த மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவ யில் வர்த்தக பிரிவில். அப்போது அங்கே ஆசிரியராக இருந்தார் இவர்.. எங்கள் வகுப்பிற்கு முதலாம் ஆண்டில் கணக்கியல் (Accounting) இரண்டாம் ஆண்டில் பொருளியல் (Economics) பாடம் எடுத்தவர்.. கல்வி என்றாலே அது கசப்பானது என்று என் மனதில் இருந்த மனநிலையை மாற்ற வைத்து, அது இனிமையானது அதை விரும்பி படித்தால் என புரிய வைத்தவர். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஒரு பாடலை ஒரு முறை இரு முறை கேட்கும் கேட்கும் போது அது நம் மனதோடு ஒட்டிவிடுகிறது. அதன் வரிகளை நம்மையறியாமலே முனுமுனுக்குறோம். காரணம் அதை நாம் ரசிக்கிறோம் விரும்புகிறோம். இதைப்போன்று கல்வியையும் விரும்பி ரசித்துப்படித்தால் நம் மனதில் இலகுவாக ஒட்டிவிடும் அதன் பிறகு அது இலகுவில் மறக்காது என்பதாகும்.. இது போன்று அழகான உதாரணங்கள்,உவமைகள் மூலமாக கற்கும் பாடங்களை மனதில் பதிய வைத்த அருமையான ஆசிரியர்தான் இவர்.

ஆனாலும் இவர் மிக கண்டிப்பானவர்.. இவரின் வகுப்பிலே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.. இல்லையென்றால் வெளியில்தான். இந்தக்கட்டுப்பாடுகளால் நிறைய மாணவர்களுக்கு இவரை பிடிப்பதில்லை.. ஆனாலும் நான் இவரின் பாடங்களை மிகவும் விரும்பினேன்.. இன்றைக்கு எனது இந்த நிலைமைக்கு அவரிடம் கற்ற பாடங்களும் அறிவுரைகளும் முக்கியமானவை. அவர் நல்லதொரு ஆசிரியர் மற்றுமின்றி நல்லதொரு அறிவுரையாளர்.. எல்லா ஆசிரியர்களும் அப்பிடியில்லை. அவர் எப்போவும் சொல்லும் ஒரு வசனம் "ஸ்கூலுக்கு வந்தா படிக்கனும் கிரவுண்டுக்கு போனா விளையாடனும்"

சனி,ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் இவர் அதற்காக சிறு கட்டணத்தை அறவிடுவார். அதற்கு இப்பிடி சொல்வார்.. உங்களுக்கு இலவசமாக படித்து தர ஆசைதான், ஆனாலும் அப்படி இலவசமாக தந்தால் அதில் ஒரு அருமைத்தன்மை இருக்காது. காசு கொடுத்தால்தான் காசு கொடுக்கிறோமே கொடுத்த காசுக்கு படிக்க வேணுமே என்ற ஆர்வம் வரும். எனக்கூறுவார், உண்மைதான்! எதுவும் இலவசமாக கிடைத்தால் அதில் ஒரு அருமை இல்லைதான். ஆனாலும் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தன்னை தனியாக சந்தித்து பேசினால் அவர்களுக்கு இலவசமாக கற்றுத்தருவேன் என்பார்.. இப்படி சொல்ல எத்தனை ஆசிரியர்களுக்கு மனசு வரும்..

நாங்கள் உயர்தரம் படித்து முடித்து கொஞ்ச காலத்தில் அந்த பாடசாலையிலிருந்து விலகிவிட்டதாக அறிய கிடைத்தது.. இப்போது எங்கேயிருக்கிறார். என்ன செய்கிறார் என எதுவும் தெரியாது. போராட்டம் நிறைந்த இந்த உலகில் சவால்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என கற்றுக்கொடுத்தவர்கள் உங்களை போன்ற ஆசிரியர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் நன்றியுடன் உங்கள் மாணவன்..

18 comments:

Powder Star - Dr. ஐடியாமணி said...

குருவை மறக்காத சிஷ்யனா நீங்க? ஓகே! பிரபாகரன் சார் நலமாக இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்!

கந்தசாமி. said...

சார் அவர் சித்தங்கேணியில் தானே வசிக்கிறார் ?

கந்தசாமி. said...

நான் அவரிட்ட படிக்கவில்லை ஆனா என் மூத்த சகோதரன் படித்தவர்.. அவரின் பெயருக்காகவே 87 களில் இந்தியனாமியிடம் மிக பெரும் துன்பங்களை எல்லாம் அனுபவித்தவராம் என்று என் அண்ணா சொல்லுவார்.. நான் படித்தது அவர் வீட்டுக்கு முன்னுக்கு இருக்கும் ஒரு கல்வி நிலையத்தில்

துஷ்யந்தன் said...

ஆசிரியர்களை மறக்கவே முடியாது இல்ல..
அதுதான் குருவின் சிறப்பு

துஷ்யந்தன் said...

குருவுக்கு பெருமை சேர்க்கும் பதிவு...

துஷ்யந்தன் said...

இப்பதிவை படிக்கும் போது எனக்கு என் ஆசிரியர்கள் நினைவுகள் வருது பாஸ் :)

K.s.s.Rajh said...

எமது ஆசிரியர்களை என்றும் மறக்கமுடியாது அருமையான பதிவு நண்பா

வைரை சதிஷ் said...

குருவை பெருமைபடுத்திய பதிவு

suryajeeva said...

make them learn, dont teach...
என்ற கொள்கை வைத்திருப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாக உலா வருகிறார்கள்

Mohamed Faaique said...

ஒவ்வொருத்தருக்கும் இப்படி மறக்க முடியாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள் போலும்...
பதிவு எழுதவே பிடிக்கல`னு சொன்ன ஆள பிரபாகரன் சார் திரும்ப அழைத்து வந்துட்டாரு..

Riyas said...

@கந்தசாமி.

பிரபாகரன் சார் இப்ப எங்கே வசிக்கிறார் எனக்குத்தெரியாது. ஒரு வேளை நீங்கள் சொல்வபராககூட இருக்கலாம். நன்றி

சே.குமார் said...

குருவுக்கு பெருமை சேர்க்கும் பதிவு...

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றி மறவாத மாணவரின் வலைப்பக்கத்துக்கு வந்ததில் மகிழ்ச்சி..

முனைவர்.இரா.குணசீலன் said...

கல்வி என்றாலே அது கசப்பானது என்று என் மனதில் இருந்த மனநிலையை மாற்ற வைத்து, அது இனிமையானது அதை விரும்பி படித்தால் என புரிய வைத்தவர்.

இவரல்லவா ஆசிரியர்..

முனைவர்.இரா.குணசீலன் said...

இந்த நினைத்துப் பார்த்தலே அந்த ஆசிரியருக்குத் தரும் சிறந்த பரிசு..

கோகுல் said...

மேலதிக வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் இவர் அதற்காக சிறு கட்டணத்தை அறவிடுவார். அதற்கு இப்பிடி சொல்வார்.. உங்களுக்கு இலவசமாக படித்து தர ஆசைதான், ஆனாலும் அப்படி இலவசமாக தந்தால் அதில் ஒரு அருமைத்தன்மை இருக்காது.///

எனக்கு வகுப்பெடுத்த ஒரு ஆசிரியரும் இதே சொல்லியிருக்கிறார் .அவர் இப்ப நினைவுக்கு வர்றார் கூடவே அந்த நாள் நினைவுகளும்.
நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி!
குருவை மறவா சீடனுக்கு வாழ்த்துக்கள்!

ரெவெரி said...

"பிரபாகரன்" சார் நலமாக இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்...

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

கண்டிப்பான ஆசிரியர்களின் செயற்பாடுகளால் தான் நல் மாணாக்கர்கள் உருவாகின்றார்கள் என்பதனை அனுபவப் பதிவினூடாகவும், பிரபாகரன் சேர் பற்றிய பதிவினூடாகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...