December 08, 2011

நலம்தானா..? மீள் வருகை!

நலமாக இருக்கிறீர்களா..? நண்பர்களே! நீண்ட நாளைக்குப்பிறகு வலைப்பதிவு மூலமாக வருகிறேன். திடிரெண்டு ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு கிளம்பிவிட்டதால் இந்தப்பக்கம் வர முடியவில்லை. ஊரிலிருந்து வந்து ஒரு வாரம் ஆகின்ற போதிலும். இது வரை ஒரு பதிவு கூட போட முடியாமல் போனது கவலை.

எல்லாத்துக்கும் மனசு ஒழுங்காக இருக்க வேண்டும். என் மனசு இன்னும் பதிவெழுதவோ கவிதை எழுதவோ ஒருங்கினையவில்லை..  நண்பர்களின் அநேக பதிவுகளுக்கு வந்து படித்தாலும் பின்னூட்டங்கள் இட முடியவில்லை. மன்னிக்கனும்!

சீக்கிரம் பதிவெழுதுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

அதுவரை சில ட்வீட்ஸ் உங்களுக்காக..

பகலில் தொலைந்த உறக்கத்தை தேட தொடங்கும் போதே இரவு முடிந்துவிடுகிறதே!


முன்பெல்லாம் எனக்கொரு மூடநம்பிக்கை. நான் அழகாக இல்லையாம் புகைப்படங்களில்!


இனி யாருக்கும் கடன் கொடுக்க கூடாது! பல முறை என்னை தோற்கடித்த வசனம்.


ஆதி வாசிகளாவே வாழ்ந்திருந்தால்! ஆசைகளினதும் பணத்தினதும் அவஸ்தைகள் இருந்திருக்காது.


மனிதர்களுக்கும் சிறகுகள் கிடைத்திருந்தால்.. பறவைகளின் நிம்மதி தொலைந்திருக்கும்.
 இது எனது நானாவின் (அண்ணா) மகள் பாலர் பாடசாலை வினோத உடை போட்டியில் வக்கீலாக..
 ஒரு பாடலுக்கு நடனமாட வேளான்னை வயலில் வேலை செய்யும் பெண்ணாக

 வீட்டு முற்றத்து மாமரம் காய்த்து தொங்குகிறது.10 comments:

ஹுஸைனம்மா said...

வருக, வருக!!

//வினோத உடை போட்டி//

இந்தப் பேர் நல்லாருக்கே!! எங்க ஊர்ல “மாறுவேடப் போட்டி”னு சொல்வாங்க.

சிநேகிதி said...

வருக.. வருக.. மாறுவேடப் போட்டி ஆடைகளில் நாணா மகள் ரொம்ப அழகு மாஷாஅல்லாஹ்

M.R said...

மனிதர்களுக்கும் சிறகுகள் கிடைத்திருந்தால்.. பறவைகளின் நிம்மதி தொலைந்திருக்கும்.//

நலம் நண்பரே ,தாங்கள் நலமா?

இப்பொழுதே சில மனிதர்களால் பறவைகளின் நிம்மதி இல்லை தான் நண்பரே

அழகான புகைப்படங்கள் மற்றும் அழகான தத்துவங்கள் அருமை நண்பா

தமிழ்மணம் 2 வது வாக்கு

Philosophy Prabhakaran said...

உங்க மனசுக்கு இப்ப என்ன சார் குறைச்சல்...

Rathnavel said...

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வருக! வருக! படங்கள் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Mohamed Faaique said...

///இனி யாருக்கும் கடன் கொடுக்க கூடாது! பல முறை என்னை தோற்கடித்த வசனம்.///

என்னை பலமுறை தோற்கடித்த வசனம்
“இனி யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. வாங்கினாலும் மறந்துடக் கூடாது”

Mohamed Faaique said...

///மனிதர்களுக்கும் சிறகுகள் கிடைத்திருந்தால்.. பறவைகளின் நிம்மதி தொலைந்திருக்கும்.///

சுப்பெர்ப்....

ஹேமா said...

வாங்க ரியாஸ்.சுகம்தானே.மனம் எப்போதும் அப்படித்தான்.அதை ஓரம் வச்சா எல்லாம் சரியாயிடும் !

அண்ணாவின் குழந்தை கொள்ளை அழகு.வீடும் மாமரமும் ஊரை ஞாபகப்படுத்துகிறது !

துஷ்யந்தன் said...

பாஸ் வருகை நல்வரவாகட்டும்.... :)

பாஸ் துணுக்கு தொகுப்பு அசத்தல்... அதிலும் மனிதர்களுக்கும் சிறகுகள் கிடைத்திருந்தால்.. பறவைகளின் நிம்மதி தொலைந்திருக்கும் ரெம்ப ரசிச்சேன்... நிறைய யோசிக்கவும் வைச்சது... மனிதருக்கு சிறகே இல்லாமல் இருக்கட்டும் பறவைகள் ஆவது நிம்மதியா இருந்துட்டு போகட்டுமே....:(

உங்கள் அண்ணன் பொண்ணு செம அழகு... :)

வீடும் அந்த மாமரத்தையும் பார்க்க அவ்ளோ சந்தோசமாய் இருக்கு.... பழைய நினைவுகள் எல்லாம் வருது பாஸ் ;(

Related Posts Plugin for WordPress, Blogger...