இங்கே கணவர்கள் விற்கப்படும்..!



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

Author- Unknown
இது பேஸ்புக்கில் படித்தது..  பிறகு HUSBANDS FOR SALE என டைப் செய்து கூகுளில் தேடினால்.. இதன் அசல் ஆங்கில வடிவம் (2008) தெரியவந்தது அது கீழே,,


A store that sells husbands has just opened in New York City , where a
woman may go to choose a husband. Among the instructions at the entrance
is a description of how the store operates.

You may visit the store ONLY ONCE!

There are six floors and the attributes of the men increase as the shopper
ascends the flights. There is, however, a catch .... You may choose any
man from a particular floor, or you may choose to go up a floor, but you
cannot go back down except to exit the building!

So, a woman goes to the Husband Store to find a husband.

On the first floor the sign on the door reads:

Floor 1 - These men have jobs and love the Lord.

The second floor sign reads:

Floor 2 - These men have jobs, love the Lord, and love kids.

The third floor sign reads:

Floor 3 - These men have jobs, love the Lord, love kids, and are extremely
good looking.

'Wow,' she thinks, but feels compelled to keep going. She goes to the
fourth floor and sign reads:

Floor 4 - These men have jobs, love the Lord, love kids, are drop- dead
good looking and help with the housework.

'Oh, mercy me!' she exclaims, 'I can hardly stand it!' Still, she goes to
the fifth floor and sign reads:

Floor 5 - These men have jobs, love the Lord, love kids, are drop- dead
gorgeous, help with the housework, and have a strong romantic streak.

She is so tempted to stay, but she goes to the sixth floor and the sign
reads:

Floor 6 - You are visitor 4,363,012 to this floor. There are no men on
this floor. This floor exists solely as proof that women are impossible to
please. Thank you for shopping at the Husband Store. Watch your step as
you exit the building, and have a nice day!



உழைத்து வாழ்வோம்..!


உலக வரலாற்றின்
உள்ளடக்கம்
வியப்புகளாலும்
விசித்திரங்களாலும் மட்டும்
ஆனதல்ல
வியர்வை துளிகளாலும்
ஆனதே!

ஆதிமனிதனுக்கும்
அதனைத்தொடர்ந்தவனுக்கும்
உயிர் நிலைக்க
உணவு
உணவு கிடைக்க
உழைப்பு
உலகின் நியதி
இதுவே!

எதுவுமேயில்லை
என்றால்
எதுவும் உனதில்லை
எல்லாமே
எனதென்றால்
உலகமும் உனதே!

பூமி
வளங்கள் நிறைந்தது
வாங்கிக்கொள்வோம்
வியர்வைத்துளிகளை
விற்று!
அனைவருக்கும்
அனுமதி இலவசம்!

உலகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உழைக்கும் வர்க்கம்
உயிர் வாழும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
வியர்வைத்துளிகள்
காயும் வரை!

வயிறு..!

வயிற்றில் 99 டிகிரி சூடு இருக்கும்
இயற்கையாக ஹைட்ரோ குளோரிக் அசிட் சுரக்கும்.
எது உள்ளே சென்றாலும் அசிடும் சூடும் சேர்ந்து ஒரு நொதி நிலையை உண்டாகும்.பின் அவற்றில் இருந்து கனிமங்கள் சத்துக்கள் எல்லாம் பிரிக்க பட்டு அவை தனியாகவும் கழிவு தனியாகவும் பிரிந்து அது அது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விடும்.கழிவு சரியாக பிரிக்க பட முடியாமல் போகிறதென்றால், கழிவு சரியாக வெளியேற முடியாமல் போகிறதென்றால் உங்களுக்கு சுகமில்லை என்று அர்த்தம். எதோ ரிப்பேர் ஆகிவிட்டது.

நீர் ஆகாரம் 40 நிமிடத்தில் ஜீரணித்து விடும்
திட ஆகாரம் 4 மணி நேரத்தில் ஜீரணித்து விடும்.
கொழுப்பு சத்து மட்டும் பிரிக்க படாத பாடு படும் வயிறு. நீரும் எண்ணையும் சேராது. மிதக்கும். எண்ணையை சிறிது சிறிதாக சரி செய்வதற்கு நிறைய சிரம படும்.

ஏற்கனவே வயிற்றில் இயற்கையாய் அசிட் இருக்கிறது. இதில் காரம் அதிகம் சேர்க்க சேர்க்க வயிற்றில் புண் வரும். எதுவும் சாப்பிடவில்லை என்றாலும் புண் வரும். பல் விலக்கியும் வாயில் இருந்து வாடை வந்தால் அல்சர் என்று அர்த்தம்.அந்த புண் வாடை குடல் வழியாக வாயில் வெளியே தெரிகிறது.
மனசை பத்திரமாக பாதுகாப்பது போல
வயிற்றையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள்.
வாயை கட்டு படுத்தினால் உடம்பை கட்டு படுத்தலாம். நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம..

வீட்டில் ஒரு முரட்டு பிளாஸ்டிக் கவரை எடுத்து கொள்ளுங்கள்.காலை எழுந்தது முதல் இரவு வரை நீங்கள் சாப்பிடும் அனைத்திலும் ஒரு பங்கு அதில் கொட்டி வையுங்கள். மறுநாள் எழுந்து கவரை திறந்து பாருங்கள். நினைத்தாலே வாடை குமட்டுகிறதா, அப்போ வயிறு என்ன பாவம் செய்தது. அவ்வப்போது பிளாஸ்டிக் கவரை கழுவுவதாக நினைத்து மிதமான சூட்டில் வெந்நீர் குடியுங்கள். 3 லிட்டர் நீர் தேவை ஒரு நாளைக்கு. 1லிட்டர் வெந்நீராக இருக்கட்டும் உங்கள் வாழ்வில் அதுவும் இரவு சிறந்தது...

நீயே வேண்டும்...!


தினமும்
கடந்து செல்கிறாய்
எம் தேசத்தை
வெறுமைகளை வீசியவாறு
கனவுகளை கொன்றவாறு...
உனக்குத்தெரியுமா
உன் முகம் பார்த்தே
வாழப்பழகியவர்கள்
எம்மக்கள்..
வந்தால் செழிப்பாவோம்
இல்லையென்றால்
வறண்டு போவோம்..
குளங்களோடு சேர்த்து
உள்ளங்களும் நிறையும்
உன் வருகையால்..
எம் மனசுகள்
பூ மாலைகள் கேட்டதில்லை
எம் உதடுகள்
என்றைக்காவது பூக்க
புன்னகைகள் கேட்கிறோம்...
இன்றாவது
பொழிந்துவிட்டுப்போ
மழை மேகமே..!


விரல்கள்
உன்னைத்தீண்டும்
போதெல்லாம்
கண்கள்
நனைகிறது..
கண்ணீர் தந்தாலும்
கண்கள் நனைத்தாலும்
நீயே வேண்டும்..
என் பசி தீர்க்க
என் சமையல்
ருசி பார்க்க..
என் இனிய
வெங்காயமே..!

சிரிப்பூக்கள்...2



மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?
கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.


என்ன உன் கணவர் ஆபிஸ்லேயிருந்து வந்து, பக்கத்து
வீட்டு கதவைத் தட்டறாரு?
தூக்கம் சரியா கலையலை போல..!

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???


என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா

‎"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
"மாமூலன்!"

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!

காட்டுவாசி: மாசாலாவைக் கொஞ்சம் தூக்கலா போடணுமா…ஏன்..?
அண்டாவில் மனிதனை வேக வைக்கும் காட்டுவாசி:-
இவன் மண்டையிலே மசாலாவே இல்லையாம்

பேரன்:- அம்மம்மா... பள்ளி விளையாட்டுப்போட்டியில நான் 200 m ஓடபோறன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க!
அம்மம்மா:- கவனம் மெதுவா ஓடுப்பா!!
பேரன்:- உங்கிட்ட போய்.

எதுக்கு போலீஸ்காரர்
தபால்காரர் கூட சண்டை போடறாரு?"
"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில்,
தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!

மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க…?
வரதட்சணைக் கேட்டா கேஸ் போடுவோம்..!


டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?"

"இருள் இருள்" என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய்.. (நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)

ஜாக்கிரதை..!


கவிதை எழுத
எழுத வைத்திருந்த
பேனாவை
திருடிவிட்டார்கள்!
கண் மூடி யோசித்து
கண் திறந்தால்..
"திருடர்கள் ஜாக்கிரதை"
தலைப்பில்


சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.
பாதையோரங்களில்
தொங்கவிட்டால் என்ன..
"அழகிகள் ஜாக்கிரதை"
பதாகைகள்


வீட்டுக்கு வராதீர்கள்
வந்தால் தாக்கப்படலாம்
நல்லெண்ண
எச்சரிக்கையுடன்
வீட்டுக்கு முன்னால்
தொங்குகிறது..
"நாய்கள் ஜாக்கிரதை"
பதாகைகள்..!

சிரிப்பூக்கள்...1

இயந்திர மயமான வாழ்கையில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.. இவ்வோட்டத்தின் நடுவே சில சின்ன விடயங்கள் நம்மையறியாமலேயே புன்னகைக்க வைக்கிறது. இவற்றுள் நகைச்சுவைத்துனுக்குகள் முக்கியமானவை.. பத்திரிகைகளில், இணையத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது இவ்வாறான சிரிப்பு பூக்கள் அவற்றில் நான் படித்து சிரித்தவற்றை கோர்த்து தர எண்ணுகிறேன். நீங்களும் சிரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.. சில நிமிட சிரிப்பு சில மணிநேர உடற்பயிற்சியை விட சிறந்ததாமே.. யாரு சொனனாங்க என்று ஆதாரம் எல்லாம் கேட்கப்படாது.. யாரு சொல்றாங்க என்பதை விட, என்ன சொல்றாங்க என்பதுதான் முக்கியம். சரி வாங்க சிரிக்கலாம்..

25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்........
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.........
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்..........
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.........

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

டீச்சர்: "நான் ஒரு கொலை செய்துவிட்டேன்" இதன் 'எதிர்காலம்' என்ன.?
மாணவன்: நீங்கள் ஜெயிலுக்குப்போவீர்கள்

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?

தளபதி ; மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
அரசன் : வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்வோம்..

என்ன இது..ஃபேஷன் ஷோவுல மாடல்கள் எல்லாம் தலையிலே
ஒரு மூட்டையோட, மண்ணெண்ணை கேனைத் தூக்கிக்கிட்டு
நடந்து வர்றாங்களே…?
இது 'ரேஷன் ஷோ'வாம்..!

உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லுறீங்க..அப்புறம்
எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க..?
-
வெயிலுக்கு குளிர்ச்சியா நாலு நர்ஸூங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான்..!

நீங்க கொடுத்த செக், பேங்க்ல பணம் இல்லைனு சொல்லி
திரும்ப வந்துடுச்சி…!
பொய் சொல்றாங்க! கேஷியர்கிட்டே நிறைய பணம் இருக்கு,
நானே பார்த்தேன்..!

சில உண்மைகள்..
முதல் உண்மை  : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
,
,
,
,
,
,
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

பூனை மற்றொரு பூனையிடம், 'அதோ போகுதே அதுதான் என்
'மாமியாவ்'..!

பிரபாகரன் Sir..!

நாம் பிறந்தது முதல் வாழ்க்கை பாதையில். எத்தனையோ நிகழ்வுகளையும் எத்தனையோ மனிதர்களையும் கடந்து வந்திருப்போம். அவ்வாறு நாம் பழகி வந்த கடந்து வந்த மனிதர்களில் சிலர் அந்த தருணங்களிலே மறந்து போவார்கள்.. சிலர் கொஞ்ச காலத்திற்கு மனதில் இருப்பார்கள், சிலர் நாம் வாழும் காலத்திற்கும் நம் மனதோடு வாழ்வார்கள் அவர்களின் நடவடிக்கைகள், மற்றும் அவர்களின் உருவம் நம் கண் முன்னே நிழலாக ஆடும்.. அப்படி மறக்க முடியாத ஒருவர்தான் எங்களுக்கு பாடம் சொல்லித்தந்த பிரபாகரன் சார்..

கல்விக்கும் கல்வி கற்றுக்கொடுப்போருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாணம்தான் இவரின் ஊர். நான் உயர்தரம் படித்த மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவ யில் வர்த்தக பிரிவில். அப்போது அங்கே ஆசிரியராக இருந்தார் இவர்.. எங்கள் வகுப்பிற்கு முதலாம் ஆண்டில் கணக்கியல் (Accounting) இரண்டாம் ஆண்டில் பொருளியல் (Economics) பாடம் எடுத்தவர்.. கல்வி என்றாலே அது கசப்பானது என்று என் மனதில் இருந்த மனநிலையை மாற்ற வைத்து, அது இனிமையானது அதை விரும்பி படித்தால் என புரிய வைத்தவர். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஒரு பாடலை ஒரு முறை இரு முறை கேட்கும் கேட்கும் போது அது நம் மனதோடு ஒட்டிவிடுகிறது. அதன் வரிகளை நம்மையறியாமலே முனுமுனுக்குறோம். காரணம் அதை நாம் ரசிக்கிறோம் விரும்புகிறோம். இதைப்போன்று கல்வியையும் விரும்பி ரசித்துப்படித்தால் நம் மனதில் இலகுவாக ஒட்டிவிடும் அதன் பிறகு அது இலகுவில் மறக்காது என்பதாகும்.. இது போன்று அழகான உதாரணங்கள்,உவமைகள் மூலமாக கற்கும் பாடங்களை மனதில் பதிய வைத்த அருமையான ஆசிரியர்தான் இவர்.

ஆனாலும் இவர் மிக கண்டிப்பானவர்.. இவரின் வகுப்பிலே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.. இல்லையென்றால் வெளியில்தான். இந்தக்கட்டுப்பாடுகளால் நிறைய மாணவர்களுக்கு இவரை பிடிப்பதில்லை.. ஆனாலும் நான் இவரின் பாடங்களை மிகவும் விரும்பினேன்.. இன்றைக்கு எனது இந்த நிலைமைக்கு அவரிடம் கற்ற பாடங்களும் அறிவுரைகளும் முக்கியமானவை. அவர் நல்லதொரு ஆசிரியர் மற்றுமின்றி நல்லதொரு அறிவுரையாளர்.. எல்லா ஆசிரியர்களும் அப்பிடியில்லை. அவர் எப்போவும் சொல்லும் ஒரு வசனம் "ஸ்கூலுக்கு வந்தா படிக்கனும் கிரவுண்டுக்கு போனா விளையாடனும்"

சனி,ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் இவர் அதற்காக சிறு கட்டணத்தை அறவிடுவார். அதற்கு இப்பிடி சொல்வார்.. உங்களுக்கு இலவசமாக படித்து தர ஆசைதான், ஆனாலும் அப்படி இலவசமாக தந்தால் அதில் ஒரு அருமைத்தன்மை இருக்காது. காசு கொடுத்தால்தான் காசு கொடுக்கிறோமே கொடுத்த காசுக்கு படிக்க வேணுமே என்ற ஆர்வம் வரும். எனக்கூறுவார், உண்மைதான்! எதுவும் இலவசமாக கிடைத்தால் அதில் ஒரு அருமை இல்லைதான். ஆனாலும் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தன்னை தனியாக சந்தித்து பேசினால் அவர்களுக்கு இலவசமாக கற்றுத்தருவேன் என்பார்.. இப்படி சொல்ல எத்தனை ஆசிரியர்களுக்கு மனசு வரும்..

நாங்கள் உயர்தரம் படித்து முடித்து கொஞ்ச காலத்தில் அந்த பாடசாலையிலிருந்து விலகிவிட்டதாக அறிய கிடைத்தது.. இப்போது எங்கேயிருக்கிறார். என்ன செய்கிறார் என எதுவும் தெரியாது. போராட்டம் நிறைந்த இந்த உலகில் சவால்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என கற்றுக்கொடுத்தவர்கள் உங்களை போன்ற ஆசிரியர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் நன்றியுடன் உங்கள் மாணவன்..

அட உள்ள வாங்க செம மேட்டர்..!



என்னலே அப்டி பார்க்கிறிங்க.. பெட்றோல் விலை எகிரிடிச்சில்ல..


நாங்களும் டான்ஸ் ஆடுவம்ல்ல

ரொம்பநாளா இதுல வழுக்கி விளயாடனும்னு ஆசை இப்பதான் நிறைவேறிருக்கு..

பயபுள்ளக்கி மப்பு இன்னும் குறையல்ல...

ஏலே நாங்களல்லாம் ரொம்ப மோசம்ல்ல..

அப்பாடா ஆபிஸுக்கு போக ரெடியாகியாச்சி..

என்னா லுக்கு..

நாமலாவது ஆபீஸ் வேலய சரியா செய்வோம்...

போட்டோவுல என்னையும் சேர்துக்கங்கலே

மியாவ்...

தலைப்ப பார்த்துட்டு உள்ள ஏதாவது மேட்டர் இருக்கும்னு நம்பி யாராவது இளசுகள் பெருசுகள் வந்திருந்தா கீழே கணனித்திரையில் உள்ள படத்த பார்த்துட்டு ஓடுங்க..ஓடுங்க..
பயபுள்ளங்க இதுமாதிரி படமெல்லாம் நம்மளுக்கு காட்றதேயில்ல இப்ப பார்த்துறவேண்டியதான்..

இது ஒரு மீள்பதிவு.. இப்பவெல்லாம் பதிவு போடவே விருப்பமேயில்ல.. என்னுடைய பதிவுகள் உங்களை கவர்கிறதா..?

பொய் சொல்லும் கனவுகள்..!



முத்தத்துளிகள் 
உதட்டில் நுழைந்து
தொண்டையில் மிதந்து 
உணர்வை தடவி 
உயிரைத்தொடுகிறது. 
என் காதலி 
தேநீர்..



உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
படர்ந்து 
தொடர்ந்து
தவழ்ந்து
உருண்டோடி
விளையாடுகிறதே
அதிர்ஷ்டக்கார
மழைத்துளிகள்..!



வருகிறாள்...
சிரிக்கிறாள்...
ரசிக்கிறாள்....
குழந்தை மகிழ
பொய் கதை சொல்லும்
தாய் போல
பொய் சொல்கிறது
கனவுகள்..


நினைவுகளை 
சுமந்து செல்கிறது மனசு
புத்தகங்கள்
சுமந்து செல்லும்
பள்ளி குழந்தைகளாய்..!

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...