January 30, 2012

உயிர் வறண்டு போன நிமிடங்கள்..!


நடுப்பகல் வேளையொன்றில்
நடந்துகொண்டிருக்கிறேன்
யாருமற்ற
மண்சாலையில்.
சூரியன்
அதன் வேலையை
பாரபட்சமின்றி செய்துகொண்டிருந்தது
மனித சஞ்சாரமேயில்லை
பார்வை
செல்லும் தூரத்திற்கு.
ஆங்காங்கே
மேய்ந்துகொண்டிருக்கும்
மாடுகள் மட்டும்
'யாருபெத்த மனிதப்பிறவியோ
நடுவெயில்ல
போறான் பாரு' என
வேடிக்கையாய் தங்களுக்குள்
பேசிக்கொண்டது போல
என்னைப்பார்த்து
எங்கே செல்கிறாய்
எனக்கேட்பது போல
'ம்மே' எனக்கத்துகிறது..
வெயிலின் அகோரம்
நாவின் ஈரப்பதம் குறைந்து
தொண்டை
வறண்டு போனது
சாலையோரத்தில்
மழையில்லாமல் வறண்டு போன
வயல் நிலங்கள் போல..
தாகம் தீர்க்க
தண்ணீரோ
தங்கிச்செல்ல
மர நிழலோ இல்லா
நீண்ட வறண்ட சாலை..
எச்சிலும்
தீர்ந்துவிடுமோ என்றளவுக்கு
எச்சில் குடித்தே
வறண்ட தொண்டையை
உயிர்ப்பிக்கிறேன்.
'உலக மக்களில்
அநேகம் பேர்
குடி நீருக்காய் கஷ்டப்படுகின்றனர்'
எப்போதோ
செய்தியாய் மட்டும் படித்தது
முதல் முதலாய்
உணர்வாய் உணர நேர்ந்தது..
சென்று சேருமிடம்
நெருங்க நெருங்க
சாலைகள் நீண்டுகொண்டே போவதாய்
உணர்வு.
கால்களும் நடக்காமல்
அடம்பிடிக்க
ஆரம்பித்தது..
அப்பொழுது அங்கேயொரு
ஆச்சர்யம்
ஆமாம் அந்த நேரத்தைபொருத்து
அது
ஆச்சர்யம்தான்
அங்கே சிறிய குட்டையொன்றில்
தண்ணீர் கொஞ்சம்
சில மாடுகள்
மட்டும்
பருகிக்கொண்டிருந்தது..
பசியோடிருந்த குழந்தை
தாயை கண்டது போல்
ஓர் புன்னகை
மனதெங்கும்.
ஓடிச்சென்று
அள்ளிப்பருகிய போது
அதுவரைக்கும்
உலகில் பருகிய பாணங்களைவிடவும்
அப்போதுதான்
அதிக சுவை கொண்டதை
புசித்ததுபோல் உணர்வு..
பருகி முடிந்து
பக்கத்தில் நோக்கினால்
மரநிழல்.
தாய்ப்பாலருந்துவிட்டு
பஞ்சுமெத்தையில்
துயில்கொள்ளும்
குழந்தையின்
நிம்மதித்தருணங்கள் போல்
மரநிழலுக்கு கீழால்
காற்றுவந்து
உடல் தழுவிச்செல்ல
இளைப்பாறுகிறேன்
இதைவிட உலகில்
வேறுசுகம்
வேண்டாமே என..January 23, 2012

மனித இரத்தம் புகட்டாதீர்கள்..!


தூர தேசமொன்றில்
உதிர்ந்து போகும் உயிர்களும்
சிதறும் இரத்தங்களும்
எண்ணிக்கைகளாகவும்
புள்ளிவிபரங்களாகவும்
செய்திகளாய் மட்டும்
நம் கண் முன்னே..

மிருக வேட்டையாடி
பசியாறினான்
ஆதி மனிதன்.
மனித வேட்டையாடி
குஷியாகிறான்
நவீன மனிதன்.
நாகரீகமடைந்துவிட்டதாய்
விளம்பரம் வேறு..

காலத்துக்கு காலம்
மலிவாகும் பொருள்
விலை போல
மனித உயிர்களின்
மலிவுக்காலம்
இது போல...
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
கொள்முதல் செய்யப்படுகிறது..

பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்
இனிமேலும்
மழைக்குப்பதிலாய்
மனித இரத்தம் கேட்கும்
நிலை வரலாம்..

பயங்கரவாதம்
உயிர் பறிக்கும் கொடிய நோய்
தொற்றிக்கொள்ளாமல்
அழித்தேவிடுவோம்
நோயையும்
நோய் காரணிகளையும்..

January 19, 2012

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!


எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய் இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்ப் பிழைப்பாள் என் கின்றனர் மருத்துவர்கள், சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.

'தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?' மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன் 'சரி' என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்குப் பின் அருகில் இருந்த தாதியை அழைத்த சிறுவன் கேட்டான். 'நான் எப்போது சாகத் தொடங்குவேன்?'

தாதி அதிர்ச்சியடைந்தார்.

தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்.

இது, இன்று தினகரன்(இலங்கை) பத்திரிகையில் வெளிவந்துள்ள ஓர் அருமையான விவரண கட்டுரையின் முதல் பகுதி..  இன்றைய மனிதநேயமில்லாத சுயநலமான வாழ்க்கையோட்டத்துக்கு இவ்வாறான கட்டுரைகளின் பங்களிப்பு ரொம்ப அவசியம்.. அதிகமானோரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரையை இங்கே பகிர்கிறேன்..

தொடர்ந்து படிக்க..இங்கே.

நன்றி.http://www.thinakaran.lk

January 16, 2012

மழலையாகிறேன்..!


வார்த்தைகள் சேகரித்து
தட்டுத்தடுமாறி
பிஞ்சு மொழி பேசும்
மழலையாகிறேன்
உன்னோடு பேசும்போது...

நீண்ட பயணங்களின் போது
வழி நெடுகே நகர்கிறது
உலக சுவாரஷ்யங்களும்
உன் வழியனுப்பல்
கண்ணீர் துளிகளும்..

உன் புன்னகைகள் சேகரிக்கிறேன்
என் தனிமையான நாட்களுக்கு
மழைகாலத்திற்கு
உணவு சேகரித்து வைக்கும்
எறும்புகள் போல...

இரட்டைக் குழந்தையா நீ.
செல்லுமிடமெல்லாம்
அழைத்துச்செல்கிறாய்
உன்னுடன் பிறந்த
வெட்கங்களையும்...

January 15, 2012

நாங்களும் பதிவு போடுவம்ல..!

இன்றைக்கு காலையிலேயே வந்துட்டோம்ல.. இப்ப நிறைய பேர் காலையில எழுந்து பல் விளக்குறாங்களோ இல்லையோ பிளாக் போடாம படிக்காம விட்றதே இல்ல. ஏன்னா அந்தளவுக்கு பிளாக்மேனியா வியாதி பரவியிருக்கு..  எந்தவித சட்டதிட்டங்களும் கிடையாது எதையும் எழுதலாம். இதுவும் ஒரு விதத்தில் நம் டயரி போன்றதுதான். டயரியை நாம் மட்டுமே படிக்க முடிகிறது.
பதிவுகளை பொதுவில் வைப்பதால் எல்லோராலும் படிக்க முடிகிறது. இதில் இதைத்தான் எழுதனும் இதெல்லாம் எழுதக்கூடாதுன்னு சட்டம் எல்லாம் கிடையாது.

நீங்க காலையில எழும்பி கக்கா போறதுலயிருந்து, நைட்டு கொறட்டவிட்டு தூங்குற வரைக்கும் என்னல்லாம் நடக்குதோ அதெல்லாம் சம்பந்தமில்லாமல் எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதெல்லாம் படிக்கிறதுக்கு கூட ஒரு வாசகர் கூட்டம் இருக்குன்னா பாருங்களே.. ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என் மேல வெச்ச பாசம்..
ஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது
நான் உங்க மேல வெச்ச நேசம்..


இது நான் சொல்லிங்கோ நம்ம டாக்டர் தளபதி விஜய் பாட்டுங்கோ.அடடா என்னா பாசம், என்னா நேசம் பாடல் மூலமா தமிழன உசுப்பி விட்றது இப்ப மட்டுமல்ல எம்.ஜி.ஆர் காலத்துலேயே ஆரம்பித்துவிட்டது. ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!

சிந்திய மழையாக
சிரித்து விட்டுப்போகிறாள்
சிறு பிள்ளையாக
சினுங்குகிறது மனசு..

இது அந்தக்காலத்துல நான் எழுதி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரைக்கும் பரிந்துரை செய்யப்பட்ட கவிதை. மயிரிழையில் பரிசை இழந்த கவிதை. அந்த நோபல் பரிசு ரவிந்திரநாத் தாஹூருக்கு வழங்கப்பட்டது.. இதுல ஏதாவது அந்நிய நாட்டு சதியாயிருக்குமோ!ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!

இது ஒரு ஆங்கில Rap பாடல். என்னாமா பாட்றா இந்த வெள்ளக்கார அக்கா.இந்த பாட்ட கேட்டுட்டு நைட்டு பூரா Look at me now, Look at me now ன்னு கனவுல கத்தினதா பக்கத்து ரும் மலயாளி கம்பளைன் பண்றாங்க.. ஆனா நான் கத்துனது கனவுல இல்ல நிஜமாத்தான்..இரவு 12 மணிக்கு கத்தினதால பயபுள்ள கனவுலதான் கத்துறேன்னு நினைச்சிட்டான்.. இது தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் கத்தி மலயாளி தூக்கத்த நல்லா கெடுக்கயிருந்திச்சி தமிழேண்டா! ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இத்தாலிய சொகுசு கப்பல்.. ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!  இப்பவெல்லாம் ரெண்டு நாளைக்கு ஒரு பதிவாவது போடலாம்னு யோசிச்சாலும் சோம்பரம் என்னை தோற்கடித்துவிடுகிறது..

கண்ணாடியே
ஏன் இந்த பாரபட்சம்
அழகாக காட்ட
மறுக்கிறாய்
என்னை மட்டும்..

ஹி.. ஹி.. சும்மா ஏன்னா.. நாங்களும் பதிவு போடுவம்ல


January 12, 2012

பராக்கிரமபாகு - The Great King Of Srilanka..


ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது. குறித்த நாட்டின் உற்பத்தித்துறை,கைத்தொழில்,விவசாயம் மற்றும் ஏனைய சேவைகளில் ஏற்படும் அதிகரிப்பை வளர்ர்ச்சி அல்லது அபிவிருத்தி எனக்கூறலாம்

அதிலும் விவசாயத்துறையின் வளர்ர்ச்சி என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது. அதாவது மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான உணவுத்தேவை இதன்மூலமே பூர்த்திசெய்யப்படுகிறது. ஒரு நாட்டு மக்கள் அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்வதன் மூலம், உணவுத்தேவையை பூர்த்தி செய்து,அதில் தன்னிறைவு பெறுகிறார்கள் எனில் அவர்கள் வேறு நாடுகளில் தங்கியிருக்கவேண்டிய தேவை மிகக்குறைவே. அதையே தன்னிறைவுப்பொருளாதாரம் எனவும் அழைப்பர்.

இன்றைய கணினியுகத்தில் விவசாயம் என்பது மிகவும் குறைந்துகொண்டு வரும் ஒரு தொழிலாகவே கானப்படுகிறது. கிராமப்புறங்களில் கூட இன்று அதிகளவானோர் விவசாயத்தை விட்டுவிட்டு ஏனைய தொழில்களை நாடிச்செல்கின்றனர். இதற்கு பல காரணங்களை கூறலாம். பொதுவாக நமது தெற்காசிய நாடுகளை பொருத்தமட்டில் விவசாயிகள் முன்னேற முடியாத ஒரு நிலையே கானப்படும். அதாவது ஏனைய தொழில் துறைகளில் உள்ளவர்கள் படிப்படியாக தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளும் போது, விவசாயிகள் மட்டும் எப்போதும் ஏழைகளாகவும் வறுமையில் வாடுபவர்களாகவுமே நம் சமூகத்தில் வாழ்கிறார்கள். விவசாயத்தை வெறுப்படைய செய்யும் மற்றுமொரு பிரதான காரணி விவசாய உற்பத்திகள் மீதான சுரண்டல், இங்கே மழை வெயில் பாராது கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகள் ஈட்டும் இலாபத்தை விட அதனை சந்தைப்படுத்துவோர்,விநியோகிப்போர் அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

விவசாயத்தை தற்காலத்தில் தொடர முடியாமைக்கு இன்னுமொரு காரணம் போதியளவு நீர்ப்பாசண திட்டங்கள் இல்லாமையே. இலங்கையின் நிறைய பிரதேசங்களில் வானத்து மழையை நம்பியே அதிகளவானோர் இன்று விவசாயம் செய்கின்றனர். இலங்கையில் இப்போது கானப்படுகின்ற நீர்ப்பாசண திட்டங்களில் அதிகமானவை பழைய மன்னர் காலத்திலே கட்டமைக்கப்பட்டதாகும். இலங்கையை ஆண்ட மன்னர்களில் என்னைக்கவர்ந்த ஒரு விடயம் அவர்கள் கட்டிய ஆயிரக்கணக்கான குளங்களும் நீர்ப்பாசண திட்டங்களுமாகும். அதன் பயன்பாடு இன்றுவரை தொடர்கிறது. அதன்மூலம் இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் தன் ஜீவாதாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் முக்கியமானவர் பராக்கிரமபாகு என்ற மன்னராகும். 12ம் நூற்றாண்டில் (1153–1186)  இலங்கையின் பொலன்னறுவைவை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர். இவரின் ஆட்சிக்காலமே "இலங்கையின் பொற்காலம்" என இன்றுவரை வர்ணிக்கப்படுகிறது. அன்றைய காலத்தில் உணவுற்பத்தியில் தன்னிறைவு கனடது மட்டும்ல்லாமல் வெளிநாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யும் நிலையில் விவசாயம் வளர்ச்சியடைந்து கானப்பட்டதே இவரின் புகழுக்கு காரணம்.

இவருதாங்க அவரு "பராக்கிரமபாகு"

பராக்கிரமபாகு மன்னனின் இன்னுமொரு சிறப்பம்சம் ஏராளமான குளங்களையும் நீர்ப்பாசண திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுத்ததாகும். மேலும் அவற்றிலே மிகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறான். ஒரு பிரதான இன்றுவரை போற்றப்படுகின்ற கொள்கை மூலம். "வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரேனும் விவசாயத்திற்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது -"not even a little water that comes from the rain must flow into the ocean without being made useful to man" -இதுவே அந்த கொள்கையாகும். பராக்கிரமபாகுவால் அமைக்கப்பட்ட திட்டங்களுள் மிக முக்கியமான பராக்கிரம சமுத்திரமாகும். இதன் பரப்பளவு 22 சதுரKM ஆகும். இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய குளமும் இதுவே. அதன் புகைப்படங்கள் கீழே.


தொழிநுட்ப வசதிகளோ நவீன இயந்திர வசதிகளோ இல்லாத அந்தக்காலத்திலேயே இவ்வாரான பெரிய திட்டங்களை மனித வளத்தை மட்டுமே பயன்படுத்தி ஏற்படுத்தியதற்காகவும். மக்கள் நலனை மட்டுமே கருத்திற்கொண்டதற்காகவும், அன்றைய கால இவ்வாறான மன்னர்களை இன்றைய சந்ததிகள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

January 09, 2012

யார் இந்த தேவதையோ...!


சில பாடல்கள் பிரபல பாடலில்லாமல் இருக்கலாம் அந்த படமும் பிரபலம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனாலும் குறித்த ஏதேனுமொரு பாடல் நம் மனதோடு ஒட்டிக்கொள்ளலாம். அது முதல் தடவை கேட்கும் போதோ அல்லது பல தடவைகள் கேட்கும்போதோ அந்தப்பாடல் நம் மனதோடு ஒட்டிக்கொள்ளலாம் அதன் சில வரிகளை நாம் எப்போதும் முனு முனுத்துக்கொண்டேயிருப்போம்..

அப்படியான பிரபலமில்லாத பாடல்  ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் காதல் சாம்ராஜ்ஜியத்திலிருந்து "முல்லைப்பூ சூடிக்கொண்டு ரோராஜாப்பூ சிரிக்க கண்டேன் வண்ணங்கள் பூசிக்கொண்டு வானவில் நடக்க கண்டேன்" என்ற பாடல்தான் இந்தப்பாடல் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்குமோ! எனக்கு தெரியாது. இப்படியான பாடல் ஒன்று இருப்பதாககூட பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இந்தப்பாடலின் வரிகளே என்னை மிகவும் ஈர்த்தது.. அதிலும் குறிப்பாக "நீ ஒரு தாஜ்மஹால் உன்னை பார்ப்போர் ஆயிரம்" என்ற வரி அடிக்கடி எனக்குள் வந்து போகும்.. அதைப்போன்று எல்லா வரிகளுமே அழகான கவிதை.. வரிகளுக்கு சொந்தக்காரர் பழனிபாரதி என நினைக்கிறேன்.. இசை யுவன் சங்கர் ராஜா, பாடியவர்கள் SPB சரனும் யுகேந்திரனும்..
அந்தப்பாடல் இதுதான்..January 03, 2012

127 Hours - உலக சினிமா..!

இயற்கையின் பொக்கிஷங்களான மலை, காடு, கடல், நீர்வீழ்ச்சிகள் இன்னும் பல.. இவற்றை ரசிப்பதென்பது எல்லோருக்கும் அமையப்பெறாத ஒன்று. அதை ரசிப்பதற்கும் ஒரு தனி மனசு வேண்டும். சிலர் இதை தனிமையில் ரசிக்க விரும்புவர் சிலர் கூட்டமாக சென்று ரசிக்க விரும்புவர்.

அப்படியான இயற்கையை ரசிக்க நாம் ஒரு தனிமையான இடத்துக்கு தனிமையில் பயணம் மேற்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏதாவதொரு சிக்கலில் சிக்கிக்கொண்டால் நம்மனநிலை எப்பிடியிர்க்கும். மனித சஞ்சாரமேயில்லாதே ஒரு பகுதி மனிதர்கள் வந்தாலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இடம் இப்படியான நிலை வந்தால் நாம் என்ன செய்வோம் சிலர் பயத்திலேயே இறந்து விடுவோம், சிலர் என்னசெயவதென்று அறியாத பதற்றத்திலேயே முயற்சி செய்ய மறந்திடுவோம்.

இப்படியானதொரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட இளைஞனின் கதைதான் இந்த 127 hours படம்.. இப்படத்திற்கு இசை நம்ம இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இயக்கம் slumdog millionaire திரைப்படத்தை இயக்கிய Danny Boyle. Aron ralston ஆக பிரதான பாத்திரம் ஏற்று நடித்தவர்.James Franco. இது Aron ralston என்ற மலை ஏறுபவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தனது வார இறுதி நாட்களை சந்தோஷமாக களிபபதற்காக aron தனக்கு தேவையான பொருட்களை கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர் உட்பட எடுத்துக்கொண்டு கிளம்புகிறான கொஞ்சம் தூரம் பயண்ம செய்து தனது வண்டியை நிறுத்திவிட்டு தனது மலையேறும் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஒரு மலைத்தொடர் நோக்கி பயணிக்கிறான்.. அவனின் பயணத்தோடு சேர்த்து கேமராவும் பயணிக்கிறது அது ஒரு மிகவும் அழகான பிரதேசம் அதை காட்டிய விதம் கொள்ளை அழகு.. ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் மிக முக்கியமாக கூறப்படவேண்டிய ஒன்று வேறு எந்த படத்திலும் இயற்கையை நான் இவ்வளவு ரசித்ததில்லை.. அவ்வளவு அழகான காட்சிகள் அது.

இந்த பயணத்தில் நடுவே இரண்டு பெண்களையும் சந்திக்கிறான். அவர்களோடு சேர்ந்து மலை இடுக்கில் உள்ள ஒரு நீர் தடாகத்தில் விழுந்து குளித்து குதூகலித்துவிட்டு கிளம்புகிறான். போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பாறை இடுக்கில் கால் தவறி விழுந்து விடுகிறான். விழும்போது அவனுடன் சேர்ந்து ஒரு பாராங்கல்லும் உருண்டு வந்து அவன் ஒரு கையை மலை இடுக்கோடு சேர்த்து மாட்டிவிடுகிறது கல்லுக்குல் மாட்டிக்கொண்ட கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான் முடியாமல் போகிறது.. உதவி செய்யவும் யாருமில்லை எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் வெளியில் கேட்க வாய்ப்பில்லை.தன்னிடமுள்ள எல்லா பொருட்களையும் கொட்டி அவற்றினால் ஏதாவது பலன் கிடைக்குமா என சிந்திக்கிறான். அவனிடமுள்ள சிறிய கத்தியொன்றை பயன்படுத்தி கல்லை செதுக்கி கையை எடுக்கப்பார்க்கிறான் அதுவும் பலனில்லாமல் போகிறது.

இப்படியான தொடர் போராட்ட்ம ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து நாட்கள் தொடர்கிறது. கொண்டுவந்த நீரும் உணவும் ஏற்கனவே தீர்ந்துவிட்டது தாகம் தொண்டையை வரட்டவே தன்னுடை சிறுநீரை பருகவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறான்.. ஒரு நாளைக்கு காலையில் 15 நிமிடம்  மட்டுமே சூரிய ஒளியை பார்க்கிறான்.. மற்ற நேரன்ங்களில் அந்த இடத்துக்கு சூரிய ஒளி படுவதில்லை. இதற்கிடையில் சீனப்பொருட்களுக்கு கிண்டலடிக்கிறான். தனது கையில் உள்ள கத்தி, சீனாவில் தயாரிக்கப்பட்டதென்றும் அதனால் இப்போது எந்த பலனும் இல்லை. ஆகவே சீனப்பொருட்களை வாங்கி ஏமாறாதீர்க்ள் என்கிறான்.

தனது எல்லா நடவடிக்கைகளையும் தனது ரெகோடிங்க கேமராவில் பதிந்து வைக்கிறான்.. இதனூடே அவனுக்கு பல பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகிறது.. தனது தாய், நண்பர்கள் எல்லோரையும் நினைவு கூறுகிறான். அவர்களை இனி பார்க்க முடியாமல் போய்விடுமோ என ஏங்குகிறான்,.

அவர்களுக்கு சொல்ல ஆசைப்படுவதையும் பேசி பதிந்து வைக்கிறான். இறுதியில் எதுவும் கைகூடாதநிலையில், பாறையிடுக்கில் மாட்டிக்கொண்ட தனது கையை வெட்டிவிட்டுத்தான் அந்த இடத்திலிருந்து விடைபெற முடியும் என்பதை உணர்கிறான்.. கையை வெட்டினானா.. அவன் என்னவானான் என்பதே மீதிக்கதை..
Related Posts Plugin for WordPress, Blogger...