January 09, 2012

யார் இந்த தேவதையோ...!


சில பாடல்கள் பிரபல பாடலில்லாமல் இருக்கலாம் அந்த படமும் பிரபலம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனாலும் குறித்த ஏதேனுமொரு பாடல் நம் மனதோடு ஒட்டிக்கொள்ளலாம். அது முதல் தடவை கேட்கும் போதோ அல்லது பல தடவைகள் கேட்கும்போதோ அந்தப்பாடல் நம் மனதோடு ஒட்டிக்கொள்ளலாம் அதன் சில வரிகளை நாம் எப்போதும் முனு முனுத்துக்கொண்டேயிருப்போம்..

அப்படியான பிரபலமில்லாத பாடல்  ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் காதல் சாம்ராஜ்ஜியத்திலிருந்து "முல்லைப்பூ சூடிக்கொண்டு ரோராஜாப்பூ சிரிக்க கண்டேன் வண்ணங்கள் பூசிக்கொண்டு வானவில் நடக்க கண்டேன்" என்ற பாடல்தான் இந்தப்பாடல் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்குமோ! எனக்கு தெரியாது. இப்படியான பாடல் ஒன்று இருப்பதாககூட பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இந்தப்பாடலின் வரிகளே என்னை மிகவும் ஈர்த்தது.. அதிலும் குறிப்பாக "நீ ஒரு தாஜ்மஹால் உன்னை பார்ப்போர் ஆயிரம்" என்ற வரி அடிக்கடி எனக்குள் வந்து போகும்.. அதைப்போன்று எல்லா வரிகளுமே அழகான கவிதை.. வரிகளுக்கு சொந்தக்காரர் பழனிபாரதி என நினைக்கிறேன்.. இசை யுவன் சங்கர் ராஜா, பாடியவர்கள் SPB சரனும் யுகேந்திரனும்..
அந்தப்பாடல் இதுதான்..



4 comments:

ஹேமா said...

எந்த வானொலியிலோ எங்குமே கேட்டதாகவேயில்லை இந்தப் பாடலை.நல்லதொரு பாட்டுத் தந்ததுக்கு நன்றி ரியாஸ் !

மதுமதி said...

நானும் ரசித்த பாடல்தான் தோழர்..பாட்டுக்கு நன்றி..

சந்தேகம்

ஆமினா said...

அடடா....

முன்பு கொடைக்கானல் எப் எம், மற்றும் சூரியன் எப் எம்மில் அடிக்கடி ஒலிக்கும். படம் ப்ளாப் என்றதும் பாடல்களும் மறைந்ததுவிட்டது... அருமையான பாடல்

பாலா said...

பெரும்பாலான பாடல்கள் பெரிய நடிகர்கள் நடித்தால் மட்டுமே புகழ் பெரும் என்ற நிலையே இதற்கு காரணம்.

Related Posts Plugin for WordPress, Blogger...