January 15, 2012

நாங்களும் பதிவு போடுவம்ல..!

இன்றைக்கு காலையிலேயே வந்துட்டோம்ல.. இப்ப நிறைய பேர் காலையில எழுந்து பல் விளக்குறாங்களோ இல்லையோ பிளாக் போடாம படிக்காம விட்றதே இல்ல. ஏன்னா அந்தளவுக்கு பிளாக்மேனியா வியாதி பரவியிருக்கு..  எந்தவித சட்டதிட்டங்களும் கிடையாது எதையும் எழுதலாம். இதுவும் ஒரு விதத்தில் நம் டயரி போன்றதுதான். டயரியை நாம் மட்டுமே படிக்க முடிகிறது.
பதிவுகளை பொதுவில் வைப்பதால் எல்லோராலும் படிக்க முடிகிறது. இதில் இதைத்தான் எழுதனும் இதெல்லாம் எழுதக்கூடாதுன்னு சட்டம் எல்லாம் கிடையாது.

நீங்க காலையில எழும்பி கக்கா போறதுலயிருந்து, நைட்டு கொறட்டவிட்டு தூங்குற வரைக்கும் என்னல்லாம் நடக்குதோ அதெல்லாம் சம்பந்தமில்லாமல் எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதெல்லாம் படிக்கிறதுக்கு கூட ஒரு வாசகர் கூட்டம் இருக்குன்னா பாருங்களே.. ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என் மேல வெச்ச பாசம்..
ஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது
நான் உங்க மேல வெச்ச நேசம்..


இது நான் சொல்லிங்கோ நம்ம டாக்டர் தளபதி விஜய் பாட்டுங்கோ.அடடா என்னா பாசம், என்னா நேசம் பாடல் மூலமா தமிழன உசுப்பி விட்றது இப்ப மட்டுமல்ல எம்.ஜி.ஆர் காலத்துலேயே ஆரம்பித்துவிட்டது. ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!

சிந்திய மழையாக
சிரித்து விட்டுப்போகிறாள்
சிறு பிள்ளையாக
சினுங்குகிறது மனசு..

இது அந்தக்காலத்துல நான் எழுதி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரைக்கும் பரிந்துரை செய்யப்பட்ட கவிதை. மயிரிழையில் பரிசை இழந்த கவிதை. அந்த நோபல் பரிசு ரவிந்திரநாத் தாஹூருக்கு வழங்கப்பட்டது.. இதுல ஏதாவது அந்நிய நாட்டு சதியாயிருக்குமோ!ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!

இது ஒரு ஆங்கில Rap பாடல். என்னாமா பாட்றா இந்த வெள்ளக்கார அக்கா.இந்த பாட்ட கேட்டுட்டு நைட்டு பூரா Look at me now, Look at me now ன்னு கனவுல கத்தினதா பக்கத்து ரும் மலயாளி கம்பளைன் பண்றாங்க.. ஆனா நான் கத்துனது கனவுல இல்ல நிஜமாத்தான்..இரவு 12 மணிக்கு கத்தினதால பயபுள்ள கனவுலதான் கத்துறேன்னு நினைச்சிட்டான்.. இது தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் கத்தி மலயாளி தூக்கத்த நல்லா கெடுக்கயிருந்திச்சி தமிழேண்டா! ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இத்தாலிய சொகுசு கப்பல்.. ஆமாம் இதெல்லாம நான் எதுக்கு சொல்றேன்.. நாங்களும் பதிவு போடுவம்ல..!  இப்பவெல்லாம் ரெண்டு நாளைக்கு ஒரு பதிவாவது போடலாம்னு யோசிச்சாலும் சோம்பரம் என்னை தோற்கடித்துவிடுகிறது..

கண்ணாடியே
ஏன் இந்த பாரபட்சம்
அழகாக காட்ட
மறுக்கிறாய்
என்னை மட்டும்..

ஹி.. ஹி.. சும்மா ஏன்னா.. நாங்களும் பதிவு போடுவம்ல


13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிங்கம் கலமெறிங்கிடிச்சி...

சென்னை பித்தன் said...

போட்டுத் தாக்குங்க!

நிரூபன் said...

எல்லோரும் ஒரு மார்க்கமாத் தான் கெளம்பியிருக்கிறீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

கவிதைகள் இரண்டும் சூப்பர்,
அப்புறமா ட்ராப் பாடலை பார்த்திட்டு இருக்கேன்.
மென்மையான குரலில் பாடுறா.

நிரூபன் said...

கவிதைகள் இரண்டும் சூப்பர்,
அப்புறமா ட்ராப் பாடலை பார்த்திட்டு இருக்கேன்.
மென்மையான குரலில் பாடுறா.

கடம்பவன குயில் said...

கொலையா...கொல்றீங்களே...ஆனாலும் எத்தனையும் தாங்குவோம். நீங்க கலக்குங்க சகோ.

NIZAMUDEEN said...

நாங்களும் படிப்பமில்ல? (ஆனா கொஞ்சம் லேட்டா!)

காட்டான் said...

ஐயா ரியாசு!!
நீங்க என்னத்த எழுதினாலும் நாங்க வாசிப்போமில்ல.. ஓட்டும் போடுவோமில்ல ..
ஆனா இப்பிடி ஒரு பதிவுக்காக நான் ரியாஸ் தளம் வரல்ல..!!! ஹி ஹி ஹி

ஜீ... said...

என்னாச்சு பாஸ்? ரணகளமா இறங்கிடீங்க போல்! கலக்குங்க! :-)

Fashan Mohamed said...

தனுஷ் கொலைவெறி பாடலுக்கப்புரம் எல்லாரும் ஒரு மார்கமாத்தான்யா அலைறீங்க.... இதுவும் ஒரு வகையான கொலைவெறி... :D

கொலைவெறி பதிவு சூப்பர்.

நேரம் இருந்தால் இதையும் வாசித்து பாத்திடுங்க.
என்னைக் கொன்று விடு..

Rathnavel said...

வாழ்த்துகள்.

Mohamed Faaique said...

இந்தப் பதிவ எந்த வகைல சேர்க்குரதுனே புரியலயே ரியாஸ்...

சிவா said...

பதிவு மிகப் பிரமாதம். எத்தனை, எத்தனை ஆழமான கருத்துக்கள். சிந்தனை தூண்டும் பகிர்வு. கருத்தாழமிக்க செய்தி துணுக்குகள். விரைவில் அடுத்த சமச்சீர் பாடப் புத்தகத்தில் உங்கள் பதிவுகளை பார்க்க விருப்பபடுகின்றோம். வாழ்த்துக்கள். நாங்களும் கருத்து போடுவோம்ல..

Related Posts Plugin for WordPress, Blogger...