எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்..ஜோக்ஸ்

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
அறனி - ஏன்டி நிர்மலா " டாக்டர் எனக்கு எழுதிய லவ் லெட்டர் என் கணவரின் கையில் அகப்பட்டுவிட்டது
நிர்மலா - "அப்படியா அப்புறம் என்னாச்சு"?
அறனி - அதில என்ன எழுதி இருக்குன்னு தெறியாம அதக் கொண்டுபோய் மெடிக்கல் ஷாப்பில மருந்து வாங்கிட்டு வந்துட்டார்....

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்

பயணி -1 :என்ன  சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி-1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.

அவர் :நேத்து உங்க காருக்கு எப்படி Accident   ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

தோழி : 1:உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்.. 
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான்  
அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி     சா‌ப்‌பிடறதை ‌
நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.
நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''

6 comments:

Kumaran said...

இதுவெல்லாம் உங்களோட சொந்த காமெடி வெடிகளா பாஸ்..அருமையான நகைச்சுவை உணர்வு தங்களுக்கு உண்டு.தொடருங்கள்..வாழ்த்துக்கள்.நன்றி.

சசிகலா said...

பயணி -1 :என்ன சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி-1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.//
முன்னாடி போன நம்மள மரம் தேடிக்கிட்டு இருக்காம் .

Unknown said...

ஒவ்வொன்றும் அருமை! சா இராமாநுசம்

ஆத்மா said...

எப்பிடி நண்பா உங்களால மட்டும் முடியுது....செம...கா...ம...டி

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல காமெடி ! ஹிஹிஹி

மாசிலா said...

நன்றாக இரசித்து, சிரித்து மகிழ்ந்தேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...