May 27, 2012

ஈரான் சினிமா Children of Heaven..

குழந்தைகள் சிறுவர்களுக்கான உலகம் என்பது ஒரு தனி ராச்சியம் தனி சொர்க்கம். அவர்கள் உலகத்தில் சந்தோஷங்கள் மட்டுமல்ல சில வேளை சோகங்களும் உண்டு.. போராட்டங்களும் உண்டு, நாமும் நம் வாழ்க்கையில் அவ்வாறான பல தருணங்களை போராட்டங்களை கடந்து வந்திருப்போம்.. அதிலும் ஏழ்மையான இளமைக்கால வாழ்க்கை என்பது அதிகமான ஏக்கங்களை கொடுக்ககூடியது.. ஒரு பிரிவினர் தேவைக்கு அதிகமான செல்வத்திலும் சுக போகத்திலும் திளைத்திருக்க! இன்னுமொரு பிரிவினர் அன்றாட உணவிற்கே வழியில்லாமல் கஷ்டப்படும் போது.. ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள், என்ன வாழ்க்கைடா இது என சலித்துக்கொள்வதுமுண்டு! இதுதான் விதி என அதன் பாதையிலேயே செல்பவர்களும் உண்டு..

ஈரானிய திரைப்படம் என்றாலே வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சமூகத்தின் நிலைப்பாடுகளையும் அச்சு அசலாக உள்ளதை உள்ளபடியே உருவாக்கப்பட்டிருக்கும். பெரிதாக அலட்டிக்கொள்ளாத எதிர்பாராத கதைக்களங்களை எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருப்பதை பல ஈரானிய திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.. இதிலும் ஒரு பாதனியை அடிப்படையாக வைத்து கதை திரைக்கதை அமைத்திருப்பது வியக்க வைக்கிறது.. இது போல தமிழில், முழுமனே ஒரு மோட்டார் சைக்கிளை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்துக்காக.. ஈரானின் புகழ்பெற்ற இயக்குனர் மஜீத் மஜிதின் இயக்கத்தில் அழகான எல்லோரும் கண்டுகளிக்ககூடிய அற்புதமான சிறுவர்கள் திரைப்படமாகும்..

children of heaven படத்தின் கதையென்ன..
இது ஏழை குடும்பமொன்றில் பிறந்த சாரா, அலி என்ற அண்ணன் தங்கைக்கிடையில் நடைபெறும் கதையாகும்.. சாராவின் பாடசாலைக்கு அனிந்து செல்லும் பாதனி பிய்ந்துவிடவே அதை பழுது பார்க்க அண்ணன்
அலி வெளியே எடுத்துச்செல்கிறான். பழுது பார்த்துவிட்டு வரும்போது வேறு ஒரு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது அந்த பாதனிகள் தொலைந்து போகிறது/தொலைத்து விடுகிறான்.. அதை வீட்டுக்கு தெரியப்படுத்தாமல் அதன் பிறகு அலியின் பாதனிகளையே சாராவும் பாடசாலைக்கு அணிந்து செல்கிறாள். சாரா பாடசாலைவிட்டு வந்தவுடன் அலி அதனை அணிந்துசெல்கிறான் இருவரும் மாறி மாறி ஒன்றையே பயன்படுத்துகிறார்கள்.. இவ்வாரு தொடரும்போது பல்வேறு பிரச்சினைகளை இருவரும் சந்திக்கிறார்கள்.. 

இருவரும் வெவ்வேறு நேரங்களில் பாடசாலை செல்வதால் முதலில் சாரா சென்று வரும்  வரைக்கும் அலி தெரு முனையில் காத்திருக்கிறான்.. சாராவுக்கு பாடசாலை முடிந்ததும் அலிக்கு சரியான நேரத்தில் பாதனியை ஒப்படைக்கும் நோக்கோடு சாரா அளவில் பெரிய பாதனியோடு ஓடியும் நடந்து ம் வருகிறாள், அதன் பிறகு அலி பாதனியை அணிந்து கொண்டு பாடசாலைக்கு ஓட்டமெடுக்கிறான்.. இருந்தும் தாமதமாகியே பாடசாலைக்கு செல்ல முடிகிறது இதனால் தொடர்ந்து ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான்.. 

ஒரு முறை பாடசாலை விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் வெல்பவர்களுக்கு பாதனி பரிசாக தருவதாக அறிவிக்கிறார்கள்.. எப்படி யும் அதை கைப்பற்றிட வேண்டும் என்ற நோக்கோடு, தங்கையிடம் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்து அலி அந்தப்போட்டியில் பங்குபற்றுகிறான்.. போட்டி முடிவில் அலி முதலாவதாகவும் வருகிறான்.. தனக்குத்தான் பாதனி என நினைத்திருக்க முதலாவதாக வந்தவருக்கு கேடயமும் இரண்டாவதாக வந்தவருக்கே பாதனியும் வழங்கப்படுகிறது இதனால் மிகக்கவலையும் ஏமாற்றமும் அடைகிறான்..

இவ்வாறு பல நெகிழ்வான காட்சிகளுடன்  இவர்களுக்கு புதிய பாதனி கிடைத்ததா இல்லையா.. என்பதை மிகவும் சுவாரஷ்யமாகவும் கொஞ்சம் சோகமாகவும் கொடுத்துள்ளார் மஜித் மஜீதி.. குழந்தைகளின் உலகத்தை அப்பிடியே கண்முன்னே கொண்டுவந்த இயக்குனரை எவ்வளவும் பாராட்டலாம்..

இதில் அண்ணன் தங்கையாக இரு சிறுவர்களின் நடிப்பும் அபாரம்.. எப்படி இவ்வளவு அற்புதமாக கதைக்கு ஏற்ற உணர்வுகளையும் முகபாவங்களையும் வெளிப்படுத்துகிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்..
இருவரின் உரையாடல்களிலும் உணர்வுகளிலும் அவ்வளவு யதார்த்தமான முகபாவங்கள்,பொதுவாகவே ஈரான் சினிமாக்கள் மனதின் மெல்லிய உணார்வுகளை தட்டி எழுப்பக்கூடியது.. இந்தப்படமும் பார்ப்பவர்களை அந்த அண்ணன் தங்கை பாத்திரங்களோடு ஒன்ற செய்து விடுகிறது நமக்கும் அந்த பரபரப்பு,சோகம்,ஏக்கம் தொற்றிக்கொள்கிறது..படம் பார்த்து முடிந்து சில நாட்களுக்காவது அந்த உணர்வுகள் நம்மோடு பயணிக்கும்..


  

May 25, 2012

இம்சைகள் தரும் இரவு நீ..


விடிய மறுக்கும்
இரவும் நீ
விடியற்காலை
அலாரமும் நீ..
தூக்கம் தொலைக்கும்
நினைவுகளும் நீ
தூங்க வைக்கும்
சோம்பலும் நீ...
இதம் தரும்
நிலவும் நீ
இம்சைகள் தரும்
இரவும் நீ..
நனைய வைக்க்கும்
மழையும் நீ
நனைந்த பின் வரும்
காய்ச்சலும் நீ..
அமெரிக்கனின்
ஆணவமும் நீ
ஈராக் தாயின்
கண்ணீரும் நீ..

குடித்து முடித்த
தேநீர் கோப்பையில்
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் வளையல் சினுங்கல்கள்!!!

மழை வந்து போனபின்
தொற்றிக்கொள்ளும் தொற்று நோயாய்
நீ வந்து போனபின்
தொற்றிக்கொள்கிறது வெறுமை!!!


May 24, 2012

5 ரூபாய் -குறும்படம்


குறும்படங்கள் என்பது குறுகிய நேரத்துக்குள் மனதை தொடுபவையாக இருக்க வேண்டும்.. இந்த குறும்படத்தைப்பாருங்கள் இதுவும் மனதைத்தொட்டு விடுகிறது பார்த்தவுடன்.. நாம் நம்முடைய இளமைக்கால பள்ளி பருவத்தில் நம் பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கும் சில்லரை காசின் பெறுமதியும் அதன் ஆனந்தமும் மறக்கமுடியாதது.. இன்று நாம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் அந்த ஒற்றை ரூபாயில் அந்த பள்ளி பருவத்தில் நாம் அடைந்த பரவசம் மிக மிக அதிகம்.. அந்த ஒற்றை ரூபாயையும் வீட்டில் அடம்பிடித்து அடிவாங்கி பெற்றுக்கொண்டால் அதன் திருப்தியும் மன நிறையும்.. இன்று நினைத்து பார்த்தாலும் நம் மனதில் பசுமையாய் இருக்கும்..

இந்த குறும்படம் பழைய நினைவுகளை கிள்ளிவிடுகிறது..நம்ம ஏரியா பக்கம் வந்தா யாரும் கவலையோட திரும்பக்கூடாது.... அதுக்காக இதப்படிங்க சிரிங்க!!


ஒருவன் உயரமான மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அவனை வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வந்த டாக்டர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, "அவன் இறந்து விட்டான்" என்றார்.

ஆனால் அடிபட்டவனோ தன் கண்ணை விழித்துப் பார்த்து "நான் இறக்கவில்லை டாக்டர், உயிரோடு தான் இருக்கிறேன்" என்றான்.
அங்கிருந்த அவன் மனைவி, "வாயை மூடுங்கள், டாக்டருக்குத் தெரியாதது உங்களுக்கு என்ன தெரியும்?" என்று அதட்டினாள்.

"டாக்டர்! எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டாகத் தெரியுது".
"கவலைப்படாதீங்க இந்த ஊசி போட்டவுடன் எல்லாம் சரியாயிடும்".
"டாக்டர் ஊசி போட்டதும் எவ்வளவு பணம் தரணும்?.
"பத்து ரூபாய் தான்".
"இந்தாங்க".
"என்ன ஐந்து ரூபாய் தான் தர்றீங்க".
"இல்லியே! ரெண்டு ஐந்து ரூபாய் கொடுத்தேனே"

May 21, 2012

ஆக்ச்சுவலி திஸ் இஸ் குட் வே யூ நோ!!!

வீடு கட்டினதுக்கு பிறகு மரம் வளந்துச்சா? மரம் வளந்த பிறகு வீடு கட்டினாங்களா,,?

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ.. குக்கூ..

படுத்தா பழம்..நின்னா மனுஷன்

இப்படியும் யூஸ் பண்ணிக்கலாம்..

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்


வாழைப்பழ சுவர்..
தன்னைத்தானே செதுக்கும் சிற்பி

மணலினால் ஒரு மாளிகை


கடல் மணலில் ஒரு ராஜ மாளிகை
லவ் பண்றாங்களாம்.. ப்ளீஸ் டோண்ட் டிஸ்டப் தெம்..

ஆணுக்குப்பின் தாயா..? தாரமா..? ஆக்ச்சுவலி திஸ் இஸ் குட் வே யூ நோ!!!

இவனுக்கு என்ன கஷ்டமோ..எதற்கும் தற்கொலை தீர்வல்ல!!

டபுல்ஸோட ரவுண்ஸ் போராங்களாம்..

ஹே யூ நோட்டி..

May 11, 2012

பாலைவனக்காற்று-கலகல-ஜட்டி..!!


பாலைவனக்காற்றாய்
பார்வைகள் வீசிச்செல்கிறாய்
சுடும் மணலாய்
சுடுகிறது மனசு..!!

பாலைவனமெங்கிலும்
பசுமைதான் நீ
சிரிப்பொலிகளை
சிதறிச்சென்றால்..!!

பாலைவனப்பயனியாய் நான்
பயனத்தின் தூரமெங்கும்
இளைப்பாறிச்செல்கிறேன்
உன் வார்த்தைகளோடு..!!
கவிதை பிடிக்காதவங்க உள்ளே வந்திருந்தா.. அவங்களுக்காக சில கல கல ஜோக்ஸ்..

"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி  : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி  : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்

இரண்டுமே பிடிக்கலையா.. இந்த "ஜட்டி" குறும்படத்த பாருங்க, பேருதான் ஒருமாதிரியிருக்கு ஆனா குறும்படம் நன்றாக நகைச்சுவையாகவே இருக்கு.. பிண்ணனியிசை சேர்ப்பதற்கு பதிலாய் பிண்ணனியில் சில பிரபலமான பாடல்களை ஒலிக்கவிட்டிருப்பது அழகு.. ஒரு ஜட்டிக்காக வேண்டி என்னெல்லாம் பண்றாருன்னு நீங்களே பாருங்க.. சிரிங்க!!!


May 10, 2012

எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்-ஜோக்ஸ்

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"


டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ...

"ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்"
"பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?"
"அவங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க"
"அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?"
"சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்"
"பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?"

"கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?"
"காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்

ராமன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
சோமன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க!!!

தளபதி : மன்னா நம் அரன்மனையைச்சுற்றி கன்னிவெடிகள் புதைத்து வைத்துள்ளனர்..
மன்னர் : அப்படியா!!! உடனடியாக வெடிகளை அகற்றிவிட்டு கண்ணிகளை அழைத்து வாருங்கள்..

"திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."

"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு
Once Banta Singh attended an Interview.

Interviewer : Give me the opposite words.
Banta Singh : Ok
Interviewer : Made in India
Banta Singh : Destroyed in Pakistan
Interviewer : Good... Keep it Up
Banta Singh : Bad.... Put it Down
Interviewer : Maxi Mum
Banta Singh : Mini Dad
Interviewer : Enough! Take your Seat
Banta Singh : Insufficient! Don't take my seat
Interviewer : Idiot! Take your seat
Banta Singh : Clever! Don't take my seat
Interviewer : I say you get out!
Banta Singh : You didn't say I come in
Interviewer : I reject you!
Banta Singh : You appoint me
Interviewer : ....!!!!!!!

நீங்க ஜஸ்ட் புன்னகைச்சாலே போதும்ங்க!!!!

May 09, 2012

ஜஸ்ட் சும்மா டைம்பாஸ் பொழுது போக்கு..

இப்பயெல்லாம் எனக்கு ஒரு பிளாக் இருப்பதையே மறந்து போய் விடுகிறேன்.. முன்பெல்லாம் எதுவும் எழுத கிடைக்காட்டியும் கவிதை என்ற பெயரில் எதையாவது கிறுக்கி உங்களெல்லாம் கடுப்பேத்திக்கிட்டிருந்தேன்.. இப்போ முன்பு போல் கற்பனையெல்லாம் தாறுமாறா வரமாட்டேங்குது..கற்பனையெல்லாம் வேறு பக்கம் திசைதிரும்பிடிச்சு போல!!! கக்கூஸ்ல உக்காந்து யோசிச்சாக்கூட ம்ஹும்..

அண்மையில் இலகையின் இளம் ஊடகவியலாளர்,கவிஞர்,சிறுகதை எழுத்தாளர் என பலராலும் அறியப்பட்ட ஒருவருடன் ஜீமெயில் சாட்டிங்கில் அறிமுகமானேன்.. அவர் எழுதிய ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது, அதை அவரிடம் சொல்லி நானும் ஒரு பிளாக்கில் எழுதுவதாக கூறி என் பிளாக் லிங்கை அனுப்பினேன்.. பிறகு ஒரு முப்பது நிமிடத்துக்கு பிறகு நான் எழுதிய சில உலக சினிமா பதிவுகளை சுட்டிக்காட்டி நல்லாயிருப்பதாக கூறி ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழிலேயே எழுதும் படி ஆலோசனையும், நிறைய எழுதும் படியும் ஊக்கப்படுத்தினார்..

எனக்கு ரொம்பவே சந்தோஷம்.. ஒரு எழுத்தாளரிடமிருந்து பாராட்டும் ஊக்கமும் பெற்றது.. இருந்தாலும் இன்னுமொரு விடயம் மனதுக்குள் ஓடியது.. நம்ம தளத்தில் அதிகமாக கவிதைகள்தானே எழுதியிருக்கிறோம்.. அவர் ஒரு கவிஞராக இருந்தும் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லலியே ஒரு வேளை அதெல்லாம் அவர் பார்க்கலியோ..என நினைத்து "நான் எழுதியிருக்கும் கவிதைகளை பற்றி என்ன நினைக்கிறிங்க" என தட்டிவிட்டேன்.. அதன்பிறகு அவர் சாட்டிங்கிற்கு வரவேயில்லை... நான் எழுதின கவிதைகள் அவ்வளவு மொக்கையாவா இருக்கு!!!

இருந்தாலும் நான் எதற்கும் கவலைப்படப்போவதில்லை!! நான் எழுதுவதை எழுதிக்கொண்டேதானிருப்பேன்.. என் எழுத்தை படிக்கும் ஒருவராவது இருக்கும் வரையில்..(யாராலயும் உங்கள காப்பாற்ற முடியாது ஹே ஹே)
i'am a nobody.
Nobody is perfect.
Therefore,
i'am perfect!

இப்போதெல்லாம் ஆபிசில் கூகுல் ரீடரில் மட்டும் பதிவுகளை படித்துவிடுவதால்.. கமெண்ட் ஓட்டு போட கிடைப்பதில்லை.. சில முக்கிய பதிவுகளுக்கு மட்டும் கமெண்டும் ஓட்டும் போடுகிறேன்.. நான் இப்போதெல்லாம் ஓட்டுக்காகவோ ஹிட்சுக்காகவோ பதிவுகள் எழுதுவதில்லை.. யாருக்கும் மொய் வைக்கும் நோக்கில் கமெண்ட் போட செல்வதுமில்லை.. முன்னொரு காலத்தில் செய்தது போல் நிறைய பதிவுகளுக்குச்சென்று அது மொக்கையாகயிருந்தாலும் "அருமை,சூப்பர்" என கமெண்ட்யிடுவதுமில்லை..

ஆப்கான் அகதி சிறார்கள்

இன்று வந்த மேகங்கள்
கலைந்து சென்றாலும்
நாளையும் வரலாம்
நற்செய்தி தரலாம்.!!

ஜஸ்ட் சும்மா டைம்பாஸ் பொழுது போக்கு.. அப்பிடின்னு மொக்கையா தலைப்பு வெச்சும் உள்ள வந்துட்டிங்க.. சரி வந்ததுதான் வந்திட்டிங்க இந்த ஜோக்ஸோடு கொஞ்சம் ரிலாக்ஸாகிட்டு போங்க.. இன்றைய காலத்துல காசு பணத்தவிட மனநிம்மது தேடுவதுதான் கடினமான வேலை..

ரசித்த சில ஜோக்ஸ்..

ஆபிசர்: பியுஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்ப வந்து கம்ளைண்ட் குடுக்கறீங்க?
தமிழ்நாடு குடிமகன்: சாரி சார். பவர் கட்டுன்னு நெனச்சுட்டேன்..

நோயாளி என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!"

"வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன். 

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன,
ஆனா உன் ரூம் லைட்டே எரியல?....: ... ....- 
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!!

"வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

அண்மையில் ரசித்த குறும்படமொன்று.. மிகச்சிறிய நேரத்துக்குள் தந்தை-மகன் உறவை "நச்" என சொல்கிறது இந்த குறும்படம்.. தாயை அதிகமாக நேசிக்கும் நாம், தந்தையின் மன உணர்வுகளை அதிகமாக நாம் புரிந்துகொள்வதேயில்லை!!! குறிப்பாக ஆண் பிள்ளைகள்!!!Related Posts Plugin for WordPress, Blogger...