5 ரூபாய் -குறும்படம்


குறும்படங்கள் என்பது குறுகிய நேரத்துக்குள் மனதை தொடுபவையாக இருக்க வேண்டும்.. இந்த குறும்படத்தைப்பாருங்கள் இதுவும் மனதைத்தொட்டு விடுகிறது பார்த்தவுடன்.. நாம் நம்முடைய இளமைக்கால பள்ளி பருவத்தில் நம் பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கும் சில்லரை காசின் பெறுமதியும் அதன் ஆனந்தமும் மறக்கமுடியாதது.. இன்று நாம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் அந்த ஒற்றை ரூபாயில் அந்த பள்ளி பருவத்தில் நாம் அடைந்த பரவசம் மிக மிக அதிகம்.. அந்த ஒற்றை ரூபாயையும் வீட்டில் அடம்பிடித்து அடிவாங்கி பெற்றுக்கொண்டால் அதன் திருப்தியும் மன நிறையும்.. இன்று நினைத்து பார்த்தாலும் நம் மனதில் பசுமையாய் இருக்கும்..

இந்த குறும்படம் பழைய நினைவுகளை கிள்ளிவிடுகிறது..



நம்ம ஏரியா பக்கம் வந்தா யாரும் கவலையோட திரும்பக்கூடாது.... அதுக்காக இதப்படிங்க சிரிங்க!!


ஒருவன் உயரமான மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அவனை வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வந்த டாக்டர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, "அவன் இறந்து விட்டான்" என்றார்.

ஆனால் அடிபட்டவனோ தன் கண்ணை விழித்துப் பார்த்து "நான் இறக்கவில்லை டாக்டர், உயிரோடு தான் இருக்கிறேன்" என்றான்.
அங்கிருந்த அவன் மனைவி, "வாயை மூடுங்கள், டாக்டருக்குத் தெரியாதது உங்களுக்கு என்ன தெரியும்?" என்று அதட்டினாள்.

"டாக்டர்! எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டாகத் தெரியுது".
"கவலைப்படாதீங்க இந்த ஊசி போட்டவுடன் எல்லாம் சரியாயிடும்".
"டாக்டர் ஊசி போட்டதும் எவ்வளவு பணம் தரணும்?.
"பத்து ரூபாய் தான்".
"இந்தாங்க".
"என்ன ஐந்து ரூபாய் தான் தர்றீங்க".
"இல்லியே! ரெண்டு ஐந்து ரூபாய் கொடுத்தேனே"

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குறும்படமும், ஜோக்குகளும் அருமையாக இருந்தன.

பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான குறும்படம்...
ஜோக்குகளும் நல்லாயிருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ! குறும்படம் அருமை !

சசிகலா said...

ஜோக்குகள் அருமை .

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...