The Gods Must Be Crazy சிரிப்பினால் ஒரு உலகசினிமா!!

நம்முடைய சில நகைச்சுவை தமிழ் சினிமாக்களை பார்த்து நாம் வயிறு வலிக்க சிரித்திருப்போம்.. தமிழ்சினிமாவில் முழுநீள நகைச்சுப்படங்கள் மிக அரிதாகவே வந்தாலும் நிறைய படங்களில் நகைச்சுவைக்கென்று தனி நடிகர்களை வைத்து கதைக்கு சம்பந்தமில்லையென்றாலும் நகைச்சுவை காட்சிகளை புகுத்தியிருப்பார்கள்.. இதனை நாம் அதிகம் ரசித்திருப்போம்,சிரித்திருப்போம்!!

உலக சினிமாக்களை பொருத்தவரை நகைச்சுவைக்கென்றே முழுநீள திரைப்படங்கள் நிறைய வருவதுண்டு. ஆனால் எல்லா திரைப்படமும் எல்லா நகைச்சுவையும் நம்மை கவருவதில்லை சிரிக்க வைப்பதில்லை ஆனால் ஒரு சில திரைப்படங்கள் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடும் அப்படி என்னை சிரிக்க வைத்த படம்தான் இந்த The Gods Must Be Crazy
இது தென்னாபிரிக்காவில் 1980 யில் தயாரிக்கப்பட்டது..( இதன் வெற்றியைத்தொடர்ந்து பாகம் 2,3 பின்னர் வெளிவந்தது பொட்ஸ்வானா கலஹாரி பாலைவன காட்டுப்பிரதேசத்திலே படமாக்கப்பட்டுள்ளது.

இயக்கியவர் Jamie Uys இதில் பிரதான பாத்திரமாக நடித்தவர் பழங்குடியினத்தைச்சேர்ந்த N!xau, இவரை இதன் இயக்குனர் நமிபிய பழங்குடியின விவசாய மக்களிடமிருந்துதான் கண்டுபிடித்தாராம்.. (படத்தில் இவரை Bushman என அழைக்கிறார்கள்) பிறந்த தேதிகூட இவருக்கு தெரியாதாம்.. இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் வெறும் 300 டாலர்கள்தானாம் ஆனால் இதனைத்தொடர்ந்து 1989 யில் வெளிவந்த இதன் இரண்டாம் பாகத்திற்கு அவர் வாங்கியது 60,000 டாலர்கள்.. 2003 யில் இவர் இறந்துவிட்டார்.. இறக்கும் வரையிலும் பழங்குடியினத்தவராகவே அந்த சமூகத்துடன் நமீபியா விவசாய கிராமம் ஒன்றிலேயே இருந்தார் என்பது விஷேட தகவல்..

இந்தப்படத்தில் தனது அருமையான நடிப்பின் மூலமும் நகைச்சுவையின் மூலமும் படம் முழுக்க அதகளப்படுத்தியிருப்பார்.. பார்த்தவுடனே  மனதில் பதிவும் பாத்திரப்படைப்பு!! வண்டியை ரிவர்சில் ஓட்டும் காட்சி விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய காட்சி.. இதேகாட்சியை பாகம் மூன்றிலும் வைத்திருப்பார்கள்.. ஆட்டை கொன்று ஆட்டு சொந்தகாரனையே சாப்பிட அழைக்கும் காட்சி.. இவர்களின் வெள்ளந்தி தனத்தையும் கபடமில்லா மனதையும் அழகாக விளக்கும் காட்சி.. ஆட்டை சுட்டதற்காய் சிறையில் அடைக்கப்படும் போது கொஞ்சம் சோகத்தையும் வரவைக்கிறார்.. இவரைப்பற்றி தனிபதிவே போடலாம்,,
                                                         இவருதான் ஹீரோ புஷ்மேன்

இந்த திரைப்படத்தின் கதையையோ நகைச்சுவையோ எழுத்தில் கொண்டு வருவது எப்படி என்பது எனக்குத்தெரியவில்லை.. முடிந்தவரை சொல்கிறேன்! இதில் மூன்று கதைகள் பயணித்து ஒன்றாக சந்திக்கின்றன.. கதை ஒன்று- காமெடியான விஞ்ஞானியுடன் (அவருடைய கோளாருபிடித்த ஜீப் வண்டியில்) ஸ்கூல் டீச்சர் ஒருவரின் கிராமம் ஒன்றிற்கான பயணமும் அதன் சுவாரசியங்களும், கதை இரண்டு-உள்நாட்டு கிளர்ச்சி குழு ஒன்று ஜனாதிபதியை கொல்ல முயற்சி செய்து அது தோல்வியடைய, அரசாங்க படைகள் அவர்களை துரத்துகிறார்கள் அதன் போதான பயணமும் சுவாரசியங்களும்.

கதை மூன்று- bushman எனப்படும் பழங்குடி மனிதன்(படத்தின் நாயகன்) ஒரு வெறும் கொகா கோலா கண்ணாடி பாட்டிலுடன்(Bottle இலங்கையர்களுக்கு- போத்தல், இந்தியர்களுக்கு- பாட்டில் :) அதை கடவுளிடம் திருப்பி ஒப்படைப்பதற்காகவேண்டி, உலகின் முடிவில் கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கையில் உலகின் முடிவிற்கு கால்நடையாகவே பயணிக்கிறார்..

ஏன்,எதற்காக அந்த கொகா கோலா பாட்டிலை கடவுளிடம் ஒப்படைக்க பயணிக்கிறார்?
                                                புதிய ஐயிட்டமா இருக்கே..

பழங்குடியினர் வாழ்ந்த பகுதியினூடாகப்பறந்த ஒரு சிறியரக விமானத்திலிருந்து ஒருவர் கோக்கை அருந்திவிட்டு அந்த பாட்டிலை கீழே போட்டுச்செல்கிறார்.. அந்த பாட்டில் புஷ்மேன் கைக்கு கிடைக்கு கிடைக்கிறது அது மேலேயிருந்து விழுந்ததையும் அவதானித்துவிடுகிறார்! ஆனால், அந்த விமானத்தை அவர் கானவில்லை.. இதற்கு முன்பு அவ்வாறானதொரு வடிவமுடைய  உலோகப்பொருளை அவர்கள் பார்த்ததேயில்லை.. அதை வியப்புடன் எல்லோரும் தொட்டுப்பார்க்கிறார்கள் அவர்களின் எல்லா வேலைகளுக்கும் அந்த பாட்டிலை உபயோகப்படுத்துகிறார்கள்.. அதனால் அவர்களின் அத்தியவசிய பொருளாக அது மாறிவிடுகிறது இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது..
                               இந்த என்ன செய்யலாம் எவ்வாறு கடவுளிடம் ஒப்படைக்கலாம்?

இதைப்பொருத்துக்கொள்ள முடியாத புஷ்மேன் அது கடவுளிடமிருந்து வந்த பொருள் எனவும் அதனால் அவர் குடும்பத்தில் பிரச்சினை எனவும் அதை திருப்பிக்கொடுக்க நினைத்து "இதோ உன் பொருள் இதை நீயே வைத்துக்கொள்" என அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே தூக்கி எறிகிறார். அதாவது,வானத்தை நோக்கி ஆனால் அது மீண்டும் கீழேயே வந்து விழுகிறது.. மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார் அது அங்கிருப்பவர்களின் தலையில் எல்லாம் விழுகிறது.. "ஏன் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய்" என கடவுளை திட்டிவிட்டு அன்றிறவு எல்லோரும் சோகத்துடன் உட்கார்ந்து இதற்கு என்ன செய்யலாம் என தீர்மானிக்கின்றனர்.. உலகத்தின் முடிவில்தான் கடவுள் இருப்பார் என எண்ணி இதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறேன் எனச்சொல்லி பயணத்தை தொடங்குகிறார் புஷ்மேன்.. பயணம் தொடங்குமுன் அங்கிருந்த பெரியவர் ஒருவர் உலகத்தின் முடிவை அடைய குறைந்தது 20 நாட்களாவது நடக்கவேண்டும், அது 40 நாட்களாகவும் ஆகலாம் என சொல்லி வழியனுப்புகிறார்..

நான் மேலே விவரித்த அந்த காட்சியை இந்த வீடியோவை பார்த்து புரிந்துகொள்ளலாம்..



இவ்வாறு நடைபயணமாகும் புஷ்மேனின் ஆசை நிறைவேறியதா? அந்த பயணத்தின் போது அவரின் கஷடங்கள்,அனுபவங்கள், சுவாரசியங்கள் மற்ற இரு குழுக்களின் பயணம் என்னவானது இந்த மூன்று பயணமும் எவ்வாறு ஒன்றாக இனைகிறது என்பதை மிக மிக சுவாரசியமாக,நகைச்சுவையாக சொல்லப்பட்டிருப்பதே இப்படத்தின் வெற்றி..

நான் இதன் பாகம் மூன்றையும் பார்த்துவிட்டேன்.. முதலாவது சூப்பர் டூப்பர், இரண்டாவது சூப்பர் பார்க்கலாம், மூன்றாவது பரவாயில்லை பார்க்கலாம் ஆனால் என்னை பெரிதாக கவரவில்லை..

முதல் இரண்டும் தென்னாபிரிக்கா தயாரிப்பு மூன்றாவது ஹாங்காங்க்/சீனத்தயாரிப்பு.. என நினைக்கிறேன்.
                                          இரண்டாம் பாகத்தில் புஷ்மேனின் பிள்ளைகள்.

முதலாம் பாகத்தின் அதே கதையையே கொஞ்சம் மாற்றி இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறார்கள்.. 1யில் கடவுளிடம் பாட்டில் ஒப்படைக்க பயணமாகும் புஷ்மேன் 2யில் தொலைந்துபோன தன் பிள்ளைகளை தேடிச்செல்லும் புஷ்மேன், 1யில் பழைய ஜீப்பில் பயணிக்கும் ஆணும் பெண்ணும் 2 யில் சிறியரக விமானத்தில் பயணிக்கும் ஆணும் பெண்ணும், 1யில் கிளர்ச்சிக்குழுவின் பயணம் 2யில் பெரிய ட்ரக் வண்டியொன்றில் கடத்தல்காரர்களின் பயணம்..  எல்லா பயணமும் எவ்வாறு ஒன்றினைகிறது என்பதுதான் கதை!!!

நான் பார்க்கும் எந்த படத்தையும் பாத்தே தீரவேண்டும் என நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.. ஆனால் இந்தபடம் தவறவிடக்கூடாத உலக சினிமா!!!
மேலதிக தகவல் ஒன்று இதுவரை நாளும் நீரில்லாமல் பலநாட்கள் உயிர்வாழும் உயிரினம் ஒட்டகம் மாட்டும்தான் என நினைத்திருந்தேன்.. ஆனால் பாலைன பிரதேசங்களில் வசிக்கும் இந்த பழங்குடியினர்த்தவர்களும் கோடைகாலங்களில் பலநாள் பல மாதம் நீரில்லாமல் வாழத்தெரிந்தவர்களாம்..

9 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கே டவுன்லோட் போட்டு பார்க்கிறேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி ...

ராஜ் said...

ரொம்ப ரொம்ப நல்ல படம் பாஸ்....புஷ்மேன் ஆக நடித்தவர் ரொம்ப நல்லா பண்ணி இருப்பார்... எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...
படத்தை பத்தி அருமையாக விமர்சனம் செய்து உள்ளேர்கள்...

K.s.s.Rajh said...

அருமையான ஒரு படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பாஸ் இந்த படத்தை பார்க்கவேண்டும் என ஆவல் எழுகின்றது பார்த்திட்டால் போச்சு

Karthik Somalinga said...

25 ஆண்டுகளுக்கு முன் மிகவும் இரசித்துப் பார்த்த படம்!

கிஷோகர் said...

இதன் பாகம் இரண்டு மூன்று வருடத்துக்கு முன்பு பார்த்தேன், ரொம்பவும் பிடித்துப்போனது. பாகம் ஒன்றையும் டவுண்லோட் செய்துவிட வேண்டியது தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார் ! டவுன்லோட் செய்து பார்க்கிறேன் ! நன்றி !

Bala said...

மிக சிறு வயதில் நான் முதலில் பார்த்த பார்த்தது மூன்றாம் பாகம்தான். பிறகு முதல் இரண்டையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான ஒரு படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

மனசாலி said...

God Must Be Crazy என்றவுடன் எனக்கு டக்கென நினைவுக்கு வந்தது அந்த செவிட்டு Tailor.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2