July 09, 2012

நேரத்தை விழுங்கும் இலங்கை சாலைகள்..!!

பயணங்களின் போது நம்மை கொண்டு சேர்க்க வாகனங்கள் எவ்வளவு முக்கியமோ.. அதேபோல் சாலைகளும் ரொம்ப முக்கியம்! ஒரு நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகள்தான் அந்நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதார எழுச்சியையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.(நாங்களும் பொருளியல் படிச்சிருக்கம்ல) அந்த வகையில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது..

இன்றைய இயந்திர உலகில் நேரம்/காலம் என்பது ஒரு முக்கியமான வஸ்துவாகும்.வீட்டிலே வேலைவெட்டி இல்லாம சும்மா இருக்கிறவங்கூட ஒரு வேலையை அவசரமாக முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கே விரும்புவான..(வீட்டிற்கு வந்து டீவி சீரியல் பார்க்கனும்ல)  இலங்கையில் இப்பொழுது நிறைய சாலைகள் செப்பனிடப்பட்டும்,புதிய சாலைகள் உருவாக்கப்பட்டும் வந்தாலும் அவைகள் இன்றைய தேவைகளையும் வாகன நெரிசலையும் சமாளிப்பதற்கு போதுமானதாக தெரியவில்லை.. ஒரு சாலை செப்பனிட்டு முடிக்கும் போது இன்னுமொரு சாலை பழுதடைந்து விடுகிறது... இலங்கையில் சில முக்கிய நகர்ப்புறங்கள் தவிர்த்து ஏனைய நகரங்கள்/கிராமங்களின் சாலைகள் நிறையவே குன்றும் குழியுமாத்தான் இருக்கிறது..

ஒரு பயணம் வெளிக்கிளம்பினால்,பாதையில்தான் அதிக நேரத்தை செலவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் இன்றைக்கு அதிக மக்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை! எங்கள் ஊர் உட்பட! ஒரு அவசரத் தேவைக்காக கொழும்புக்கு சென்று வருவோம் என்றால்,அந்த பயணம் ஒரு நாளை தின்றுவிடுகிறது! எங்கள் ஊரிலிருந்து கொழும்புக்கு 200 km அதை கடக்க 5.30-6.00 மணித்தியாலங்கள் எடுக்கிறது.. அதுவும் கொழும்பு- யாழ்ப்பாணம் பிரதானவீதி.. பயணத்தின் முக்கால்வாசி நேரத்தை பஸ் பிரயாணத்தில்தான் கழிக்க வேண்டி வருகிறது.. அதிகாலையில் பயணம் புறப்பட்டால் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்கு திரும்பவேண்டிய நிலை.. இப்பொழுது யாழ்ப்பாணத்திற்கு அதிக வாகணங்கள் அவ்வழியால் பயணிப்பதால் பாதையை பெரிதாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.. அந்த வேலைகள் முடிந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே..

சாலைகளின் குறைபாடுதான் பயணங்களுக்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது என்றாலும்.. இதற்கு இன்னுமொரு காரணம் அதிகமான வாகன நெரிசல்! இப்போதெல்லாம் சாலைகளில் பயணிக்கும் போது இலங்கையும் அபிவிருந்தியடைந்த நாடுதானா? என்ற சந்தேகம் எழுவதுண்டு அவ்வளவு வாகணம்.. காசு இருக்கோ இல்லையோ கடனுக்காவது ஒரு வண்டியை வாங்கி சுத்துகிறார்கள்..  அதுவும் கொழும்பிலிருந்து வரும் போதும் போகும் போதும் புறக்கோட்டை-களனி-கிரிபத்கொட-கடவத்த தாண்டுவதற்குள் "போதும் போதும்" என்றாகிடும்.. 

கொழும்பிலிருந்து வெளியாகும்.. கண்டி,குருனாகல்,தம்புள்ள,பொலன்னறுவை,கெக்கிராவ,அனுராதபுரம்,வவுனியா,ஹொரவப்பொத்தான மற்றும் யாழ்ப்பாணம் இன்னும் நிறைய ஊர்களுக்கான வாகணங்களும் அந்த கொழும்பு-கண்டி பாதையையே பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவ்வழியால் பயணிக்கும் மக்கள் மிகுந்த நேர விரயத்துக்கு உட்படுகின்றனர்..


அரசாங்கம் இதெல்லாம் பார்த்துவிட்டுத்தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் உச்சத்தில் இருப்பதாக பீத்திக்கொள்கிறது!!! பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதுமே இன்றைய இலங்கையின் வளர்ச்சி நிலை.. மத்திய கிழக்கு நாடுகளின் வேலைவாய்ப்பு போல் இல்லாமல் இருந்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இலங்கை பங்களாதேஷை விட ஏழை நாடாகவே இருந்திருக்கும்..!!

என்னதான் நம்மூர் வீதிகளை குறை கூறினாலும் அதைவிட மோசமான வீதிகள் உலகில் வேறு நாடுகளில் இருக்கத்தான் செய்கிறது.. சில புகைப்படங்கள் உதாரணத்திற்கு..


பாகிஸ்தானில்..

நேபாளத்தில்

இந்துநேசியாவில்

5 comments:

மனிதன் said...

அதுவும் திங்கள் கிழமை என்றால் சொல்லவே தேவல, 2 மணி கழித்துதான் பொய் சேர முடியும்.

Seeni said...

athu sari!

சிட்டுக்குருவி said...

என்ன செய்வது நண்பா...
எம்நாடு யுத்த பிரச்ச்னையில்லாமல் இருந்திருக்குமானால் விரைவில் சிங்கப்பூர் போலாகியிருக்கும்....

நிதிகளை விழுங்கக்கூடிய மேதகு அதிகாரிகளும் எம்மிடம்தான் இருக்கிறார்கள்......:(

s suresh said...

அட இதென்ன கொடுமை! படங்களை சொல்கிறேன்! இப்படியா கடக்கிறார்கள்! பரிதாபமாக உள்ளது!

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம சென்னை போல் தான் உள்ளது... கீழே உள்ள படத்தை போல் கடக்காமல் வந்தால் சரி... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !

Related Posts Plugin for WordPress, Blogger...