T20 WORLD CUP 2012 -Super Eight -நான்கு போட்டி முடிவில்..


இலங்கையில் நடைபெற்று வரும் T20 உலககிண்ணத்துக்கான போட்டிகளில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து பலம் குறைந்த பங்களாதேஷ்,சிம்பாபே,ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து அணிகள் வெளியேற மீதமுள்ள 8 அணிகள் போதும் Super Eight போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! முதல் இரண்டு நாள் முடிவில் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளது அதைப்பற்றி சுருக்கமாக இங்கே..


SriLanka vs New Zealand.

இறுதிவரை மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ரொப் நிக்கோல், மார்டின் கப்டில், மெக்கலம் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்ட உதவியுடன் நியுசிலாந்து நியமித்த வெற்றி இலக்கான 174 ஐ டில்சான், மஹேலவின் உதவியுடன் சமன் செய்தது இலங்கை அணி. இறுதிப்பந்தில் ஒரு ஓட்டம் தேவை என்றிருக்க டிம் சௌதியின் சிறப்பான பந்துவீச்சில் ஓட்டம் பெற முடியாமல் ரன் அவுட்டாக வீக்கட் வீழ்த்தப்பட்டது. பின் சுப்பர் ஓவரில் இலங்கை நியமித்த வெற்றி இலக்கான 14 ஓட்டங்களை லசித் மலிங்கவின் பந்து வீச்சிற்கு எதிராக பெற முடியாமல் தோற்றது நியுசிலாந்து. இப்போட்டியில் இலங்கை சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட அகில தனஞ்சய என்ற 18 வயது சுழல் பந்துவீச்சாளர் 2 விக்கட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.. அஜெந்த மெண்டிசுக்கு ஏமாற்றம் 4 ஓவர்களில் 48 ஓட்டம் அவரின் மெஜிக் என்நேரமும் வேலை செய்யாது என்பதுதான் பெரிய குறை!

West Indies vs England

கரீபியன் தீவுகளின் கறுப்பு சிங்கம் கிறிஸ் கெயிலின் வானவேடிக்கையோடு ஆரம்பமானது இப்போட்டி.. கெயில் கொஞ்ச நேரம் நிலைத்து நின்றால் எதிரணி பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபம்தான். அதுதான் கடந்த முறை உலக சாம்பியன் இங்கிலாந்துக்கும் நடந்தது. கெயில் ஆட்டமிழந்ததும் அவரோடு சேர்ந்து ஆடிய ஜோன்சன் சால்ஸ் முதலில் மெதுவாக ஆடினாலும் இறுதியில் வேகமாக ஆடி 84 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 180 என்றானது 

இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தின் போது ரவி ராம்போலின் முதல் ஓவரில் கீஸ்வெற்றரும் லுக்ரைட்டும் ஓட்டம் பெறாம்ல ஆட்டமிழந்தது அவர்களின் ஓட்டவேகத்தை கட்டுப்படுத்தி மிக மெதுவாக துடுப்பெடுத்தாட செய்தது.. ஒரு கட்டத்தில் மிக மோசமாக தோற்றுவிடுவார்களோ என்றிருந்த நிலையில் ஒயின் மோகனின் அதிரடியான 5 சிகஸர்களின் உதவியுடன் வெற்றிக்கு அண்மையில் வந்து 15 ஓட்டங்களினால் தோற்றுப்போனார்கள்! ஒயின் மோகன் இன்னும் கொஞ்சம் முன்னதாக வந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். மேற்கிந்திய தீவுகள் சார்பாக மிகப்பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட போலாட், சுனில் நரைன் போன்றோர் பெரிதாக சோபிக்கவில்லை.. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய நிலை.. கிரேம் ஸ்வான் டெஸ்ட் போட்டிகளுக்கும் மட்டும்தான் ஒத்து வருவார் போல் தெரிகிறது! 

Pakistan vs South Africa

மிக முக்கியமான போட்டிகளில் முக்கியமான தருணங்களில் ஏதாவதொரு துரதிஷ்டம் தென்னாபிரிக்கா அணியை கவுத்துவிடும் என்பது யாவரும் அறிந்ததே! அது இம்முறை Super Eight யின் முதல் போட்டியிலேயே உமர் குல்லின் வடிவில் வருமென்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்! பலம் பொருந்திய பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சில் தடுமாறி டுமினி டீ வில்லியர்ஸ் உதவியுடன் 134 என்ற வெற்றி இலக்கை நியமிக்க நிதானமற்ற துடுப்பாட்டத்தினால் 7 விக்கட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்று தோல்வியின் விளிம்பில் நின்ற பாகிஸ்தான் உமர் குல்லின் அதிரடியான 32 ஓட்ட சிக்ஸர் பவுண்டரி வித்தை மூலம் வெற்றியை பெற்றுக்கொண்டது. 

பாகிஸ்தான் சார்பாக பாராட்டப்படவேண்டிய இன்னுமொருவர் உமர் அக்மல் அவரின் நிதானம் கலந்த வேகமான துடுப்பாட்டமே இந்த வெற்றிக்கு முதல் காரணி! பாகிஸ்தானை பல முறை இப்படியான இக்கட்டிலிருந்து காப்பாற்றிய பெருமை அக்மலுக்கு உண்டு! தென்னாபிரிக்கா சார்பாக மிகச்சிறப்பாக பந்துவீசிய ஜோஹான் போத்தாவிற்கு 2 ஓவர்கள் மீதமிருக்க அவரை பந்துவீச அழைக்காமல் விட்டது ஏன் என்று புரியவில்லை.. மாற்றமாக முஹம்மத் ஹபீஸ் சிறப்பான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.அக்மலும்,குல்லும் வேகப்பந்துவீச்சுக்கெதிராகவே அதிக ஓட்டங்களை பெற்றது. பொறுத்திருந்து பார்ப்போம் தென்னாபிரிக்காவுக்கு தொடர்ந்து அதிர்ஷ்டம் வருமா என!

India vs Australia

உலகின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் விரேந்தர் சேவாக்கின் பெயர் யாராலும் மறக்க முடியாதது! அதுவும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் சேவாக்கை நிறுத்திவிட்டு மேலதிகமாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்கும் முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை போட்டி முடிவில் உணர்ந்திருப்பார் தோணி! அதுவும் கம்பீர் தவிர மற்ற அனைவரும் பந்துவீசும் ஆற்றலுடையவர்கள் எதுக்கு மேலதிக பந்துவீச்சாளர்? 

அவுஸ்திரேலியாவின் பலமான பந்துவீச்சுக்கெதிராக தொடர்ந்து விக்கட்டுக்களை இழந்ததால் 141 என்ற வெற்றி இலக்கே அவுஸ்திரேலியாவிற்கு வழங்கப்பட்டது.. இந்திய பந்துவீச்சாளர்கள் கொஞ்சமாவது போட்டியை கொடுப்பார்கள் என்று பார்த்தால் போட்டி பொசுக்கென்று முடிந்துவிட்டது.. வொட்சனும் வோர்னரும் மைதானமெங்கும் சிக்ஸர் மழை பொழிந்தார்கள்.! அட்டா என்னா அடி.. அதிலும் வொட்சன் 7 சிக்ஸர்கள்.. பந்து வீச்சிலும் 3 வீக்கட் தொடர்ர்சியாக மூன்றாவது முறையாக போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது! இவரை ஆரம்பத்திலேயே பவிலியனுக்கு திருப்பி அனுப்பவில்லையென்றால் எதிரணியின் பாடு திண்டாட்டம்தான்.. பார்ப்போம் பாகிஸ்தானும்,தென்னாபிரிக்காவும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று! இந்திய அணி மிகுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு போகும் என எதிர்பார்க்கிறேன்...

Gallery from espncricinfo.

Airplane! (1980) உலகசினிமா!

முன்பெல்லாம் விமான பயணம் என்பது ஓர் ஆச்சர்யமான விடயம் நமக்கு. இப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்றானவுடன் விமான பயணமும் பஸ் பயணம் போன்றே ஆகிவிட்டது! ஆனாலும் நம்மில் இன்னும் நிறைய பேருக்கு வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் காலடி எடுத்து வைத்து வானில் பறந்திட ஆசை!! இருபதாம் நூற்றாண்டின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு இந்த விமானம் என்று தயங்காமல் சொல்லலாம்.. பல ஆயிரம் கிலோ எடையைக்கொண்ட இரும்பையும்/பொருட்களையும் மனிதர்களையும் சுமந்துகொண்டு பறவை போல் உலகை சுற்றி வருகிறதென்றால் இந்த விமானம் ஆச்சர்யமானதுதான்!

நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானத்தின் இரு விமானிகளுக்கும் நடு வானில் வைத்து விமானத்தை இயக்கமுடியாதளவுக்கு ஏதாவது உடல்நல குறைபாடு ஏற்பட்டால் தொடர்ந்து நாம் என்ன செய்யலாம்? அடப்பாவி நல்லாத்தானே பெயித்துக்கிட்டு இருக்கு எதுக்கு இப்பிடியொரு விபரீத கற்பனை உனக்கு அப்பிடின்னு கேட்கிறிங்களா.. இல்ல வெரி சிம்பிள் பரசூட்ட எடுத்து தொபுக்கீடீர்ன்னு குதிச்சிடுவோம்ன்னு சொல்றிங்களா? இப்படியொரு சீரியசான பிரச்சினையில் சிக்கிய விமானத்தைப்பற்றி நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம்தான் இந்த AirPlane இது 1980 யில் வெளிவந்த படம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சிலிருந்து சிகாகோவிற்கு ஒரு விமானம் புறப்பட தயாராயிருக்கிறது.! அவ்விமானத்தில் பணிப்பெண்ணாக Elaine Dickinson (Julie Hagerty) அவளை முன்பு காதலித்து பிரிந்து போன காதலனான டெக்சி டிரைவர் Ted Striker (Robert Hays) யும் அவ்விமானத்தில் புறப்படுகிறான அவளை மீண்டும் சந்திக்கும் நோக்கோடு. இரண்டு விமானிகள் உட்பட பயணம் இனிதே ஆரம்பமாகிறது! இதிலே ஒரு விமானியாக அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கரீம் அப்துல் ஜப்பாரும் நடித்துள்ளார்.

பயணத்தின் போது எல்லோருக்கும் இரவுச்சாப்பாடு வழங்கப்படுகிறது. அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக வாந்தியும் ஒரு வித மயக்கநிலை ஏற்பட்டு சுகயீனமடைகிறார்கள்! அந்த விமானத்தில் வைத்தியர் (Leslie Nielsen) ஒருவரும் இருப்பது தெரிய வரவே, அவர் சுகயீனமுற்றவர்களை பரிசோதித்து சாப்பாட்டில் வழங்கப்பட்ட ஒரு வகை மீன் நஞ்சானதே(food poisoning)   இதற்கு காரணம் என கண்டுபுடிக்கிறார்.! அந்த நேரம் அதற்குறிய மருந்துகள் கைவசம் இல்லாதலால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை! விமானிகள் இருவரும் அதே மீனையே உட்கொண்டதால் அவர்களுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என திகைக்கிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே ஒருவர் பின் ஒருவராக இரு விமானிகளும் சுகயீனமடைகிறார்கள்.. அப்போது விமானமே நிலைகுலைய ஆரம்பிக்கிறது பயணிகள் எல்லோரிடமும் மரன பயம்! அப்போது Julie விமானநிலைய கட்டுப்பாட்டகத்தை தொடர்புகொண்டு நிலமையை விபரிக்கிறாள்.. உடனே அங்கிருந்து autopilot ஐ இயக்குமாறு கட்டளையிடப்படுகிறது.. இந்த autopilot எனப்படுவது ரோபோவைப்போன்ற ஒரு பொம்மை! விமானிகளால் முடியாத நேரத்தில் விமானத்தை தற்காலிகமாக இயக்குவதற்க்கு இவை பயன்படுகிறதாம். அதாவது குறித்த ஒரு திசையில் விமானத்தை செலுத்தவே இவை பயன்படும்.. இதனால் விமானத்தை தரையிறக்கவோ மேல் எழுப்பவோ முடியாதாம்! இது எனக்கு புது அனுபவம் இப்படத்தை பார்த்த போதே இந்த autopilot முறையை அறிந்துகொண்டேன்.. (இது உண்மையா பொய்யா தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) இதன் பிறகு நீங்க பயணிக்கிற விமானத்தின் விமானிக்கு ஏதாவது குழப்பம்னா உடனே பரசூட் எடுத்து குதிச்சிடாம autopilot இருக்கான்னு துலாவிப்பாருங்க :-)

பிறகு Julie ஒவ்வொரு பயணியாக உங்களில் யாருக்காவது விமானத்தை இயக்க தெரியுமா என விசாரிக்கிறாள்.. அப்போது அங்கிருக்கும் அவளின் பழைய காதலன், முன்பு விமானப்படையில் வேலை செய்தது ஞாபகம் வரவே அவனின் உதவியை நாடுகிறாள். அவனும் முயற்சி செய்கிறேன் என ஒத்துக்கொள்கிறான் ஆனால் அவனுக்கு அதன் இய்க்கமுறைகள் சரியாக தெரியவில்லை காரணம் விமானப்படையில் அவன் சிறியரக விமானங்களை மட்டுமே இயக்கியுள்ளதாக கூறுகிறான்! பின்பு விமானநிலையத்தை தொடர்புகொண்டு, அவனுக்கு உதவ ஒரு கட்டளை அதிகாரி நியமிக்கப்படுகிறார்! அந்த கட்டளை அதிகாரி யாரென்றால் அவன் முன்பு பணிபுரிந்த விமானப்படையின் உயர் அதிகாரி ஏற்கனவே அவர்கள் இரண்டு பேருக்குமிடையில் ஆகாது!

இருவரும் முறுகல் நிலையிலேயே கட்டளைகளை பகிர்ந்து விமானத்தை இயக்குகிறார்கள்.. இப்படியாக பல இன்னல்களுக்கு மத்தியில் விமானியில்லாத அந்த விமானத்தை நாயகன்,நாயகி மற்றும் அந்த வைத்தியர் சேர்ந்து தரையிறக்குகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை! இப்படியொரு சீரியசான கதையில் ஒரு சீரியஸ் படமாக வந்திருக்கவேண்டியது இடையிடையே சில லூசுத்தனமான satirical  வகை நகைச்சுவை காட்சிகளால் இது நகைச்சுவை படமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது!  அதுவும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைப்படங்களின் வரிசையில் முதல் பத்திற்குள்ளாம்!! இருந்தாலும் விமானம் தரையிறங்கும் நேரம் நெருங்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்கிறது அந்த பரபரப்பு! இதை எழுதி இயக்கியவர்கள் மூவர்  David Zucker, Jim Abrahams, and Jerry Zucker. வெறுமனே 3.5 மில்லியன் டாலரில் தயாரித்து 83 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கிறார்கள்.  BAFTA விருது உட்பட ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறது!

ட்ரெய்லர் பார்த்தாலே புரியும் இப்படத்தின் சில  காமெடிகளை!

யுக சந்தி- விதவை மறுமணம்- ஜெயகாந்தன்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்களின் வாசகன் நான். கடந்த ஒரு 6 மாதமாகத்தான் அவரது எழுத்துக்கள் இணையம் மூலம் அறிமுகம் எனக்கு. அப்பொழுது முதல் அவரின் படைப்புக்களை தேடி தேடி படித்திருக்கிறேன்.. அவரின் கதையில் உருவான ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மனிதரில் இத்தனை நிறங்களா? போன்ற திரைப்படங்களையும் விட்டதில்லை! அட்டட என்ன ஒரு அற்புதமான எழுத்து!

இவரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அவற்றை படிக்கும் வாசகன் பார்வையில் காட்சியாக மாறும் அதீத திறன் கொண்டவை! இவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்றுதான் "யுகசந்தி" விதவை மறுமணத்தின் தேவை குறித்தான சிறுகதை! கீதா என்ற ஆசாரமான ஹிந்து குடும்பத்தில் பிறந்த பெண் திருமணம் முடித்து சில மாதங்களிலேயே கனவனை இழக்கிறாள், அதன் பின் சிலகாலம் தனிமையில் வாழ்ந்துவிட்டு மறுமணம் செய்ய முடிவெடுக்கிறாள்.. இதை ஆசாரம்,சாஸ்திரம், சம்பிரதாயம்,கௌரவம் என வாழும் அவள் பெற்றோர் கடுமையாக எதிர்த்தது மட்டுமில்லாமல் அவளை தலை முழுகிடவும் தீர்மானிக்கிறார்கள்.. ஆனால் கீதாவுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஜீவன் அவள் தனிமைக்கு துனையிருக்கும் அவள் பாட்டி மட்டும்தான்! அந்த பழைய யுகத்தின் பிரதிநிதியான பாட்டி புதிய யுகத்தின் பிரதியான கீதாவின் மறுமணத்திற்காக  எவ்வாறெல்லாம் வாதாடுகிறாள் என்பதுதான் இந்த யுகசந்தி சிறுகதையின் உள்ளடக்கம்!

இந்த சிறுகதையிலிருந்து சில வரிகள் இங்கே தருகிறேன்!

அந்தக்கால மனிதர்கள் கால் நடைகளை தவிர வேறு வாகனங்கள் பயன்படுத்தவில்லை என்பதை சொல்லும் வரிகள்.

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?

கீதா, தான் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக பாட்டியிடம் எழுதியனுப்பிய கடிதத்தின் வரிகள்..


    "என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....

    இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.

    என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

    என் காரியம் என் வரைக்கும் சரியானதே'

    நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

    இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள்.

    ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?

    உங்கள் மீது என்றும்

    மாறாத அன்பு கொண்டுள்ள

    கீதா"
தன் பேத்திக்காக மகனிடும் வாதாடும் பாட்டியின் வார்த்தைகள்.. வரிகளாக!
    "நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள்.

    "ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள். 
இறுதியாக இப்படி முடிகிறது!!

    வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?......

    ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை'


விதவை மறுமணம் குறித்து வேறு யாராலும் இதைவிட அழகாக சிறுகதை எழுதிட முடியாதென்பது என் எண்ணம்!! அவரின் ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தோடும் அதன் நிகழ்வுகளோடும் பின்னிபினைந்தவை.. அவரின் சிறுகதைகளை படித்து முடிந்ததும் அட இதை இப்படியும் சொல்ல முடியுமா என்ற உணர்வும், மனதின் உணர்வுகளை எவ்வளவு அழகாக எழுத்துக்களாக மாற்றி அவற்றுக்கு காட்சி கொடுத்திருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும்! இந்த சிறுகதையை இன்னும் நீங்கள் படிக்கவில்லையாயின் படித்துப்பாருங்கள்! இங்கே!!


உலகம் 3012 யில்தான் அழியும் அதிரடி அறிவித்தல்!

உலகம் 2012 யில் அழிந்து போயிடும்னு சொல்லிட்டிருந்தாங்க கொஞ்ச பேரு.. ஆனா 2012 முடிய இன்னும் 3 மாதம்தான் இருக்கையில், உலகம் 3012 யில் தான் அதாவது இன்னும் 1000 ஆண்டுகள் கழித்துத்தான் அழியும் என்று அறிவியலாளர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்காங்க! அதனால் உலக மக்கள் யாவரும் இன்னும் 1000 வருடத்துக்கு கவலைகளை மறந்து வாழலாம் என இங்கே அறியத்தரப்படுகிறது! அதற்கான அறிவித்தல் பதிவின் இறுதியில்!

இந்த மரம் 1400 ஆண்டுகள் பழமையானதாம் இது அமெரிக்காவின்  Charleston, S.Carolina வில் உள்ளது 

காசு செலவழித்து பாலைவனத்தை சோலைவனமாக்கும் சில மனிதர்கள், காசுக்காக சோலைவனத்தை பாலைவனமாக்கும் சில மனிதர்கள்! மனிதரில் இத்தனை நிறங்களா?

இந்தச்சட்டம் நமக்கிள்ள போல!!

பாதசாரிகள் கடவை போல இவர்களுக்கும் ஏதாவது கடவை தேவை!

இந்திய வரலாற்றை இப்படியும் சொல்கிறார்கள்!! நமக்கு ஒன்னும் தெரியாதுப்பா!

இவன் கல்வி உணர்ச்சிக்கு அளவேயில்லாம போச்சே! பயபுள்ள ஹோம் வேர்க் செய்யாம தூங்கிருப்பானோ?
கல்யாணமானா ஸ்பைடர்மேனால கூட தப்பா முடியாது போல!!
(கல்யாணமானவர்களை கலாய்ப்போர் சங்கம்)


உலகம் பசுமையாகவே இருக்கும்
புன்னகை மழை பொழியும் வரை!

உங்க ஆபீசுலயும் இப்படியா?

நமக்கு ரொம்ப பசியாக்கும்! அதுதான் ஆட்டய போட்டாச்சு!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 3012யில் உலகம் அழியும் எனச்சொல்ல்லும் அறிவியலாளர்களின் அறிக்கை! இதோ



KFC சிக்கனும் வீட்டுச்சேவலும்!


கே எப் சி
கோழி சாப்பிட வேண்டும்
நீண்டநாள் ஆசை
நிறைவேறியது!
நீண்டநாளாய் வளர்த்த
வீட்டுச்சேவலை
விற்றதின் மூலம்!




பாட்டி வைத்தியமா ஆங்கில வைத்தியமா எது சிறந்தது?

விஜய் தொலைக்காட்சியின் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில் அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெறும்! அது போலவே கடந்தகிழமை இடம்பெற்ற விவாதமும் கொஞ்சம் காரசாரமாக இருந்ததுடன் சுவாரசியமாகவும் இருந்தது.. இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது என்பதனால் இது கொஞ்சமேனும் பயனுள்ளதாக தோன்றியது!

இன்றைய உலகில் நோய் என்பது ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அனைவருக்கும் வரக்கூடியது.! பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து தாக்கும் சில சிறிய நோய்கள்,வலிகளுக்கான நிவாரணங்களாக வீட்டிலே சுற்றுச்சூழலிலே கிடைக்கும் இயற்கையான பொருட்களைக்கொண்டு நிவர்த்தி செய்து கொள்வதுதான் இன்றைய அநேக கிராமபுறங்களிலும் சில நகரத்து வீடுகளிலும் தாய்மார்கள் பாட்டிமார்கள மூலம் நிகழ்ந்து வருகின்றன.. இவற்றை பாட்டிவைத்தியம், நாட்டுவைத்தியம், கைவைத்தியம் எனவும் அழைப்பர்!!

இந்த நீயா நானாவில் அலசப்பட்ட விடயம் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் அவற்றுக்கு வீட்டிலுள்ள தாய்மார்களோ பாட்டிமார்களோ எந்தவித வைத்திய ஆலோசனையுமின்றி செய்யும் வைத்தியம் சரியானதா அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப்பற்றியே.. இதிலே நாங்கள் செய்யும் நாட்டு வைத்தியம் சரியானதே அதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது என்று வாதாட தாய்மார்கள் ஒரு பக்கமாகவும்.. இல்லை வீட்டிலே செய்யப்படும் வைத்தியம் கொடுக்கப்படும் மருந்துகள் பிழையானது என்றும் எல்லா நோய்களுக்கும் ஆங்கில வைத்தியரையே நாடவேண்டும் என்றும் சில நோய்களுக்கு மருந்தோ வைத்தியமோ தேவையில்லை என்று வாதாட வைத்தியர்கள் ஒரு பக்கமாகவும் இருந்தார்கள்..

இந்த விவாதத்திலே நான் கவனித்த சில முக்கிய விடயங்கள்..  தாய்மார்கள் சொன்ன அனைத்து வைத்திய முறைகளுக்கும் அவை தேவையில்லை, கூடாது, பக்க விளைவுகள் வரும் என்ற முறையில் நிராகரித்தார்கள்.. ஒருவேளை ஒரு சில நல்ல பாட்டிவைத்தியங்களையாவது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணம். அவர்களின் தொழில் தர்மமாகவும் அவர்களின் பிழைப்புக்கே ஆப்பு வைக்கும் என நினைத்திருக்கலாம்! ஆனால் அந்த வைத்தியர்களின் அநேக வாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது! சில பெண்மனிகளினதும் பாட்டி வைத்தியத்தின் பக்கம் உட்காந்திருந்த ஒரு வைத்தியரினது விட்டுக்கொடுக்காத சில வாதங்களினால், சில வைத்தியர்கள் ஆடித்தான் போனார்கள்.. ஆனாலும் அவர்களின் சில கூற்றையும் மறுக்கமுடியாது! சில பாட்டிவைத்தியம் உடனடி தீர்வைக்கொடுத்தாலும் அவை நீண்டகால பின்விளைவுகளை கொடுக்ககூடியவை!!  இதில் ஒரு ஆச்சர்யம், நம் எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு நீராட்டி முடிந்தவுடன் பவுடர் போடுவது வழக்கம் அதுவும் கூடாது என்பதாகவே கூறினார்கள்!! அந்தக்கூற்றால் கோபினாத் உடபட பலரும ஆடித்தான் போனார்கள்.. இதுபோன்ற நம் வீடுகளுக்கும் சமூகத்துக்கும் உபயோகமான வாதவிவாதங்களை அவ்வப்போதாவது வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி குழுவிற்கு நன்றி!

அந்த நிகழ்ச்சியை நேரம் கிடைப்பின் பாருங்கள்..இங்கே!























Thanks.. Source  Dailymotion.com

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன். நீ.எ.பொ.வ..!


நீதானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்கள் வெளிவந்து பலரும் பலவிதமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...சிலர் ராஜாவின் மீது கொண்ட அதீத எதிர்ப்பார்ப்பினால் கொஞ்சம் ஏமாற்றமடைந்துள்ளார்கள் போல!! ஆனாலும் எனக்கு சில பாடல்கள் பிடித்திருக்கிறது.. குறிப்பாக கார்த்திக் பாடிய இரன்று பாடல்களும் நல்ல மெலடி.. அதிலும் கார்த்திக்கின் இனிமையான குரலோடு ராஜாவின் இசையும் சேர! குறிப்பாக "என்னோடு வா வா" என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கதூண்டுகிறது..

இந்தப்பாடல் பிடிக்க இன்னுமொரு காரனம் நா முத்துக்குமாரின் சிம்பிளான அழகான காதல் வரிகள்.. இன்னும் கொஞ்சம் காலம் இந்தப்பாடல் முனுமுனுக்க வைக்கலாம்.. அதன் வரிகள் இங்கே.!

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...
நீ....
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...
செல்லச்சண்டை.... போடுகிறாய்!
தள்ளிநின்று....தேடுகிறாய்!
ஹா ஹா அன்பே என்னை தண்டிக்கவும்
உன் புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா..?

(என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...)

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வது..
என்னைக்கொஞ்சம் பாக்கத்தானடி..!!
கண்னை மூடி தூங்குவதைப்போல்
நீ நடிப்பது..
எந்தன் குரல் கேட்கத்தானடி..!!

இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி என்னாளும்
தீயாக பார்க்காதடி..!!

சின்னப்பிள்ளை போல நீ
அடம்பிடிப்பது என்ன சொல்ல!
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல!

சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணிச்சொல்ல கேட்டுக்கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்..

(என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...)

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கணமே..
காதல் அதை பொருக்கனுமே
இல்லையெனில் கட்டிவைத்து உதைக்கனுமே..

உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே..
கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி
மற்றதல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி..
எந்த தேசம் போன போதும்
என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே...!

(என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

Video Song

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...