என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன். நீ.எ.பொ.வ..!


நீதானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்கள் வெளிவந்து பலரும் பலவிதமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...சிலர் ராஜாவின் மீது கொண்ட அதீத எதிர்ப்பார்ப்பினால் கொஞ்சம் ஏமாற்றமடைந்துள்ளார்கள் போல!! ஆனாலும் எனக்கு சில பாடல்கள் பிடித்திருக்கிறது.. குறிப்பாக கார்த்திக் பாடிய இரன்று பாடல்களும் நல்ல மெலடி.. அதிலும் கார்த்திக்கின் இனிமையான குரலோடு ராஜாவின் இசையும் சேர! குறிப்பாக "என்னோடு வா வா" என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கதூண்டுகிறது..

இந்தப்பாடல் பிடிக்க இன்னுமொரு காரனம் நா முத்துக்குமாரின் சிம்பிளான அழகான காதல் வரிகள்.. இன்னும் கொஞ்சம் காலம் இந்தப்பாடல் முனுமுனுக்க வைக்கலாம்.. அதன் வரிகள் இங்கே.!

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...
நீ....
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...
செல்லச்சண்டை.... போடுகிறாய்!
தள்ளிநின்று....தேடுகிறாய்!
ஹா ஹா அன்பே என்னை தண்டிக்கவும்
உன் புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா..?

(என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...)

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வது..
என்னைக்கொஞ்சம் பாக்கத்தானடி..!!
கண்னை மூடி தூங்குவதைப்போல்
நீ நடிப்பது..
எந்தன் குரல் கேட்கத்தானடி..!!

இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி என்னாளும்
தீயாக பார்க்காதடி..!!

சின்னப்பிள்ளை போல நீ
அடம்பிடிப்பது என்ன சொல்ல!
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல!

சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணிச்சொல்ல கேட்டுக்கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்..

(என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...)

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கணமே..
காதல் அதை பொருக்கனுமே
இல்லையெனில் கட்டிவைத்து உதைக்கனுமே..

உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே..
கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி
மற்றதல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி..
எந்த தேசம் போன போதும்
என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே...!

(என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

Video Song

7 comments:

ஆத்மா said...

............:) கேட்டுடுவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்க ஒருவர் தான், நல்லா இருக்கு என்று சொல்லி உள்ளீர்கள்... சிலருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம்... ஏன் என்றால் எதிர்ப்பார்த்தது அதிகம்... எனக்கு O.K. சில பாடல்களை படத்தோடு பார்த்தால் இன்னும் பிடிக்கும்...

ஹேமா said...

பெரிய அளவில் எதிர்பார்த்தோமோ என்னமோ...அவரது இசைக்கு இது போதவில்லை ரியாஸ் !

காரிகன் said...

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறெங்கும் செல்ல மாட்டேன் என்று இருந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் எப்படி என் கவிதை?

Riyas said...

நன்றி காரிகன்,, நீங்க சொன்ன பிறகுதான் கவனித்தேன் நீங்க சொல்வது போல்தான் இருந்திருக்க வேண்டும் எழுத்துப்பிழையை திருத்திவிட்டேன்..

தனிமரம் said...

இந்த வார ரயில் பயணத்தில் இடைவிடாத இசை இந்த பாடலும் முதல் முதல் ,வானம் மெல்ல, என என்னை ராஜா தாலாட்டுகின்றார்! எனக்கு அதிகம் பிடிச்சிருக்கு ரியாஸ்§

Azhagan said...

Except for "Pudikkala Mamu", I like all the remaining songs. I feel that because of the different orchestration, people feel it is not IR. But listen to the songs using a headphone, amazing orchestration!. Bravo maestro!

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2