October 11, 2012

ஆஜீத் சூப்பர் சிங்கரின் நாயகன்..!


விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்ப்பவராக இருந்தால் "ஆஜித்" என்ற பெயரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! அந்த நிகழ்ச்சியில் அவன் பாடும் பாடல்கள் அவ்வளவு பிரபலம்! அவன் பாடினாலே அந்தப்பாடலுக்கு தனியழகு கிடைத்து விடுகிறது.. வெறும் புகழுக்காக சொல்லவில்லை அத்தனை திறமை அவனுக்குள்..

அவனின் குரல் வளத்தைப்போன்ற பாடும் போது முகபாவங்களும்,உணர்ச்சிகளும், உடல் அசைவுகளும், ஸ்டையிலும் அந்தப்பாடலை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது.. வெறுமனே புதிய பாடல்களின்றில்லாமல் பழைய பாடல்களையும் மிக அழகாக அனுபவித்து பாடக்கூடியவன்..இதற்கு உதாரணம் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய "அனுபவம் புதுமை" என்ற பாடலை பாடிய விதம்.. இவன் பாடிய பிறகே இந்தப்பாடல் என்னை அதிகம் கவர்ந்துள்ளது.. இப்படி பல பாடல்கள் இவன் பாடியது பிரமாதம்.. ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது பாடல்வரிகள் மறந்து கொஞ்சம் சொதப்பிவிட்டதின் காரணமாக அச்சுற்றிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்! பின் இப்போது வய்ல் கார்ட் சுற்றில் பாடிய மூன்று பாடலையும் சூப்பராக பாடி வந்திருந்த நடுவர்களின் அமோக ஆதரவை பெற்றுவிட்டான்.. அதிலும் அந்த "ஆரோமலே" பாடலுக்குப்பின் இவன் உயரமே வேறு என்றாகிவிட்டது! நடுவர் விஜய்பிரகாஷ் மற்றும் பலர் சொன்னது போல இவன் ஏன் இறுதிசுற்றுக்கு நேரடியா போகவில்லை என்பது ஆச்சர்யம்தான்!

ஆனாலும் வயில் கார்ட் ரவுண்டில் நடுவர்களினதுன் பொதுமக்களினதும் ஆதரவைப்பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிட்டான்..  இறுதிப்போட்டியில் வெற்றி தோல்வி என்னவானாலும் இப்போதே ஆயிரக்கணக்கானோரின் உள்ளங்களை கொள்ளையடித்துவிட்டான் இந்த லவ்வர் பாய்.. இறுதிப்போட்டியிலும் கலக்க வாழ்த்துக்கள்.. இறுதிப்போட்டிக்கு தெரிவான இன்னுமொரு மிகச்சிறந்த போட்டியாளர் யாழினிக்கும் வாழ்த்துக்கள்.. இவரின் பாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தது!

ஆஜித் பாடிய பாடல்களில் எனக்கு எல்லாமே பிடித்ததுதான் அவற்றில் சில பாடல்கள் இங்கே!

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்.. ..

ஆரோமலே....நீயே நீயே நெஞ்சில் வாழும்..டெடிகேசன் ரவுன்ட்

9 comments:

ஹாரி பாட்டர் said...
This comment has been removed by the author.
ஹாரி பாட்டர் said...

சேம் பிளட்

Anonymous said...

என்ன இருந்தாலும் ஸ்ரீகாந்த் பையன் மாதிரி இல்ல பாஸ், இவன் வயசு பையன் மாதிரி முக பாவனை கட்றான். அவன் இப்பவும் சின்ன பையன் மாதிரிதான் வெகுளியா இருப்பன். இவனோட BODY LANGUAGE எனக்கு அவ்வளவு பிடிக்கல .

திண்டுக்கல் தனபாலன் said...

பார்த்ததில்லை... மின்சாரம் இருந்தால் தானே... 16 hours power cut...

நன்றி...

அம்பாளடியாள் said...

அருமையான தேர்வு சகோ .மிகவும் ரசிக்க வைத்த பகிர்வு .
அசந்து போனேன் சிறுவனின் பாடும் திறமையைக் கண்டு அருமை !....
அருமை !...அருமையிலும் அருமை !!!!!........மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

ஹாலிவுட்ரசிகன் said...

உண்மை தான் நண்பா ... 10 லட்சம் வோட்டு யாருக்கோ இருக்குன்னு சொன்னாங்களே? அது ஆஜித்துக்கு தான்னு நினைக்கிறேன். :)

Srividhyamohan said...

En choice pragathi dhaan. Enna sonnaalum avarai adichukka aaLu illai.

Anonymous said...

pragathi useless useless uselee

Anonymous said...

ஆஜித் குட்டி எனது பேவரைட் சிங்கர்.. அவனது பாடும் திறன், ஸ்டைல், அழகு - கனடாவில் அவனுக்கு பல பெண்கள் ரசிகையாகி விட்டதை அவதானித்தேன் .. கலக்குறான் .. அவனுக்கு எனது வாக்குகள் என்றுமே.. !!!

Related Posts Plugin for WordPress, Blogger...