கை கால் முறிவுகளை அதிசயமாய் குணப்படுத்தும் நாட்டு வைத்தியர்!


விபத்துகள் மூலமாக மனிதன் எவ்வளவுதான் உடலுக்கு எந்தவித தீங்குகளோ இழப்புகளோ ஏற்படக்கூடாதென்று கவனமாக வாழ்ந்தாலும்! அவன் அறிந்தோ அறியாமலோ விபத்துகள் ஏற்பட்டு உடலுக்கு காயமோ வேறு வகையான தீங்கோ ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. இது சுற்றுப்புறச்சூழல்,செய்யும் தொழில்கள்,மோட்டார் வாகன பயணங்கள், விளையாட்டுக்கள் போன்றவையே இவற்றுக்கான பிரதான காரணங்கள்.

இன்றைய காலத்தை பொறுத்தவரை தினம் தினம் வாகன விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன இவற்றிலே அதிகமாய் பாதிக்கடுவது கை,கால் எலும்பு முறிவு எலும்பு விலகல் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மனிதர்கள் மரங்களிலிருந்து தவறிவிழுதல்,மிருகங்களால் ஏற்படும் தாக்குதல்களாலும் அதிகமதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.. இவ்வாறான எலும்பு முறிவு விடயங்களை ஆங்கில மருத்துவத்தால் அவசரமாக குணப்படுத்திட முடிவதில்லை.! அவர்களிடம் சென்றால் மாதக்கணக்கில் கட்டுப்போட்டு உட்கார வைத்து விடுவார்கள். மற்றும் தனியார் ஆங்கில மருத்துவங்கள் அதிக செலவையும் உண்டுபண்ணக்கூடியவை. கிறாமப்புறங்களில் வாழும் சாதாரண மக்களால் அவற்றை நுகர்வது அவ்வளவு சுலபமானதல்ல! அவர்களுக்கான ஒரே தீர்வு இந்த நாட்டு வைத்திய முறைதான்!
Welding Weda mahathya

"மரதன்கடவள" இலங்கையிலுள்ளவர்களுக்கு இந்த ஊரின் பெயரை சொன்னதுமே ஞாபகத்துக்கு வருவது "மரதன்கடவள யகடயா (இரும்பு மனிதன்)" அதாவது 1950 களில் இந்த ஊரில் வாழ்ந்த ஒருவன் ரயில் தண்டவாள இரும்பைக்கூட வளைக்கும் பலசாலியாம்.. அவன் இலங்கை முழுதும் பிரபலம் அவனே மரதங்கடவளயின் இரும்பு மனிதன் என்ற பெயரால அழைக்கப்படுகிறான்.இதைப்பற்றி பின்னொரு பதிவில் பார்க்கலாம். ஆனால் கடந்த ஒரு பத்து பதினைந்து வருடங்களாக இந்த ஊரின் பெயரைச்சொன்னதும் ஞாபகத்திற்கு வரும் ஒருவர் சகல விதமான எலும்பு முறிவுகளையும் அதிசயமாய் குணப்படுத்தும் வேல்டிங்(welding) வெதமகத்தயா (நாட்டு வைத்தியர்) இந்த மரதன்கடவளதான் எனது பிரதான நகரமும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவரை வேல்டிங் வைத்தியர் என்று சொல்லக்காரணம் உடைந்த உலோகங்களை வேல்டிங் செய்து இனைப்பது போன்று உடைந்த முறிந்த எலும்புகளையும் மிக இலகுவாக இயற்கையில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளைக்கொண்டே குணப்படுத்தி இணைத்து விடுவதுதான. இவர் மரதன்கடவளயிலிருந்து 3 கிமி தொலைவில் உள்ள தம்பளஸ்ஸாகம என்னும் கிராமத்தில் இருக்கிறார்.. இந்த பிராந்திய மக்கள் இவரை தம்பளஸ்ஸாகம வெத மகத்தயா என்றும் அழைப்பர்! இவரின் உண்மை பெயர் எஸ்.எம் முத்துபண்டா, இப்போது 68 வயதை தொட்டுவிட்டார்!

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இவரைத்தேடி நூற்றுக்கணக்கானோர் தினம்தோறும் வந்துகொண்டிருக்கின்றனர். பிரதான வைத்தியசாலை கொண்ட கொழும்பு கண்டி போன்ற நகரங்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகிறார்கள் காரணம் இவரின் அதிசய வைத்திய முறைதான்.. தன்னிடம் வரும் எவரையும் முடியாதென்றோ,குணப்படுத்தாமலோ (அசாதாரனமானவற்றைத்தவிர) தான் அனுப்பியது கிடையாதெங்கிறார் இந்த நாட்டு வைத்தியர்.. ஒரு முறை சிறுவனொருவன் மரத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு முறிந்து விடவே வைத்தியசாலையில் தங்கி 3 மாதம் வைத்தியம் செய்தால்தான் குணப்படுத்த முடியும் என ஆங்கில மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் அந்த சிறுவனை வெறுமனே ஒன்னரை மணி நேரத்தில் எழுந்து நடக்க செய்திருக்கிறார். இன்னொரு முறை யானையால் தாக்கப்பட்டு இரு கால்களும் முற்றிலுமாக நொருங்கிய நிலையில் அழைத்து வரப்பட்ட விவசாயி ஒருவர், மரத்திலிருந்து விழுந்து கால் மோசமாக உடைந்தநிலையில் 5 பிரதான வைத்தியர்களால் குணமாக்க முடியாததை ஓரே நாளில் குணமாக்கியதென்று இவர் ஆபூர்வமாய் குணப்படுத்தியவர்கள் பலர். அப்படியொரு திறமையான நாட்டு வைத்தியர் இவர்.

இவரின் அப்பா,தாத்தா காலத்திலிருந்து தலைமுறையாக இந்த வைத்தியத்தை செய்து வருகிறார்கள். இந்த வைத்தியத்தின் துர்ப்பாக்கிய நிலையே இதுதான்! காரணம் இதை இவர்கள், இவர்களின் வாரிசு தவிர்ந்த ஏனையோருக்கு சொல்லிக்கொடுக்க விரும்புவதில்லை.. இவர் மட்டும்தான் ஆண்பிள்ளை அந்த குடும்பத்தில் மற்ற நான்கு சகோதரிகளுடன்! இவரும் பெண்ணாக பிறந்திருந்தால் இந்த வைத்தியம் அவர் அப்பாவோடு முற்றுப்பெற்றிருக்கும்.. இது வெறுமனே சொல்லிக்கொடுத்தோ படித்தோ கற்றுக்கொள்ளும் வைத்திய முறையும் அல்ல! மாறாக பல வருடங்கள் கூடவேயிருந்து உதவி அனுபவம் மூலமே இவற்றை அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!  இவருக்கு பிறகு இவரது இரண்டு மகன்களும இந்த வைத்திய முறையை பழகி வருவதால் அடுத்த தலைமுறைக்கும் இவை கொண்டு செல்லப்படுவது சந்தோஷமே.

இவர் தவிர இன்னும் பல திறமையான நாட்டு வைத்தியர்கள் இந்த பிரதேசத்தில் இருக்கிறார்கள்.. ஆனாலும் இவர்தான் மிகப்பிரபலம்! இன்றைய காடழிப்பு போன்ற விடயங்களால் இந்த வைத்தியத்திற்கு தேவையான ஆயூர்வேத மூலிகை வகைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களையும் சிலநேரம் மிகதூரம் பயணித்துத்தான் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடிகிறது எனவும் வருத்தத்துடன் கூறுகிறார் இவர்..இவ்வாறான வைத்தியர்களும்,வைத்திய முறைகளும்,மூலிகை வகைகளும் நாம் பேனி பாதுகாகக வேண்டிய எமது பொக்கிஷங்களாகும்.

6 comments:

Unknown said...


எலும்பு முறிவுக்கு நாட்டு வைத்தியமே சிறந்தெனச் சொல்வார்கள்!

சுதா SJ said...

இந்த நாட்டு வைத்தியம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது பாஸ்... ஆனால் இப்படியான விடயங்களுக்கு நாட்டு வைத்தியம் மிக நல்லம் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.....

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு அறிமுகம்! இது போன்ற வைத்தியர்கள் பரம்பரையோடு வைத்தியமும் அழிந்து போவது வேதனையான விசயம்! நன்றி!

ஆத்மா said...

மிகவும் வியப்பான மனிதரை + வைத்தியரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் நண்பா.
இனி நாங்களும் தேவைகள் ஏற்படின் அவரிடம் செல்லாம் போல........

திண்டுக்கல் தனபாலன் said...

நாட்டு வைத்தியம் நல்லது... செய்பவர்கள் தான் குறைந்து விட்டது... (எங்கள் ஊரிலும்)

நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி...
tm2

Rathnavel Natarajan said...

அருமையான, பயனுள்ள பதிவு.
எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இதே மாதிரி அற்புதமான மருத்துவர் திரு பாலகுரு, எனது நண்பர் இருக்கிறார். அவர் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறேன்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...