2012 சூப்பர் 10 பாடல்கள்!


2012 யில் வெளியாகிய தமிழ் திரைப்படங்களில் என்னை மிகக்கவர்ந்த பத்து பாடல்கள்..

 @அஸ்கா லஸ்கா ஏமோ ஏமோ- நண்பன்




@வாய மூடி சும்மா இருடா - முகமூடி


@ஒரு பாதி கதவு நீயடி - தாண்டவம்


@என்னோடு வா வா என்று - நீ.எ.பொ.வசந்தம்


@தேவன் மகளே - நீர்ப்பறவை


@அய்யய்யயோ ஆனந்தமே - கும்கி

@வெண்ணிலவே தரையில் உதித்தாய் - துப்பாக்கி


@சொல்லிட்டாளே அவ காதல - கும்கி



@ஒரு கிளி ஒரு கிளி - லீலை

@பற பற பறவை ஒன்று - நீர்ப்பறவை

வன்முறையை ரசிக்கும் மனசு!

வன்முறைக்கு வன்முறை என்றைக்கும் தீர்வாகாது என்பது பலரின் வாதம் அது உண்மையும் கூட! ஆனாலும் சில நேரங்களில் வன்முறையை ஆதரிக்கவும் அதை ரசிக்கவும் செய்கிறது நம் மனது.

பலம் குறைந்தவனுக்கு எதிராய பலமுள்ளவனின் வன்முறை, தனியே நிர்க்கதியாய் நிராயுதபானியாய் நிற்பவனுக்கெதிராய் ஆயுதம் தரித்த கூட்டத்தின் வன்முறை, பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை என பல வன்முறைகளை கூறலாம். இவற்றை மனசு கடுமையாக வெறுக்கிறது இதேநேரம் இவ்வன்முறையால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் மீண்டெழுந்து அதே வன்முறையை கையிலெடுத்து பழிவாங்க தொடங்குகிறார்கலெனின் அது எவ்வளவு குரூரமாக இருந்த போதிலும் அவற்றை மனசு ரசிக்கிறது.! இரண்டும் வன்முறைதான் அதை எதிர்கொள்ளும் மனநிலைதான் முரன்பட்டுள்ளது.

ஒரு பெண்னின் விருப்பமில்லமல் அவளை புணர்வதென்பது அவளை கொலை செய்வதற்கு சமானமாகும். உயிருடன் வைத்து அவள் உணர்வுகளை எரிக்கும் நிகழ்வாகும். இவ்வாறான கொடூரத்தை செய்த அந்த மிருகத்தை அவளோ அவள் சம்பந்தபட்டவர்களோ பழிவாங்கும் போது அதாவது கொல்லும் போதும் அவற்றையும் மனசு ரசிக்கிறது. இப்படித்தான் 

I Spit on Your Grave (2010 The Last House on the Left (2009)

என்ற இரு திரைப்படங்களிலும் அநீதி செய்தவர்கள் கொடூரமாக கொல்லப்படும் போது அங்கே எந்தவித வெறுப்போ அவர்களுக்கு ஆதரவான மனநிலையோ தோன்றவில்லை மாறாக அவர்கள் கொல்லப்படவே வேண்டும் என்ற வெறி பார்வையாளனாகிய எனக்கு தோன்றியதுடன் அந்த வன்முறைகளை ரசிக்கவும் செய்தது மனது. இப்படங்களை பார்த்த ஏனையவர்களுக்கும் இதே மனநிலை தோன்றியிருக்கலாம்.


அதேநேரம் எல்லா குற்றங்களுக்கும் பழிவாங்கித்தான் ஆகவேண்டும்,தூக்கில் போடத்தான் வேண்டும்,மரண தண்டனை கொடுக்கத்தான் வேண்டுமென்பதில்லை.! இதைவிட பெரிய தண்டனையொன்றிருக்கிறது அதுதான் "மன்னிப்பு"  அதன்பிறகு அந்த சமூகத்தில் நடமாடும் போது அந்த குற்றயுணர்ச்சியே அவனை கொல்லும்! சிறையில் அடைப்பதால் அந்த குற்றயுணர்ச்சி வந்துவிடப்போவதில்லை..! மாறாக பகையுணர்வே அதிகரிக்கும்.

மேலே நான் குறிப்பிட்ட இரு திரைப்படங்களும் ஓரே கதையமைப்பைக் கொண்டது. Spit on Your Grave யில்  ஐந்து பேர் கொண்ட கும்பலால் 
பெண்னொருத்தி வன்புணரப்பட்டு கொலை செய்ய முயற்சிக்கும் போது 
அவர்களிடமிருந்து தப்பித்துச்சென்று மீள அந்தக்கும்பலில் உள்ள எல்லாரையும் 
எவ்வாறு மிக கொடூரமான முறையில் பழிவாங்குகிறாள் என்பதாகும்.

 The Last House on the Left யில் இளம் பெண்னொருத்தியை மூன்று பேர் 

கொண்ட கும்பல்(ஒரு பெண் உட்பட) மிக குரூரமாக வன்புணர்ந்து பின் அவள் தப்பிக்க முயற்சிக்கும் போது சுப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சிக்கிறார்கள். தோள் பட்டையில் அடிப்பட்ட துப்பாக்கி குண்டோடு குற்றுயிரில் வீடு வந்து சேரும் அதே மழையிரவில், எதேர்ச்சையாக அக்கும்பலும் அவள் வீடென்று அறியாமல் அவள் அப்பா அம்மாவிடம் அன்றிரவு தங்குவதற்கு உதவி கேட்டு அவர்கள் கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்கள். தன் மகளின் இந்த நிலைக்கு காரணம் தாங்கள் உதவி செய்து விருந்தோம்பல் செய்து தங்க வைத்திருப்பவர்கள்தான் என அறிந்த அவள் அப்பா,அம்மா இருவரும் அம்மூவரை கொன்று பழிவாங்குவதே கதை.

இரண்டு திரைப்படமும் வன்முறை நிறைந்தது. அந்த வன்முறையை பிரயோகித்தவர்கள் அதற்குமுன் எந்த ஒரு உயிரை கொல்ல வேண்டுமென்றோ இப்படியொரு வன்முறையை பிரயோகிப்போம் என்றோ ஒரு போதும் நினைத்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்களை வன்முறையாளர்களாக மாற்றிவிட்டது.

இந்த இரண்டு படங்களையும் நோக்கும் பார்வையாளர்களும் வன்முறைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அந்த இடத்தில் அந்தக்கும்பலுக்கு ஆதரவாகவோ அல்லது பழிவாங்க வேண்டாம் என நினைக்கவோ போவதில்லை! மாறாக அவர்களுக்கெதிரான வன்முறையில் நாமும் பங்குகொள்கிறோம் நம் ரசனை மூலமாக..!



குளமும் குளம் சார்ந்ததும் காடும் காடு சார்ந்ததும்!

நம்ம ஊரைப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவில் கொஞ்சம் சொல்லியிருந்தாலும் எங்க ஊரு குளத்தைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல ஆசை! புவியியல் ரீதியாக நோக்குமிடத்து இது ஒரு அழகான ஊர். ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருப்பதால் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் என்ற பேச்ச்சுக்கே இடமில்லை! எங்கள் ஊரைச்சுற்றிப்பார்த்தால் எல்லாப்பக்கமும் காடுகளும் காடு சார்ந்த இடங்களாகவே கானப்படும். இதற்காக இந்த ஊரை காட்டூர் என சொல்வதுண்டு இயற்கையினதும் காட்டினதும் அருமை புரியாத சில நகரத்து ஜந்துக்கள். இந்த காட்டையே காரணம் காட்டி எங்க ஊரு மாப்பிள்ளைகளை மணமுடிக்க மறுத்த நகரத்து பெண்களும் உண்டு. கழுதைக்கு எங்கே புரியப்போகிறது இயற்கை வாசனை!
குளத்தின் ஒரு பகுதி.

எங்கள் ஊர் தொடக்கமே ஒரு குளத்தோடுதான் அந்தக்குளம் எங்கள் ஊருக்கு ச்சொந்தமில்லை பின் ஊரின் முடிவும் ஒரு குளத்தோடுதான் அந்த குளமும் எங்க ஊருக்குச்சொந்தமில்லை. ஊரின் நடுவில் உள்ள ஒரு குளமே எங்கள் ஊருக்குச்சொந்தம். சிறிய குளம்தான். ஊரின் மற்றைய எல்லைகளாக ஒருபக்கம் பெரிய மலை ஒன்றும் மறுபக்கம் இன்னுமொரு சிறிய மலையும் காடுகளும் சேனைப்பயிர்செய்கை செய்வதற்கான விவசாய நிலங்களாகும். குளத்துக்குப்பின்னால் வயல் நிலங்கள் உள்ளது இவை இந்தக்குளத்தின் நீரையும் மழையையும் நம்பியே வேளான்மை விவசாயம் செய்யப்படுகிறது. பருவபெயர்ச்சி மழை சரியாக பெய்தால் அந்தக்காலத்திலும் அந்த மழை நீர் கோடைகாலம் வரை குளத்தில் தேங்கியிருந்தால் கோடைகாலத்திலும் என வருடத்திற்கு இரண்டு போகங்கள் வேளான்மை செய்யப்படுகிறது.
வேளாண்மை அறுவடை நேரம்

இந்தக்குளத்தில் குளித்து,நீராடி,விளையாடி மகிழ்ந்த சிறுவர் காலம் மீண்டும் வராதா என மனம் ஏங்கித்தவிக்கிறது.. குளத்தில் குளிப்பதென்பதே உடலுக்கும் மனதுக்கும் ஓர் இனம்புரியாத புத்துணர்வை தரும் விடயம். பகல் முவயலில் வேலை செய்துவிட்டு குளத்தில் இறங்கி குளித்தாலே உடலிலுள்ள அசுத்தங்கள் மட்டுமில்லாமல் களைப்பும் நீங்கிவிடும். பின்பு சுகமான உறக்கத்திற்கும் இது வழி வகுக்கும்.

இஹல புளியன் குளம் (எங்க ஊர்) ஜும்மா பள்ளிவாசல்.

சின்ன வயதில் பாடசாலை விட்டு வந்ததும் குரான் மத்ரஸா வகுப்புக்குச்செல்ல வேண்டும். அந்த வகுப்பை பல முறை வீட்டுக்கு தெரியாமல் கட்டடித்துவிட்டு குளத்துக்கு குளிக்கச்சென்று ஆட்டம்போட்டதெல்லாம் இனிமையான நினைவுகள். மைதாணத்தில் விளையாடியதைவிட குளத்தில் விளையாடியதுதான் அதிகம். குளத்தின் நடுவில் ஒரு வட்ட வடிவிலான கல் இருக்கிறது.. அக்கல் வரை நீந்திச்சென்று கல்லின் மேல் ஏறி குதிப்பதுதான் அதில் விஷேடம்.. "எரும மாடுகள் குளத்துல பாய்ந்த மாதிரி குளத்த கலக்குறானுகள்" என ஊர் பெரிசுகளின் திட்டு வாங்காமல் திரும்பியதே இல்லை.. இந்த ஆட்டமெல்லாம் கோடை காலத்தில் மாத்திரம்தான் காரணம் அன்நேரம்தான் குளத்தின் நீர் மட்டம் குறைந்து யாரும் மூழ்கிடும் அபாயம் ஏற்படாது. மாரிகாலத்தில் குளம் நிரம்பிவிட்டால் ஓரமாநின்னு குளிச்சிட்டு வீடு திரும்பிட வேண்டியதுதான்.

குளத்தின் ஒரு பகுதியும் பக்கத்திலுள்ள மலையின் ஒரு பகுதியும்

இப்பவெல்லாம் காலம் மாறிப்போச்சு! ஊருக்கு குழாய்நீர்த்திட்டம் வந்துட்டதால யாரும் குளத்துக்கு போய் குளிப்பதா தெரியல்ல, குளமே காடாப்போய்க்கிடக்கு.எல்லாரும் குளியறையிலதான் குளிக்கிறாங்களாம்.. இதுல கொஞ்சபேர் வயல்ல வேலை செய்திட்டு குளத்தை தாண்டி வந்து வீட்டு குளியறையில் குளிப்பதுதான் வேடிக்கை. ஊருக்குப்போனதும் முதல் வேலையா குளத்தில் பாய்ந்து குளிக்க வேண்டும் போலிருக்கு!

வீட்டு முன்பக்க சாலை. இடது புறத்தில் நம்ம வீடு

 இன்னும் கொஞ்சம் எங்க ஊரைப்பற்றி http://puliyankulam.blogspot.com/

இயற்கையும் மனிதர்களும்!

ஆயிரம் வார்த்தைகளால் உணர்த்த முடியாததை ஒரு புகைப்படத்தால் உணர்த்த முடியும் என்ற உண்மைக்கேற்ப இனி இந்த புகைப்படங்கள் பேசும்.
Indonesia 
Kerala









Srilanka  - Maradan Kadawala

Srilanka  - Maradan Kadawala

Thailand




Srilanka - Kandy

Kerala

All Photos From Internet,, Thanks Up loaders & Photographers.. 

மரதன் கடவள இரும்பு மனிதன்!

மரதன்கடவள என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் கண்டி-யாழ்ப்பாணம் A9 சாலையில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்த நகரின் பெயரைச்சொன்னவுடன் இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் பெயரும் நியாபகப்படுத்தபடுகிறதென்றால் அவர்தான் "மரதன்கடவள யக்கடயா"

ஜனாதிபதியுடன் யக்கடயா

இந்த மனிதன் பாக்தாத் திருடன், ரொபின் ஹூட் போன்ற புகழ் பெற்ற குற்றவாளியாக இருந்தாலும், தான் திருடிய பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் நற்பண்பாளராகவும் திகழ்ந்ததுதான் இவரை எல்லோர் மனதிலும் நிலைத்திருக்க செய்தது.

யக்கடயா என்பது அவரது வீர தீர செயல்களைப் பார்த்து கிராமத்து மக்கள் வைத்த காரணப் பெயராகும். யக்கடயா என்ற பதத்திற்கு இரும்பு மனிதன் என்று பொருள்படும். காரணம் எந்தவொரு இரும்பு கம்பிகளையும் உடைத்தெறியும் ஆற்ற்ல் பெற்றிருந்தமையாகும். யக்கடயாவின் உண்மையான பெயர் சாஞ்சி ஆராச்சிகே ஜினதாஸ என்பதாகும்.

யக்கடயாவின் பிறப்பிடம் கண்டி பேராதெனிய வில் உள்ள குடா இரியாகம வளவ்வை யாகும். இவருக்கு ஒரே ஒரு சகோதரி மாத்திரமே இருந்திருக்கிறாள். சிறு வயதில் யக்கடயா கல்வி கற்ற பாடசாலை ஆசிரியர் ஒருவர் மது போதையில் வந்ததனால் ஆத்திரமடைந்த யக்கடயா ஆசிரியரை தாக்கிவிட்டு பாடசாலையை விட்டு ஓடிவிட்டார். அத்துடன் யக்கடயாவின் பாடசாலைக் கல்வி முடிவுபெற்றது.

அதையடுத்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, படிப்படியாக ஒரு கொள்ளைக்காரனாகவும் ஆகியிருக்கிறார். ஒரு கொள்ளைச்சம்பவத்தின் போது கெக்கிராவ தபால் நிலையத்தின் தபால் அதிபரை சுட்டுக் கொன்ற பின்னர், யக்கடயா பற்றி நாடெங்கிலும் பரவலாக பேசப்பட்டது.
இதன் பின்னர் யக்கடயாவை பொலிஸார் நாடெங்கிலும் வலை விரித்து தேட ஆரம்பித்தனர். அதனால் பொலிஸாரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக யக்கடயா வடபகுதிக்கு ரயிலில் சென்று, பருத்தித்துறையில் இருந்து 20 மைல் தூரத்தை நீந்தியே கடந்து இந்திய கரையை அடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

யக்கடயாவிற்கு நன்றாக தமிழ் பேச முடியும். அதனால் யக்கடயா இந்தியாவில்(தமிழ்நாட்டில்) எவ்வித பிரச்சினையுமின்றி பல வருடங்கள் நிம்மதியாக இருந்தார். பல நாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு அமைய 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட யக்கடயா, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவருக்கு எதிரான கொலை குற்றத்திற்காக மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
16 ஆண்டுகள் சிறையில் இருந்த யகடயா பின்னர் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபின்னர் எந்தவொரு தகவலும் பலவருடங்களாக எவருக்குமே தெரியவில்லை. யக்கடயா ஒரு கொலை காரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்தாலும் அவர் அப்பாவி மக்களை துன்புறுத்தும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை. செல்வந்தரிடம் அடித்து பறிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்.

யக்கடயா சைவ உணவையே உண்டு வந்ததுடன், தனது வாழ்க்கையில் என்றுமே சிகரட் புகைத்தல், மது அருந்துதல் பழக்கத்திற்கு அடிமையானதே இல்லை. மரதன்கடவள கிராமப்பகுதியிலே அதிகமாக சுற்றித்திருந்ததால்தான் அவருக்கு "மரதன்கடவள யக்கடயா" என்ற புனைப் பெயரும் கிடைக்கப்பெற்றது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் யக்கடயா தேசிய வெள்ளை உடை அணிந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். பின்னர் விடைபெற்றுச் சென்றார். அதற்கு பின்னர் அவரைப்பற்றிய எவ்வித தகவலும் வெளிவரவில்லை.யக்கடயாவின் தேக நிலை மோசமடைந் ததை அடுத்து அவர் முல்லேரியா தேசிய மனநோய் ஆஸ்பத்திரியில் சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இவர் ஒக்டோபர் 9 2011 அன்று111 வயதில் மரணமானார்.

நல்ல மனிதர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கொலையாளிகளாகவும், கொள்ளையர்களாகவும் மாறுகிறார்கள் என்பதற்கு யக்கடயாவின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாகும்.

நன்றி: தினகரன்

உடைத்தெறியப்பட்ட வீடும், கனவுகளும்!,

நாம் ஆசை ஆசையாய் கட்டி ஆண்டாண்டு காலமாய் வாழும் வீட்டிலிருந்து திடிரென்று வேறிடம் நோக்கி இடம்பெயரும் சம்பவம் ஏற்பாட்டாலோ, அல்லது வேறு காரணங்களால் அவ்வீட்டை உடைக்கும்! சூழல் ஏற்பட்டாலோ அது பெரும் வேதனை தரும் விடயமாகவும் நம் கனவுகளையே நம் கண் முன்னால் உடைத்தெறியப்படும் கனமாகவும் மாறிப்போய் விடும். இன்றைய வாழ்க்கையில் தனக்கென்றொரு சொந்தமான வீடொன்றை அமைத்துக்கொள்வதென்பது பலரின் நீண்டநாள் ஆசை மற்றும் கனவு.

புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளுக்காக அல்லது வேறு அரசாங்க திட்டங்களுக்காக அரசாங்கத்தின் கட்டாயமான அறிவித்தலால விரும்பியோ விரும்பாமலோ நாம் வசிக்கும் வீட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்படுவதுண்டு.! இது சில பல நேரங்களில் சரியான மாற்றீடோ நட்டஈடோ கொடுக்கப்படாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட குடியிருப்பாளர்களின் அதிருப்தியினால் வன்முறையாக மாறி பலவந்தமாக வீட்டிலுள்ள பொருட்களோடு சேர்ந்து புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்படும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு.
 Luo Baogen

இவ்வாறுதான் சீனாவில் Zhejiang மாகாணத்தில் Wenling என்ற இடத்தில் நெடுஞ்சாலை அமைப்பு பணிக்காக பல கட்டடங்கள் அகற்றப்பட்டிருக்கிறது இதிலே Luo Baogen என்பவரின் நாங்கு அடுக்கு மாடிகளைக்கொண்ட அழகான வீடும் உள்ளடக்கம். ஆனால் இவரும் இவரின் மனைவியும் இந்த வீட்டை உடைக்க அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.. இதற்கிடையில் சாலைப்பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று முடியும் தருவாயிலுக்கும் வந்துவிட்டது இவரின் வீடு உள்ள பகுதி மற்றும் அப்படியே உடைக்கப்படாமல் இருந்தது. இவர் தொடர்ந்தும் வீடு இடிப்பிற்கு எதிராய் இருந்ததால், இதன் பிறகு அரசாங்க நிர்வாகத்தினர் ஒருவாராக இவரோடு கதைத்து 260,000 yuan ($41,000).என்ற தொகை நட்ட ஈடாக தருவதாக வாக்குறுதி அளித்து  வீட்டை தரைமட்டமாக்க அனுமதி வாங்கி இடித்தும்விட்டனர்.. ஆனால் அங்கேயே சந்தை நிலவரப்படி இந்த வீட்டிற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட தொகை மிகச்சிறியது என்றும். அரசாங்கம் வற்புறுத்தியதன் பேரிலேயே விருப்பமின்றி அனுமதி வழங்கியதாக பல குற்றச்சாற்றுகளும் விமர்சனங்களும் சீன அரசின் மீது எழாமல் இல்லை! இதைப்பற்றி இணையத்தளங்களும் சூடாக விமர்சித்து வருகிறார்கள்.

புகைப்படங்களில் கான்பது அந்த வீடும் வீட்டின் உரிமையாளரும்தான்..
Luo Baogen showing a permit to the collectively-owned land as he stands before his half-demolished apartment building in the middle of a newly-built highway in Wenling. 










புகைப்படங்களும் தகவலும் பெறப்பட்டது
 http://www.theatlantic.com/infocus/2012/12/no-more-house-in-the-middle-of-the-street/100416/

சார்... லட்டு! மலயாள குறும்படம்!


சார்... லட்டு! மலயாள நகைச்சுவை குறும்படம்! மலயாளம் தெரிந்தவர்கள் பார்த்து புன்னகைக்கலாம்.. இயக்கும் திரைப்பட இயக்குனர் சித்திக்.


UAE 41

41 வது தேசிய தினத்தை கொண்டாடும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) வாழ்த்துக்கள்!
CELEBRATE! 41 Years Together...

National Day Celebrations.!












Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...