December 09, 2012

குளமும் குளம் சார்ந்ததும் காடும் காடு சார்ந்ததும்!

நம்ம ஊரைப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவில் கொஞ்சம் சொல்லியிருந்தாலும் எங்க ஊரு குளத்தைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல ஆசை! புவியியல் ரீதியாக நோக்குமிடத்து இது ஒரு அழகான ஊர். ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருப்பதால் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் என்ற பேச்ச்சுக்கே இடமில்லை! எங்கள் ஊரைச்சுற்றிப்பார்த்தால் எல்லாப்பக்கமும் காடுகளும் காடு சார்ந்த இடங்களாகவே கானப்படும். இதற்காக இந்த ஊரை காட்டூர் என சொல்வதுண்டு இயற்கையினதும் காட்டினதும் அருமை புரியாத சில நகரத்து ஜந்துக்கள். இந்த காட்டையே காரணம் காட்டி எங்க ஊரு மாப்பிள்ளைகளை மணமுடிக்க மறுத்த நகரத்து பெண்களும் உண்டு. கழுதைக்கு எங்கே புரியப்போகிறது இயற்கை வாசனை!
குளத்தின் ஒரு பகுதி.

எங்கள் ஊர் தொடக்கமே ஒரு குளத்தோடுதான் அந்தக்குளம் எங்கள் ஊருக்கு ச்சொந்தமில்லை பின் ஊரின் முடிவும் ஒரு குளத்தோடுதான் அந்த குளமும் எங்க ஊருக்குச்சொந்தமில்லை. ஊரின் நடுவில் உள்ள ஒரு குளமே எங்கள் ஊருக்குச்சொந்தம். சிறிய குளம்தான். ஊரின் மற்றைய எல்லைகளாக ஒருபக்கம் பெரிய மலை ஒன்றும் மறுபக்கம் இன்னுமொரு சிறிய மலையும் காடுகளும் சேனைப்பயிர்செய்கை செய்வதற்கான விவசாய நிலங்களாகும். குளத்துக்குப்பின்னால் வயல் நிலங்கள் உள்ளது இவை இந்தக்குளத்தின் நீரையும் மழையையும் நம்பியே வேளான்மை விவசாயம் செய்யப்படுகிறது. பருவபெயர்ச்சி மழை சரியாக பெய்தால் அந்தக்காலத்திலும் அந்த மழை நீர் கோடைகாலம் வரை குளத்தில் தேங்கியிருந்தால் கோடைகாலத்திலும் என வருடத்திற்கு இரண்டு போகங்கள் வேளான்மை செய்யப்படுகிறது.
வேளாண்மை அறுவடை நேரம்

இந்தக்குளத்தில் குளித்து,நீராடி,விளையாடி மகிழ்ந்த சிறுவர் காலம் மீண்டும் வராதா என மனம் ஏங்கித்தவிக்கிறது.. குளத்தில் குளிப்பதென்பதே உடலுக்கும் மனதுக்கும் ஓர் இனம்புரியாத புத்துணர்வை தரும் விடயம். பகல் முவயலில் வேலை செய்துவிட்டு குளத்தில் இறங்கி குளித்தாலே உடலிலுள்ள அசுத்தங்கள் மட்டுமில்லாமல் களைப்பும் நீங்கிவிடும். பின்பு சுகமான உறக்கத்திற்கும் இது வழி வகுக்கும்.

இஹல புளியன் குளம் (எங்க ஊர்) ஜும்மா பள்ளிவாசல்.

சின்ன வயதில் பாடசாலை விட்டு வந்ததும் குரான் மத்ரஸா வகுப்புக்குச்செல்ல வேண்டும். அந்த வகுப்பை பல முறை வீட்டுக்கு தெரியாமல் கட்டடித்துவிட்டு குளத்துக்கு குளிக்கச்சென்று ஆட்டம்போட்டதெல்லாம் இனிமையான நினைவுகள். மைதாணத்தில் விளையாடியதைவிட குளத்தில் விளையாடியதுதான் அதிகம். குளத்தின் நடுவில் ஒரு வட்ட வடிவிலான கல் இருக்கிறது.. அக்கல் வரை நீந்திச்சென்று கல்லின் மேல் ஏறி குதிப்பதுதான் அதில் விஷேடம்.. "எரும மாடுகள் குளத்துல பாய்ந்த மாதிரி குளத்த கலக்குறானுகள்" என ஊர் பெரிசுகளின் திட்டு வாங்காமல் திரும்பியதே இல்லை.. இந்த ஆட்டமெல்லாம் கோடை காலத்தில் மாத்திரம்தான் காரணம் அன்நேரம்தான் குளத்தின் நீர் மட்டம் குறைந்து யாரும் மூழ்கிடும் அபாயம் ஏற்படாது. மாரிகாலத்தில் குளம் நிரம்பிவிட்டால் ஓரமாநின்னு குளிச்சிட்டு வீடு திரும்பிட வேண்டியதுதான்.

குளத்தின் ஒரு பகுதியும் பக்கத்திலுள்ள மலையின் ஒரு பகுதியும்

இப்பவெல்லாம் காலம் மாறிப்போச்சு! ஊருக்கு குழாய்நீர்த்திட்டம் வந்துட்டதால யாரும் குளத்துக்கு போய் குளிப்பதா தெரியல்ல, குளமே காடாப்போய்க்கிடக்கு.எல்லாரும் குளியறையிலதான் குளிக்கிறாங்களாம்.. இதுல கொஞ்சபேர் வயல்ல வேலை செய்திட்டு குளத்தை தாண்டி வந்து வீட்டு குளியறையில் குளிப்பதுதான் வேடிக்கை. ஊருக்குப்போனதும் முதல் வேலையா குளத்தில் பாய்ந்து குளிக்க வேண்டும் போலிருக்கு!

வீட்டு முன்பக்க சாலை. இடது புறத்தில் நம்ம வீடு

 இன்னும் கொஞ்சம் எங்க ஊரைப்பற்றி http://puliyankulam.blogspot.com/

8 comments:

Anonymous said...

மிகவும் அழகான ஊர், கிராமத்து வாழ்க்கையை தொலைத்த துர்பாக்கியர்களில் நானும் ஒருத்தன். இலங்கையின் வடக்கு கிழக்கு குளம் சார்ந்தவை என படித்தது உண்டு... இந்த ஊர் எங்குள்ளது? எந்த மாவட்டம் ? வடக்கில் மலைகள் இல்லை என்றே கேள்விப்பட்டுள்ளேன். புளியங்குளம் தமிழ் பெயர், இஹல என்பது தமிழில்லையே, அதன் அர்த்தம். இவ்வூரின் வரலாறு போன்றவையை பகிரலாமே. எவ்வளவு காலமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நன்றிகள்

ஆத்மா said...

ஊரும் அழகு படங்களும் அழகு.....

Riyas said...

சகோ இக்பால் செல்வன்.

முன்னொரு பதிவில் ஊரின் அமைவிடத்தைப்பற்றி சொன்னதால் இதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

இந்த வடமத்திய மாகணத்தில் அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இஹல என்பது சிங்களச்சொல்தான் அதாவது தமிழில் "மேல்" என்ற அர்த்தம் தரும் காரணம் இதற்கு பக்கத்திலுள்ள ஊரின் பெயரும் புளியங்குளம்தான் பிரித்தறிவதற்காக இதை இஹல(மேல்) என்றும் அதை பகல(கீழ்) என்றும் ஊரின் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டார்கள்.

இந்த ஊரின் வரலாறு எப்பொழுதிலிருந்து தொடங்கியது என்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லை.. இந்த ஊர் பழமையானதுதான்.!இரண்டு நூற்றாண்ட்டு கால வரலாவது இருக்கும்..

தனிமரம் said...

கிராமத்தின் நினைவுகளை அழகாய் சுமந்துவந்து நெஞ்சில் மரதங்கடவளைப்பக்கம் போய் வந்த என் ஞாபகத்தையும் நிழல் ஆடவிட்டீர்கள் ரியாஸ்!

Anonymous said...

[url=http://myownscreen.com/blog/827/gain-the-confidence-that-will-help-you-succeed-with-these-betfair-tips/]Stellar[/url]. Wow, the Kardashians... What can I say? Weren't cardassians a race of aliens in Star Trek? Nevermind...Good luck with your promotion![url=http://agrmertola.drealentejo.pt/user/view.php?id=2235&course=1].[/url]

Anonymous said...

[url=http://cozafilm.home.pl/elgg/pg/profile/BobqveexxW]Stellar[/url]. WoW Mobiles is awesome! I get free mobile service with t-mobile because I refered 3 people to wow. You can too![url=http://c88art.info/userinfo.php?uid=103].[/url]

Anonymous said...


That allows you to specific location could be wagers therefore you might have finest likelihood of excellent, you have got to know there's every chance. You've got to be great at examining the likelyhood to be sure you can easily estimate the likelyhood not having making almost any complications around perception. Velocity within just checking the likelihood is likewise vital that you just be sure you have the ability to community types trades ahead of the solid possibilities alter. A very good reason which poker scope stick with mostly every precise representation is that often any sports courses ought to found much too many details on the net really minimal availablility of location additionally they imagine any members to find out what sort of possibilities mentioned.

Visit [url=http://www.bonus-betting-offers.com]betting offers[/url]

By Gary Lester: niceguy44@talktalk.net

Anonymous said...

Sports casino during the last was first of using play through the outcomes of horses competition. In this connection, following this solution will unquestionably expect the sportsman that help the exact acquire or one that could arrive primary. Casino moose having is truly a well-known action for many all over the world.

Visit [url=http://www.bonus-betting-offers.com]betting offers[/url]

By Gary Lester: niceguy44@talktalk.net

Related Posts Plugin for WordPress, Blogger...