January 31, 2013

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!கிரிஸ்டோபர் கொலம்பஸ் இங்கே வந்து தற்செயலாக நம்மூர் பெண்னை
மணந்திருந்தால். அவர் நாடு கான் பயணம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் என ஒரு மொக்கை கற்பனை.

வாங்க கொலம்பஸ் ஐயாவின் நம்மூர் மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட..

தொடங்கிடுச்சி விசாரனை!
 

# எங்க போக கிளம்பிட்டிங்க?

# யாருக்கூட போக போறீங்க?

# எதுக்கு போறீங்க?

# எப்படி போறீங்க?

# எத தேடிக்கிட்டு போக போறீங்க?

# அதுக்கு நீங்களேதான் போகனுமா வேற யாரும் இல்லயா.?

# உங்ககூட பொண்னுங்க யாராவது வாறாங்களா.?

# நீங்க போனா நான் தனியே இங்க என்ன பன்றது?

# நானும் உங்ககூட வந்திடவா.?

# திரும்பி எப்ப வருவீங்க.?

# இரவுச்சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்து போகேலாதா.?

# திரும்பி வரும் போது எனக்கு என்ன கொண்டு வருவீங்க.?

# எனக்கெண்டா விளங்கள்ள என்னத்த கண்டுபுடிச்சி என்னத்த் கிழிக்க போறீங்கண்டு..
# எங்கிட்டயிருந்து விலகியிருக்கிறதுக்கு நீங்க போடுற ப்லேன்தானே இது.?

# நான் என்ன பாவம் பண்ணிநேன் உங்களுக்கு?

# இன்னும் எத்தன நாடு பாக்கியிருக்கு கண்டுபிடிக்க.?

# ஒரு கிழமையில திரும்பி வரல்லன்னா நான் எங்க அப்பா வீட்டிக்கு போயிடுவேன்.!

# எங்க போனாலும் எனக்கு செய்தி அனுப்புவிங்களா.?

# இதேமாதிரிதான் முன்னமும் ஒரு தடவ போய் மாசத்துக்கு பிறகுதான் வீடு திரும்பினீங்க..

# வீட்டோட இருக்குற மாதிரி ஒரு வேலய தேடிக்கேலாதா?

# நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா எனணெய் தேச்சி குளிக்க முடியுமா?

# போறத்தோட அப்பிடியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க.

அப்பாடா... இவ்வளவுத்துக்கும் பதில் சொல்லி கிளம்புறதுக்குள்ள... பத்து நாடு கண்டுபுடிச்சிடலாம்... புதிய நாடும் வானாம் மண்னாங்கட்டியும் வானாம்ன்னு
வீட்டோடயே இருந்திடலாம்னு நினைத்திருப்பாரு கொலம்பஸ் சார்..
January 20, 2013

கவிதை இரவு தேநீர் நீ..சுற்றெரிக்கிறது
உன் மௌனங்கள்
நடுப்பகல் வேளை சூரியன் போல
வீசி விட்டுப்போ
சில புன்னகைகளாவது
நிழலாக
நிம்மதி தரட்டும்!

கவிதையின் அழகு
இரவின் இருள்
தேநீரீன் சுவை
எல்லாமே பிடிக்கிறது
உன் ஞாபகங்கள்
சேர்ந்தே
இருப்பதால்!

கோபம்
வெட்கம்
சினுங்கல்
வார்த்தை குழந்தைகள்
எத்தனை அழகானவை
நீ
பிரசவிக்கும் போது மட்டும்!முகம் பார்க்கும்
கண்ணாடிகளுக்கு
மனிதர்களைப்போல்
பொய் சொல்ல
தெரிவதுமில்லை
மற்றவர்களின்
மனக்கஷ்டங்கள்
புரிவதுமில்லை..
காலையில்
கண்விழித்ததும்
கண்ணாடி முன் நின்றால்
உன்னழகு இவ்வளவுதான்
நீ இப்படித்தான் என
முகத்தில் அறைந்ததை போல்
உள்ளதை
உளளபடியே காட்டி
அதிர்ச்சியளிக்கிறது
வேதனையளிக்கிறது.. 
கொஞ்சமாவது
பொய்யாய் நடித்து
நம்பவைக்கும்
குறைந்த பட்ச
நியாயம் கூட
அதனிடமில்லை...
இனிமேலாவது
கண்ணாடிகளுக்கு
கற்றுக்கொடுக்க வேண்டும்
மனிதன்
மனசு நோகாமல்
நடந்து கொள்வதெப்படி 
என்பதை!!!


தேநீரை
உறிஞ்சும் வேளையில்
உன் ஞாபகங்களும்
உதடுகளில்
உரசி
உயிரைச்சுடுகிறது!!!


உன்னுலகத்தில்
நான் வாழ்ந்ததில்லை
என்னுலகத்தில்
நீ வாழ்ந்ததில்லை
உன்னுலகத்தை
நீ துறந்துவிடு
என்னுலகத்தை
நான் துறந்துவிடுகிறேன்
புதிதாய் பிறப்போம்
புதிய உலகத்தில்

இருவரும் ஒன்றாய்!!!


January 18, 2013

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியுள்ள சவால்களுக்கான காரணங்கள் - எம்.எச்எம் ஹஸன்


எம்.எச்எம் ஹஸன் அவர்கள் ஹெம்மாதகமயைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான இவர் சிங்கள மொழி மூலம் தனது முதுகலைமாணிப் பட்டத்தை நிறைவு செய்தார். ஆசிரியர் தொழிலில் 15 வருடங்கள்  சேவையாற்றிய இவர் மொழிபெயர்ப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுமார் 200 புத்தகம் அளவில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இன்று முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியுள்ள சவால்களுக்கான காரணங்களை விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு மீள்பார்வை சஞ்சிகைக்காக அவர் வழங்கிய பதில்.
இன முறுகல்கள் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. சிங்கள மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்த அநாகரிக தர்மபால, 1950 களில் எழுதிய புத்தகத்தில், முஸ்லிம்களைப் பற்றி பல விடயங்களை எழுதியிருந்தார். அவரது எழுத்துக்கள் சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டுபவனவாக அமைந்திருக் கின்றன.
1915 கலவரம் பிரித்தானியர் திட்டமிட்டுச் செய்த ஒரு நிகழ்வாகத்தான் காணப்படுகிறது. இவற்றைத் தவிர இன்னும் பல சிறிய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தனிப்பட்ட விடயங்களாகவே இருக்கின்றன. ஆனால், சமகாலத்தில் ஏற்படுகின்ற அதேபோன்ற நிகழ்வுகள் சமூக ஊடகங்கள் ஊடாக மிக வேகமாக இளைஞர்களைச் சென்றடைகின்றது. எனவே, அவர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய ஆபத்தும் உருவாகியிருக்கின்றது.
எங்களைப் பற்றி தெளிவின்மையும் சந்தேகமும் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த சந்தேகங்கள் ஏற்பட்டமைக்கு முஸ்லிம் சமூகமும் காரணமாக இருந்திருக்கின்றது. ஒரு சிறுபான்மை சமூகத்தின் கலாசாரம், பண்பாடு குறித்து பெரும்பான்மை இனத்திற்கு தெளிவுபடுத்துகின்ற கடமை அரசுக்கும் இருக்கிறது.
முஸ்லிம்கள் ஒரு மூடிய சமூக மாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். போர்த்துக்கேயர், பிரித்தானியர் ஆட்சி காலங்களில் தமது மார்க்கத்திலிருந்து தம்மை தூரமாக்கி விடுவார்கள் என்ற காரணத்தினால் சிங்களப் பாடசாலைக்கு செல்லாது, ஆங்கிலத்தைக் கற்காது, ஏனைய சமூகங்களோடு கலந்து வாழாதிருந்திருக்கிறார்கள். இதனால் இஸ்லாத்தைப் பற்றிய செய்திகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
எனவே, முஸ்லிம் சமூகத்தில் வெளிப்படையாக எதனைக் காண்கிறார்களோ அதனையே அவர்கள் இஸ்லாமாகப் பார்க்கிறார்கள். அவ்வாறான விடயங்களில் ஒன்றுதான், அண்மைக் காலமாக பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும். வெள்ளிக்கிழமைகளிலும் ஏனைய நாட்களிலும் முஸ்லிம் அடையாளத்துடன் நடமாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னரை விட ஹிஜாப் பர்தாவுடன் நடமாடும் முஸ்லிம் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. எல்லோரும் கறுப்பு நிறத்தில் அணிவதை அவர்கள் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். கறுப்பு அவர்கள் வெறுக்கின்ற ஒரு நிறமாகும். முகத்தையும் மறைக்கும் கலாசாரம் உருவாகத் தொடங்கியதன் பின்னர் அவர்களது சந்தேகம் இன்னும் அதிகரித்துள்ளது.
அறபு நாடுகள் நிதியுதவிகளை வழங்கி அவர்களது நிகழ்ச்சித் திட்டத்தில் இயங்குகின்ற ஒரு குழுவை இந்நாட்டில் உருவாக்குகிறார்களா எனவும் சந்தேகிக்கின்றனர்.
மற்றொரு விடயம் ஹலால் தொடர்பானது. நீங்கள் ஆயிரம் வருடங்களாக இந்த நாட்டிலே இருக்கிறீர்கள். இவ்வளவு காலமும் ஹலால் உணவுகளைத்தானே சாப்பிட்டீர்கள். இப்போதும் நீங்கள் ஹலால் உணவுகளை சாப்பிட்டுவிட்டு இருந்திருக்கலாம். புதிதாக எதற்கு சிங்கள உற்பத்தியாளர்களிடம் ஹலால் முத்திரையைத் திணிக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஹலால் எனும் கருத்தை பிழையாகப் புரிந்து கொண்ட சில கடும் போக்காளர்கள், ஹலால் என்பதை இஸ்லாம் என்றும் அதனை முஸ்லிம்கள் பெரும்பான்மையினரது வீடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் திட்டமிட்டு நுழைக்கிறார்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
அவர்கள் சந்தேகப்படும் இந்தக் காரணிகளை தொகுத்துப் பார்க்கும்போது அதன் பின்னணி நீண்டகால வளர்ச்சியைக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஒரு சிறிய குழு இவற்றை பூதாகரமாக்கி, அவர்களது சமூகத்திற்குக் காட்டும்போது அதன்பால் அவர்கள் கவரப்படுவதை தடுக்க முடியாமல் இருக்கும்.
* இரண்டு சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துவது மற்றும் அதற்கான தடைகள் குறித்துச் சொல்ல முடியுமா?
சகவாழ்வு எனும்போது தேசிய மட்டத்திற்கு நாம் வருவதில்லை, தேசிய மட்டத்தில் பங்களிப்புச் செய்யும் தலைவர்கள் எம்மிடத்தில் இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். மொஹிதீன் பேக் சிங்கள இலக்கியத்திற்கு சேவை செய்திருக்கிறார். டீ.பீ ஜாயா அரச சபையில் இந்த நாட்டுக்காக பேசினார். ஏ.சீ.எஸ் ஹமீத் நாட்டுக்காக பாடுபட்டார். இப்போதிருப்பவர்கள் இவர்களைப் போன்று நாட்டுக்காக உழைக்காமல் எமது சமூகத்தோடு மட்டும் சுருங்கியவர்களாக குறை காண்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளும் சகவாழ்வுக்குத் தடையாக அமைகின்றன.
எனவே, மார்க்க வரையறைகளுக்குள்ளால் தேசிய நீரோட்டத்தோடு கலக்கின்ற ஒரு செயற் திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். இனவாதத்தின் மூலக் கூறு சந்தேகம்தான். எனவே, அதனைப் போக்க வேண்டும்.
இன்னும் 40 வருடங்களிலே இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் எனப் புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். சனத்தொகை வளர்ச்சியினால் ஒரு சிறுபான்மை இனம் பெரும்பான்மையாக மாறியதாக வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.
1870 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே சனத்தொகை கணிப்பீடு நடைபெறுகிறது. அப்போது சுமார் 6 வீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 140 வருடங்களுக்குப் பிறகு 9.5 வீதமாக அதிகரித்துள்ளது. சிங்கள சமூகம் 60 வீதத்திலிருந்து 70 வீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ் சமூகத்தின் இடப் பெயர்வினால் அவர்களது சனத்தொகை யில் ஏற்பட்ட வீழ்ச்சியை இரண்டு சமூகங்களும் பிரித்தெடுத்திருப்பதாகவே காண முடிகின்றது. 140 வருட காலத்தில் 3 வீதம் வளர்ச்சி யடைந்த சமூகம் 40 வருடத்தில் எப்படி பெரும்பான்மையாக மாறுவார்கள்? இது ஒரு பொய் என்பது அவர்கள் அறியாத ஒன்றல்ல.
உண்மையில், நாங்கள் இந்த தேசத்தை விரும்புபவர்கள். அதன் மீது பற்றுள்ளவர்கள். முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் அல்ல என்பதை தெரியப்படுத்த வேண்டும். அவர்களது விவகாரங்களில் நாம் பங்கெடுக்க வேண்டும்.
சிங்கள மொழி தெரியாமல் இருப்பது சகவாழ்விற்கு மற்றொரு தடையாக அமைகிறது. பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை, மனநிலையை புரிந்து கொள்வற்கு மொழி அறிவின்மை ஒரு தடையாகவே இருக்கிறது.
சிங்களப் பத்திரிகைகளை நாம் வாசிக்க வேண்டும். தொலைக் காட்சியில் நடக்கின்ற விவாதங்களைப் பார்க்க வேண்டும். தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும், கருத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் உறவுகள் வளரும்.
நன்றி meelparvai.net

January 15, 2013

Forrest Gump / Babel / Rashomon!

Forrest Gump

இந்தப்படத்தை பற்றிய அறிமுகமே தேவையில்லை. உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற சினிமா இது! நாயகன் Tom Hanks தனது வாழ்க்கை பயணத்தின் கதையைக்கூறுவதே மொத்த சினிமாவும்.. இதிலே பல உணர்வுகளை நம் மனதிலே புதைத்துவிட்டு செல்லும் திரைக்கதை. இயலாமை,துயரம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,காதல்,வீரம்,உழைப்பு, கண்ணீர்,பிரிவு என அத்தனையும் இதிலுண்டு! படம் முழுக்க Tom Hanks யின் ஆதிக்கம்தான்.. தனது மிகச்சிறந்த நடிப்பாற்றலால் கலக்கியிருப்பார்!

"I'm not a smart man... but I know what love is."
"You have to do the best with what God gave you"

Babel

நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.. என்ன அற்புதமான திரைக்கதை! மொரோக்கோ, ஜப்பான், மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயணிக்கும் வெவ்வேறு விதமான கதைகள் எப்படி ஓரிடத்தில் சங்கமிக்கிறது என்பதுதான் படம். இந்தப்படத்தின் தாக்கத்தால் இப்படி நாங்கைந்து கதைகள் இறுதியில் இணைவது போன்ற திரைப்படங்கள் பல்வேறு மொழிகளிலும் வந்தது. தெலுங்கு-வேதம் (வானம்-தமிழ்), ஆனாலும் இப்படத்தில் வரும் வெவ்வேறு கதைகளும் ஏதோவொரு விதத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.
பார்ப்பவர்கள் மனதையெல்லாம் கனக்க செய்த மொரோக்கோ பாலை வன காட்சி

2006 யில் வெளியான இப்படம் பல விருதுகளை குவித்தது சிறந்த இசைக்கான அகடமி உட்பட! அதுவும் மொரோக்கோ காட்சிகளுக்கு வழங்கப்படும் பின்னனியிசை கவனித்துப்பாருங்கள் அபாரம்.மொரோக்கோ பாலைவனத்தையும் மெக்சிக்கோவையும் கலர்புல் ஜப்பானையும் காட்சிப்படுத்திய விதம் அழகு!

Rashomon

புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசோவின் படைப்பு.! காட்டு வழியே செல்லும் ஒரு பெண் திருடனொருவனால் வன்புணரப்படுகிறாள் பின் அவள் கனவன் கொலை/தற்கொலை சம்பவம் இடம்பெறுகிறது. அந்த நிகழ்வை அதனோடு சம்பந்தப்பட்ட நான்கு நபர்களின் (திருடன், பெண், இறந்தவன், காட்டுக்கு வந்த விறகுவெட்டி) வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும்/ஆராயும் கதை.! முதலில் ஒருவர் நடந்ததை சொல்கிறார் அவ்வாறுதான் நடந்திருக்கும் என பார்வையாளராகிய நாம் நம்பிக்கொண்டிருக்கும் போது, இல்லை! அது அப்பிடியில்லை, இப்படித்தான் நடந்தது என இன்னுமொருவர் சொல்ல ஆரம்பிக்கிறார் இப்படி நான்கு கதைகள். 1950 வெளியான கருப்பு வெள்ளை திரைப்படமானாலும் சுவாரசியமான திரைக்கதையாலும் கதை சொன்ன விதத்தாலும் அட இப்படியும் யோசிக்க முடியுமா என எண்ண வைக்கிறார் குரோசோவா. சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்காரையும் பெற்றுக்கொண்ட படம் இது.!

January 05, 2013

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்! ரஹ்மான் இன்றும் அன்றும்!


ரஹ்மான் இன்று....!

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே...

குளத்தாங்கரையிலே குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே
முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நா உன்னை அணைக்க


இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும் உடலும் இறுக்க
ஒத்தப் போர்வையில இருவரும் இறுக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே


எல்லா இசையுமே மனதை வருடுவதில்லை எல்லா பாடல்களுமே நம் மனதுக்குள் நுழைந்து விடுவதில்லை அது ரஹ்மானாக இருந்தாலும் சரி ராஜாவாக இருந்தாலும் சரி! ஆனால் சில பாடல்கள் கேட்டவுடன் மனதை கவ்விப்பிடித்துக்கொன்று இறங்க மறுக்கிறது. தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்க மனம் விரும்புகிறது. பாடல் முடிந்ததும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதா என ஏக்கம் தருகிறது. இவ்வகையான பாடல்தான் கடல் திரைப்பட பாடலான மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்.

இங்கே ரஹ்மானை மட்டுமல்லாது வைரமுத்துவையும் அவருக்கு நிகராக பாராட்ட வேண்டியிருக்கிறது. இம்முறை நாட்டுப்புற சாயலில் பாடல் வரிகள் இதமாக காதுகளை தொடுகிறது. இவ்வாறான வரிகளை எங்கே பிடிக்கிறார் என்றே தெரியவில்லை."மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்" என்ன ஒரு ஆரம்பம். ரஹ்மான் அன்று....!

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க..
உசுர கடந்து மனசும் கொதிக்க..

 தாஜ்மஹால் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் இசைப்புயல் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.. ஆனாலும் துரதிஷ்டம் அந்தப்படத்தைப்போல இந்தப்பாடலும் பிரபல்யமடையவில்லை என்பது என் எண்ணம். இந்தப்பாடலை நன்கு அவதானித்து கேட்டால். பாடல் ஆரம்பித்தது முதல் இறுதிவரை பல்வேறு இசை ஏற்றத்தாழ்வுகளை அவதானிக்கலாம். இந்த இடத்தில் இந்த இசை வருகிறது என்று விளக்கமாகச்சொல்ல எனக்கு இசை பற்றிய அறிவில்லை என்றாலும் இந்த பாடலில் ரஹமானின் இசை கோர்ப்புகளையும் நுணுக்கங்களையும் கேட்டு வியந்திருக்கிறேன்.. பாடல் மெட்டுக்கேற்ப வைரமுத்துவின் வரிகளும் இசையோடு போட்டி போடும்.. நாயகன் நாயகியை பார்க்க கூரையில் ஏறி வரும் போது நாயகி இப்படி பாடுகிறாள்

வூட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ

 MG ஸ்ரீகுமார் மற்றும் சித்ரா மிக அழகாக பாடியிருப்பார்கள் பாடலின் இறுதியில் மேற்கித்திய இசையோடு வரும் ஸ்ரீனிவாசின் ஹம்மிங்கும் பாடலை மெருகேற்றுகிறது.. இந்தப்பாடலும் என்னைக்கவர்ந்த பாடல்களில்
ஒன்று

..


January 04, 2013

மொழி புரியாமல் ரசித்த பாடல்கள்!

சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின் மீது நம்மை ஈர்க்க செய்யும். அவ்வாறான சில பாடல்களை இங்கே பார்க்கலாம்!

சோனு நிகாம் ஹிந்தியிலுள்ள அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தமிழில் அவர் சில பாடல்களை பாடியிருந்தாலும் அவை எதுவும் பெரிதாய் எடுபடவில்லை! அவர் பாடிய உசிரே உசிரே என்ற ஒரு கண்ணட பாடல் மொழி புரியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சோக மெலடி.. இதன் ஒரிஜினல் வடிவத்தை பாடியவர் ராஜேஷ்.


பாடகர் கார்த்திக் ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் பல மொழிகளில் பாடி மிகப்பிரபலமடைந்தவர். அவர் பாடிய ஒரு தெலுங்கு பாடல் இதுவும் ஒரு சோக மெலடிதான் கார்த்திக்கின் இனிமையான குரலில் பாடலை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்!
முன்பு கார்த்திக் பாடிய பாடலின் ஒரிஜினல் இது. இதுவும் சோனு நிகாம் பாடிய கண்ணட பாடல் ஒன்று. பாடலை கேட்க கேட்க மனதை கொள்ளை கொள்கிறது.
இறுதியாக ஒரு மலயாளப்பாடல் சட்டக்காரி படத்தில் இடம்பெற்றது. இதனைப்பாடியவர் முதல் பாடலாகியாகிய உசிரே உசிரே யின் ஒரிஜினல் வடிவத்தை பாடிய ராஜேஷ். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் தமிழிலும் ஒரு சில (ராஜா,என்னவளே) பாடல்களை பாடியிருக்கிறார் அதன் பிறகு கானவில்லை!
Related Posts Plugin for WordPress, Blogger...