Forrest Gump / Babel / Rashomon!

Forrest Gump

இந்தப்படத்தை பற்றிய அறிமுகமே தேவையில்லை. உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற சினிமா இது! நாயகன் Tom Hanks தனது வாழ்க்கை பயணத்தின் கதையைக்கூறுவதே மொத்த சினிமாவும்.. இதிலே பல உணர்வுகளை நம் மனதிலே புதைத்துவிட்டு செல்லும் திரைக்கதை. இயலாமை,துயரம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,காதல்,வீரம்,உழைப்பு, கண்ணீர்,பிரிவு என அத்தனையும் இதிலுண்டு! படம் முழுக்க Tom Hanks யின் ஆதிக்கம்தான்.. தனது மிகச்சிறந்த நடிப்பாற்றலால் கலக்கியிருப்பார்!

"I'm not a smart man... but I know what love is."
"You have to do the best with what God gave you"

Babel

நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.. என்ன அற்புதமான திரைக்கதை! மொரோக்கோ, ஜப்பான், மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயணிக்கும் வெவ்வேறு விதமான கதைகள் எப்படி ஓரிடத்தில் சங்கமிக்கிறது என்பதுதான் படம். இந்தப்படத்தின் தாக்கத்தால் இப்படி நாங்கைந்து கதைகள் இறுதியில் இணைவது போன்ற திரைப்படங்கள் பல்வேறு மொழிகளிலும் வந்தது. தெலுங்கு-வேதம் (வானம்-தமிழ்), ஆனாலும் இப்படத்தில் வரும் வெவ்வேறு கதைகளும் ஏதோவொரு விதத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.
பார்ப்பவர்கள் மனதையெல்லாம் கனக்க செய்த மொரோக்கோ பாலை வன காட்சி

2006 யில் வெளியான இப்படம் பல விருதுகளை குவித்தது சிறந்த இசைக்கான அகடமி உட்பட! அதுவும் மொரோக்கோ காட்சிகளுக்கு வழங்கப்படும் பின்னனியிசை கவனித்துப்பாருங்கள் அபாரம்.மொரோக்கோ பாலைவனத்தையும் மெக்சிக்கோவையும் கலர்புல் ஜப்பானையும் காட்சிப்படுத்திய விதம் அழகு!

Rashomon

புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசோவின் படைப்பு.! காட்டு வழியே செல்லும் ஒரு பெண் திருடனொருவனால் வன்புணரப்படுகிறாள் பின் அவள் கனவன் கொலை/தற்கொலை சம்பவம் இடம்பெறுகிறது. அந்த நிகழ்வை அதனோடு சம்பந்தப்பட்ட நான்கு நபர்களின் (திருடன், பெண், இறந்தவன், காட்டுக்கு வந்த விறகுவெட்டி) வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும்/ஆராயும் கதை.! முதலில் ஒருவர் நடந்ததை சொல்கிறார் அவ்வாறுதான் நடந்திருக்கும் என பார்வையாளராகிய நாம் நம்பிக்கொண்டிருக்கும் போது, இல்லை! அது அப்பிடியில்லை, இப்படித்தான் நடந்தது என இன்னுமொருவர் சொல்ல ஆரம்பிக்கிறார் இப்படி நான்கு கதைகள். 1950 வெளியான கருப்பு வெள்ளை திரைப்படமானாலும் சுவாரசியமான திரைக்கதையாலும் கதை சொன்ன விதத்தாலும் அட இப்படியும் யோசிக்க முடியுமா என எண்ண வைக்கிறார் குரோசோவா. சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்காரையும் பெற்றுக்கொண்ட படம் இது.!

2 comments:

'பரிவை' சே.குமார் said...

பழைய படங்களை பற்றி சொல்லியிருக்கிறீர்கள்...

படத்திற்கான லிங்க் இருந்தால் நாங்களும் பார்த்து ரசிப்போமே....

தனிமரம் said...

நல்ல அறிமுகங்களைத் தொடர்ந்து தந்து கொண்டு இருக்கின்றீர்கள் ரியாஸ் நேரம் இருக்கும் போது படம் பார்க்கின்றேன்!

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...