மனம் கவர்ந்த மலயாள சினிமா..2

Adaminte Makan Abu (2011) ஆதாமிண்டே மகன் அபு.

மலயாள சினிமாவின் அழகே யதார்த்தமான மனிதர்களின் முகங்களும் மன்வாசனை மாறாத காட்சியமைப்புகளும்தான்! அந்த வகையில் மலயாள திரையுலகிற்கு கிடைத்த உலகத்தரத்திலான ஒரு படம்தான் ஆதாமிண்டே மகன் அபு.

கேரளவாழ் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை பல மலயாள சினிமாக்கள் அழகாக காட்சிபடுத்தியிருந்தாலும் இப்படம் அவற்றிக்கெல்லாம் மகுடமாய் திகழ்கிறது. கிராமத்தில் வாழும் அபு,ஆயுசும்மா ஏழை தம்பதிகளின் ஆசை, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி கடமையாகிய ஹஜ் யாத்திரை சென்று நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் பிறந்த புனித மக்கா நகரில் கால் வைக்க வேண்டுமென்பது. வசதியற்றவர்கள் ஹஜ் யாத்திரை செல்வது அவசியமில்லையென்ற போதும் சிறுக சிறுக சேமித்து வைப்பதும் இறுதியில் வீட்டுத்தோட்டத்த்ல் உள்ள மரத்தை, வளர்த்த பசுவை விற்று செல்லத்தயாராவதுமாக படம் நகர்கிறது இறுதியில் போனார்களா இல்லையா என்பதை மிக நெகிழ்வாக சொல்லியிருப்பார்கள்! இயக்கம் சலீம் அஹமத் அருமையான இயக்கம் மற்றும் திரைக்கதை இது இவரின் முதல் படம் நம்பவேமுடியவில்லை. இந்த முயற்சிக்காக தேசிய விருதையும் பெற்றுக்கொண்டார். அபுவாக நடித்தவர் மலயாள திரையில் இதுவரை காலமும் சிறு குணச்சித்திர,நகைச்சுவை வேடங்களில் நடித்த சலீம் குமார் அபு என்ற மனிதராகவே வாழ்ந்தார்.அற்புதமான நடிப்பு அதற்காக அவ்வாண்டின் சிறந்த நடிகனுக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது!


Sandesham (1991) சந்தேஷம்.

என்னை மிகவும் கவர்ந்த, மலயாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசனின் திரைக்கதையில் உருவான ஓர் அருமையான படைப்பு.இயக்கம் சத்தியன் அந்திக்காடு இவர்களிருவர் கூட்டனியிலும் வந்த அத்தனை படங்களும் இன்றுவரை மலயாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவை அத்தனையும் க்ளாசிக் ரகம்!

ஓய்வூ பெற்ற ரயில்வே ஊழியர் திலகனின் மகன்கள் ஜெயராம் மற்றும் ஸ்ரீனிவாசன். இருவரும் படித்துவிட்டு வேலைக்குச்செல்லாமல், பெற்றோரை கவனிக்காமல், இருவேறு அரசியல் கட்சிகளில் இனைந்து அரசியலுக்காக ராப்பகலாக கஷ்டப்படுவர்கள். இதிலே ஸ்ரீனிவாசன் கம்யுனிசக்கட்சி தொண்டனாக நக்கல்,நகைச்சுவையோடு கலக்கியிருப்பார்.இவருக்கு முற்றிலும் எதிர்க்கட்சி தொண்டனாக ஜெயராம் இருவரும் வீட்டுக்குள்ளேயே வாக்குவாதப்பட்டுக்கொள்ளும்,சண்டைபிடிக்கும் காட்சிகள் செம ரகளை! ஸ்ரீனிவாசனின் அநேகமான படங்களில் ஒரு பாத்திரத்தை கம்யுனிசம் சார்ந்து உருவாக்கி அதனால் கேரள மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சாதக பாதகங்களை அலசியிருப்பார். இறுதியில் அவர்கள் ராப்பகலாக உழைத்த அரசியல் அவர்களுக்கு உதவியதா குடும்ப வாழ்க்கைக்கு பொருந்தியதா என்பதையும், சமூக வாழ்கைக்கு அரசியல் தேவைதான் அதுவே அளவாக இருக்க வேண்டும் என்பதை அழகாகச்சொன்ன படம். இதிலே இருவரின் அப்பாவாக நடித்த திலகனின் நடிப்பே பிரதானம் மலயாள திரையுலகின் மகா கலைஞன் அவர்! காதலில்லாமல்,டூயட்டில்லாமல்,வில்லன்-சண்டையில்லாமல்,ஆபாசமில்லாமல் விறுவிறுப்பான ஒரு படத்தை எப்படி என்பதை இதுமாதிரியான படங்களைப்பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் இப்போதுள்ள இயக்குனர்கள்.


Achuvinte Amma (2005) அச்சுவிண்டே அம்மா

இது ஒரு அம்மா-மகள் பாசம்,நேசம்,பிரிவு,கண்ணீர் என நகரும் ஓர் அழகிய கவிதை போன்ற படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஊர்வசி அம்மாகவும் மீரா ஜாஸ்மின் மகளாகவும் நடித்திருப்பார்கள். இருவரின் நடிப்பும் அபாரம் கூடவே நரேனும் இருக்கிறார்கள். கதையூடே நகரும் மென் நகைச்சுவையும் நம்மை புன்னகைக்கவும் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது அதிலும் ஊர்வசி ஆங்கிலம் பேசும் நகைச்சுவை செம! இறுதியில் பார்ப்பவர்கள் மனதை கலங்க வைத்து கண்களில் கண்ணீர் கசிய நெகிழ்வோடு முடித்திருக்கிறார்கள். திரைக்கதையை போரடிக்காமல் திருப்பங்களோடு கொண்டு சென்றது அருமை! ஒரு கவிதை போன்ற ஆட்பாட்டமில்லாத ஒரு மனதைத்தொடும் படம் வேண்டும் என சொல்பவர்களுக்கு பிடிக்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்.

2 comments:

VANDHIYAN said...

Riyaz watch movies , sneham, desdanakiligar karayarilla, ardhanari, ustad hotel. Sallapam, ganmatham

Riyas said...

Thank you VANDHIYAN for you movie list.. Ustad Hotel watched. Other movies i will try soon!!

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2