மனம் கவர்ந்த மலயாள சினிமா..3

Chaappa Kurish (2011) சாப்பா குரிஷ்

இனையில்லா இணைய வளர்ச்சியின் ஒரு ரூபமாக தனிப்பட்டவர்களின் அந்தரங்கங்கள் புகைப்படங்களாக,வீடியோக்களாக இணையமெங்கும் கொட்டிக்கிடக்கிறது. இதில் திருட்டுத்தனமாக எடுக்கப்படுபவையும், அவர்களாலே எடுக்கப்பட்டு ஏனையவர்களின் கைகளுக்கு அது கிடைக்க அவர்களால் இணையத்தில் தரவேற்றப்படும் நிகழ்வுகளும் உண்டு! இவ்வாறான தரவேற்றும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அதை பார்த்து பகிர்பவர்களுக்கும் கிடைப்பது ஒரு அற்ப சுகமன்றி வேறில்லை! அதுமாதிரியான அந்தரங்க நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளையும், அதை பொதுவெளியில் பகிர்வதால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் விளைவுகளையும் வலிகளையும் யாரும் அக்கணம் சிந்திப்பதேயில்லை!

இதுமாதிரியாக தனிப்பட்ட இருவரின் உறவை மொபைலில் வீடியோவாக பதிந்து வைக்க, பின் அந்த மொபைல் கானாமல் போவதும்! அது ஒருவன் கைக்கு கிடைப்பதும், அதை மீள பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளும், அந்த வீடியோ எங்கே வெளியே வந்திடுமோ என்ற பதற்றமும் சில நாட்களில் இணையத்தில் அது வெளியாவதும் அதன் பின்னரான நடவடிக்கைகளுமாக ஒரு அருமையான த்ரில்லர். ஏழையின் கையில் ஒரு விலைமதிப்புள்ள பொருள் இருக்கும் போது அதனால் அவனுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்ற விடயத்தை இந்தக்கதையில் புகுத்திய விதம் அருமை. பஹாத் பாசில் பணக்கார இளம் தொழிலதிபராக, நாகரீக இளைஞராக சிறப்பாக இயல்பாக நடித்திருக்கிறார். ரம்யா நம்பீசன் கவர்ச்சி! வினித் ஸ்ரீனிவாசன் இவரே மிகக்கவர்கிறார் மிகவும் அப்பாவியான முஸ்லிம் இளைஞனாக! தனக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த பொபைலை வைத்திருக்கவும் முடியாமல் கொடுக்கவும் மனமில்லாமல் அதனை வைத்தே மனதில் பதிந்திருந்த சிலருடனான வன்மங்களை தீர்த்துக்கொள்வது போன்ற கதையமைப்பு சினிமாவுக்கு புதுசு!!
பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து கொண்டு வீட்டுக்கும் பணம் அனுப்பி வைத்துவிட்டு,ஏழ்மையின் காரணமாக பரோட்டா சாப்பிட்டே காலம் கடத்துவதை எப்போதும் கடைக்காரர் நக்கல் செய்து "நான் காசு தாரேன் இன்றைக்காவது பிரியாணி வாங்கி சாப்பிடு" என்பதற்கு பல முறை பொறுமையாக ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டு! இறுதிக்காட்சியில், கடைக்காரர் சொல்லும் போது "எனக்கு இன்றைக்கு பிரியாணி சாப்பிட தோனுது அந்த 50 ரூபாய எடு" எனச்சொல்லி காசுவாங்கிட்டு பிரியாணி சாப்பிட செல்லும் காட்சி செம தூள்!!ஒருவனின் ஏழ்மைநிலையை வைத்து கிண்டல் பண்ணக்கூடாது என்பதை முகத்தில் அறைந்தால் போல் சொல்லும் காட்சி அது. எழுத்து இயக்கம் புதியவரான சமீர் தாஹிர். இரு இளைஞர்களை மையப்படுத்தி அழகான காட்சி கோர்வையாக நகர்த்தி இறுதிவரை செம விறுவிறுப்பாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்! ஆனாலும் இப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லையென்பதாக தகவல்!!

Perumazhakkalam (2004) பெருமழாக்காலம்!

இப்படியான படம் ஒன்றை எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்ற காரியமாகும். கொஞ்சம் பிசகினாலும் சமூகங்களுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடியது. ஆனாலும் இப்படத்தை மிக தைரியமாக எடுத்திருக்கிறார் மலயாள இயக்குனர் கமல்(எ) கமலுத்தீன் முஹம்மத். இவர் இயக்கிய கிளாசிக் ரக பல படங்களில் இதுவும் ஒன்று.

சவூதிக்கு வேலைக்குச்சென்றிருந்த வேளையில் தவறுதலாக ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் ஒரு இஸ்லாமியரால் ஒரு இந்து பிராமனர் கொல்லப்படுகிறார். பின் சவூதி நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை என தீர்ப்பு வழங்க, நாட்டிலிருக்கும் கொலை செய்யப்பட்டவரின் மனைவி மன்னிப்பு வழங்கினால் தண்டனை ரத்தாகலாம் என்ற நிலையில்! பிராமன பெண்னிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி தன் கனவனின் உயிரைக்காப்பாற்ற துடிக்கும் இஸ்லாமிய பெண்ணின் கண்ணீரும், கெஞ்சலும், அவமானப்படலும் ஒரு புறம். எங்க பிள்ளைய கொன்றவனுக்கு மன்னிப்பே கிடையாது என சொல்லி மன்னிப்பு கடிதம் வழங்கவிடாமல் தடுப்பதும், கேட்டு வந்தவர்களை அவமானப்படுத்துவதும், கனவனை இழந்து தவிக்கும் பெண்னின் கண்ணீரும் உணர்வுப்போராட்டங்களும் இன்னொரு புறம்! இந்தப்படம் மொத்தமுமே உணர்வுப்போராட்டம்தான்.பிராமன பெண்ணாக காவ்யா மாதவன் இஸ்லாமிய பெண்ணாக மீரா ஜாஸ்மீன் நல்ல பாத்திரத்தேர்வுகள். இருவரையும் படம் நெடுகிலும் அழ வைத்தே பார்த்திருக்கிறார் இயக்குனர். தலைப்புற்கேற்ப படம் முழுவதும் பிண்ணனியில் மழை பெய்யும் விதமாக காட்சி அமைத்திருப்பது ரசனையின் உச்சம்!

in youtube

Pulival Kalyanam (2003) புலிவால் கல்யாணம்.

இது ஒரு சாதாரன காதல் படம்தான். காவ்யா மாதவனும் ஜெயசூர்யாவும் நடித்திருப்பார்கள். படம் பூராவும் வரும் அசத்தலான நகைச்சுவைக்காகவேண்டியே பார்க்கலாம். சலீம்குமார், கொச்சின் ஹனீபா, ஹரிசிரிஅசோகன் காமெடியில் கலக்கியிருப்பார்கள்! அதிலும் கல்யாண ரிஷப்சன்   ஆளமாறாட்ட காமெடி விழுந்து விழுந்து சிரிக்க கூடியது. இப்போதும் சோர்வான வேளையில் அக்காமெடி காட்சியை பார்த்து புன்னகைப்பதுண்டு நான்.  "ஆரு பறஞ்சு ஆரு பறஞ்சு" என்ற அழகான பாடலும் உண்டு. இயக்கம் இயக்குனர் ஷாபி. இதேவகை காமெடி கலாட்டக்கள் நிறைந்த இவரின் இன்னொரு படம் கல்யான ராமன்.

Pulival Kalyanam Comedy..Clips

மலயாள சினிமா பாகம் 1
மலயாள சினிமா பாகம் 2

3 comments:

K.s.s.Rajh said...

சில நல்ல படங்கள் பற்றி அறியமுடிந்தது நன்றி பாஸ்

VANDHIYAN said...

good updateriyaz ,aleready i watched those movies

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பகிர்வு! நன்றி!

Vennilavu Saaral Nee Song Lyrics In Tamil

  வெண்ணிலவு சாரல்  நீ பாடல் வரிகள்   வெண்ணிலவு சாரல்  நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ கொட்டும் பனி  மாயம் நீ ...