July 18, 2013

மிகச்சிறந்த 10 ஈரான் திரைப்படங்கள்! (Top 10 Iran Movies)

நான் கண்டுகளித்த ஈரான் திரைப்படங்களுள் என்னை மிகவும் கவர்ந்த பத்து திரைப்படங்கள் இவை.

Children of Heaven (1997) 

ஒரு காலனியை தொலைத்துவிட்ட அண்ணன் தங்கையாகிய இரு ஏழைச்சிறார்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் கவிதையாகவும்ம் கண்கள் நனையவும் சொன்ன படம். ஒரு காலனியை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார் இயக்குனர் மஜித் மஜிதி.

A Separation (2011) 

விட்டுக்கொடுக்காமை,கருத்து முரன்பாடு போன்ற சிறு பிரச்சினைகளுக்காய் பிரிந்து வாழ நினைக்க்கும் கனவன் மனைவியின் பிரிவு தொடர்பான விசாரனை வழக்கும், குடும்ப தலைவியின் பிரிவும் அதனூடே இடம்பெரும் குடும்ப பிரச்சினைகளும், உறவுகளுக்கிடையிலான நெகிழ்வும் பாசமும் என ஒரு குடும்ப சித்திரமாய் வெளிவந்த திரைப்படம். 2011 க்கான சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்கார் விருதையும் பெற்றுக்கொண்டது!இயக்கம் Asghar Farhadi

Baran (2001) 

ஒரு பருவ வயது ஆணுக்கு ஒரு பருவ வயது பெண்னைப்பார்த்தது முதல் தோன்றும் உணர்வு மாற்றங்களை/காதலை கவிதையாய் சொன்ன திரைப்படம்! அந்த உறவை வெறுமனே காதல் என்றோ, ஈர்ப்பு என்றோ, அனுதாபம் என்றோ சொல்லிவிடமுடியாது அது அதையும் தாண்டிய ஓர் அற்புத உணர்வு!  சில பார்வைகளும் சில புன்னகைகளும் மட்டும்தான். அவர்களுக்குள் பறிமாற்றம்! இயக்கம் மஜித் மஜிதி. இப்படம் குறித்து விரிவாய் இங்கே..

The Song of Sparrows (2008)

வாழ்க்கைப்பயணத்தை தொடர்வதற்கு தினம் தினம் போராடியே ஆக வேண்டும்! அதே போல் தன் தொழிலுக்காய் தன் குடும்பத்துக்காய் தினம் போராடும் ஓர் சாதாரன மனிதனின் வாழ்க்கைக் கதைதான் இந்த திரைப்படம். இது போன்ற மனிதர்களை நாம் அன்றாடம் சந்தித்து செல்லலாம் கடந்து செல்லலாம். அப்படியான ஒருவரின் வாழ்க்கையை படமாக்கி கொடுத்திருக்கிறார் மஜித் மஜிதி.

Bashu, the Little Stranger (1989)

யுத்தத்தினால் தன் உறவுகளை இழந்து, இரு சிறு பிள்ளைகளுடன் தனியாக வாழும் ஒரு பெண்ணிடம் வந்து சேரும் ஒரு சிறுவனைப்பற்றிய திரைப்படம். யுத்தம் எந்தளவு இழப்புகளை கொடுக்ககூடியது என்பதை அந்தச்சிறுவன் பாத்திரம் நன்றாக உணர்த்தியிருப்பார் இயக்குனர் Bahram Beizai.

The Color of Paradise (2000)

கண் பார்வையற்ற சிறுவன் ஒருவனின் உலகத்துக்கு நம்மையும் அழைத்துச்செல்கிறார் இயக்குனர் மஜித் மஜிதி இத்திரைப்படம் மூலம். கதாபாத்திரத்தின் உணர்வுகளை நம்க்குள் கடத்தி நம்மையும் கண்கலங்கவோ,புன்னகைக்கவோ வைப்பதுதான் ஒரு சிறந்த படைப்பாக 
இருக்க முடியும். அந்த வகையில் மஜித் மஜிதி சினிமாவுலகில் சிறந்த படைப்பாளியே. சினிமா ரசனையுள்ள யாரும் இந்தப்படத்தை பார்த்து கண்கலங்காமல் இருக்க முடியாது அப்படியொரு அற்புத படைப்பு இந்தப்படம்.

Taste of Cherry (1997) 

இது ஒரு வித்தியாசமான கதையமைப்பைக்கொண்ட திரைப்படம். தான் இறந்த பிறகு தன்னை ஒரு குழியில் போட்டு மூடி விடுவதற்காய் ஆள் தேடும் ஒருவரைப்பற்றிய கதை! தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு நகர் முழுதும் சுற்றுவதும், அவர் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களும் அவர்களுடனான சுவாரசியமான உரையாடலுமே இந்தப்படமாகும். இயக்கம் Abbas Kiarostami

The Willow Tree (2005)

நடுத்தர வயதையுடைய கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு அதுவரை காலமும் இல்லாதிருந்த கண்பார்வை சத்திரசிகிச்சை ஒன்றின் மூலமாக சாத்தியப்படுகிறது. அதன் பிறகு அவர் இதுவரைகாலம் கற்பனை மட்டுமே செய்து வாழ்ந்திருந்த உலகத்திற்கும் தற்போதைய நிஜ உலகத்திற்குமிடையில் நடக்கும் உணர்வு போராட்டங்களே இந்தப்படம். இறுதியில் மிக நெகிழ்வாக முடித்திருப்பார் இயக்குனர் மஜித் மஜிதி

The Runner (1985) 

அனாதை சிறுவன் ஒருவனைப்பற்றியே திரைப்படம் இது. துறைமுகம் ஒன்றில் சின்ன சின்ன வேலைகள செய்து பிழைக்கும் சிறுவன் கல்வி கற்க ஆசைப்படுவதும் அதற்கான அவனின் முயறிசியுமே இந்தப்படமாகும். இயக்கம் Amir Naderi இப்படத்தை தழுவியே இயக்குனர் பாண்டிராஜ் மெரினா என்ற படத்தை எடுத்திருந்தார்.

The Father (1996)

தந்தையை இழந்து தன் தாயாருடனும் தங்கைகளுடனும் அவர்களுக்காகவே வாழும் சிறுவன் ஒருவனின் வாழ்வில் அவன் தாயார் மறுமணம் முடித்துக்கொள்வதால் ஏற்படும் வெறுப்பும் ஏமாற்றமும் போராட்டங்களும் அவற்றை எப்படி ஏற்றுக்கொள்வதென்ற பரிதவிப்புமே இப்படத்தின் கதையாகும். தந்தை என்ற உறவு எப்படியானது என்பது மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கும் இப்படம் மூலம் இயக்குனர் மஜித் மஜிதி மூலம்.5 comments:

சே. குமார் said...

அருமையான படங்கள் பற்றிய அழகான குறிப்பு.... அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்கமான தகவலுடன் நல்லதொரு தொகுப்பு...

மலரின் நினைவுகள் said...

சிறந்த தொகுப்பு.
The White Balloon, The Day I Became a Woman, Offside படங்களையும் இந்த list- ல் சேர்த்திருக்கலாம்..

Riyas said...

@சே. குமார்.

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்


@திண்டுக்கல் தனபாலன்

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

Riyas said...

@மலரின் நினைவுகள் said...

//The White Balloon, The Day I Became a Woman, Offside படங்களையும் இந்த list- ல் சேர்த்திருக்கலாம்//

The White Balloon,Offside பார்த்திருக்கிறேன் நல்ல படங்கள்தான் எனது பத்து தெரிவுகளில் உட்படுத்த முடியவில்லை நன்றி வருகைக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...