ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கிறுக்குப் புத்தி!

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஆண்,பெண் என்ற உறவு மூலமே உற்பத்தியாகிறது. ஆணில்லாமல் பெண்ணும் இல்லை பெண் இல்லாமல் ஆணும் இல்லை என்ற வகையில் இரண்டுமே ஒன்றோடொண்டு பின்னிப்பினைந்தவை. வெறுமனே ஆண் உயிரினம் பெண் உயிரினம் என்று ஒற்றையாக ஏதேனும் இருக்கிறதா? எனக்குத்தெரிந்து இல்லை!

அதிலும் இந்த உயிரினங்களிலேயே மனிதன் தான் சிரேஷ்டமானவனாக கருதப்படுகிறான்(ள்). காரணம் அவனு(ள்)க்கு இருக்கும் மேலதிகமான ஓரறிவு இந்த அறிவு நிறைய பேரூக்கு இருக்கா என்பது வேறு விவாதத்திற்குரிய விடயம் அது இங்கே தேவைப்படாது! அந்த அறிவைக்கொண்டே மனிதன் தன் தேவைக்கும் அதிகமாக புதிது புதிதாக சிந்திக்கிறான். இல்லையென்றால் மிருகங்களைப்போல் கிடைத்ததை உண்டுவிட்டு தன் இனத்தை பெருக்கும் வேலையில் ஈடுபட்டு அப்படியே காட்டிலேயே வாழ்ந்திருப்பான். நாகரீக மாற்றம் என்பதே நடந்திருக்காது.

மனிதனும் ஆதிகாலத்தில் ஆடு,மாடுகளைப்போல் பச்சைத்தாவரங்களையும் காய்கனிகளையும் மாத்திரமே உண்டு வாழ்ந்தான். படிப்படியாகவே ஒவ்வொரு சோதனை முயற்சிகள் மூலமாக அவன் புதிது புதிதாக உண்ணக்கற்றுக்கொண்டான் அந்த புதிய தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இன்று எத்தனை வகை வகையான உணவுகளை மனிதன் உண்ணப்பழகிவிட்டான். ஆனால் ஆதிகாலம் தொட்டு ஆடு,மாடுகளோ அதே தாவரம்தான்! அதனோடு சேர்ந்து தாவரம் உண்ட மனிதன் அந்த ஆடு,மாடுகளையே உணவாய் உன்னும் நிலைக்கு நாகரீகம் அடைந்துவிட்டான்.

மனிதன் காலத்துக்கு காலம் தன் தேவைகளையும், ஆசைகளையும், ரசனைகளையும்,கலைகளையும் மாற்றிக்கொண்டேயிருக்கிறான். 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படமொன்றை இப்போதிருக்கிற தலைமுறையால் ரசிக்க முடியாமல் இருக்கிறது. முன்பெல்லாம் மேடைநாடகம் போல் அமைந்த திரைப்படங்களில் ஐந்து நிமிடத்துக்கொருமுறை பாடல்களே இடம்பெறும் கதை பாடல்களாலே நகர்த்தப்படும் திரைப்படம் முடிவதற்குள் 40/50 பாடல்கள் ஓடியிருக்கும் அதுவும் காதுக்குள் கம்பியை விட்டுக்குடையும் தியாகராஜ பாகவதர் வகையறா பாடல்கள் இப்போது ரஹ்மானையும் மேற்கத்திய இசையையும் உலக சினிமாவையும் ரசிக்கும் இளசுகளால் இவற்றை ஜீரணிக்கவே முடியாது காரணம் நாகரீக மாற்றம் மூலம் உருவான ரசனை மாற்றம்.

இதற்கு மாற்றமாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு பின்னால் வாழப்போகிறவர்கள் இப்படியும் பேசலாம்! "100 ஆண்டுகளுக்கு முன்னாடி ரஜினிகாந்த் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவுல நடித்தாராம் அவருதான் அந்தக்காலத்து சூப்பர் ஸ்டாராம் அவரு ஆளும் அவர்ர தலையும் அவரெல்லாம் சூப்பர்ஸ்டாருன்னு பேர் சூட்டி கொண்டாடியிருக்கார்கள் என்ன ரசனையோ! அவருடைய படங்கள்ள ஐந்து பாட்டிருக்குமாம் அதுவும் அறுபது வயதான் அவரு இருபது வயதான பெண்ணுடன் டூயட் பாடி டான்ஸ் எல்லாம் ஆடுவாராம்.. அவர் படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள்தான் உட்சபட்ச காமெடி..அவரு ஏழையாத்தான் இருப்பாரு ஆனா அவருக்கு கராத்தே,ஹுங்பு துப்பாக்கி சுடுதல் போன்ற எல்லா கலையும் தெரிந்திருக்கும் அவரவிட படமடங்கு பலசாலிகளான 100 பேர் வந்தாலும் ஒத்தையாள சும்மா சுழன்று சுழன்று அடிப்பாரு பாருங்க அதெல்லாம் அந்தக்காலத்துல எப்பிடித்தான் சகித்துக்கொண்டார்களோ ஹய்யோ ஹய்யோ" 

எல்லாம் நாகரீக வளர்ச்சிக்கும் அந்த மேலதிக அறிவே காரணமாகயிருக்கிறது அதுதான் மிருகங்களிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுகிறது. இந்த அறிவு மிருகங்களுக்கும் கிடைத்திருந்தால் இன்று உலகம் எப்படி இருந்திருக்கும் என்று சிலநேரம் சுவாரசியமாக சிந்திப்பதுண்டு அதுபற்றி பிறகு பதிவிடலாம்னு நினைக்கிறேன்..சரி இப்போ தலைப்பிற்கு வருவோம் அது நானாக சொல்லலிங்க ஒரு ஞானி சொன்னது கீழேயிருக்கு அவர் சொன்ன வாசகம்..

" இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களையும் காதலிக்க எனக்கு ஆசை".அது சாத்தியமில்லை.ஆனால் அந்த ஆசை இருக்கிறதே.இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களையும் காதலிக்கும் அந்த ஆசை..ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவள்.ஒவ்வொரு பெண்ணும் ஒரு புதிய அனுபவத்தை தருகிறாள்.ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கிறுக்குப் புத்தி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒவ்வொரு பைத்தியம் இருக்கிறது.எனவே இரண்டு புதியவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது இரண்டு குயில்கள் சந்தித்துக்க் கொள்வது போலத்தான்.
அதுவும் நலலதற்குத்தான்.பழையவளே பரவாயில்லை என்று தெரிந்துக்கொள்வதற்கு!
--ஜீன் பால் சாத்ரே{ஞானி}
~~~~~~~~~~~~~~~~~~~~
Jean-Paul Sartre{ 20th century French existentialist philosopher}

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...