பொன்னி நதி பாடல் வரிகள் - Ponni Nadhi Song Lyrics in Tamil

 


ஓ ஓ காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்
நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி
பொழுதுக்குள்ள
தீயாரி எசமாரி
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி
காற்ற போல
தீயாரி எசமாரி
பொட்டல் கடந்து
தீயாரி எசமாரி
புழுதி கடந்து
தீயாரி எசமாரி
தரிசு கடந்து
தீயாரி எசமாரி
கரிசல் கடந்து
வீரம் வௌஞ்ச மண்ணு
அந்தோ நான் இவ்வழகினிலே
ஹையே செம்பா செம்பா
காலம் மறந்ததென்ன
ஹையே ஹோ ஓ ஓ ஓ

மண்ணே உன் மார்பில் கிடக்க
பச்சை நெறஞ்ச மண்ணு
அச்சோ ஓர் ஆச முளைக்க
மஞ்சு தோறும் மண்ணு
என் காலம் கனியாதோ
கொக்கு பூத்த மண்ணு
என் கால்கள் தணியாதோ
வெள்ள மனசு மண்ணு

செம்பனே
வீரம் வெளஞ்ச மண்ணு
வீரம் வெளஞ்ச மண்ணு

பொன்னி மகள்
தீயாரி எசமாரி
லாலி லல்லா லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
வீரா சோழ புரி
பார்த்து விரைவாய் நீ

தாவு அழகா
தாவும் நதியாய்
சகா கனவை முடிடா

பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி
பொழுதுக்குள்ள
வீரம் வெளஞ்ச மண்ணு
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி
காற்ற போல
வீரம் வெளஞ்ச மண்ணு

செக்க செகப்பி
தீயாரி எசமாரி
நெஞ்சில் இருடி
வீரம் வெளஞ்ச மண்ணு
ரெட்ட சுழச்சி
தீயாரி எசமாரி
ஒட்டி இருடி
வீரம் வெளஞ்ச மண்ணு

சோழ சிலைதான் இவளோ
செம்பா
சோல கருதாய் சிரிச்சா
செம்பா
ஈழ மின்னல் உன்னால
செம்பா
நானும் ரசிச்சிட ஆகாதா
அம்பா
கூடாதே
அம்பா

ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
செம்பா
கடமை இருக்குது எழுந்திரு
செம்பா
சீறி பாய்ந்திடும் அம்பாக
செம்பா
கால தங்கம் போனாலே
செம்பா
தம்பியே என்னாலும் வருமோடா

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி
பொழுதுக்குள்ள
தீயாரி எசமாரி
கன்னி பெண்கள் காணணுமே
வீரம் வெளஞ்ச மண்ணு
காற்ற போல
தீயாரி எசமாரி

செக்க செகப்பி
வீரம் வெளஞ்ச மண்ணு
நெஞ்சில் இருடி
தீயாரி எசமாரி
ரெட்ட சுழச்சி
வீரம் வெளஞ்ச மண்ணு
ஒட்டி இருடி
தீயாரி எசமாரி

அந்தோ நான் இவ்வழகினிலே
வீரம் வெளஞ்ச மண்ணு

ஹோ ஓ ஹோ ஓ
ஹா ஆஆ
ஹோ ஓ ஹோ ஓ
ஹா ஆஆ
ஹோ ஓ ஹோ ஓ
ஹா ஆஆ ஹோ ஓ ஹோ ஓ1232 கிமீ: ஒரு கொடும் பயணம். வினோத் காப்ரி

மார்ச் 24, 2020. கரோனா முதல் அலை இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கிய சமயத்தில், மோடி அரசு நாடு தழுவிய ஊரடங்கைக் கொண்டுவந்தது. எந்த முன்னறிவிப்பும், முன்னேற்பாடுகளும் இல்லாமல் அந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்னேற்பாடற்ற ஊரடங்கால், சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில், மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் மிக மோசமான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். மிகக் குறிப்பாக, அடிமட்ட வேலைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்கள்.

கரோனா ஊரடங்கின் காரணமாக தொழில் செயல்பாடுகள் முடங்கியதால், பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலை இழந்ததால் அவர்களில் பலர் இருப்பிடமும் இழந்தனர். கட்டுமானத் துறையில்தான் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். கட்டுமானப் பணிகள் நடக்கும் வளாகத்தினுள் கூடாரம் அடித்து அவர்கள் தங்கிக்கொள்வர். பணி முடியும் வரையில் அதுதான் அவர்களுக்கான வசிப்பிடம். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், அவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிர்பந்தத்துக்கு உள்ளானார்கள்.

ஆரம்பத்தில் 21 நாட்கள் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டித்துக்கொண்டே சென்றது. ஊதியம் இல்லை, இருப்பிடத்திலும் நெருக்கடி, சாப்பாட்டுக்கும் வழியில்லை. இனி இப்பெருநகரத்தில் என்ன செய்வது? டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கால்நடையாக பலநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த ஊரை நோக்கி நடக்கத்தொடங்கினர்.

அப்படியாக உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபத்தில் வேலை பார்த்துவந்த ரிதேஷ், ஆஷீஷ், ராம் பாபு, சோனு, கிருஷ்ணா, சந்தீப், முகேஷ் ஆகிய ஏழு புலம்பெயர் தொழிலாளர்கள் 1232 கிமீ தொலைவில் பிகார் மாநிலத்திலுள்ள தங்கள் சொந்த கிராமத்தை நோக்கி சைக்கிளில் பயணப்படத்தொடங்கினர். 1232 கிமீ தூரத்தை, பகல், இரவு பாராது சைக்கிள் மிதித்து அந்த எழுவர் குழு ஏழு நாட்களில் கடந்தது.

பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான வினோத் காப்ரி அந்த எழுவருடன் சேர்ந்து பயணப்பட்டு, அவர்களின் பயணத்தைப் பதிவுசெய்தார். அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்தனர், இயற்கைக் கடனை எப்படி நிறைவேற்றினர், எங்கு தூங்கினர், சைக்கிள் பஞ்சர் ஏற்பட்டபோது என்ன செய்தனர், காவல் துறையின் தடியடியிலிருந்து எப்படித் தப்பிச் சென்றனர் என அந்த ஏழு பேரின் ஏழு நாள் பயணத்தை ரத்தமும் சதையுமுமாக வினோத் காப்ரி ஆவணப்படுத்தினார். அந்த ஆவணப்படம் சென்ற ஆண்டு மார்ச் 24 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. அந்தப் பயண அனுபவத்தை ஆவணப்படத்தில் முழுமையாகக் கடத்தவிட முடியவில்லை என்பதை உணர்ந்த வினோத் காப்ரி, அந்த அனுபவத்தை ‘1232 கி.மீ’ தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகம் இதுவரையில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் நாகலட்சுமி சண்முகத்தின் இலகுவான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள் இந்நூல் கவனிக்க வேண்டியவற்றில் ஒன்று. நம் வாசகர்களுக்காக ‘1232 கி.மீ’ நூலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.  

 


ஓர் ஆபத்தான சுற்றுவழி

இரண்டாம் நாள்: 28 ஏப்ரல் 2020

சகர்ஸாவுக்கு இன்னும் 1124 கிலோமீட்டர்

அப்போது நள்ளிரவு கடந்து வெகு நேரம் ஆகியிருந்தது. அவர்கள் சகர்ஸாவிலிருந்து இன்னும் வெகுதூரத்தில் இருந்தனர். முப்பது தொழிலாளர்கள் அடங்கிய குழு, மூன்று அணிகளாகப் பிரிந்து, வெவ்வேறு திசைகளிலிருந்து கர்முக்தேஷ்வர் கங்கையை நோக்கிப் பயணித்தன. நாள் முழுவதும் பத்து மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இறுதியில் காவலர்களிடம் உதை வாங்கிய பிறகு, அவர்கள் யாருடைய கவனத்தையும் கவராத விதத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்தனர்.

ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடந்து ஒரு காட்டையும் பிறகு வயல்களையும் கடந்த பிறகு, ரிதேஷின் குழுவினர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினர். உண்மையைச் சொன்னால், கிருஷ்ணா ஒரு மணிநேரம் தூங்குவதற்குத் தயாராக இருந்தார். ஆனால், ஓய்வெடுப்பதற்காக இடைவேளை எடுக்கின்ற எவரொருவரையும் விட்டுவிட்டு மற்றவர்கள் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று ரிதேஷ் அறிவித்தார். ஏனெனில், காவலர்கள் கடுமையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ரிதேஷின் மிரட்டல் அவர் விரும்பிய விளைவை ஏற்படுத்தியது. இரவில் அந்தக் கடுமையான இருட்டில் தாங்கள் தனித்து விடப்படுவதை யாரும் விரும்பாததால், எல்லோரும் தொடர்ந்து நடந்தனர்.

விரைவில், ஏழு பேர் அடங்கிய அந்த அணி, அக்காட்டுக்கும் பல்வாபூர் கிராமத்திற்கும் இடையே இருந்த ஒரு திடலை அடைந்தது. அங்கே ஓய்வெடுப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று ரிதேஷ் தீர்மானித்தார். அவர்கள் எல்லோரும் தங்களுடைய கொஞ்சநஞ்ச உடமைகளையும் சிறிது உணவையும் சிறிய மூட்டைகளில் கட்டி எடுத்துவந்திருந்தனர். அவற்றைத் தங்களோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு எல்லோரும் அத்திடலில் படுத்து உறங்கினர். அவர்களுடைய சைக்கிள்கள் அவர்களைச் சுற்றி ஆங்காங்கே கிடந்தன. வெட்டுக்கிளிகளின் சத்தத்துடன் அக்காடு உயிர்த்துடிப்போடு இருந்தது. அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் சத்தம் அவர்களுக்குக் கேட்டது. அவ்வப்போது காற்று வீசி, அவர்களுடைய களைத்துப் போயிருந்த உடல்களை வருடியது. கொசுக்கள் இடைவிடாமல் தொந்தரவு செய்தன, ஆனால் அந்த ஏழு பேரும் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தங்களுடைய கண்களைத் திறப்பது பல ஆயிரம் கிலோ எடையைத் தூக்குவதைப்போல இருந்ததாக அவர்கள் உணரும் அளவுக்கு அவர்கள் மிகவும் களைத்திருந்தனர்.

ரிதேஷின் அலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு அவர் வைத்திருந்த அலாரம் அது. அவர் தூக்கக் கலக்கத்துடன் தன் சட்டைப் பையிலிருந்து தன் அலைபேசியை வெளியே இழுக்க முயன்றார், ஆனால் அதற்கான தெம்பு அவருக்கு இருக்கவில்லை. காட்டின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த அலாரம் ஒலித்தது. ஆனால் ரிதேஷ் ஓர் ஆழ்ந்த உறக்கத்திற்குள் மூழ்கினார். சடலங்களைப்போல அத்தொழிலாளர்கள் அசையாமல் அமைதியாகக் கிடந்தனர்.

அரை மணிநேரத்திற்குள் அந்த அலாரம் மீண்டும் ஒலித்தது. ஒரு மண்மேட்டின்மீது தலை வைத்துப் படுத்திருந்த ராம் பாபு தன் கண்களைத் திறந்து ரிதேஷை லேசாகத் தட்டி எழுப்பினார்.

ரிதேஷ் திடுக்கிட்டுக் கண்விழித்துத் தன் அலைபேசியைப் பார்த்தார். இப்போது மணி 4:30 ஆகியிருந்தது. அவர் அலறியடித்துக்கொண்டு எழுந்தார். பிறகு, ஒவ்வொருவரிடமும் ஓடிச் சென்று, பொய்யாக ஒரு நேரத்தைச் சொல்லி அவர்களை எழுப்ப முயன்றார்.

“சோனு, மணி 5:00 ஆகிவிட்டது.”

“ராம் பாபு, எழுந்திருங்கள். மணி 6:00 ஆகிவிட்டது.”

அடுத்தப் பதினைந்து நிமிடங்களில், எல்லோரும் தங்கள் பயணத்தைத் தொடரத் தயாராயினர். பார்வைக்கு எட்டிய தூரம்வரை தண்ணீருக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எனவே, ராம் பாபுவைத் தவிர யாரும் காலைக்கடனைக் கழிக்கச் செல்லவில்லை. முகம் கழுவுவது பற்றிய பேச்சே எழவில்லை. ராம் பாபு எதைக்கொண்டு தன்னைச் சுத்தம் செய்துகொண்டார் என்பதை யாரும் அறியவில்லை. நெடுங்காலத்திற்கு முன்பு கிராமங்களில் மக்கள் பயன்படுத்தியதைப்போல ஒரு கல்லைக் கொண்டு அவர் தன்னைச் சுத்தம் செய்து கொண்டிருக்கக்கூடும், யாரறிவார்?

இப்போது, ராம் பாபு முக்கியமான கேள்வியைக் கேட்டார்: “அடுத்து நாம் என்ன செய்வது?”

யாரிடமும் அதற்கு எந்த பதிலும் இருக்கவில்லை. இறுதியில் ரிதேஷ் பேசினார். “சாலை வழியாகச் செல்வதற்குக் காவலர்கள் நம்மை அனுமதிக்காவிட்டால்,  நாம் ஆற்றுக்குள் இறங்கி, நம்முடைய சைக்கிள்களைச் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் செல்ல வேண்டும்.”

தாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக அந்த ஆற்றில் மூழ்கி இறப்பதற்கான வாய்ப்பு இருந்ததை நினைத்து நடுங்கிய இருபத்தெட்டு வயது இளைஞரான கிருஷ்ணாவின் கண்களுக்கு முன்னால் அவருடைய வயதான பெற்றோருடைய முகங்களும் அவருடைய நான்கு குழந்தைகளின் முகங்களும் நிழலாடின. எட்டுப் பேர் அடங்கிய தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு அவர் உயிர்வாழ வேண்டியிருந்தது. அவருடைய ஏழு வயது மகன்தான் மூத்தவன். தனக்கு இன்னொரு மகன் வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மூன்று மகள்கள் பிறக்க வழி வகுத்தது. ஒரு தலைமுறைக்கு முன் அவருடைய பெற்றோருக்கும் இதேதான் நேர்ந்தது. கிருஷ்ணாதான் அவருடைய குடும்பத்தில் மூத்தவர். அவருடைய பெற்றோர்கள் இன்னொரு மகன் வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இறுதியில், நான்கு மகள்கள் அவர்களுக்குப் பிறந்தனர். எனவே, கிருஷ்ணாவுக்கு இப்போது ஏகப்பட்டப் பொறுப்புகள் இருந்தன. அது, தன்னுடைய சைக்கிளைச் சுமந்துகொண்டு கங்கையைக் கடப்பது உட்பட, ஆபத்தான எந்தவொரு காரியத்தைச் செய்வதிலிருந்தும் அவரைத் தடுத்தது.

இருபத்து மூன்று வயது சோனு குமார் குறுக்கிட்டு, “ஆற்றைக் கடப்பதில் என்ன பிரச்சனை? கிராமத்தில் வெள்ளம் வந்து நீரின் அளவு பத்தடியாக உயரும்போது, நாம் நம்முடைய உடமைகளைச் சுமந்தபடி நீந்திச் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தை அடைவதில்லையா?” என்று கேட்டார்.

“சோனு கூறுவது சரிதான். நாம் போகலாம்” என்று ரிதேஷ் கூறினார், ஆனால் கிருஷ்ணா அவர்களைத் தடுத்தார்.

“இது கங்கையாறு. இதன் நீரோட்டம் மிக வேகமானது. காவலர்களிடம் அடி வாங்கியதில் உங்கள் எல்லோருக்கும் மூளை குழம்பிவிட்டதா?”

“நாம் காசியாபாதுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமா?” என்று ரிதேஷ் கேட்டார். “வீட்டின் உரிமையாளர் நம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார். நாம் இங்கேயே இருந்தால், காவலர்கள் நம்மை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். கிருஷ்ணா, நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நாம் இறந்துதான் ஆக வேண்டும் என்றால், கங்கையில் மூழ்கி இறக்கலாம். நமக்கு மோட்சமாவது கிடைக்கும்.”

எல்லோரும் அதிர்ச்சியோடு ரிதேஷைப் பார்த்தபோது, அவர், “நான் ஆற்றைக் கடக்கப் போகிறேன். யாரெல்லாம் என்னோடு வர விரும்புகிறீர்களோ, உங்கள் கைகளை உயர்த்துங்கள்,” என்று கூறினார். ராம் பாபுவும் சோனுவும் மட்டுமே தங்கள் கைகளை உயர்த்தினர். ஆற்றைக் கடந்து தங்களுடைய பயணத்தைத் தொடர்வதற்கான தீர்மானத்தைத் தாமதப்படுத்துவதற்கான ஒரு கடைசி முயற்சியாக, “ரிதேஷ், நாம் பொழுது விடியும்வரை காத்திருக்கலாம்,” என்று முகேஷ் கூறினார்.

“காவலர்களின் அராஜகம் பொழுது விடிவதையோ அல்லது பொழுது அடங்குவதையோ கண்டுகொள்வதில்லை.”

“இது தற்கொலைக்குச் சமம். ராம் பாபு, நீங்களாவது எங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்,” என்று ஆஷீஷ் மன்றாடினார்.

எல்லோரிலும் மூத்தவரான ராம் பாபு இந்த முயற்சியில் இருந்த ஆபத்தைப் புரிந்து கொண்டால், தங்கள் எல்லோரையும் ஒரு மரணத்தை நோக்கி இட்டுச் செல்வதிலிருந்து ரிதேஷை அவரால் தடுக்க முடியும் என்று ஆஷீஷ் நினைத்தார். ஆனால், ராம் பாபு அரிதாகவே ரிதேஷின் யோசனையை மறுத்தார். “ஆஷீஷ், நமக்கு இப்போது வேறு எந்த வழியும் இல்லை. நம்முடைய சைக்கிள்களுடன் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று பார்க்கலாம். அது சாத்தியமற்றது என்பதை நாம் கண்டால், சைக்கிள்களை விட்டுவிட்டு நாம் மட்டும் கங்கையைக் கடக்கலாம். நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்,” என்று ராம் பாபு கூறினார்.

ராம் பாபுவின் உறுதியால் துணிச்சல் பெற்ற ரிதேஷ், அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். ராம் பாபுவும் சோனுவும் அவரைப் பின்தொடர்ந்தனர். இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில், ஏழு பேர் அடங்கிய தங்கள் அணி, நான்காகக் குறைந்துவிடும் என்று மற்ற நால்வரும் உறுதியாக நம்பினர்.

“ரிதேஷ், நில். நாம் வேறொரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்,” என்று கிருஷ்ணா கத்தினார். ஆனால் ரிதேஷ் தொடர்ந்து நடந்தார்.

“முகேஷ், ஆஷீஷ் . . . ஏதேனும் சொல்லுங்கள்!” என்று கிருஷ்ணா கெஞ்சினார்.

“ரிதேஷ்! ராம் பாபு! சோனு!” என்று அவர்கள் எல்லோரும் கத்தினர். அதே நேரத்தில் காட்டு நாய்களும் குரைக்கத் தொடங்கின. தாங்கள் தொடர்ந்து இப்படிக் கத்தினால், அந்நியர்களாகிய தங்களுடைய நடமாட்டம் அருகிலிருந்த கிராமங்களுக்குத் தெரிந்துவிடும் என்பதைக் கிருஷ்ணா உணர்ந்தார். எனவே, அமைதியாக இருக்கும்படி அவர் எல்லோருக்கும் சைகை காட்டினார். இதற்கிடையே, ரிதேஷும் மற்ற இருவரும் ஆற்றங்கரையை நெருங்கியிருந்தனர். அவர்களைத் தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில், கிருஷ்ணா அவர்களுக்குப் பின்னால் வேகமாக ஓடினார். ஆஷீஷும் முகேஷும் சந்தீப்பும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர்.

ரிதேஷும் ராம் பாபுவும் சோனுவும் ஏற்கெனவே ஆற்றை அடைந்து, கங்கையைப் பணிந்து வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய நெற்றிகள் மணலைத் தொட்டன. அவர்கள் நிமிர்ந்தபோது, கிருஷ்ணாவும் தங்களுடைய மற்றத் தோழர்களும் தங்கள் முன்னால் நின்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

“ரிதேஷ், தயவு செய்து நாம் வேறு ஏதாவது வழியைப் பற்றி யோசிக்கலாம். ராம் பாபு, நீங்கள்தான் மூத்தவர். உங்களுக்கு என்ன நேர்ந்தது? தயவு செய்து ரிதேஷுக்குப் புரிய வையுங்கள்,” என்று கிருஷ்ணா மீண்டும் மன்றாடினார்.

“ரிதேஷை என்னால் ஒப்புக் கொள்ள வைக்க முடியக்கூடும், ஆனால் என்னையே நான் எப்படி ஒப்புக் கொள்ள வைப்பது? சொல்லுங்கள்!” என்று ராம் பாபு கேட்டார்.

“மீனவர்கள் கண்விழித்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறிய கிருஷ்ணா, ஆற்றை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு நபர்களைச் சுட்டிக்காட்டினார். எல்லோரும் அவர்களை நோக்கித் திரும்பினர்.

“நாம் அவர்களிடம் சென்று பேசலாம். ஒருவேளை அதிர்ஷ்டம் நம் பக்கம் இருக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

ரிதேஷுக்கும் நம்பிக்கை பிறந்தது.

தங்களுடைய படகுகளை ஆற்றுக்குள் இறக்கத் தயாராகிக் கொண்டிருந்த அந்த மீனவர்கள், அந்நியர்கள் ஏழு பேர் தங்களுடைய சைக்கிள்களோடு திடீரென்று தங்கள் முன்னால் தோன்றியதைக் கண்டு திடுக்கிட்டனர்.

“சகோதரரே, என்ன பிரச்சனை?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார்.

“நாங்கள் காசியாபாதிலிருந்து வந்திருக்கிறோம். இப்போது நாங்கள் பீகாரிலுள்ள சகர்ஸா மாவட்டத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம்,” என்று ரிதேஷ் கூறினார்.

“நீங்கள் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்?” என்று மற்றொரு மீனவர் கேட்டார்.

“நெடுஞ்சாலையில் காவலர்கள் எங்களை ஈவு இரக்கமின்றி அடித்தனர். எனவே, நாங்கள் காட்டின் ஊடாக நடந்து வந்து கங்கையைக் கடப்பதென்று தீர்மானித்தோம். உங்களால் எங்களுக்குச் சிறிது உதவ முடியுமா?”

அந்த மீனவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு, அந்த முதலாமவர், “நீங்கள் சொல்வது சரிதான். காவலர்கள் மிகவும் கறாராக இருக்கின்றனர். ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட அவர்கள் வன்முறையில் இறங்கிவிடுகின்றனர்,” என்று கூறினார்.

“தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்,” என்று ரிதேஷ் கெஞ்சினார்.

“நான் இப்போதுதானே உங்களிடம் கூறினேன்? காவலர்கள் எங்களையும் அடிக்கின்றனர்,” என்று கூறிய அந்த முதல் மீனவர், தன்னுடைய சக மீனவரைச் சுட்டிக்காட்டி, “காவலர்கள் நேற்று இவனுடைய தம்பியை நாள் முழுவதும் காவல் நிலையச் சிறையில் அடைத்து வைத்தனர். அவன் செய்த தவறு என்ன தெரியுமா? சைக்கிள்களுடன் வந்த மூன்று பேர் கங்கையைக் கடப்பதற்கு அவன் உதவியிருந்தான்,” என்று கூறினார்.

“சகோதரரே, தயவு செய்து எங்களுக்கும் உதவுங்கள்,” என்று கிருஷ்ணா கெஞ்சினார்.

“நான் ஏற்கெனவே சொன்னேன், இல்லையா? காவலர்கள் தங்களுடைய லத்திகளைக் கொண்டு எங்களைச் சித்திரவதை செய்கின்றனர்,” என்று அந்த முதல் மீனவர் கூறினார்.

“நாங்கள் உங்களுக்குப் பணம் தருகிறோம். தலைக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் தருகிறோம்,” என்று கிருஷ்ணா கூறினார்.

“இது பணத்தைப் பற்றியது அல்ல. இது காவலர்களின் லத்திகளைப் பற்றியது. அவர்கள் எங்களை அடிக்கத் தொடங்கும்போது, அந்த அடிகளை வாங்கிக் கொள்ள யார் முன்வருவார்கள்?” என்று அந்த முதல் மீனவர் கேட்டார்.

“அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் அந்த அடிகளை வாங்கிக் கொள்கிறோம்,” என்று ரிதேஷ் உண்மையுடன் கூறினார், ஆனால் அவர் தங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்ததாக அந்த மீனவர்கள் நினைத்தனர்.

“உங்களுக்கு இது வேடிக்கையாக இருக்கிறதா?” என்று அந்த இரண்டாம் மீனவர் வெடுக்கென்று கேட்டார்.

“இல்லை. நான் உண்மையைத்தான் கூறுகிறேன். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்,” என்று ரிதேஷ் கெஞ்சினார்.

“முடியாது. நாங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை,” என்று அந்த முதல் மீனவர் பதிலளித்தார்.

அம்மீனவர்கள் உண்மையிலேயே பீதியடைந்திருந்தனர் என்பதையும், அவர்களிடம் மேலும் பேசுவது நேர விரயம் மட்டுமே என்பதையும் உணர்ந்து கொண்ட ரிதேஷ், “பரவாயில்லை,” என்று அவர்களிடம் கூறிவிட்டு, “சோனு, நாம் போகலாம்,” என்று அழைத்தார்.

அக்குழுவினர் ரிதேஷைப் பின்தொடர்ந்து ஆற்றை நோக்கிச் சென்றனர். ஆனால், கிருஷ்ணா கடைசியாக ஒரு முறை முயற்சித்தார். அவர் அந்த மீனவர்களிடம், “தயவு செய்து எங்கள்மீது இரக்கம் காட்டுங்கள். எங்களுக்கு உதவுங்கள். நாங்கள் இன்னும் 1200 கிலோமீட்டர் தூரம் போக வேண்டியுள்ளது,” என்று கூறினார்.

“இல்லை, எங்களால் முடியாது,” என்று அந்த முதல் மீனவர் உறுதியாகக் கூறினார். “காலையில் முதல் விஷயமாக எங்களை இப்படித் தொந்தரவு செய்யாதீர்கள்.”

ஆனால் அந்த இரண்டாம் மீனவருக்கு அத்தொழிலாளர்கள்மீது அனுதாபம் பிறந்தது. அவர் கிருஷ்ணாவைப் பார்த்து, “உங்களுடைய நண்பர்களைத் தடுத்து நிறுத்துங்கள். தண்ணீர் இருபதடி ஆழம் உள்ளது. அவர்கள் மூழ்கி இறந்தால், அவர்களுடைய உடல்களைக்கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்று கூறினார்.

“ரிதேஷ், ஆற்று நீர் இருபதிலிருந்து முப்பதடி ஆழம் இருப்பதாக இந்த மீனவர் கூறுகிறார்,” என்று கத்திக் கொண்டே கிருஷ்ணா ஆற்றை நோக்கி ஓடினார்.

ஆனால் ரிதேஷும் ராம் பாபுவும் சோனுவும் நிற்காமல் ஆற்றில் நடந்து கொண்டிருந்தனர். தண்ணீர் அவர்களுடைய மூட்டளவு வந்திருந்தது. கிருஷ்ணா மீண்டும் கத்தினார். “ராம் பாபு, கங்கையில் முதலைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.”

முதலை என்ற வார்த்தை அவர்கள் மூவரையும் பயமுறுத்தியபோதிலும், அவர்கள் தொடர்ந்து ஆற்றைக் கடந்து கொண்டிருந்தனர். விரைவில், தண்ணீர் அவர்களுடைய இடுப்பளவு உயர்ந்திருந்தது. அவர்களுடைய வேகம் வெகுவாகக் குறைந்தது. அவர்கள் ஒவ்வோர் அடியையும் மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்து வைத்தனர். இதற்கிடையே, மற்றத் தொழிலாளர்களும் (முப்பது பேர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர்) கிருஷ்ணாவுடன் ஆற்றங்கரையில் கூடியிருந்தனர். எல்லோரையும்விட மிகவும் குள்ளமாக இருந்த ரிதேஷ் இப்போது கழுத்தளவு நீரில் இருந்தார். கரையின்மீது நின்று கொண்டிருந்த தொழிலாளர்களும் அந்த இரண்டு மீனவர்களும் அக்காட்சியைத் திகிலோடும் நம்ப முடியாமலும் பார்த்தனர். ஒருசில கணங்களில் அம்மூவரும் நிச்சயமாக இறந்துவிடுவர். ஒரு சைக்கிளைச் சுமந்து கொண்டு கங்கையைக் கடப்பது என்பது இயலாத காரியம்.

கரையின்மீது இருந்தவர்கள் மூச்சுவிட மறந்து காத்திருந்தனர். ஆற்றுக்குள் இருந்த மூவரும் ஆழமான பகுதிக்குள் அடியெடுத்து வைத்தால், இப்போது கிட்டத்தட்ட நீருக்கு மேலே தெரிந்த அவர்களுடைய தலைகள் விரைவில் நீருக்கு அடியில் போய்விடும். மறுகணம் எல்லாம் முடிந்துவிடும். கிருஷ்ணாவால் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. “ரிதேஷ், நில். சோனு, நில். தயவு செய்து மேலும் நடக்காதீர்கள்,” என்று அவர் அலறினார்.

மற்றவர்களும் இப்போது கத்தத் தொடங்கினர், ஆனால் அம்மூவரும் சளைக்காமல் தொடர்ந்தனர். திடீரென்று, அந்த இரண்டாம் மீனவர் உறுமினார். “முட்டாள்களே, நில்லுங்கள். பைத்தியக்காரர்களே, நான் என் படகில் உங்களைக் கூட்டிச் செல்கிறேன்.”

அந்த முதல் மீனவரால் இதை நம்ப முடியவில்லை, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்துவிட்டார். தன்னுடைய நண்பன் அக்கணத்தில் குறுக்கிட்டிருக்காவிட்டால், அம்மூவரும் நிச்சயமாக மரணத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள் என்பதை அவரும் அறிந்திருந்தார்.

Credit அருஞ்சொல்’https://www.arunchol.com

பார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள்..

பார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை..

#இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே.
#இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக்கலாம் 
#இது முழுக்க முழுக்க மலயாள சினிமா விரும்பிகளுக்காகவே பகிரப்படுகிறது.

1.Chithram சித்ரம்(1988) 
2.Nadodikattu (1987) நாடோடிக்காற்று
3.Sandhesam (1991) சந்தேசம்
4.Nagarangalil Chennu Raparkam (1990) நகரங்களில் சென்னு ராப்பாக்காம்
5.Doore Doore Oru Koodu Koottam (1986) தூரே தூரே ஒரு கூடு கூட்டாம்
6.Kireedam (1989) கிரீடம்
7.Namukku Parkkan Munthiri Thoppukal (1986) நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்.
8.Thoovanathumbikal (1987) தூவானத்தும்பிகள்.
9.Ramji Rav Speaking (1989) ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்
10.Godfather (1991) காட்பாதர்
11.Kilukkam (1991) கிலுக்கம்
12.Thalavattam (1986) தாளவட்டம்
13.Vandanam (1989) வந்தனம்
14.Pavam Pavam Rajakumaran (1990) பாவம் பாவம் ராஜ்குமாரன்
15.Meleparambil Aanveedu (1993) மேல்பரம்பில் ஆண்வீடு
16.Ponmuttayidunna Tharavu (1988) பொன்முட்டயிடுன்ன தாராவு
17.Thalayanamanthram (1990) தலயன மந்திரம்
18.Gandhinagar 2nd Street (1986) காந்திநகர் 2nd ஸ்டீரிட்
19.Varavelpu (1989) வரவேழ்பு
20.Pattanapravesham (1988) பட்டனபிரவேஷம்
21.T.P. Balagopalan M.A. (1986) T.P. பாலகோபலன் M.A
22.Sanmanassullavarkku Samadhanam (1986) சன்மனசுள்ளவருக்கு சமாதானம்
23.His Highness Abdullah (1990) ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா
24.Mazhayethum Munpe (1995) மழையெத்தும் முன்பே
25.Vadakkunokkiyantram (1989) வடக்குநோக்கியந்திரம்
26.In Harihar Nagar (1990) இன் ஹரிஹர் நகர்
27.Malappuram Haji Mahanaya Joji (1994) மலப்புறம் ஹாஜி மஹானாய ஜோஜி
28.Akkare Ninnoru Maran (1985) அக்கரே நின்னொரு மாறன்
29.Mazha Peyyunnu Maddalam Kottunnu (1986) மழை பெய்யுன்னு மத்தளம் கொட்டுன்னு
30.Vellanakalude Nadu (1988) வெள்ளங்களுடே நாடு
31.Aram + Aram = Kinnaram (1985) அறம் + அறம் = கின்னாரம்
32.Boeing Boeing (1985) போயிங் போயிங்
33.Hello My Dear Wrong Number (1986) ஹலோ மை டியர் ரோங் நம்பர்
34.Samantharangal (1998) சமாந்தரங்கள்
35.Mukunthetta Sumitra Vilikkunnu (1988) முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குன்னு
36.Thenmavin Kombath (1994) தென்மாவின் கொம்பத்
37.Chandralekha (1997) சந்திரலேகா
38.Akkare Akkare Akkare (1990) அக்கரே அக்கரே அக்கரே
39.Peruvannapurathe Visheshangal (1989) பெருவண்ணப்புறத்தே விசேஷங்கள்.
40.Sreedharante Onnam Thirumurivu (1987) சிறீதரண்டே ஒன்னாம் திரு முறிவு
41.Mannar Mathai Speaking (1995) மன்னார் மதி ஸ்பீக்கிங்
42.Megham (1999) மேகம்
44.Chinthavishtayaya Shyamala (1998) சிந்தவிஷ்டயாய ஷ்யாமளா
45.Poochakkoru Mookkuthi (1984) பூச்சக்கொரு மூக்குத்தி
46.Minnaram (1994) மின்னாரம்
47.No.20 Madras Mail (1990) நொ 20 மெட்ராஸ் மெயில்
48.Thoovalsparsham (1990) தூவல் ப்ரிஷம்
49.Ayal Kadhayezhuthukayanu (1998) அயால் கதயெழுதுகெயானு.
50.Pradeshika Varthakal (1989) ப்ரதேஷிக வார்த்தகள்.
51.Veendum Chila Veettukaryangal (1999) வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்
52.Pavithram (1994) பவித்ரம்
53.Odaruthammava Aalariyam (1984) ஒடருத்தம்மாவா ஆலாயிரம்
54.Ayalvasi Oru Daridravasi (1986) அயல்வாசி ஒரு தரித்ரவாசி
55.Ponthan Mada (1994) பொந்தன் மட
56.Kilichundan Mampazham (2003) கிளிச்சுண்டான் மாம்பழம்
57.Thanmathra ( 2005) தன்மாத்ரா
58.Kouthuka Varthakal (1990) கௌதுக வார்த்தகள்
59.Kalyanaraman (2002) கல்யானராமன்
60.Pulival Kalyanam (2003) புலிவால் கல்யாணம்
61.Kakkakuyil (2001) காக்ககுயில்
62.Thilakkam (2003) திலக்கம்
63.Udayananu Tharam (2005) உதயனு தாரம்
64.Meesa Madhavan (2002) மீச மாதவன்
65.Summer in Bethlehem (1998) சம்மர் இன் பெத்லஹேம்
66. Ina (1982). இனா
67.Moonnam Pakkam (1988) மூனாம் பக்கம்
68.Chenkol (1993) செங்கோல்
69.Ennum Nanmakal (1991) என்னும் நன்மகள்
70.Mazhavilkavadi (1989) மழவில்காவடி
71.Loudspeaker (2009)
72.Santhanagopalam (1994)சந்தனகோபாலம்
73.Manassinakkare (2003) மனசினக்கரே
74.Rasathanthram (2006) ரசதந்திரம்
75.Thooval Kottaram (1996) தூவல் கொட்டாரம் 
76.Passenger. (2009)
77.Perumazhakkalam (2004) பெருமழாகாலம்
78.Azhakiya Ravanan (1996) அழகிய ராவனன்
79.Vietnam Colony (1992) வியட்னாம் கொலனி.
80.Varaphalam (1994) வாரபலம்
81.Katha Parayumpol (2007) கத பறயும்போல்
82.Adaminte Makan Abu (2011) ஆதாமிண்ட மகன் அபு
83.Kadha Thudarunnu (2010) கத துடருன்னு
84.Kerala Cafe (2009) கேரளா கேபே
85.Evidam Swargamanu (2009) இவ்விடம் சொர்க்கமானு
86.2 Harihar Nagar 2009) 2 ஹரிஹர் நகர்
87. Paleri Manikyam: Oru Pathirakolapathakathinte Katha (2009) பாலேரி மாணிக்கம்
88.Innathe Chintha Vishayam (2008) இன்னதே சிந்த விஷயம் 
89.Pranayam (2011) ப்ரணயம்
90.Sasneham (1990) ஷஸ்நேகம்
92.Shutter (2012)
93.Traffic (2011)
94.Beautiful (2011)
95.Cocktail (2010)
96.Indian Rupee (2011)
97.Kaaryasthan (2010)
98.Spirit (2012)
99.Chaappa Kurish (2011)
100.Ustad Hotel (2012)
101.Salt N' Pepper (2011)
102.Trivandrum Lodge (2012)
103.Diamond Necklace (2012)
104.Ee Adutha Kaalathu (2012)
105.Ordinary (2012)
106.Ozhimuri (2012)
107.My Boss (2012)
108North 24 Kaatham (2013)
109.Natholi Oru Cheriya Meen Alla (2013)
110.Immanuel (2013)
111.Red Wine (2013)
112.Memories (2013)
113.5 Sundarikal (2013)
114.Kunjananthante Kada (2013)
115.Oru Indian Pranayakadha (2013)
116.Punyalan Agarbattis (2013)
117.Ayalum Njanum Thammil (2012)
118.Annayum Rasoolum (2013
119.Mumbai Police (2013)
120.Drishyam (2013)வெந்தயத்தில் மருத்துவம்.

படித்ததில் பிடித்தது... Testing post

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில்உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும்நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடிவைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரைகுடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத்   தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களைஅண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தைஎடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப்பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லதுமோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய்கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்குசர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறைகுடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்,வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன்,உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றிசாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பலநோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறைவெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச்சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரைநோய்) குறையும்.

3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.

4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிடவயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.

9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்,வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.

10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.

11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்கவயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

 வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்குவைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்கநீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன்கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக்கீரை.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயுமுழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர்அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடுதணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலைவளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்கவேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி,எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வாபோல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப்போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால்கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு,கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,

ச்சே..

சில நேரங்களில் சிலரால் செய்யப்படும் சின்ன சின்ன உதவிகளில்தான் மனிதநேயமே தங்கியிருக்கிறது.போட்டியும் பொறாமையும் காசும் பணமுமே வாழ்க்கையாகிப்போன நவீன உலகில் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல், தன் செயல்களால் இன்னொருவர் துன்பம் நேராம்லிருக்க வாழ்வதும் நல்ல மனிதனுக்குரிய பண்புகள்தான் என நினைப்பவன் நான். நடை பாதையில் கிடக்கும் முற்களை எடுத்து ஓரமாக போடுவதும் தர்மம் செய்வதைப்போன்ற நண்மையான செயல் என இஸ்லாம் சொல்கிறது.

ஆனாலும் சமூகமாக வாழும் போது அவனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள.. தொழில்களை மேற்கொண்டு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சமூகத்துடனான தொடர்பு மிக அத்தியவசியமாகிறது. இதற்காக பலரையும் பல வேளைகளில் சந்திந்து பல வேலைகளை அவர்கள் மூலமாக செய்ற்படுத்த வேண்டியிருக்கிறது. இது பல வேளைகளில் பணப்பரிமாற்ற சேவை அடிப்படையில் நடக்கிறது. 

ஆனாலும் சில உதவிகள் சில நேரங்களில் அவசரமாக செய்ய வேண்டியவை.. அவசரமாக தேவைப்படுபவை! இவ்வாரான உதவிகள் பணம் கொடுத்து வாங்க முடியாதவை. உதாரணமாக பேரூந்தில் பயணிக்கும் போது முதியவர்களுக்கோ, முடியாதவர்களுக்கோ தன் இருக்கையை கொடுத்து உதவுவது, ஒரு குறிப்பிட்ட இடம் தெரியாமல் கேட்பவர்களுக்கு சரியான இடத்தைக் காட்டி கொடுப்பது போன்ற சின்னச்சின்ன உதவிகள்தான் மனிதன் சமூகமாக வாழ்வதில் உள்ள பயன்கள்.ஆனாலும் பல நேரங்களில் இவ்வாரான சின்ன உதவிகளைக்கூட சிலர் செய்ய தயங்குவதை நாம் கண்டிருக்கிறோம். அண்மையில் இங்கே (அபுதாபியில்) பேரூந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது (நான் நின்று கொண்டிருந்தேன்) அப்போது குழந்தையொன்றை தூக்கிக்கொண்டு ஒருவர் ஏறினார். யாராவது எழுந்து சீட் கொடுப்பார்கள் என்று பார்த்தால் எவருமே சீட்கொடுக்க முன்வரவில்லை. சிறிது நேரம் நின்றுகொண்டே வந்தபின் ஒருவர் இறங்கியவுடந்தான் ஒரு சீட் கிடைத்தது அதிலும் உட்கார்ந்திருந்ததில் இளைஞர்கள் பலர்! அதுவும் அந்த வண்டி தூரப்பிரயாணம் போவதுமில்லை மிஞ்சிப்போனால் அதில் பயணிப்பவர்கள் 40 அல்லது 50 நிமிடங்கள்தான் பயணிப்பார்கள். அப்படியிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நிற்பவருக்கு தனது சீட்டை விட்டுக்கொடுக்க முன்வராதது என்னவிதமான மனநிலை என புரியவேவில்லை.

சூப்பர் சிங்கர் ஜூனியரும் அசாத்திய திறமைகளும்!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்னைக்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. பல அரசியல்கள், பக்கச்சார்புகள் இன்னும் சில ஏமாற்றுவேலைகள் இருந்தாலும் மொக்கை போடும் சினிமா நிகழ்ச்சிகளை பார்ப்பதைவிட இது நல்லதொரு பொழுது போக்கு நிகழ்ச்சி இசையை ரசிப்பவர்களுக்கு. இந்நிகழ்ச்சி மூலம் பல திரையிசைப்பாடகர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!

இதில் வயது அடிப்படையில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் என்றும் மற்றயவர்களுக்கு சூப்பர் சிங்கர் என்றும் இருவேறு போட்டிகள் ஆண்டுகொருமுறை நடப்பதுண்டு. இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நடந்துகொண்டிருக்கிறது. தேர்வுகள் எல்லாம் முடிந்து சிறந்த 25 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இம்முறை  ஜூனியரில், கடந்த முறையைக்காட்டிலும் பல திறமையான இளம் போட்டியாளர்கள் பங்குகொள்கிறார்கள். சொல்லப்போனால் எல்லோருமே மிகத்திறமையானவர்கள். ஒவ்வொரு போட்டித்தொடரிலும் சில அசாத்தியமான திறமையுள்ள போட்டியாளர்கள் வருவார்கள் நம்மை மகிழ்விப்பாளர்கள். இம்முறையும் அது நடந்துகொண்டிருக்கிறது முன்னெப்போதும் இல்லாத வகையில் கொஞ்சம் கூடுதலாகவே!

அந்த வகையில் செந்தில்நாதன் எனும் மூளை வளர்ச்சி குறைந்த, கண்தெரியாத பையனின் பாடல்கள்தான் எல்லா இசை ரசிகர்கள் நெஞ்சத்தையும் நெகிழச்செய்து கொண்டிருக்கிறது அண்மைய நாட்களில்! பிறந்ததுமே தாய் தந்தையரினால் கைவிடப்பட்ட இச்சிறுவனை ஒரு கண்தெரியாதவர்தான் எடுத்து வளர்த்திருக்கிறார். எந்த வேலையை செய்ய வேண்டுமானாலும் இன்னொருவரின் உதவியை எதிர்பார்க்கும் இவன் பாடல்கள் என்று வரும்போது மட்டும் தூள்கிளப்பிவிடுகிறான். பலவருடம் சங்கீதம் பயின்ற குழந்தைகளே பல தவறுகளுடன் பாடும் போது வெறும் கேள்விஞானம் மட்டுமே கொண்டுள்ள இச்சிறுவனால் பிழையின்றி ஏற்ற இறக்கங்களுடன் அழகான உச்சரிப்புகளுடன் எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சர்யம்தான்! அதிலும் பெண்குரல் மாற்றிவேறு பாடுகிறான். என்ன ஒரு அற்புதமான குரல் வளம்! எப்போதும் அனுதாபங்களையும், கண்ணீரையும் முன்னிறுத்தி  பிரபலம் தேடிக்கொள்ளும் விஜய் டீவீ  இந்தச்சிறுவன் விடயத்திலும் அதுதான் நோக்கம் என்றாலும் மனவளர்ச்சியில்லாதவன் என்று நிராகரித்துவிடாமல் போட்டியில் சேர்த்துக்கொண்டு அந்தச்சிறுவனின் எதிர்காலத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளலாம். செந்தில்நாதன் தொடர்ந்து போட்டியில் பங்கெடுக்கும் மனநிலையில் இல்லையென்பதால் அவ்வப்போது வந்து ஒரு சில பாடல்களை பாடிச்செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதுவும் ஒரு சிறந்த யோசனைதான்.

செந்தில்நாதன் பாடிய சில பாடல்கள்..  இந்நிகழ்ச்சியின் இன்னுமொரு திறமையான போட்டியாளர் பெங்களூரிலிருந்து வந்து பங்குபெற்றும் தமிழில் எதுவுமே பேசத்தெரியாத தமிழில் பாட மட்டும் தெரிந்த ஸ்பூர்த்தி. ஒவ்வொரு பாடலையும் அதற்கேயுரிய சிறப்புகளுடன் இசை நுனுக்கங்களுடனும் அழகான தமிழ் உச்சரிப்புடனும் பாடி அசத்துகிறது இந்த குட்டிப்பொண்ணு. பலவருடம் சங்கீதம் பயின்று பிரபல பாடகர்களுக்கு மட்டுமே வரும் சில ஏற்ற இறக்கங்கள் நெழிவு சுளிவுகள் இந்தப்பொண்ணுக்கு இப்போதே அனாயசமாக வருகிறது. அதற்கு சில உதாரணங்கள் இங்கே.


மோக முள்ளும் கண்ணம்மாக்களும்.!

காமமும் மோகமும் ஆச்சாரமோ அனுஷ்டானமோ பார்ப்பதில்லை.. உள்ளுக்குள் பூட்டி பூட்டி வைத்த உணர்ச்சிகள் தடைமீறி வெளிக்கிளம்பும் போது வெட்கங்களால் அவற்றை தடுக்க முடிவதில்லை!! அண்மையில் மோக முள் திரைப்படம் பார்த்தபோது மனதில் எழுந்தவை இவை..

மோகமுள் திரைப்படத்தில் முதன்மை பாத்திரங்கள் யமுனா-பாபு, இதுதான் நிறைய பேருக்கு பிடித்திருந்தது.. எனக்கும் பிடித்திருந்தது, ஆனால் அதைவிட கிளைக்கதையாக வயதானவருக்கு மனைவியாக வரும் "கண்ணம்மா"
பாத்திரம்தான் மனதை ஏதோ செய்துவிட்டது.. படம்பார்த்து முடிந்தும் இரண்டு மூன்று நாட்களாக அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. 

குடும்ப வறுமை காரணமாக வயதான ஒருவருக்கு இளமையான, அழகான கண்ணம்மா துனைவியாக்க படுகின்றால்.. அங்கே அவளுக்கு பொண்ணும் பொருளும் குறைவின்றி வாங்கிக்கொடுக்கிறார்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு இது மட்டும் போதுமா? அவள் உடல் உளத்தேவைகளை பற்றி அந்த வயதானவருக்கு கவலையில்லை, உண்டவுடன் உறங்கிவிடுகிறார்.. வெளியில் போகும்போது உள்ளே வைத்து பூட்டி வைத்துவிட்டு போய்விடுகிறார்.. உலகெங்கிலும் எங்கோ ஓர் மூலையிலாவது இது போன்ற நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இதன் போதே பக்கத்து வீட்டு மேல்மாடியில் வசிக்கும் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது கண்ணம்மாவுக்கு..  தனக்குள் எறிந்து கொண்டிருக்கும் உணர்ச்சி தீயை அனைக்க பாபுவை விட்டால் வேறு வழி தெரியவில்லை கண்ணம்மாவுக்கு.. ஒருநாள் இரவு பாபு தனிமையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவன் அறையில் நுழைந்தவள் அவனை தடாலடியாக கட்டிபிடித்து அவனுடன் உறவு கொள்கிறால் அவனுக்கு அதில் இஷ்டமில்லாமல் ஆரம்பத்தில் மறுத்தாலும், இறுதியில் அவனால் அவளை விலக்க முடியாமல் அவளுடன் ஒத்துப்போகிறான்!

இந்தப்படம் பார்க்காதவர்கள் இங்கு நான் குறிப்பிட்டவற்றை ஏதோ மலயாள பிட்டுபட ரேஞ்சிற்கு கற்பனை செய்தால், அது தவறு! காரனம் படம் பார்க்கும் போது எந்த விரசமும் அதில் தெரியவில்லை. கண்ணம்மாவின் செய்கைகளை நியாயபடுத்த முடியாவிட்டாலும் அவளின் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்படுகிறது.. அதுவே அந்த பாத்திர படைப்பினதும் படத்தினமும் வெற்றி.. இந்தப்படத்தின் கதையுடைய நாவலை படித்தவர்கள் படத்தைவிடவும் நாவல் சிறப்பாக இருக்கிறது என சொல்லக்கேட்டுள்ளேன்.. நான் நாவல் படிக்கவில்லை படம் மட்டும்தான் பார்த்தேன்..

பிறகு இன்னுமொரு நாள் அதேபோல் கண்ணம்மா பாபுவின் படுக்கையறைக்கு வருகிறாள் அப்போது கதவை பூட்டிவிட்டு உள்ளே அவன் உறங்குவதை அவதானிக்கிறாள்.. அவளை உள்ளே அனுமதிக்கும்படி வேண்டுகிறால், இம்முறை அவன் அனுமதிக்கவில்லை.. அது தப்பு என்கிறான். தொடர்ந்தும் அவள் விடவில்லை கதவை திறக்கும்படி கெஞ்சிக்கேட்கிறாள்..(ஒரு பெண் எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சலாம், ஆனால் தன் உடல் பசியை தீர்த்துக்கொள்ள ஒரு ஆணிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படுவது மிகக்கொடுமையாகும்!!!) இருவரும் வேறு எங்காவது போய் வாழலாம் என்கிறாள், என்னிடம் எல்லா தைரியமும் இருக்கிறது நீ என்னுடன் கூட வந்தாலே போதும் என்கிறாள்.. அவன் இறுதிவரை முடியாது என வீராப்பாகவே இருந்துவிடுகிறான்.. அவளும் அழுகையுடன் சென்றுவிடுகிறாள்.

பிறகு என்ன நடந்திருக்கும்...? ஊகிக்க முடிகிறதா? வேறென்ன, அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்!! யார் காரணம் அவளின் முடிவிற்கு..? இன்னுமொர் திரைப்படம் பார்த்தேன் அது பூட்டான் படமான Travellers and Magicians ஒரு கிராம சேவக அதிகாரி அமெரிக்க செல்ல ஆசைப்பட்டு அவன் கிராமத்திலிருந்து நகரத்துக்குச்செல்ல பஸ்ஸுக்காக காத்திருத்தலும் அவ்வேளையில் அதனூடே சந்திக்கும் மனிதர்களை பற்றிய கதை இது..

அப்போது அங்கு வந்து சேரும் துறவி ஒருவனின் கதை கிளைக்கதையாக விரிகிறது.. அப்போது ஒரு மலைக்கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு வயதானவரும் ஒரு அழகான இளம்பெண்ணும் வசிப்தாக காட்ட்ப்படுகிறது.. அந்த வயதானவருக்கு அந்த பெண் எல்லா பணிவிடைகளும் செய்கிறால் உடம்பு தேய்த்து குளிப்பாட்டி விடுவதில் தொடங்கி சமைத்து பரிமாறுதல் வரை அனைத்து வேலைகளையும் செய்கிறாள்..ஆரம்ப காட்சிகளை நோக்கும்போது தந்தை மகள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன் பின்புதான் தெரியவந்தது அந்த வயதானவரின் மனைவிதான் அந்த பெண் என்று.. என்ன கொடும!!

நான் முன்பு கண்ணம்மா விடயத்தில் சொன்னது போன்று இவளுக்கும் எந்த உடல் சுகத்தையும் அந்த கிழவனால் கொடுக்க முடியவில்லை.. (என்ன மயி___டா உங்களுக்கு கல்யாணம், அதுவும் இது போன்ற இளம் பெண்களோட என அந்த வேளையில் நினைக்காமல் இருக்க முடியவில்லை)
அப்போது அங்கே அந்த வயதானவருடன் சேர்ந்து மலைக்கு சென்று வேலை செய்ய அங்கே ஒரு இழைஞனும் இருக்கிறான்... பின் என்னவாகிருக்கும் அந்த இழைஞனுக்கும் அவளுக்கும் காதல், அவர்களுக்குள் கள்ள உறவும் ஏற்படுகிறது..
                                  கிழவனும் இளம் வயது மனைவியும் நடுவில் துறவியும்.

பின் இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கிறார்கள்.. அப்போ கிழவனை என்ன பண்ணுவது,  அவனுக்கு விஷம் வைத்து கொல்ல முடிவு செய்கிறார்கள்..
அப்பிடியே ஒருநாள் கிழவனுக்கு வைத்த சாப்பாட்டில் விஷத்தை கலந்துவிட்டு ஓடிப்போக தயாராகிறார்கள்.. அப்போது அவன் மனசில் ஒரு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என.. பின் அவளை விட்டுவிட்டு அவன் வெளிக்கிறம்புகிறான்..அடப்பாவி!! என்னையும் அழைத்துச்செல் என அவன் பின்னாலயே அவளும் ஓடி வருகிறாள் வரும்வேளையில் அவள் ஆற்றில் விழுந்து இறந்து போகிறாள்.. இப்போது இரண்டு உயிர்களை கொன்ற குற்றவுணர்ச்சி.. பின் என்னவாகிறான் அவந்தான்  அந்த துறவி.. அந்த பெண்ணை கிழவனோடும் வாழ விடல்ல  அவனும் அழைத்துச்செல்ல வில்லை ஆசை காட்டி ஆற்றில் விட்டுவிட்டான்..

இந்த இரு திரைப்படங்களின் இரு பெண்களும் ஒரே மனநிலையோடு  உடல் உணர்ச்சிகளை மறந்து வாழ்ந்தவர்கள்.. அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு இறுதியில் இறந்தும் போகிறார்கள்.. உலகில் இவ்வாறு  இன்றும் ஒவ்வோர் இடங்களிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது,,
 இதற்கு முன்பு வேறொரு தளத்தில் என்னால் எழுதப்பட்டிருந்த பதிவு இது..

பொன்னி நதி பாடல் வரிகள் - Ponni Nadhi Song Lyrics in Tamil

  ஓ ஓ காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான் நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும் பகை...