துள்ளித்திரிந்ததொரு காலம்,,,,,,
பள்ளி சென்ற காலம்
அது ஒரு பொற்காலம்
கண்னீர் இல்லை
கவலைகளும் இல்லை
மனசு முழுவதும்
மகிழ்ச்சிகளோடு
பயனித்த காலம்.....
வெள்ளைப்பூக்களாய்
தினம் தினம்
பூத்தோம்
பள்ளியெனும் தோட்டத்திலே
வாசங்களை மட்டும் சுமந்து கொண்டு
வஞ்சகமில்லாம்ல்.
பெற்றெடுத்தவளும் தாய்தான்
கற்றுக்கொடுத்த பள்ளியும்
தாய்தான்.
தாயின் மடியில்
அன்பை பெற்றோம்
பள்ளியின் மடியில்
அறிவை பெற்றோம்..
உலகை கண்டோம்
உணர்வுகள் பெற்றோம்...
தோழமை கொமண்டோம்
தோற்கொடுத்தோம்
நண்பர்களாக...
புன்னைத்தோம்
பூக்களாக....
மகிழ்ந்து சிரித்தோம்
மழைத்தூரல்களாக...
வயிற்றில்
வறுமையானாலும்
மனதோடு
கோடிஸ்வரர்களானோம்.....
பறவைகள் போல
பறந்த வானில் பறந்து சென்றோம்
பசியைக்கூட பலரும் சேர்ந்து
பகிர்ந்து கொண்டோம்.....
ரியாஸ்...
6 comments:
பெற்றெடுத்தவளும் தாய்தான்
கற்றுக்கொடுத்த பள்ளியும்
தாய்தான்.
நிதர்சன வரிகள் ரியாஸ்
எப்படி அபு தாபி வாழ்க்கை
கலாக்குங்க
நன்றி.... ஹாய் அரும்பாவூர்...
அபு தாபி வாழ்கை இப்பதான் சூடு பிடிக்குது..
வெயிலைச்சொன்னேன்,,,,
ரியால் மிக அழகான வெளிப்பாடு கவிதையில்.
படங்கள் வித்தியாசம் சூப்பர்..
ரியாஸ் பதிவு போட்டதும் தமிழிஸ் தமிழ்மணம் இரண்டிலும் பதிந்துவிடுங்கள். அப்போதான் பிறக்குத்தெரியும்..
இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்..
பழைய நினைவுகள்... அருமையான நியாபகங்கள்
Simple and Super
கவிதையும் அருமை படங்களும் அருமை
Post a Comment