பாடசாலை போகலாம் வாங்க



பாடசாலை கல்வி என்பது சிறார்களுக்கு இன்றியமையாதது.. அதன் மூலமே அவர்கள் உணர்வு பெறுகிறார்கள் பல விஷயங்களில் தெளிவு பெறுகிறார்கள். தொழில் செய்ய மாத்திரம் தான் கல்வி கற்க வேண்டுமெனறு நினைப்பவர்களும் உண்டு. ஆனால் என்னைப்பொருத்த வரை கல்வி என்பது ஒருவன் சமூகத்தோடு எவ்வாறு பழக வேண்டும், அவனின் சமூக பொருப்புகள், தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப வாழ்க்கை, கலாச்சாரத்தைப்பேனல், போன்றவைகளும் கல்வியின் மூலமே விருத்தி செய்யப்படுகிறது எனலாம்.. எழுத வாசிக்க தெரியாமலே நல்லமுறையில் சமூக வாழ்க்கையில் ஈடுபட்ட நம் மூதாதையர்களும் இல்லாமல் இல்லை.



ஆனாலும் சிலருக்கு பாடசாலை சூழல் என்பதே பிடிக்காது.. புத்தக கல்வி என்றாலே கசப்பாகயிருக்கும் காலையிலேயே எழுந்து சீருடையனிந்து புத்தக மூட்டை தூக்கிகொண்டு பாடசாலைக்கு செல்லவேண்டும். அங்கே சென்றதும் ஆசிரியர்கள் எல்லாமே ஹிடலர்களாகவே தெரிவார்கள்.. அவர்களின் கவனம் முழுவதும் வேறு திசைகளிலேயே இருக்கும் செல்லப்பிரானிகள் வளர்த்தல், விளையாடுதல், ஊர்சுற்றுதல் போன்றவைகளில். படிப்பதைத்தவிர மற்ற எல்லாத்திலும் திறமையானவர்கள் இவர்கள்.. பாடசாலை விடுமுறை கிடைத்தாலே சொர்க்கம் கிடைத்த உணர்வு இவர்களுக்கு. இதைச்சொல்லும் போது பசங்க படத்தில் வரும் "பக்கோடா" உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம் அவர் ஒவ்வொரு மாத லீவு நாடகளை எண்ணுவது செம காமெடி அதிலும் விஜேகாந்த் ஸ்டையிலில் மிமிக்ரி சான்சே இல்ல சூப்பர்..


ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் அண்மையில் என்னைப்பாதித்த ஒரு திரைப்படம். புத்தகத்தை கரைத்துக்குடித்தாலும் படிப்பே தலைக்கேறாத ஒரு சிறுவனின் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களையும். அவ்வாறானவர்களுக்கு எவ்வாறு கல்வியை ஊற்றலாம், அவர்களிடத்தில் வேறு என்ன திறமை இருக்கு என்பதனையும் மிக தத்ரூபமாக சொன்ன படம். ஹிந்தியில் வெளியான Taare Zameen Par இது 2007 ம் ஆண்டு வெளியானாலும் அண்மையிலேயே என்னால் பார்க்க முடிந்தது. ஹிந்தி மொழி சுத்தமாக தெரியாது என்பதால் ஹிந்திப்படங்கள் பார்பபது குறைவு. ஆனாலும் இப்படத்தை பார்க்க மொழியே தேவையில்லை அதன் காட்சிகளூடாகவே புரிந்து கொள்ளமுடிகிறது கதையை. இதுவே இப்படத்தின் வெற்றி என்பேன்.


படத்தின் கதையை முழுமையாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை காரணம் நீங்கள் எல்லோரும் இதை பார்த்திருப்பீர்கள் நான்தான் ரொம்ப லேட்டு.(லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவமில்ல)


இப்படத்தின் தயாரிப்பு இயக்கம் எல்லாமே அமீர்கான் என்ற அற்புத கலைஞனுடையது என்று அறிந்ததும் கொஞ்சம் வியந்து போனேன் அவருக்குள் இத்தனை திறமைகளா...அவர் இயக்கிய முதல் திரைப்படமும் இதுவே. ஒரு அனுபவ முதிர்ச்சியுள்ள இயக்குனருக்குரிய நேர்த்தியை இதில் கானலாம். அவவளவு அருமையான திரைக்கதை. படம் தொடங்கியது முதல் முடியும் வரை பார்வையாளனாகிய எங்களை வேறு திசையில் கவனத்தை செலுத்தவிடாமல் இருப்பதே இவரின் வெற்றி எனலாம் ஒவ்வொரு காட்சிகளும் மனதை தொட்டு செல்பவை. பல காட்சிகள் எங்கள் பாடசாலை வாழ்க்கையை ஞாபகபடுத்துகிறது. சில காட்சிகளில் அச்சிறுவனூடாக என்னை நான் கண்டேன். உதாரணம் தண்ணீர் குட்டையில் கப்பல் செய்துவிடும் காட்சி.

இப்படத்தின் பாத்திர தேர்வுகள் எல்லாமே அருமை. அதிலும் கதையின் நாயகனான இசான் என்ற அந்த சிறுவனின் நடிப்பு பாராட்டப்படவேண்டியது. பாடசாலை செல்லும் வழியில் புதினம் பார்த்துக்கொண்டே செல்வது, பாடத்தை கவனிக்காமல் வெளியில் நடக்கும் விஷயங்களை கவனிப்பது, அண்னனிடம் அடம்பிடித்து லீவுக்கடிதம் வாங்குவது. தந்தையிடம் மன்னிப்பு கேட்பது என எல்லா காட்சிகளிலும் கவனத்தை ஈர்க்கிறார்..



எல்லா அப்பாக்களையும் போலவே தன் பிள்ளை நல்லா படிக்கவேண்டும் என கண்டிப்பான அப்பாவாகவும், பாசத்தை காட்டும் அம்மாவாகவும் இசானின் பெற்றோர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் தன் பிள்ளையிடம் படிப்பைத்தவிர வேறு என்னவெல்லாம் திறமையிருக்கிறது என்பதை கவனிக்க மறக்கிறார்கள். இது தற்கால் நிறைய பெற்றோர்களின் நிலையே. ஆசிரியர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை கொடுக்க்பபட்ட கால எல்லைக்குள் எப்படியாவது புகுத்திவிடவேண்டுமென்றே நினைக்கிறார்கள் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் ஆசைகளை கவனத்தில் எடுப்பதில்லை ஒரு வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்களிடத்திலும் தனிப்பட்ட கவனம் செலுத்துவது சாத்தியப்படாத்துதான்..

இதற்கு இலகுவான வழியொன்றை இயக்குனர் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தில் சொல்லிருப்பார். அதுதான் தன் மனசில் உள்ள எல்லாவற்றையும் கடிதமாக எழுதி சக மாணவர்களைக்கொண்டே வாசிக்க வைப்பது இதன் மூலம் அவர்களின் விருப்பு வெருப்புகள் பிடித்தவை பிடிக்காதவைகள் வெளியில் கொண்டு வரலாம். ஆசிரியர்களும் தங்களின் குறைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பாக்யிருக்கும். இவ்வாறான நடைமுறையை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொண்டாலே போதுமானது.. நான் கல்வித்துறை அமைச்சரானால் இத்திட்டத்தை அமுல்படுத்தலாம் என நினைக்கிறேன் எப்புடி.. கல்விக்கு முடிவில்லை என்பது போல எனது கட்டுரையும் எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறது முடிவில்லாமல்.. கொஞ்சம் பொறுங்க....


இனி Taare zameen க்கு வருவோம்.. படத்தின் இடைவேளையின் போதே அமீர்கான் அறிமுகம் ஆகிறார். அதுவரைக்கும் படத்தின் நாயகன் இசான் என்ற அந்த சிறுவன் தான். வெளியூர் பாடசாலையில் ஹொஸ்டலில் தங்கி படிக்க அனுப்ப போவதை அறிந்த இசான்.

"அம்மா நான் இனி ந்ல்லா படிப்பேன்மா.. நான் படிக்க முயற்சி செய்றன்மா" என சொல்லி A.B.C.D சொல்லிக்காட்டுவதும் அதன் பிறகு ஹொஸ்டலில் விட்டு வந்த பின்பு. குளியலறையில் தனியாக் போய் அழுவதும் கண் கலங்க வைக்கும் காட்சிகள்.

தன் மகனை ஹொஸடலில் விட்டு பிரிந்து வரும் போது கண்கலங்குவதும் வீட்டிற்கு வந்து புத்தகத்தில் உள்ள் சித்திரத்தை பார்த்து கண் கலங்குவதும் தொலைபேசியில் தன் மகனிடம் பேசும் போது பதில் ஏதும் வராததால் மன்ம் உருகுவதும் ஒரு தாயின் உண்மையான் பாசத்தை வெளிப்படுத்தும் அழகான் காட்சிகள்..

அமீர்கான் மாணவர்களிடத்தில் நடந்துகொள்ளும் விதமும். இசானின் பிரச்சினையை அறிந்து அவனை பாடத்தின் பக்கம் ஆர்வமூட்டுவதும் அவனின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதும். இசானின் பெற்றோரை சந்திக்க வருதல், இறுதியில் சித்திர போட்டி ஒழுங்கு செய்தல் என எல்லா காட்சிகளிலும் மனதைத்தொடுகிறார்.


இசானின் அப்பா...இசான் அறிவித்தல் பலகையில் உள்ளதை வாசிக்கும் போது கண் கலங்குவதும் தூர நின்று பார்த்து செல்வதும். சித்திர போட்டியில் முதலாம் பரிசு பெற்ற இசானைப்பற்றி ஆசிரியர்கள் எல்லாம் பெருமையாக சொல்லும் போது தன் மகனை புரிந்து கொள்ளாமல் விட்டுட்டோமே என்ற் நினைப்பில் வருந்தி அழுவதும் கண்களை நனைக்கும் காட்சிகள்...


இப்படத்தில் காதல் கத்திரிக்கா என ஒன்றும் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய பலம். அவுத்துப்போட்டு ஆடும் ஹீரோயினும் இல்லை.

அடுத்தது எஹ்சான் லாயின் இசையில் பாடல்கள் கதையோடு பயனிக்கின்றது. நிறைய பாடல்கள் பின்னனியிலேயே ஒலிக்கிறது எல்லா பாடல்களும் கேட்கும் ரகம். பின்னனி இசையும் பிரமாதம். ஓளிப்பதிவு, எடிட்டிங் போன்றவைகளும் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. படத்தில் தேவையற்ற காட்சிகள் என எதுவும் இல்லை.. மசாலா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது புடிக்காதிருந்திருக்கிலாம்.

காட்சிப்படுத்தப்படும் பெண் உடம்பையும், நாயகனின் சுத்தி சுத்தி அடிக்கும் சாகஸ விளையாட்டுக்களையும் காட்டும் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் படங்களையும் பார்ப்பதைவிட இவ்வாறான படங்களை மொழி புரியாமலேயே பார்க்கலாம்..

மறக்காம ஒரு ஓட்டு குத்திட்டு போங்க நண்பர்களே அப்படியே ஏதாவது சொல்லிட்டும் போங்க..

தொடர்கிறது...!

அழுகிறது குழந்தை
யுத்தமில்லா
உலகம்
வேண்டுமாம்..
கிடைக்குமா...?
உங்கள் பகுதியில்...!



பிறந்ததிலிருந்தே
பின் தொடர்கிறது
வறுமையும்
வயிற்றுப்பசியும்.
மடிவதற்குள்
முற்றுப்பெருமோ
இந்த தொடர்தல்....!



மழை பெய்யாவிட்டாலும்
மனித இரத்தம்
பாய்ச்ச வேண்டாம்.
பூமி
தொடர்ந்தும்
புன்னகைக்கும்...!



மனிதர்களை
நேசியுங்கள்
புன்னகைகளை
பரிமாருங்கள்
தூக்கிலிடுங்கள்
துயரங்களை
வசந்தங்கள்
வாசல்
வரலாம்...!



சில
நொடிகளாவது
குழந்தைகளாய் மாறி
குதூகலியுங்கள்
கொள்ளை
ஆசைகள் மறந்து...!



தாய்மையை போற்றுங்கள்
பெண்மையை மதியுங்கள்
தள்ளாடும் கிழவியின்
தளர்ந்த மார்பில்
காமம் தேடும்
உலகம் இது...!


பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டு.. ஏதாவது சொல்லிட்டு போங்க நண்பர்களே..

மழை தருமோ இந்த மேகம்....!!!

இந்தப்பதிவு.. நான் வலைப்பக்கம் ஆரம்பித்து மூண்றாவதாக எழுதிய பதிவு அப்போது என் வலைப்பக்கத்தில் ஏற்பட்ட சில் குலறுபடிகளால் இப்பதிவு யாரையும் சென்றடையவில்லை அதனால் அதை மீள்பதிவாக இங்கே பதிவிடுகீறேன்.. நன்றி.. ரியாஸ்

மழை தருமோ இந்த மேகம்.... இது சினிமா பாடலல்ல.... வானவீதியில் ஓடும் மேகங்களை அண்ணாந்து பார்த்தபடி பல ஏக்கங்கள், பல கேள்விகள், பல எதிர்பார்ப்புகளை சுமந்தபடி இந்த மேகமாவது மழை தராதா...? இந்த பூமியையும் எங்கள் வாழ்கையையும் செழிப்பாக்காதா....? பயிர்களுக்கு உனவாகாதா...? என்ற ஒரு ஏழை விவசாயியின் சோகம் கலநத ஏக்கம் இது......


மழை நீரை நம்பி விவசாயம் செய்யும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்
என்பதால் மழை நீரின் அருமை பெருமை நன்றாகவே உணர்ந்தவன் நான். வானத்து மழையை நம்பி பயிர் நட்டுவிட்டு இன்றைக்காவது மழை வராதா என்று தினம்தோறும் வானத்தை எட்டிப்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் மழை தேடும் சமூகம் அது... "அறுவடை காலங்களில் மழை அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்படுவது வேறு கதை" ( அதுதான் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை இலங்கையில்) ஆனாலும் மழை வேண்டிய காலத்தில் மழையில்லாமல் பயிரோடு சேர்த்து அவர்களின் வாழ்கையும் வறண்டு போவதே இன்றைய கால நிலை..


காலநிலை மாற்றம் வெப்பம் அதிகரிப்பு மழையின்மை இதற்கெல்லாம் காரணம் என்ன... இயற்கையை அழிக்கிறோம் மரங்களை வெட்டுகிறோம் காலனிலையை குழப்புகிறோம் மழையை தடுக்கிறோம் இறுதியில் ஏசி அறையிலே தஞ்சமடைகிறோம் வசதியுள்ளவர்கள... மழையை நம்பிய ஏழை விவசாயிகள் என்ன செய்வார்கள் ஒட்டிய வயிரோடும் வற்றாத நம்பிக்கையோடும் தொடர்கிறது அவர்களின் காத்திருபபு காலம் உள்ளவரை...

ஆதி மனிதன் கண்டுபிடித்த ஆதி தொழில் விவசாயம் அல்லவா..... இன்றைய கால கட்டத்தில் அதிகம் வறுமையினால் வாடுபவர்களும் அந்த விவசாயிகள்தானே, ஒரு மருத்துவன் உயிரை காப்பாற்றுகிறான் ஒரு ஆசான் அறிவை வளர்க்கிறான் ஒரு பொறியியலாளன் நாம் வசிக்க கட்டுமானங்களை கட்டுகிறான் ஒரு நிர்வாகி சமூகத்தை நிர்வகிக்கிறான் இவை எல்லாவற்றையும் தொடர உயிர் வாழ வேண்டுமல்லவா உயிர் வாழ உணவு தேவை உணவை உற்பத்தி செய்து தருபவன் யார் விவசாயி அல்லவா அவன் போற்றப்படவேண்டியவந்தானே.... சமூகத்தில் மதிக்கப்படவேண்டியவந்தானே..... அவன் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும்தானே.....

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கிறது ஏனைய துறைகளில் உள்ளவர்கள் சிகரத்தை னோக்கி நடைபோடும் இவ்வேளையில் ஆதி மனிதர்கள் போலவே வாழ்ந்து வருகினறனர் அதே வேர்வை, அதே அழுக்குத்துனி, அதே வறுமை வளர்ந்த நாடுகளில் அதி நவீன தொழில்னுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் விவசாயத்துறையும்
விவசாயிகளும் எங்கயோ சென்றுகொண்டிருக்க நம் நாட்டின் நிலையோ நம்மில் பலர் அவர்களை காட்டுவாசிகளை போலவே பார்க்கின்றனர்...

எவவளவுதான் வெயில் மழை பாராமல் உழைத்தாலும் கிடைப்பதென்னவோ அன்றைய தேவையை மட்டும் நிரைவேற்ற போதுமான பெறுமதியே...இதில் பலருக்கு மூண்று உணவும் கஸ்டமே.. அவர்களின் வலியும் வேதனைகளுமே மிஞ்சும் சேமிப்பு

போஷாக்கின்மை, கல்வி கற்க வசதியின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் எத்தனை.... புத்தகம் தூக்க வேண்டியவர்கள் கூலித்தொழிலாளர்களாய், தாயிப்பாலைத்தவிர வேறு எந்த பாலையும் கானாத குழ்ந்தைகள் எத்தனை எத்தனை....

இவவாறிருக்கையில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்காவது நியாயமான விலை கிடைக்கிறதா இல்லை. மூண்று மாதம் ஆறு மாதம் வெயில் மழை பாராது அயராது உழைத்து களைத்தவர்களை விட பத்து பதினைந்து நிமிடங்கள் வியாபாரம் பேசும் இடைத்தரகள்,வியாபாரிகள் அல்லவா அதிக லாபம் ஈட்டுகின்றனர்

ஏதாவது பேசப்போனால் உங்கள் பொருள் இல்லாவிட்டால் வெளினாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்வோம் என்ற பயமுறுத்தல் வேறு....

தொடரும் வறட்சியினால் விளைனிலங்கள் பாலைவ்னமானால் உணவுத்தேவைக்கு எங்கே போவது. இன்னும் 40 , 50 வருடங்களில் கைனிறைய காசிருக்கலாம் கணனியிருக்கலாம் மென்பொருள் இருக்கலாம் உணவில்லையென்றால் காசும் கணனியும் மென்பொருள்களும் உணவைத்தேடித்தருமா....? இல்லை மழையைத்தான் பொழிவிக்குமா....? முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்ட மனனனான பராக்கிரமபாகு "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் கடலை சென்றடைய விடமாற்றேன்" என்றான் சொன்னது மட்டுமல்லாம்ல் பல நீர்ப்பாசனத்திட்டங்களை செயற்படுத்தினான் அதன் மூலம் மக்கள் இன்னும் பயன் பெறுகின்றனர்... இப்போதுள்ள ஆட்சியாளர்க்ளோ மழை பெய்தால் அவசரமாக கடலை சென்றடையும் திட்டம் அல்லவா போடுகின்றனர்..

நமக்கெல்லாம் என்னவோ மழை என்பது வெறும் நீர்த்துளிகள்தான் ஆனால் ஏழை விவசாயிகளுக்கு அது வாழ்வின் ஆதாரம் அல்லவா... ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு உணவுப்பருக்கை அல்லவா.......


இயற்கையை காப்போம்
மழையை வரவேற்போம்
ஏழைகள் வாழ்வு வளம் பெற
வழி செய்வோம்......
நாடு செழிக்கட்டும்
நம்மக்கள் வாழட்டும்
வளமுடன்.....................!

முடிந்தால் ஒரு ஓட்டு போட்டுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்க இந்த ஏழைக்கு..

நானும் அவளும்...!

வாசிகசாலை
புத்தகங்களாய் நான்
வந்தும்
வாசிக்காமல் செல்லும்
வாசகியாய் நீ..!


அமெரிக்கனின்
ஆணவம்
உனக்குள்..
ஈராக் தாயின்
கண்ணீர்
எனக்குள்...!



பாலைவன
பயனியாய் நான்
மின்னல்
காட்டி
ஏமாற்றிச்செல்லும்
மழை மேகமாய் நீ...!



அவள்
ஒரேயொரு
பார்வைதான்
இவன்
மனசு முழுக்க
காட்டுத்தீயாய்...!



தூண்டிலில்
மாட்டிக்கொண்ட
புழுவாய் என் மனசு
நழுவிச்செல்லும்
மீனாய் அவள்...!


அருங்காட்சியகத்தில்
அடுக்கப்பட்ட
அழகு பொருளாய்
அவள்
பார்த்துவிட்டுமட்டும்
பயனிக்கும்
பார்வையாளனாய் நான்...!



என் வீட்டு
ஜன்னலில்
பக்லில்தான் நிலவு
பக்கத்து வீட்டு
வாசலில்
புன்னகைத்தபடி...!



பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுங்கள்...
உங்கள் ஓட்டுகள் என் தேசிய விருதுகள்..

சும்மயிருக்க முடியாம கிறுக்கியவை....!

எல்லோரிடமும்
எல்லாமும்
இருக்கிறது
நல்ல
மனசைத்தவிர...!


ஓரே
வழியாகவே
போய்
வருகிறது
இயந்திர வாழ்க்கை
கடிகாரத்தை
போலவே...!


கணனிகளுக்குள்ளும்
கைத்தொலைபேசிகளுக்குள்ளும்
அடைப்பட்டுக்கிடக்கிறது
நம்
விருந்தோம்பல்களும்
நல விசாரிப்புகளும்...!

படித்தவனுக்கு
வேலையுமில்லை
பசித்தவனுக்கு
உணவுமில்லை
இதுதான்
எம் தேசிய கீதமோ...!

நினைப்பவை
கிடைப்பதுமில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை
இதுதான்
வாழ்கையா....!

வானம் போல்
வாழ்ந்திட நினைத்தேன்
இன்னும்
கீழேதான்
கிடக்கிறேன்
பூமியாய்.....!

தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்
வாத்தியாரிடம்
சொன்ன
எதிர்கால
இலற்சியங்களை...


பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு ஒரு ஓட்டும் போடுங்க
அப்பதான் உங்க நல்ல மனசு எனக்குத்தெரியும்..

சாதனை படைத்த இங்கிலாந்தும் சறுக்கிய ஆஸ்திரேலியாவும்.

இது வரை நாட்களாக விறு விறுப்பாக  நடைபெற்ற T 20 உலக கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டி மேற்கிந்திய தீவுகளின் பார்படோசில் நடைபெற்றது..

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை இறுதி நேரத்தில் மைக் ஹசியின் அபரிதமான திறமையால் பறித்துக்கொண்ட ஆஸ்திரேலியாவும். இலங்கையை இலகுவாக தோற்கடித்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன..

இதுவரை எத்தனையோ கிண்னங்கள் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருந்தாலும். இருபதுக்கு இருபது உலக கிண்னத்தை இதுவரை பெற்றிராத அதை பெற்றே தீர வேண்டுமென்ற வேட்கையுடன் மைக்கல் கிளாக் தலைமையிலான பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அனியும்...

இதுவரை சர்வதேச அளவில் உலக  கிண்ணங்கள் பெற்றிராத.. இப்போட்டியை வென்று அக்கனவை நனவாக்க வேண்டுமென்ற வெறியுடன்  கொலிங்வூட் தலைமையிலான இளமையான புது முகங்களுடனான இங்கிலாந்து அனியும்....

கிரிக்கட்டில் ஆதிவாசிகளான இவர்கள் கிரிக்கட் பகையாளிகளும் கூட
மொத்ததில் இது ஒரு குட்டி ஆஸஸ் தொடராகவே நடந்தது..

நானய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து  முதலில் ஆஸ்திரலியாவை துடுப்பெடுத்தாட பனிக்க அதன் படி  முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய ஆஸ்திரேலியா வார்னர் 02 , வொட்சன் 02 ,ஹடின் 01  என ஆட்டமிழந்து வெளியேறினாலும் வழமையைப்போல் யாராவது ஒருவர் அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை பார்வையாளர்களாகிய எங்களைப்போன்ற அனி வீரர்களிடமும் இருந்தது..  அதன் போலவே கிளாக்கும் டேவிட் ஹஸியும் இனைந்து மெதுவாக ஓட்டங்களை அதிகரிக்க.

கிளார்க் 27 ரண்களுடன் ஆட்டமிளக்க பின் வந்த கெமரன் வைட் தனது வழமையான அதிரடியை தொடங்கினார் அடடா இங்கிலாந்தின் நிலை அவ்வளவுதான் என்றிருக்கும் போது.. வைட் 19 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார் நாங்கு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உட்பட பின் ஜோடி சேர்ந்த அண்னன் தம்பிகளால் ஆஸ்திரேலியாவை 147 என்ற இலக்கு வரையே கொண்டு போக முடிந்தது...

டேவிட் ஹஸி 54 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.. Mr.Cricket ஆல் 10 பத்து பந்துகளில் 17 ஓடடங்களை மாத்திரமே பெற முடிந்தது இரண்டு பவுண்டரிகள் உட்பட...

கொலிங்கவூட் உட்பட இங்கிலாந்தின் பதிநொரு வீரர்களிடமும் எப்படியாவது வென்றிட வேண்டும் என்ற ஆக்ரோசம்,வெறி,தாகம், முயற்சி அவர்களின் களத்தடுப்பு பந்துவீச்சுகளில் தெரிந்தது... இவ்வளவு நாளும் ஒரு போட்டியை வெல்ல வேண்டுமென்ற போராட்டக்குனம் ஆஸ்திரேலியா அனியிடம் இருந்தது இன்று அதை இங்கிலாந்து பறித்துக்கொண்டதாகவே நான் உணர்கிறேன்...

இங்கிலாந்து பந்துவீச்சை பொருத்தவரை சைட்பொட்டம், கிரேம் ஸ்வான், ஸ்டுவட் ப்ரோட் மிகச்சிறப்பாகவே செய்திருந்தனர்..   ஸ்வானின் 4 ஓவர்களில் 17 ஓட்டங்கலே பெறப்பட்டன அருமையான பந்துவீச்சு ஸ்டுவட் ப்ரொடின் இறுதி ஓவரில் 7 ஓட்டங்களே பெறப்பட்டன - சயிட் அஜ்மல் போட்டியை பார்த்திருந்தால் நிசசயம் கவலைப்பட்டிருப்பார்..


148 என்பது இந்த மைதானத்தை பொருத்தவரை சிறந்த இலக்கே...
2 ஓட்டத்துடன் லம்ப் ஆட்டமிழக்கவே... ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கடா இங்கிலாந்தின் உலக கிண்ண கனவு அவ்வளவுதான்... என்றிருந்த நிலையில் அதன் பிறகுதான் தொடர்ந்தது ஆச்சரியம் கிரேக் கீஸ்வெஸ்டர் கெவின் பீட்டர்சன் இருவரும் இனைந்து பெற்ற 111 ஓட்ட இனைப்பாட்டம் இங்கிலாந்தின் வெற்றியையும் முதலாவது உலக கிண்ணத்தையும் உறுதிபடுத்தியது...
என்னா அடி.... ஒரு இறுதி போட்டியொன்றில் எந்தவித பதற்றமோ தடுமாற்றமோ இல்லாமல் மிக நேர்த்தியாக நிதானமாக  பீடர்சன்/கீஸ்வெஸ்டர் துடுப்பெடுத்தாடிய விதம் மிக அருமை.. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கண்டாலே தடுமாறும் இலங்கை, இந்திய துடுப்பாட்ட வீரர்கள் கவனித்துக்கொள்ளட்டும்..

இறுதியில் கீஸ்வெஸ்டர் 49 பந்துகளில் 63 ஓட்டங்கள் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்ளடக்கம் இங்கிலாந்துக்கு தேவையான னேரத்துக்கு கை கொடுத்திருக்கிறார் மனிதர்.. வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடிய  மெட் பிரயரை நிறுத்திட்டு ஏன் இவரை உள்ளே கொனர்ந்திருக்காங்கண்டு நினைத்தேன் அது இதுக்குத்தான் என நிறுபித்து விட்டார் மனிதர்...  அடுத்தவர் பீடர்ஸன் இவர் ஆடுகளத்தில் நின்றாலே ஒரு உற்சாகம்தான்
31 பந்துகளில் 47 ஓட்டங்கள் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட, இறுதியில் மோகனும் கொலின்வூட்டு முடித்து வைத்தனர் மூன்று ஒவர்கள் மீதமிருக்கையில்.


ஆஸ்திரேலிய பந்துவீச்சை பொறுத்தவரை பெரிதாக யாரும் பயமுறுத்தவில்லை..  கிளார்க் அவர்ளே முக்கியமான இறுதி போட்டியொன்றில் எப்படி வியூகங்கள அமைக்கவேண்டுமென உங்கள் சீனியரான ரிக்கி பொண்டிங்கிடம் ஆலோசனை பெற்றால் நல்லது..... பாகிஸ்தானுக்கு செல்லவேண்டிய வெற்றியை ஹசியின் மெஜிக் துடுப்பாட்டத்தால் பறித்துக்கொண்டு முதலாவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கனவுகளோடு களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே...

மாற்றமாக இது வரை உலக கிண்ணங்கள் எதனையும் வென்றிராத இங்கிலாத்துக்கு இது மிகப்பெரிய சாதனையே,, சந்தோசமே...  போட்டியை வென்றவுடன் அவர்களின் முகங்களில் தென்பட்ட சந்தோசம் ஆரவாரம் அடடா அடடா..... ஆஸ்திரேலியர்கள் இதனையும் வென்றிருந்தால் அவர்களின் ஆனவம் இன்னும் அதிகரித்திருக்கும் இங்கிலாந்து வென்றதே நலம் என நினைக்கிறேன்..

இறுதிப்போடடியின் நாயகனாக கிரேக் கீஸ்வெஸ்டரும் போட்டித்தொடரின் நாயகனாக கெவின் பீட்டர்சனும் தெரிவானார்கள்... நான்  மேலே சொல்ல மறந்த இன்நொருவர் பயிற்றுவிப்பாளர் அண்டி பிளவர் இவரின் பயிற்றுவிப்பின் கீழ் இங்கிலாந்தின் முன்னேற்றம். இந்த வெற்றியில் இவருக்கும் பங்குண்டு..

மூன்று உலக கிண்ண இறுதிபோட்டிகளில் தோற்று நாடு திரும்பிய இங்கிலாந்து... இம்முறை உலக கிண்ணத்துடன் நாடு திரும்பும் ராஜ மரியாதை கிடைக்கலாம்....

அட மறுபுரத்தில் பெண்கள் உலக கிண்ண இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 83 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் நியுசிலாந்துக்கெதிராக..
ஆஸ்திரேலியா அக்கா மார்களுக்கும் ஆப்புத்தானோ,,,, இன்றைக்கு...


தூங்காமல் நித்திரையை தியாகம் செய்து ஒரு பதிவு போட்டிருக்கேன் ஏதாவது திட்டிட்டு ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க மஹா ஜனங்களே.....

நீண்ட நாள் உயிர் வாழ ஆசையா...?

இன்று உலகில் அதிகமானோரின் விட முடியாத பழக்கமாகிக்கொண்டு வருவது புகைப்பிடித்தலாகும்.. நாளுக்கு நாள் அதன் பாவனையாளர்கள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றனர். இதில் வினோதமான விடயம் என்னவென்றால் புகையிலை சம்பந்தமான பொருடகளிலேயே.. "புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு", " புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்", "புகைத்தல் உங்கள் ஆயுளை குறைக்கும்" என பலவாரான எச்சரிக்கைகள்,விளம்பரங்கள் இடப்பட்டிருந்த போதும் எந்தவித கவலையும் இல்லாமல் மக்கள் அதனை பயன்படுத்துகின்றமையே.. இதற்கான காரனம்தான் என்ன... உயிர் மேல் ஆசையில்லாமையா..? அலலது அவ்வளவு இலகுவாக புற்று நோய் வந்து விடாது என்ற நம்பிக்கையா...?

இங்கே கவலைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இப்பழக்கம் ஒரு நவீன நாகரீகமாகவே வளர்ந்து கொண்டு வருவது.. இதில் பலரும் ஏன் எதற்காக என்று தெரியாமலே இப்பழக்கத்தில் சிக்கிக்கொள்வதே..

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி.

புகையிலை சம்பந்தப்பட்ட பாவனையினால்

*ஒவ்வொரு 6.5 செக்கனுகிடையில் ஒருவர் இறக்கின்றார்

* ஒவ்வொரு வருடமும் 5.4 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்


* இந்நிலை தொடர்ந்தால் 21 ம் நூற்றாண்டில் 1 பில்லியன் மக்கள் இறப்பார்கள்


* புகை பிடிப்பவர்கள் இறக்கிறார்கள் 15 வருடங்களிக்கு முன்பாகவே புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் பொழுது..

இதையும் கொஞ்சம் பாருங்க.....













ஏதாவது சொல்லிட்டு ஒரு ஓட்டும் போட்டுட்டு போங்க மக்கள்ஸ்...

Riyas,

அன்னையே உன்னை போற்றுகிறோம்....!




                                               தாயே
பத்து மாதங்கள் சுமந்தாய்
கருவினிலே..                         
பல காலங்கள் சுமந்தாய்
நெஞ்சினிலே..
உன் உயிரை
என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை
என் உடலாக்கினாய்...!


துடி துடித்துப்போனாய்
துயரங்கள் கண்டாய்
தூக்கம் தொலைத்தாய்
என்னை ஈன்றெடுத்தாய்..
சில நிமிடங்கள்
நீயும் இற்ந்தே பிறந்தாய்
வார்த்தைகளினால்
வரைந்திட முடியா
வேதனைகளினால்...!



உலகை கண்டேன்
உன் கண்களினால்
உனர்வுகள் கொண்டேன்
உன் ஸ்பரிசங்களால்..
பாசங்களால்
பரவசம் கொடுத்தாய்.
மழலைச்சிரிப்பால்
மனம் மகிழ்ந்தாய்...!



தாயே
உன் பார்வைகளால்
பசியாருகிறேன்..
உன் வார்த்தைகளால்
கவலை மறக்கிறேன்..
உன் அன்பினால்
நானும் அழகாகிறேன்..



தாயே
உன் பாதங்களுக்கடியில்
சொர்க்கமாம்
சொல்கின்றனர்..
நான் சொல்கிறேன்
உன் மடியில்
புரண்டு விளையாடிய
காலம்
சொர்க்கத்தில் வாழ்ந்த
பொற்காலம்..



ஆகாயம் நோக்கி
பறந்த பறவை
இரை தேடி
பூமிக்கு வருவது போல
நான்
உலகின் எங்கு சென்றாலும்
என் ஞாபங்கள்
மட்டும்
உன்னிடம் வந்து சேரும்..!


அன்னையே
உன்னைப்போற்ற
ஓர் தினம் எதற்கு
அனுதினமும்
நீ
போற்றபடவேண்டியவளே...!


ரியாஸ்..

உங்கள் ஓட்டுகளினால் என் வாழ்த்தை பரப்புங்கள் உலகிற்கு..








கொலமபஸ் இந்திய பெண்னை மணந்திருந்தால்....!

கிரிஸ்டோபர் கொலம்பஸ் தற்செயலாக இந்தியா வந்து இந்திய பெண்னை
மணந்திருந்தால். அவர் நாடு கான் பயனம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் ஒரு கற்பனை. நகைச்சுவைக்காக மட்டும்.

"தமிழ் பேசுபவர்களாகிய எம்மிடத்தில்தானே நகைச்சுவை, லொள்ளு, குறும்பு.கிண்டல்,கிளரல் எல்லாம் ஊறிப்போய் கிடக்கிறதே"


வாங்க கொலம்பஸ் ஐயாவின் இந்திய மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட..

தொடங்கிடுச்சி விசாரன...             

        



# எங்க போக கிளம்பிட்டிங்க....?

# யாருக்கூட போக போறீங்க...?

# எதுக்கு போறீங்க...?

# எப்படி போறீங்க...?

# எத தேடிக்கிட்டு போக போறீங்க...?

# அதுக்கு நீங்களேதான் போகனுமா வேற யாரும் இல்லயா...?

# உங்ககூட பொண்னுங்க யாராவது வாறாங்களா...?

# நீங்க போனா நான் தனியே இங்க என்ன பண்றது...?

# நானும் உங்ககூட வந்திடவா...?

# திரும்பி எப்ப வருவீங்க...?

# இரவுச்சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்து போகேலாதா...?

# திரும்பி வரும் போது எனக்கு என்ன கொண்டு வருவீங்க...?

# எனக்கெண்டா விளங்கள்ள என்னத்த கண்டுபுடிச்சி என்னத்த் கிழிக்க போறீங்கண்டு..
# எங்கிட்டயிருந்து விலகியிருக்கிறதுக்கு நீங்க போடுற ப்லேன்தானே இது...?

# நான் என்ன பாவம் பன்னிநேன் உங்களுக்கு...?

# இன்னும் எத்தன நாடு பாக்கியிருக்கு கண்டுபிடிக்க...?

# ஒரு கிழமையில வராட்டி நான் எங்க அப்பா வீட்டிக்கு போயிடுவேன்...

# எங்க போனாலும் எனக்கு செய்தி அனுப்புவிங்களா...?

# இதேமாதிரிதான் முன்னமும் ஒரு தடவ போய் மாசத்துக்கு பிறகுதான் வீடு திரும்பினீங்க..

# வீட்டோட இருக்குற மாதிரி ஒரு வேலய தேடிக்கேலாதா...?

# நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா எனணெய் தேச்சி குளிக்க முடியுமா...?

# போறத்தோட அப்டியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க...?


அப்பாடா இவ்வளவுத்துக்கும் பதில் சொல்லி கிளம்புறதுக்குள்ள... பத்து நாடு கண்டுபுடிச்சிடலாம்... புதிய நாடும் வானாம் மண்னாங்கட்டியும் வானாம்..

வீட்டோடயே இருந்திடலாம்னு நினைத்திருப்பாரு கொலம்பஸ் சார்..



நகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புன்படுத்த அல்ல.. அப்டியே ஒரு ஓட்டு போட்டா நல்லயிருக்குமில்ல.. நாங்க காசு பணமா கேட்கிறோம்... உங்க அன்பத்தான...



Riyas

எனக்குப்பிடித்த பத்து படங்கள்.... தொடர் பதிவு.

தொடர்பதிவு.. அண்மைக்காலமாக அவர் அழைத்தார் இவர் அழைத்தார் என சொல்லி ஒவ்வொருவரும் "எனக்கு பிடித்த பத்து படங்கள்" என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம்மல யாருங்க தொடர் பதிவுக்கெல்லாம் அழைக்கப்போறாங்க அதுதான் நாங்களாகவே தொடர்பதிவுன்னு பில்டப் கொடுத்து வந்துட்டமில்லே....

விருந்துக்கு கூப்பிடாட்டியும் பந்திக்கு முந்திருவமில்லே..

அம்மா காலம் தொடக்கம் அக்கா காலம் வரை (அதுதாங்க ஜெயலலிதா காலம் முதல் திரிஷா காலம் வரை கொஞ்சம் வித்தியாசத்திற்காக இப்படி சொன்னேனுங்க... எவ்வளவு நாளைக்குதான் எம்.ஜி.ஆர் காலம் முதல் சிம்பு காலம் என்று பறைசாற்றுவது நம்மலெல்லாம் குஷிப்படுத்திய ஹீரோயின்களையும் மறக்க கூடாதில்லே நம்ம வல்லுவர் தாத்தாவே சொன்னாப்லே..

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று"

இந்தக்காலத்துல ஹீரோயின் இல்லாம படம் எடுத்தா எந்த பயலாவது தியேட்டர் பக்கம் கூட தலை வெச்சு படுப்பானா... நீங்களே சொல்லுங்க) வெளிவந்த எத்தனையோ அருமையான தமிழ் திரைப்படங்களில் பத்தை தெரிவு செய்வதென்பது மிகவும் கடினமே....

"எல்லாம் சரி புடிச்ச பத்து படத்த இன்னும் சொல்லலியே அதை முதல்ல சொல்லு....." யாரோ சொல்றது கேட்குது இதோ வந்துட்டேனுங்க... சொல்ல வந்ததே மறந்து போச்சே... ஆஹா என்ன பன்றது.... சரி சமாளிக்க வேண்டியதுதான்... "வட போச்சே"



அரங்கேற்ற் வேளை....     
பிரபு, ரேவதி, v.k.ராமசாமி போன்றோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். படத்தின் நாயகன் பிரபு என்றாலும் என்னைப்பொருத்தவரை படத்தின் நாயகர்கள் v.k. ராமசாமியும் இயக்குனர் பாசிலும்தான் v.k.r படம் முழுக்க வருகிறார் தன் நகைச்சுவை பேச்சோடும் இயல்பான நடிப்போடும் இவரை மையமாக வைத்தே கதை பின்னபற்றிருக்கிறது. இது போன்ற நடிகர்கள் இனிமேலும் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்களா...? சந்தேகமே அவவளவு அற்புதமான நடிப்பு அவரிடம். அவர் "ஐய்யய்யோ" எனும் வசனத்தை உச்சரிக்கும் விதமே தனிச்சிறப்பு.

 மற்றொருவர் இயக்குனர் பாசில் மலையாள இயக்குனர் என்ற போதிலும் பல அருமையான திரைப்படங்களை தமிழ் திரைக்கு கொடுத்தவர். இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை நகைச்சுவை மழையாய் பொழிந்திருப்பார். ஆரம்பத்தில் ரேவதி-பிரபு மோதல்கள்,பூட்டில்லாத கழிவரை காட்சிகள், ராமசாமிக்கு தேங்காயினால் அடிபடும் காட்சியாகட்டும், தவறுதலான தொலைபேசி அழைப்புகளாட்டும், இறுதினேர ஆள்மாறாட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளாட்டும் அத்தனையும் கண்மூடாமல் பார்க்க வைக்கும் அழகான காட்சிகள். இப்படத்தில் வரும் வில்லன், அவ்வப்போது வந்து இறுதியில் சண்டை போட ஆள்கூட்டி வரும் ஜனகராஜ் உட்பட எல்லோரும் மிக அருமையாக நடித்திருந்தனர்.

இப்போதெல்லாம் இவவாரான முழுநீள நகைச்சுவை கலந்த படங்களின் வருகை குறைந்திருப்பது வருந்தக்கூடியதே. நண்பர் சக பதிவர் ஹாய் அரும்பாவூர் கூட தனது "சிரிக்க மறந்த திரை உலகம்" என்ற பதிவுகளில் இதைப்பற்றி ஆதங்கப்பட்டிருந்தார் அவரின் கருத்திற்கு நானும் உடன்படுகிறேன்.

"அரங்கேற்றவேளை விழிகளின் விருந்து..."


இம்சை அரசன் 23ம் புலிகேசி. 

சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு இரட்டை வேடத்தில். நாட்டை கெடுக்கும் மன்னனாகவும், நாட்டை காப்பாற்ற புறப்படும் புரட்சி வீரனாகவும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார். ஆங்கிலேயர் காலத்தை மையமாககொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அச்சு அசலாக அக்காலத்தையே பிரதிபலித்தது காட்சியமைப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவினூடாக... புலிகேசி மன்னனாக தனது வழமையான நகைச்சுவை பானியினாலும்.. புரட்சி வீரனாக ஒரு நாயக அந்தஸ்துடனும் கம்பீரத்துடனும் இதற்கு முன்னர் பாத்திராத பாத்திரத்திலும் இருவேருபட்ட நடிப்பாலும் தனனால் நகைச்சுவை மற்றுமல்லாது வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்பதையும் நிருபித்திருந்தார் வடிவேலு. இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிக மிக அருமை அவ்வளவு அழகாக செதுக்கிய்ருக்கிறார் இயக்குனர்.

மனோரமா,நாசர்,இளவரசு,மோனிகா,தேஜாஸ்ரீ ம்ற்றும் அனைத்து துனை நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் அந்த வெள்ளைக்கார நடிகர்கள் உட்பட. மொத்தத்தில் இது ஒரு நகைச்சுவைத்திருவிழா...

"இம்சை அரசன் சிரிக்க வைப்பவன்"

காதலுக்கு மரியாதை.....

விஜய்யின் தற்கால மசாலா திரைபபடங்களோடு உடன்பாடில்லை என்றாலும் அவரின் ஆரம்ப கால திரைப்படங்களில் சில குறைசொல்ல முடியாதவை. அவ்வாறு வெளிவந்தவற்றில் ஒன்றுதான் இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் உருவான "காதலுக்கு மரியாதை" ஷாலினிக்கு இது முதற்படம் கதாநாயகியாக மிக அருமையாகவும் இயல்பாகவும் நடித்திருப்பார்... விஜய்யின் நடிப்பும் இயல்பாகவே இருக்கும் இப்போதைய வெட்டி பந்தா போலில்லாமல்.

இத்திரைபபடத்தின் வெற்றிக்கு பின்னால் உழைத்தவர்களில் இயக்குனர் பாசில் முதன்மையானவர் அவவளவு அருமையான இயக்கம்.. உயிருக்குயிராய் காதலித்த காதலர்கள் தனது பெற்றோர் தங்களால் மனவேதனை படக்கூடாதென்பதற்காகவும், பெற்றோர் மீது கொண்ட மரியாதைக்காகவும் காதல் மீதுள்ள மரியாதைக்காகவும். காதலர்கள் பிரிந்து செல்வதாய் இந்தக்கதையை அழகாய் சொல்லியிருப்பார். மற்றவர் இசையமைப்பாளர் இளையராஜா அனைத்து பாடல்களுமே ஒன்றைவிட ஒன்று மிஞ்சுமளவிற்கு சூப்பர் ஹிட். பாடலாசிரியர் பழ்னிபாரதியும் மறக்கமுடியாதவர் எல்லா பாடலிலுமே அருமையான பாடல் வரிகள். பழனிபாரதி இப்போ எங்கே போனார்....?

இப்படத்தின் இறுதிக்காட்சியில் ஷாலினியின் மாலையை கொடுப்பதற்காக விஜய்யும் அவரது பெற்றோரும் ஷாலினி வீட்டுக்கு செல்லும் காட்சியில். அங்கே ஷாலினியின் அம்மா ஷாலினிக்கு திருமனம் நிச்சயித்திருக்கிரோம் அவளை வாழ்த்திற்று போங்க என்று சொல்வதும் விஜய்யின் அம்மா ஷாலினியை எங்க வீட்டுக்கு அனுப்பிவைங்க நாங்க நல்லா பாத்துக்கிறோம் என்று சொல்வதும் அதற்கு ஷாலினியின் அம்மா யார் வேனாம்னா...அவளை உங்க்ளோடு கூட்டிட்டு போங்க என்று சொல்வதும்.. ஓர் அழகிய கவிதை..... அவ்வளவு அருமையான் காட்சி அது.. யாரும் எதிர்பார்த்திராதது. இப்போதை காதல் என்ற பெயரில் காமத்தை காட்டும் படங்களோடு ஒப்பிடுகையில் இப்படம் எந்தவித விரசமோ ஆபாசமோ இல்லாத பார்க்ககூடிய படம்.

"காதலுக்கு மரியாதை காதல் பரிசு"


அன்பே சிவம்....

கமல்ஹாசனின் எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும் மனதோடு ஒட்டிக்கொண்ட படம் என்றால் அது அன்பே சிவம்தான். அதன் திரைக்கதை நகர்ந்து செல்லும் விதமும் படம் முழுவதும் தூவப்பட்டிருக்கும் நகைச்சுவையும் ரசிக்க வைக்கிறது.கமலின் வயது முதிர்ந்த தோற்றமும்,அனுபவ முதிர்ச்சியும்,நகைச்சுவைத்தன்மையும்,லேசான புன்னையும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். மாதவனும் மிகச்சிறப்பாகவே நடித்திருப்பார். கமல் மாதவனுக்கிடையிலான உரையாடல்கள் நகைச்சுவை கலந்த இனிப்புகள். மழை வெள்ளத்தின் போதான காட்சிக்ள், ஹோட்டல் அறையில் இருவரும் தங்கும் காட்சிகள், பஸ் பயனக்காட்சிகள், வீதி நாடக காட்சிகள் என மனதை விட்டு நீங்காத காட்சிகள் எனலாம். கமலின் கதைக்கு திரைப்படத்தை இயக்கியவர் தற்போதைய மசாலா படங்களின் நாயகன் சுந்தர் சி என்பது கொஞ்சம் ஆச்சரியமான உன்மை.

"அன்பே சிவம் அன்பு கொண்ட இதயம்"


வெற்றி கொடி கட்டு...

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிவரும் ஆபாசமில்லாத, ஹீரோயிசமில்லாத, மெஜிக் இல்லாத இயல்பான திரைப்படங்களில் இயக்குனர் சேரனின் திரைப்படங்களும் குறிப்பிடத்தக்கவை. வெளிநாட்டு உழைப்பை நம்பி ஏமாந்து பணத்தையும் காலதையும் வீனாக்காமல், உள்நாட்டிலேயே முயற்சியோடும்,உறுதியோடும் உழைத்தால் முன்னேற முடியும் என்ற கதையமைப்பில் உருவான படமே இந்த "வெற்றி கொடி கட்டு"
முரளி,பார்த்திபன்,மீனா,மாளவிகா,வடிவேலு போன்றவர்கள் இதில் நடித்திருந்தனர். சேரன் இயக்கிய ஏனைய பட்ங்களான பாரதிகண்னம்மா, பொற்காலம்,தேசிய கீதம், பாண்டவர் பூமி,ஒட்டோ கிராப்,தவமாய் தவமிருந்து,மாயக்கண்னாடி ஆகியவையும் பார்க்க கூடிய திரைப்படங்களே.

"வெற்றி கொடி கட்டு முன்னேறு"


அன்னியன்.... 

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான இப்படம். வழக்கமான மசாலா ஹீரோயிச படமாக வகைப்படுத்தப்பட்டாலும். இதில் வரும் "அம்பி (விக்ரம்)" என்ற பாத்திரம் எதிர்கொள்ளும் அதன் மூலம் சுட்டிக்காட்டப்படும் விடயங்களான சட்டங்களை கடைபிடிக்காமை, தனி மனித ஒழுக்கமின்மை, அரசாங்க அதிகாரிகளின் கடமை மீறல், உயிர்களை மதிக்காமை, மனிதாபிமானமின்மை, பொது மக்களிடமிருந்து சுரண்டல்கள், அரசவரி செலுத்தாமை, மன உளைச்சல்கள் இவைகள் யாவும் நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவை கடந்து செல்பவையே...
இது ஒவ்வோர் தனி மனிதனையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது.. அவவாறு தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒருவரின் உள் மனக்கிடக்கைகள், ஆதங்கங்கள் வெறியாகி multiple personality எனும் வேறொருவராக மாறி சம்பந்தபட்டவர்க்ளை பலிவாங்கும் கதையை பிரம்மாண்டம்,கிராபிக்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் ஷங்கர். விக்ரம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார். இதன் வசனகர்த்தா அமரர் சுஜாதா அவர்களின் வசனங்களும் மறக்கமுடியாதவை.
"அன்னியன் தன்டனை"

ரத்தக்கண்ணீர்


ஒரு சில படங்கள் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களின் மனதில் இருந்து நீங்குவதில்லை. எப்போதும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் “ரத்தக்கண்ணீர்” என்ற காலத்தால் அழியாத காவியம்.
ஒரு சில படங்களை நாம் மிகத்தாமதாக பார்ப்போம் பார்த்து விட்டு அட! இத்தனை நாள் இவ்வளவு அருமையான படத்தை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நம்மை நாமே நொந்து கொள்வோம். எனக்கு அது போல பல படங்கள் ஆகியுள்ளது அவற்றைப்போல படங்களில் ஒன்று தான் MR.ராதா அவர்களின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த “ரத்தக்கண்ணீர்”. இந்தப்படத்தின் வசனங்களும் காட்சியமைப்புமே இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணங்களாகும்.
இப்ப எல்லாம் படங்களில் அரசியலை மூட நம்பிக்கையை கிண்டலடிக்கும் காட்சிகள் நிறைய வருகிறது ஆனால் இவற்றிக்கெல்லாம் தாய் என்றால் நான் கண்டிப்பாக இந்தப்படத்தின் வசனங்களையும் அதை லாவகமாக கையாண்ட MR.ராதா அவர்களையும் தான் கூறுவேன். அடேங்கப்பா! என்னமா பேசி கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு வசனத்தையும் கேட்கும் போது கொஞ்சம் கூட பழைய படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்த அளவிற்கு வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார். எப்படி இதெல்லாம் யோசிக்க முடிந்தது! எப்படி 50 வருடம் கழித்துப் படம் பார்த்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி வசனங்களை அமைக்க முடிந்தது! என்று யோசித்தால் எனக்கு தலை சுற்றுகிறது. இதை கொஞ்சம் கூட மிகைப்படுத்திக் கூறவில்லை.
நன்றி http://www.giriblog.com/

சர்வர் சுந்தரம்...

நடிகர் நாகேஷ் அவர்களுக்காகவே இத்திரைப்படம் என்னைக்கவர்ந்தது ஒரு நாயகனாகவே நடித்திருப்பார் இதில் அவர். நகைச்சுவை காட்சிகளாகட்டும் ஏனைய காட்சிகளாட்டும் மிகச்சிறப்பாக செய்திருப்பார். அம்மாவை பார்த்து நான் அழகாகவா இருக்குறேன் என கேட்கும் காட்சி என்னை மிகவும் பாதித்த்து... என் கண்களையும் கலங்க செய்தது... அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் காட்சியில் நடனம் கூட அருமை...

சர்வர் சுந்தரம் வாங்க சாப்பிடலாம்...

(சர்வர் சுந்தரம் பிடித்த படம் என நான் சொல்லும் போத... நான் வயசானவன் என
நினைக்காதீங்கோ... நான் இன்னும் சின்னப்பையன் தானுங்கோ... ரசிக்கத்தெரிந்தவனுக்கு புதிய படமென்ன பழைய படமென்ன..)


அங்காடித்தெரு.... 

யதார்த்தமில்லாத வன்முறை,ஆபாச காட்சிக்ளை காட்டி அடிமட்ட ரசிகர்க்ளை உசுப்பேத்தி வியாபார லாபம் தேடும் சின்னத்தனமான இயக்குனர்களுக்கு மத்தியில் நாம் அன்றாடம் சந்திக்கும் கடந்து செல்லும் மனிதர்களைப்பற்றி அவர்களின் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் பற்றி பேசியது. வாழ்கையில் ஜெயித்த ஒரு தனி மனிதனைப்பற்றி வந்த படங்களைப்பார்த்து பார்த்து சலித்துப்போன நிலையில் வாழ்க்கையோடு போராடும் மக்களை மையமாக வைத்து எடுத்த படம் என்பதால் என்னை மிகவும் கவர்ந்தது...  இத்திரைப்படம் பற்றி அதிகமான கருத்துக்கள் வந்து கொண்டிருப்பதால் பெரிதாக சொல்லவிலலை

"அங்காடித்தெரு வாழ்க்கை"


பசங்க.....

இத்திரைப்படத்தை பற்றி பெரிசாக நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை...



"அம்மா குஞ்சுமனி வெளியே வந்துட்டும்மா...

என் செல்லம் உள்ள் எடுத்து போட்டுக்கடா

போட்டுட்டேன்மா...."

"பசங்க பொல்லாதவங்க"

என் ரசனையை சொல்லிபுட்டேன்... இப்ப உங்க ரசனையை வெளிக்காட்ட ஏதாவது திட்டிட்டு போங்க.. ஒரு ஓட்டு குத்திட்டு... ஓட்டு கேட்டு கேட்டே அரசியல்வாதி ஆயிடுவேன் போல தெரியுதே... கடவுளே காப்பாத்து..



வாங்க தேடலாம் மனிதனை.



இன்னும் நாற்பது ஆண்டுகளில்,ஐம்பது ஆண்டுகளில் எண்னை வளம் இல்லாமல் போகலாம்,குடி நீர் இல்லாமல் போகலாம்,உணவு பற்றாக்குறை ஏற்படலாம்,காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கலாம் என சிந்திப்போர் கவலைப்படுவோர் எத்தனையோ பேர் உண்டு இப்பூமியில் என்னையும் சேர்த்துத்தான் (எனது முன்னதான
"மழை தருமோ இந்த மேகம்" என்ற பதிவில் இதைப்பற்றி சொல்லிருக்கேன் ஆனாலும் இவை எல்லாவற்றையும் விட மேலாக உலகிலேயே மிக அரிதாக கிடைக்ககூடியதொன்று அதுவும் இன்னும் கொஞ்ச காலத்தில் அவவாரானதொரு வசனம் இருந்ததைக்கூட மக்கள் மறந்திடலாம் அதுதான் "மனிதநேயம்"இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோமா... இதை எங்கே பெற்றுக்கொள்ளலாம்.. அதன் விலை
என்ன...?

மனிதம் பற்றி பேசவோ.. மனித நேயம் பற்றி எழுதவோ.. அறிவோ அனுபவமோ வயதோ எனக்கில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் என் மனதில் தோன்றுபவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.


அவரவர் மதங்களும் கலாச்சாரங்களும் அவரவர்களுக்கு முக்கியம்தான்.எந்த மதமானாலும் எந்த கலாச்சாரமானாலும் எந்த இனமானாலும் எந்த நாடானாலும் எந்த நிறமானாலும் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற ஒரு புள்ளியில் இனைகிறோம் அல்லவா... அது வெறும் இனைப்பாகயில்லாமல் மனிதநேயம் என்ற பொதுக்கோட்பாட்டுடன் இனைந்தால் மனிதனுடன் மனிதநேயமும் உயிர் வாழும் அல்லவா

கொடுமைகள்,கொடூரங்கள்,உயிர்ப்பலிகள்,வன்முறைகள்,இரத்தங்கள்,அவலங்கள்,

அகதிகள் எதற்காக இதற்கெல்லாம் காரனம் எதுவோ... எல்லாவற்றிக்கும் மூலக்காரனம் மனித நேயம் தொலைந்து போனமையே.இது தொடர்ந்தால் மனித உயிர்களும் மலிவாய் போய்விடலாம் இவ்வுலகில்.
.
மற்றவர்களுக்குக்கு உதவவும் வேண்டாம்.. உணவளிக்கவும் வேண்டாம்.. உயிரோடு வாழவிடுங்கள். அவர்கள் தொடர்வார்கள் அவர்களின் வாழ்க்கையை. பரந்து விரிந்த இந்த பூமியில் எங்கும் கிடைக்கலாம் அவர்களுக்கான உண்வோ.. உடையோ.. உறையுலோ...

இதைச்சொல்லும் போது யாழ்ப்பானத்தைச் சேர்ந்த "தமிழினி" எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது இதோ...

ஓசோன் துளைகளை
விட்டு விடுங்கள்
துப்பாக்கி முனைகளின்
துளைகளை
அடைக்கப்பாருங்கள்
பூமி தொடர்ந்தும் சுவாசிக்கும்.

இரத்தமோடும் இப்பூமியிலேதான் பூக்களும் புன்னைகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது வாங்க நிரப்பலாம் இப்பூமியை பூக்களாலும் புன்னகைகளாலும்.வழி செய்வோம் மனிதநேயம் வளர.


நான் சொன்னது சரியா.. பிழையா.. மறக்காமல் சொல்லிட்டு போங்க மகா ஜனங்களே..


அப்படியே ஒரு ஓட்டு போட்டவாறு..


Riyas

"எனக்குப்பிடித்த கிரிக்கெட்"

"எனக்குப்பிடித்த கிரிக்கெட்" என்ற தலைப்பில் கடந்த மாதங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை/ விருப்பங்களை சொல்லியிருந்தார்கள் தொடர் பதிவாக.. நான் புதிதாக வலைப்பதிவு தொடங்கியவன் என்பதால்... எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அன்மையில் பதிவர் சரவணக்குமாரின் தொடர் பதிவில் இறுதியில் இப்படியிருந்தது...


'பதிவுலகில் அனைவருமே இந்தத் தொடரை எழுதி முடித்துவிட்டதால், புதிதாக வலையில் எழுதத் தொடங்கியிருக்கும் நண்பர்கள் விருப்பமிருப்பின் இதைத் தொடரலாம்."




இதைப்பார்த்த்தும் நானும் எழுத தொடங்கிவிட்டேன் ஆவலுடனே...
எனக்கு பாடசாலை காலத்திலிருதே கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.. விளையாடுவதிலும் போட்டிகளை பார்ப்பதிலும் சரி. நேரம் கிடைக்கும் நேரமெல்லாம் தொலைக்காட்சியில் போட்டிகளை பார்க்க தவறுவதேயில்லை.  இரவு எத்தனை மனியானாலும் சரியே. இனையத்தளத்திற்கு சென்றதும் நான் முதலில் பார்வையிடும் தளம் cricinfo தான் அலுவலகத்தில் வேலை செய்யும் நேரங்களில் கூட அத்தளம் திறந்தே இருக்கும் minimize பன்னப்பட்டு. அவ்வளவு பைத்தியம் எனக்கு கிரிக்கெட்டின் மீது.

டெஸ்ட் போட்டிகள் உட்பட எந்த அனி விளையாடினாலும் ரசிப்பேன்             " நான் ரசிப்பது கிரிக்கெட்டையும் வீரர்களின் திறமையையும் மட்டுமே குறித்த ஒரு நாட்டை அல்ல..." தற்போதைய வியாபார நோக்கிலான போட்டிகள், சூதாட்டங்கள் போன்றவையினால் கிரிக்கெட் மீதுள்ள மகிமை இல்லாமல் போய்விடுமோ என கவலைப்படுபவர்களில் நானும் ஒருவன்..



இதோ எனது கிரிக்கெட் உலகம்..



#. பிடித்த கிரிக்கெட் வீரர்? : தனியொருவரை மட்டும் குறிப்பிட மனசு இடம் தரவில்லை. - அரவிந்த டி சில்வா, சயிட் அன்வர்,ரிக்கி பொண்டிங், கில்கிரிஸ்ட்,இம்ரான் கான்


#. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : சனத் ஜயசூரியா (40 வயதை தாண்டியும் பாராளுமன்ற உருப்பினரான பின்னும் தனது இடத்தை வேறொரு புதியவருக்கு விட்டுக்கொடுக்காத சுயநலத்திற்காக.)


#. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : வாசிம் அக்ரம், அலன் டொனல்ட்

#. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஆன்ட்ரு நெல்,ஸ்ரீசாந்த் ( போட்டிகளின் போதான அவர்களின் நடத்தையினால்)

#. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஷேன் வோர்ன், முரளிதரன்

#. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : ஹர்பஜன் சிங் (அவரின் நடத்தையினால்)

#. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : சச்சின், சேவாக், இன்சமாம்,

#. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர : மிஸ்பாவுல் ஹக்

#. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : பிரைன் லாரா மைக்கேல் பெவன், கில்கிறிஸ்ட்,

#. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : சவ்ரவ் கங்குலி,

#. பிடித்த களத்தடுப்பாளர் : ஜொன்டி ரோட்ஸ், ரிக்கி பொண்டிங்,டில்சான்

#. பிடிக்காத களத்தடுப்பாளர் : பாகிஸ்தானின் நிறைய பேர்

#. பிடித்த ஆல்ரவுண்டர் : சேன் வொட்சன்,சகீப் அல் ஹசன்,சஹிட் அப்ரிடி

#. பிடித்த நடுவர் : அலிம் டார், சைமன் டோஃப்ல்

#. பிடிக்காத நடுவர் : ரூடி கேர்ஸ்டன்,ஸ்டிவ் பக்னர்

#. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : டோனி கிரேக்,மைக்கல் ஹோல்டிங்

#. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : ரஞ்சித் பெர்னாண்டோ,சுனில் கவாஸ்கர்

#. பிடித்த அணி : கிரிக்கெட் விளையாடும் எல்லா அனிகளையும்

#. பிடிக்காத அணி : எதுவுமில்லை

#. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா - பாகிஸ்தான்

#. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- எதுவுமில்லை

#. பிடித்த அணி தலைவர் : ரிக்கி பொண்டிங் (அவரின் வெல்ல வேண்டுமென்ற ஆக்ரோசம் பிடிக்கும், கென்சி குரெஞ்ச்( ஒரு சாதாரன அனியை முன்னுக்கு கொண்டு வந்தற்காய்)

#. பிடிக்காத அணித்தலைவர் : கிரிஸ் கேய்ல்(அவரின் பொடு போக்கு)

#. பிடித்த போட்டி வகை : ஒரு நாள் போட்டி

#. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : சயிட் அன்வர் -அமிர் சொஹைல், ஹேடன் - கில்கிரிஸ்ட்

#. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : தற்போதைய பாக்கிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் ஜோடி

#. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : ஸ்டிவ் வோ,மொஹமட் யூசுப், சந்திர போல்

#. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : பிரட்மன்,விவ் ரிச்சட்ஸ், இம்ரான் கான், அர்ஜுனா ரனதுங்க



பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு போரது இவ்வளவு தூரம் வந்துட்டிங்க அப்டியே ஒரு வோட்டு குத்தி போட்டு பின்னாடியே பின்னூட்டத்திற்கு போரது.....

Riyas - modirizi@gmail.com

எப்பவோ பெய்த மழைத்துளிகள்...


எப்பவோ                                                        
பெய்த மழைத்துளிகளில்
இப்போதும்
நனைகிறேன்
உன்
ஞாபகங்களுடன்...!


நீ...
வந்து போன பின்
தொற்றிக்கொண்டது
உன் ஞாபகங்கள்..
வெள்ளம்
வந்து போன பின்
தொற்றிக்கொண்ட
தொற்று நோய் போல....!



நீ...
இல்லாத
இரவுகளில்
அனைத்துக்கொள்கிறேன்
உன் ஞாபகங்களை.
இருளோடு
சேர்த்து...!
அடை மழையாய்
உன் ஞாபகங்கள்
பாதிக்குமா...?
ஏழை
விவசாயியின்
அறுவடை...

வறுமையான
என்
மனதிலே
உன் ஞாபகங்கள்
மட்டும்
செழுமையாக
பாலைவனத்தில்
பெய்த மழையாய்...!

Riyas

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2