எனக்குப்பிடித்த பாடலகள்...!

பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய்விட்டது நம் வாழ்கையில்.. அதில் பாடல் விருப்பங்கள் என்பது வெவ்வேறு வகையானவை. சிலருக்கு பழைய பாடல் பிடிக்கலாம் சிலருக்கு இடைக்கால பாடல்கள் பிடிக்கலாம் சிலருக்கு புதிய குத்து பாடல்கள் பிடிக்கலாம்.. அது அவரவரின் ரசனையை பொருத்து மாறுபடும்..


என்னை பொருத்தவரை எல்லா காலத்து பாடல்களையும் ரசிப்பவன் நான் அதிலும் மெல்லிய இசையில் மனதை வருடும் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. பாடல்களில் நான் அதிகம் ரசிப்பது பாடல் வரிகளைத்தான்.. அன்றைய மருதகாசி முதல் இன்றைய நா.முத்துக்குமார், தாமரை, தபூ சங்கர் வரை அனைத்து பாடலாசிரியர்களையும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.

இன்று நான் பகிர்ந்து கொள்ள் போவது. என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் சிலவற்றை.பூ பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவைப்போன்றது.......(கதாநாயகன்)
ஏனோ தெரியவில்லை இந்தப்பாடல் மீது எனக்கொரு பைத்தியம். எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
அவ்வாரானதொரு ஈர்ப்பு இப்பாடல் மீது எனக்கு. இளையராஜாவின் இசை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.ஜேசுதாசின் குரல் என்றுமே இனிமை. பாடலை இயற்றிய கவிஞர் யாரென்று தெரியவில்லை அவருக்கு ஒரு சபாஷ் போடலாம். இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என மனதோடு பயனிக்கும் இதை கேட்கும் போதெல்லாம். அவ்வளவு அழகுகானவை.

மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது..
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது..
அழகு என்பது மெழுகைப்போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
வலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது

மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்..

போன்ற எல்லா வரிகளுமே...
ஆனால் ஒரு துரதிஷ்டம். இந்தப்பாடலை அதிகம் நான் கேட்டதில்லை காரணம் இதை தறவிறக்கம் செய்வதற்கான இனையத்தளம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை யாராவது தெரிந்தால் சொல்லுங்களே.. இபபாடலை எங்கே தறவிறக்கலாம். mp3 வடிவில்.பல்லவியில்லாமல் பாடுகிறேன் பாதையில்லாமல் ஒடுகிறேன்...... (உயிரே உனக்காக்)

பல்லவியில்லாமல் பாடுகிறேன்
பாதையில்லாமல் ஓடுகிறேன்
ஊமைக்காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.
உயிரே உனக்காக

இந்தப்பாடலின் மொத்த வரிகளுமே இவ்வளவுதான். ஆனால் பாடல் பரவசமூட்டுகிறது. லக்ஷ்மி காந்த் பெயார்லாலின் இசையில் எஸ்.பி.பி. அவர்கள் மிக மிக அனுபவித்து பாடியிருக்கிறார்.. இசையின் ஒவ்வொரு வளைவு நெழிவுகளையும் தன் குரலாலே சமாளிக்கிறார்.. அவரின் லா..லா .. உச்சரிப்புகள் மிக அழகு. பாடல் வரிகள் வைரமுத்து சொல்லவே தேவையில்லை.. முத்துக்கள்.


வாழ்கை வாழ்கை மேகம் போல மனிதர்கள் எல்லாம் அதன் துளி போல......  ( பூவேலி)இந்தப்பாடலை பாடகர் ஸ்ரீநிவாஸ் அனுபவித்து பாடும் விதமே தனியழகு. வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதமானவை


"மனம் ஏதோ ஒன்றை நினைக்க
விதி ஏதோ ஒன்றில் இனைக்க
என்ன பேர் சொல்லி நான் அழைக்க
இது காதலா இதுதான் காதலா இதுவே காதலா"இந்தப்பாடல் வெளிவருவதற்கு முன்னே நான் எழுதிய கவிதையொன்று..

வாழ்க்கை மேகம் போல
மனிதர்கள் யாவரும்
மழைத்துளி போல
மண்ணில் வீழ்ந்ததும்
சிதறிப் போய்கிறோம்
நீர்க்குமிழ் போல...

இந்தப்பாடலை கேட்டபின்பு நான் வியந்து போனதுண்டு அட நம்ம கவிதை மாதிரியே இருக்கே என்று 'வைரமுத்து நம்ம கவிதைய ஆட்டய போட்டுட்டாரோ...' " டேய் இது உனக்கே ஓவராயில்ல" என்று நீங்க சொல்றது கேட்குது. " Be careful" என்ன சொன்னேன்.தரைமேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்.......  (படகோட்டி)

மீனவர்களின் வாழ்கையை பற்றி நிறைய பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப்பாடலின் தரத்திற்கு வேறொன்றும் இனையாகாது என்பது எனது கருத்து. அவவளவு அருமையான பாடல் இது இந்தப்பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வாலிக்கு ஒரு சபாஷ் போடலாம் அற்புதமான வரிகள். ஒவ்வொரு வரியிலும் மீனவ சமூகத்தின் வாழ்க்கை கஷ்டங்கள் விளங்குகிறது.

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
ஒரு நாள் போவார்

ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்.


ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆளும் காதல் தேசம் நீதான்....


(இரட்டைவால் குருவி)

இந்தப்பாடலைப்பற்றி தனியொரு பதிவே இட்டிருந்தேன் நான் பிளாக் எழுத தொடங்கிய ஆரம்பத்தில்
இங்கே பார்க்கவும். http://riyasdreams.blogspot.com/2010/04/blog-post.html

ராஜ ராஜ சோழன் நான்
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே... காதல்... தீவே....
மன்மீது சொர்க்கம் வந்து பெண்னாக ஆனதோ,,
உல்லாச பூமி இங்கு உண்டானததே,,,,,


இரட்டை வால் குருவி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் சுவை மாறாது சுகம் மாறாது

அத்தனை நூற்றாண்டுகளின் பின்பும் நல்ல பாடல்களை ரசிக்கும் ரசிகர்கள் மனதில் ஓர் ஓரமாக இந்த பாடல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்றும் பசுமையாக.

அவ்வாறானதொரு பாடலை கொடுத்த இயக்குனர் பாலுமகேந்திரா இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் ஜேசுதாஸ் பாடலாசிரியர் முமேத்தா ஆகியோருக்கு ஒரு சபாஷ் போடலாம்.......


இயக்குனர் பாலுமகேந்திராவின் கற்பனைக்கு இளையராஜாவின் மனதை வருடும் மெட்டுக்கு கொஞ்சம் கூட விலகாமல் சிதையாமல் தனது கவித்துவமான அழகான வரிகளால் உருவம் கொடுத்திருக்கிறார் பாடலாசிரியர் முமேத்தா. இவர்களின் முயற்சிக்கு தன் கம்பீர குரலால் உயிர் கொடுத்து காற்றின் வழியே நம் காதுகளுக்கு எட்ட செய்திருக்கிறார் கே.ஜே. ஜேசுதாஸ்

அந்தி நேரத்தென்றல் காற்று அள்ளித்தந்த தாலாட்டு... (இனைந்த கைகள்)

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு ரயிலில் பயணம் செய்வதாய் உணர்வு எனக்குள்.. அவ்வளவு அருமையான பாடல் இது.. இசையினூடே
ரயில் வண்டி ஓடும் ஓசையையும் மிக அழகாக பாடல் முழுவதிலும். குழந்தை அழும் சத்தத்தை பாடல் நடுவிலும் இனைத்துக்கொண்டதுக்கு இளையராஜாவுக்கு பாராட்டுக்கள். இந்தப்பாடலில் இன்னொரு விஷேசம் எஸ்.பி.பி ஜெயச்சந்திரன்,சுரேந்தர் என மூவரையும் பாட வைத்தது.
இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஒரு ரயில் வண்டி என் மனதுக்குள் ஓரமாக ஓடுவதாய் உணர்கிறேன்.

குழந்தை மனசு...!

நீ...

திருவிழா
உன் மிட்டாய்களுக்காய்
அடம்பிடிக்கிறது
குழந்தை மனசு...!சிந்திய மழையாய்
சிரித்துவிட்டுப்போகிறாள்
சிறு பிள்ளையாய்
சினுங்குகிறது மனசு...!எதையோ எல்லாம்
தொலைத்துவிட்டுப்போகிறாள்
இதயத்தை மட்டும்
இறுக்கிப்பிடித்தபடி...!நானும்
குழந்தையாகிவிடத்தோன்றுகிறது
குழந்தைகளிடம்தானே
அதிகம் பேசுகிறாள்...!கண்களுக்குள்
கலவரம் செய்து போனவள்
கண்ணீருக்கு முன்
வந்துவிடுவாளா...!

இங்க பாருங்க...!
அடங்கொய்யால...

ஒரு வண்டியில ஒரு குடும்பமே போகுது.... யப்பா...


அப்பனும் மகனும்..

நைனா... எனக்கு அதுதான் வேனும்..டேய் கத்தாதடா...

கத்தினா குத்துவன்.. குத்தினா கத்துவன்...

எப்புடி..

நாங்களும் குளிப்போமில்ல ஸ்விமிங்க் பூல்லகாலம் கலி காலம் ஆகிப்போச்சுடா..

எக்ஸ்கியுஸ்மி...நாங்க எங்க போறம்..
 
 
 
 

கடவுளுக்கோர் கடிதம்...!

முன்னொரு காலத்தில் கொஞ்சம் வயதுபோன கிராமவாசியும் அவரது மனைவியும் தனிமையாக வாழ்ந்து வந்தனர்.. இந்த வயதானவர் அளவுக்கதிகமான கடவுள் பக்தி கொண்டவர்.. தினமும் கடவுளை வணங்குவார், இவரின் பிரச்சினைகளை கடவுளிடம் முறையிடுவார், கடவுள் பக்தனாகவே வாழ்ந்து வந்தார்.. (எந்த கடவுள் அப்பிடின்னு கேட்கப்படாது)இவர்கள் மிகவும் ஏழையாக கஷ்டப்பட்டே வாழ்ந்து வந்தனர்.. சிரிதாக விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். இவ்வாறு காலம் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு வறண்ட கோடை காலம் வரவே இவர்களின் விவசாய நிலங்களும் வாடியே போனது வறட்சியால்..
அத்தோடு சேர்த்து இவர்களின் வாழ்க்கையும் நீரில்லாமல் வறண்ட நிலம் போல ஆனது. வயிற்றுப்பசிக்கே என்ன செய்வதென்று புரியாமல்.. தவித்தனர் இருவரும்.


அப்போது அவரின் மனைவிக்கு ஒரு யோசனை தோன்றியது... அதை தன் கனவனிடம் கூறத்தொடங்கினார்.. " ஏங்க நீங்கதான் கடவுள் பகதனாச்சே.. எல்லாத்தையும் கடவுளிடம் முறையிடுவிங்க இந்த பிரச்சினையையும் கடவுளிடம் சொல்லி கொஞ்சம் காசு கேளுங்க.. ஒரு 80 ரூபாய் இருந்தால் மழை வரும் மட்டுக்கும் சமாளிச்சிடலாம்.. என்றார்.. இதன் படியே வழக்கம் போலவே கனவரும் கடவுளிடம் வேண்டினார் தன் தேவைகளை... இவவாறு சில நாட்கள் கழிந்தது காசும் வரவில்லை கடவுளிடமிருந்து எந்த பதிலுமில்லை..


சில நாட்கள் கழியவே.. மனைவியின் முணுமுனுப்பு தாங்கமுடியாமலும் கொஞ்சம் ஏமாற்றம், கோபத்துடன் கடவுளுக்கு கடிதம் எழுதலாமென் முடிவெடுத்து. கடிதம் எழுத தொடங்கினார்..

"கடவுளுக்கு.. இந்த ஏழை பக்தன் எழுதிக்கொள்வது என்னவென்றால். நானும் என் மனைவியும் கடும் பஞ்சத்தால் பாதிக்க்பட்டுள்ளோம் உண்பதற்கே ஒன்னுமில்லாமல் இருக்கிறது. இதைப்பற்றி உன்னிடம் பலமுறை முறையிட்டுள்ளேன்.. உன்னிடமிருந்து எந்த உதவியும் வரவில்லை.. அதனாலதான் இக்கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு எப்படியாவது ஒரு 80 ரூபாய் காசு அனுப்பி வை எனது முகவரிக்கு அதன் மூலம் எங்கள் கஷ்டத்தை போக்க முடியும் என நம்புகிறேன்
இப்படிக்கு ஏழை பக்தன்"..


இவ்வாறு எழுதிய கடதாசியை ஒரு கடித உறைக்குள் இட்டு.. ஒரு பக்கத்தில் இவரின் முகவரியையும் மறுபக்கத்தில் கடவுள், மேல் உலகம்
என முகவரியிட்டு தபால் பெட்டியில் போட்டுவிட்டார்.. அடுத்தநாள் தபால் அலுவலக ஊழியர்கள் தபால்களை ஊர்வாரியாக பிரித்துக்கொண்டிருக்கும் போது இந்த கடிதமும் அவர்கள் கண்ணில் பட்டது.. என்னடா இது கடவுளுக்கா..? மேல் உலகமா..? இது யாருக்கு எந்த ஊருக்கு அனுப்புவதென்று குழம்பி போனார்கள்.. இது யாராவது விளையாட்டாக செய்திருக்கலாம் என நினைத்து கடிதத்தை உடைத்து பார்ப்பதென முடுவெடுத்து அதை வாசிக்க தொடங்கினர்..


வாசித்து முடிந்ததும் அந்த ஏழை விவசாயியின் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது அவரின் அறியாமை, இயலாமை,வறுமை போன்றவற்றை நினைத்து.. இறுதியில் அவர்கள் எல்லோரும் முடிவெடுத்தனர் அங்குள்ளவர்கள் எல்லோரும் குறிப்பிட்ட தொகை காசு சேர்த்து அந்த தொகையை அவருக்கு அனுப்பி வைப்பதென... அவ்வாறு எல்லாரிடமிருந்தும் மொத்தமாக 70 ரூபாய் மட்டுமே சேர்க்க முடிந்தது..
அத்தொகையை அவரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர்.. மறுநாளே.


வெகு சீக்கிரமாகவே பதில் கடிதத்தை கண்டதும் பூரிப்படைந்த கனவனும்
மனைவியும் உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கத்தொடங்கினர் காசு 70 ரூபாய்தான் இருந்ததை அறிந்தவர் 80 ரூபாய்தானே கேட்டோம் மிச்சம் 10 ரூபாய்க்கு என்ன நடந்திச்சி.. என யோசித்து மீண்டுமொரு கடிதம் எழுதினார் கடவுளுக்கு. அது இவ்வாறிருந்தது...

"நாங்கள் கேட்டதுமே எங்களுக்கு பண உதவி செய்ததற்கு மிக்க நன்றி. ஆனால் 70 ரூபாய் மட்டும்தான் அதில் இருந்தது.. எங்களுக்கு தெரியும் நீ.. 80 ரூபாய் அனுப்பிருப்பாய் ஆனால் தபால் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்தான் 10 ரூபாயை திருடிருக்க கூடும் அவர்களைத்தான் நம்ப முடியாது. எனக்கு அந்த 10 ரூபாயை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்"

மறுநாள் இந்தக்கடிதம் தபால் ஊழியர்களிடத்தில் சிக்கவே.. மறுபடியும் கடவுளுக்கா..? என வியப்புடன் அதை பிரித்துப்பார்த்தனர்.. அடப்பாவி 10 ரூபா காசு குறையிதுன்னு சொல்லி உதவி செய்த எங்களையும் திருடன்னு சொல்லி கடவுளுக்கு மறு பரிசீலனைக்கடிதம் அனுப்பியிருக்காருடோ.. என சொல்லி அங்குள்ள எல்லோரும் சிரித்துக்கொண்டனர்.. அவரின் கடவுள் நம்பிக்கை வீனாக்ககூடாது தாங்களும் திருடர்கள் இல்லை என்பதை நிருபிப்பதற்காக அவர் கேட்ட படியே 10 ரூபாயை அனுப்பி வைத்தனர்.. அதனோடு சேர்த்து இவ்வாறு எழுதியும் அனுப்பினர்..

"நான் கடவுள் எழுதிக்கொள்வது.. நீங்கள் கேட்டபடியே 80 ரூபாய் அனுப்ப நினைத்தும் சில தவறுதலால் 70 ரூபாயே அனுப்பியிருந்தேன்.. தபால் அலுவலக ஊழியர்கள் யாரும் அதை திருடவில்லை அவர்கள் நல்லவர்கள்.. அனுப்ப முடியாமல் போன 10 ரூபாயை இப்போது அனுப்பியிருக்கிறேன்.." என்றிருந்தது..


இக்கடிதத்தை பார்த்த ஏழை விவசாயிக்கு தபால் அலுவலக ஊழியர்கள் மீது வீனாக பழி சுமத்திட்டோமே என்ற குற்ற எண்ணமும் கடவுள் மீது இன்னும் அளவுக்கடந்த பக்தியும் பிறந்தது.. அன்றிலிருந்து அவர் மனைவியும் தீவிர கடவுள் பக்தன் ஆனாள்.. இருவரும் சந்தோஷமாக தொடர்ந்தனர் வாழ்க்கையை...

இறைவா...!
இறைவா...

உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்
வேண்டாமே...
மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!


ஆயிரம்

அர்த்தங்கள் சொல்லும்
இவன் பார்வைகளே
போதும்..
வலிகள் நிறைந்த
வாழ்க்கையின்
கதைகள் சொல்ல...!


காத்திருக்கிறோம்

விடியாத
விடியல்களுக்காய்..
எப்போதாவது
விடியாதா என்று
கையில்
நம்பிக்கை ஒளி
ஏந்தியவாறு...!தேடிக்கொண்டிருக்கிறோம்

எப்பவோ
தொலைத்த
புன்னகைகளை...!


இப்பூமியில்

பிறந்ததுதான்
இக்குழந்தை
செய்த
குற்றமா...!


ரியாஸ்,,

தந்தையே உன்னை போற்றுகிறோம்...!தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்..
கருவறை
மட்டும்தான்
உனக்கில்லை
தாயென்று சொல்ல
உன்னை..
உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
கலைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் வாழவே
நலமாய்...
வலிகள்
எம்மைத்தாக்கினால்
வலிப்பதென்னவோ
உனக்கல்லவா..
துயரங்களால்
எம் விழி
நனைந்தால்
துடைப்பது
உன் விரல்களல்லவா..
சோதனையானாலும்
வேதனையானாலும்
தோல் கொடுக்கும்
தோழன்
நீயல்லவா...
உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்படவேண்டும்
உன் புகழ்
பூவுலகம்
வாழும் காலம் வரை...!அழகாகவே இருக்கிறாள்...!


எப்போது
பார்த்தாலும்
அழகாகவே
இருக்கிறாள்
என்
தாய் மொழி
தமிழ் போல...!

கெட்டிக்கார மாணவன்..!


ஒரு மாணவனின் பரிட்சை விடைத்தாள் இங்கே.. கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவன் எழுதியுள்ள விடைகளை..

(விடைத்தாள் பெரிதாக தெரிய அதன் மீது கிளிக் செய்யுங்கள்)

தூக்குப்போட்டு செத்து போகுமளவுக்கு கணக்குப்பாடம் கொடுமையானது
(கணக்கு பாடத்தை எதிர்ப்போர் சங்கம்)


ஓர் இரவுப்பயணம்...!

ஓர் நாள் இரவு
ஓர் பயணம்
ஓராயிரம் மைல்கள்
ஓடியிருக்கலாம்...!
அது ஐரோப்பா என
அடையாளம்
கண்டேன்
நாகரீக
வாசனையினால்...!
பல தேசங்கள்
கடந்து
பவனிவரும் போது
மரண ஓலங்கள்
காதில் விழவே
கால் வைத்தேன்
பாரினில்...
அது ஜேர்மனிய தேசம்
அறிந்து கொண்டேன்
உயிரிழந்தவர்கள்
யூதர்கள்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்....!
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
அறியத்தந்தது எனக்கு
அவ்வார்த்தையில் வந்த
ஆணவமும்
அகங்காரமும்....!
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிடலரின் பதில்
இன்னும் ஓர் இரவில்
தொடரலாம்....!

மறக்கமுடியாதவர்கள்...!

நம் அன்றாட வாழ்வில் நடைபெரும் சில திடீர் சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தபடுபவர்களை வாழ்கையில் எப்போதும் மறக்கமுடியாமல் இருக்கும். அவ்வாறானவர்களுக்கு "நன்றி" என்ற ஒரு வார்த்தையை மட்டும் பரிசளிப்பது போதுமானதாக தெரியவில்லை எனக்கு.. அவ்வாறானவர்களுக்காகவே இந்தப்பதிவு


எனது வாழ்கையில் நிறைய பேரை மறக்கமுடியவில்லையாகினும்

குறித்த சிலரை மட்டும் இங்கே தருகிறேன் ஏனையவர்கள் எதிர்கால பதிவுகளில் வருவார்கள்.

# ஒரு பாகிஸ்தானிய பெரியவர்..

ஒரு மாதத்திற்கு முன் அபுதாபி TCA ஏரியாவில் பிற்பகல் 2.30 மணியளவில் வேலைக்குச்செல்வதற்காய் வண்டி வரும் வரையில் ஓர் ரெஸ்டோரண்ட் பக்கத்தில் நிண்றுகொண்டிந்த வேளை பசி கலந்த தாகம் ஏற்படவே உள்ளே சென்று ஏதாவது சாப்பிடுவோமா என்ற எண்ணத்தில் அங்கிருந்த உணவுகளை நோட்டமிட்டேன். அது எதுவும் எனக்கு சரி வராததால் தண்ணி மட்டும் குடித்துவிட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். அப்போது அதையெல்லாம் அவதானித்த ஒரு பாகிஸ்தானிய பெரியவர் அருகே வந்து. "என்ன பிரச்சினை காசில்லயா.. வா நான் வாங்கித்தரேன் ஏ.. தண்ணிய மட்டும் குடிச்சுட்டு வந்தாய்.. காசில்லாட்டி சொல்லு நான் வாங்கித்தரேன்" என்றார் அப்போது என் மனது அடைந்த பூரிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. அப்போது நினைத்துக்கொண்டேன் மனிதநேயம் இன்னும் சாகவில்லை இப்படியான நல்ல மனிதர்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று.. அந்தப்பெரியவரையும் என்னால் மறக்கவே முடியாது. நான் அவரை பார்த்தது முதலும் கடைசியுமாக அப்போதே..

# சம்பிக சந்தகெலும்..( என் நண்பன்) ஒரு சிங்கள இளைஞன்.

ஒரு அற்புதமான குனம் படைத்தவன் இவன். இவனைப்போன்ற நல்ல குனம் படைத்த மனிசத்தனம் கொண்ட ஒருவனை இதுவரை நான் சந்தித்ததில்லை. பொதுவாக சிங்களவர்கள் நல்லவர்களில்லை
என்ற அதுவரை என்னில் பதிந்திருந்த எண்ணத்தை அவனைப்பார்த்தபிறகு மாற்றிக்கொண்டேன். எல்லோரும் அப்படியில்லை நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று.. நான் கொழும்புக்கு முதன் முதலாக வேலைக்கு வந்தபோது எனக்கு ஆதரவளித்தவன் இவனே. எனக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்தவனும் இவனே. ஒரு நல்ல நண்பனுக்கு என்னவெல்லாம் நல்ல பண்புகள் இருக்கவேண்டுமோ அவை அனைத்தும் இவனிடம் நான் கண்டேன். இவனையும் என் வாழும் காலம் வரை மறக்கவே முடியாது...

# எஹியான்.. கணக்கியலாளர்

நான் சந்தித்தவர்களில் இவரும் ஓர் உண்ணதமான மனிதர். நான் பிறந்து வளர்ந்தது ஒரு பிந்தங்கிய கிராமத்தில் என்பதால்.. Advance level அதாவது பிளஸ் 2 வரையுமே படிக்க முடிந்தது. மேல் படிப்பை தொடர தகுதியிருந்தும் வசதியில்லாததனால் தொடர முடியவில்லை. படித்துவிட்டு வீட்டில் 2 வருடம் சும்மாவேயிருந்த நேரம்தான் இவர் மூலமாக கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் நல்லதொரு வேலை கிடைத்தது.. கிராமப்புற பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வேலை தேடி வருவதென்பது கடினமான விடயம்.. அவர் செய்த உதவியால் எனக்கு இலகுவாக அந்த வேலை கிடைத்தது.. 5 வருடங்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தேன், வாழ்க்கையே வெறுத்துப்போய் அலைந்த எனக்கு புது வாழ்க்கை கிடைத்த உணர்வு. ஒரு வேலைதான் சமுகத்தில் அவனுக்கான அடையாளம் என்பதையும் உணர்ந்து கொண்டேன். அவ்வேலையே என்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்தது... அதற்கு துனைபுரிந்த "எஹியான்" அவர்களுக்கு மரியாதை கலந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்..


# இராகவன் நைஜீரியா.. பதிவர்

நான் பிளாக் எழுத தொடங்கி முதலில் பதிந்தது என் தந்தையின் நினைவுகளைச்சுமந்த "சமர்ப்பணம்" என்ற இடுகை அந்த இடுகைகு இவர் எழுதிய பின்னூட்டங்களையும் இவரையும் மறக்கவே முடியாது.. அன்றிருந்து இன்றுவரை எனது பதிவுகளுக்கு வாழ்த்தும் ஊக்கமும் தருபவர்.
எனது முதல் இடுகைக்கு இவரின் பின்னூட்டம் இவ்வாறிருந்தது.

இராகவன் நைஜிரியா said...

தங்களின் முதல் இடுகை கண்ணீரை வரவழைத்துவிட்டது நண்பரே.

தந்தையின் பிரிவு - எப்போதும் மறக்க இயலாதது.
எல்லாம் வல்ல கருணை கொண்ட ஆண்டவன் உங்களுக்கு மன நிம்மதியை அருளுவாராக.

// தமிழ் யுனிகோடு தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன்.//

நண்பரே இதற்கு சரியான தீர்வு - NHM writer.
கீழ் கண்ட லிங்கில் இருந்து டவுன் லோடு செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்க.. தமிழில் தட்டச்சுவது சுலபமாகிவிடும்..

software.nhm.in/products/writer

28 March, 2010 09:16


இராகவன் நைஜிரியா said...


விட்ஜெட்டில் ஃபாலோயர் விட்ஜெட் சேர்த்துவிடுங்க.

இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.

பின்னூட்டம் போடும் போது வேர்ட் வெரிபிகேஷன் கொஞ்சம் லொள்ளு. அதான்.

கொஞ்ச நாளாக இவரைக்கானவில்லையே என்று இவருக்கு மெயில் அனுப்பியபோது அவ்வளவு வேளைப்பளூவுக்கு மத்தியிலும் இவ்வாறு பதில் அனுப்பியிருந்தார்..


அன்பு நண்பர் ரியாஸ் அவர்களுக்கு

தங்களுடைய மெயிலுக்கு நன்றி. நான் எல்லா வலைப்பூக்களிலும் பின்னூட்டம் போட இஷ்டம்தான். ஆனால், கடந்த சில நாட்களாக இருந்த வேலைப் பளு காரணமாக, என்னால் அதிகமாக பின்னூட்டம் இட இயலாமல் போய்விடுகின்றது.

எப்போதாவது , சற்று ஓய்வு கிடைக்கும் போது வருவேன். எந்த வலைப்பூவின் இடுகை என்னுடைய டாஷ் போர்டில் இருக்கின்றதோ, அதில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடிவிடுகின்றேன்.

விரைவில் வேலைகள் சரியாகி, குறைந்துவிடும்.

உங்கள் வலைப்பூக்களுக்கு தவறாமல் வர முயற்சி செய்கின்றேன்.

என்றென்றும் அன்புடன்

இராகவன்

இவரையும் என்னால் மறக்கவே முடியவில்லை

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று"

என்ற திருக்குறளை அதிகமாக நேசிக்கிறவன் நான்...

இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

தொடரும் நன்றி நவிலல்...

சிரிக்காதே...!
இனிமேலும்
பொது இடங்களில்
சிரிக்காதே
பெண்னே...
பாவம்
எத்தனை முறைதான்
ஏமாந்து போவான்.
தெருவோர
குருட்டுப்பிச்சைக்காரன்.
சிந்தியது
அவன் சில்லறைகள்
என நினைத்து...!

பாவம் அவர்கள்..!

மத்திய கிழக்கு நாடுகளில் இது கோடை காலம். வெயிலோ வெயில். அவ்வாறானதொரு வெயில். கொள்ளை வெயில் என்று சொல்வது இதைத்தானோ. அவ்வாறானதொரு உஷ்ன நிலை, வெப்பம்,வெட்கை,வேர்வை இதுதான் தொடக்கம் வருகின்ற மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என சொல்கிறார்கள். நினைக்கவே கொஞ்சம் சுடுகிறது மனசு.எனக்கு மத்திய கிழக்கு முதல் அனுபவம் என்பதால் சமாளிப்பது கொஞ்சம் கடினமாகவேயிருக்கிறது..


அபுதாபி முசாபாவில் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் நான். தங்குமிடம் அபுதாபியில் இருக்கிறது. அவையிரண்டுக்கும் போய் வருகின்ற வேளையிலும் அவ்வப்போது வெளியில் செல்கின்ற போதும் இவ்வாறான வெயில் உணரப்படுகின்றதென்றால். காலையிலிருந்து மாலை வரை வெயிலிலே வேலைசெய்யும் கட்டிடங்கள் கட்டுமானங்கள் கட்டும் தொழிலாளர்கள், பாதை செப்பனிடுபவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இன்னும் எத்தனையோ வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களின் நிலையை எண்ணிப்பார்க்கும் போது உண்மையிலேயே பாவம் அவர்கள்.


அவர்கள் உலகில் எந்த தேசமாகவும் இருக்கலாம்.. எல்லோரும் மனிதர்கள்
என்ற அடிப்படையில் மனிதநேயத்தோடு நோக்கலாம் அல்லவா. அவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர்களைப்பற்றி கொஞ்சம் சிந்திப்பது மனம் வருந்துவதைத்தவிர.. நாம் கடந்து செல்லும் பாதைகளில் இவ்வாறான எத்தனையோ மனிதர்களை நாம் தினமும் கடந்து செல்கிறோம்.


வறுமையின் காரனமாக சொந்த நாடுகளை விட்டு வந்து இங்கே வெயிலோடும் வியர்வையோடும் போராடுகிறார்கள்.. இவர்கள், இங்கே இவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தால்தான் அங்கே அவர்களின் மனைவி பிள்ளை குட்டிகள் நிம்மதியாக மூண்று வேளை சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் குழாயிலிருந்து வெளிவரும் நீர் சுடு கொதிக்கும் சுடு நீராகவே வருகிறது அது இன்னுமொரு கொடுமை இங்கே. அதிகமான கட்டிடங்களில் கூலர்/ஹீட்டர் வசதியில்லை.


அபுதாபியில் இன்னுமொரு கஷ்டநிலை bed space என்ற வரையரைக்குள் இரட்டை கட்டில்களில் வாழவேண்டியிருப்பது ஒரு அறையில் எட்டு, பத்து, பனிரெண்டு பேர் கூட தங்கவேண்டிய நிலை.. "ஆடிஅடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்ற பழைய பாடல் இங்கேயும் ரொம்ப பொருந்தும் அதுவும் ஆறடி இடத்தில் மேல் ஒருவர் கீழ் ஒருவர்..யாசர் என்ற எனது நண்பநொருவன். 'உன் பிளாக்கில் எதையோயெல்லாம் எழுதுகிறாய் இவர்களை பற்றியும் கொஞ்சம் எழுது' என்று சொன்னான் அந்த நண்பனுக்கு எனது நன்றிகள். எனக்கும் சந்தோஷம் இவ்வாறான மக்களின் வாழ்கையைப்பற்றிச்சொல்ல எனது பிளாக் பயன்பட்டதை நினைத்து..


நீங்களும் ஏதாவது சொல்லுங்கள் இதைப்பற்றி..

நான் பார்த்த ரேணிகுண்டா..!

நாம் அன்றாடம் போய் வரும் சாலைகளிலாகட்டும். நாம் வாழும் ஊர்களிலாகட்டும் சமூகங்களிலாகட்டும். ஆங்காங்கே சிலர் ரவுடிகளாகவும் காசு கொடுத்தால் எதையும் செய்ய துணிந்தவர்களாகவும் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் நடமாடுவதை நாம் பார்த்திருப்போம்.. அவர்களை பார்த்தாலே ஒரு வெறுப்புணர்வும்,இதெல்லாம் ஒரு பொழப்புண்டு இத செய்றாங்களே என்ற எண்ணமும், அவர்கள் கைது செய்யப்பட்டாலோ தண்டிக்கப்பட்டாலோ மனதில் ஏற்படும் சந்தோஷமும் அச்சமூகத்தில் வாழ்பவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுவதுண்டு..


ஆனால் அவ்வாறானவர்களை, அவர்கள் ஏன் அப்படியானார்கள் என்ற நியாயங்களுடன் திரையில் கான்பிக்கும் பொழுது அவர்கள் செய்பவை நியாயமானவையாகவே தோன்றும் எமக்கு. அவர்கள் பக்கத்திலிருந்து நோக்கும் போது அவர்களின் செயல்கள் மீது நாங்கள் ஈர்க்கப்படுகிறோம்.. இதற்கு காரணம் அவர்களை அப்படி உருவாக்கிவிட்டது இந்த சமூகம்தான்... அவர்களுக்கு நியாயம் அநியாயம் ஒன்றும் புரியாது.

அவர்கள் வாழ வேண்டும் என்றால் யாராவது வாழ்கையிழக்க வேண்டும் அதுவே அவர்களின் கோட்பாடு.அது அவர்களுக்கு தப்பாக புரிவதில்லை..

நியாயங்கள் பறிக்க்ப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட ஒருவன்/கூட்டம்/சமூகத்தினது பின் விளைவுகள் வன்முறையாகவோ குரூரமாகவோ வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை.. தற்போது உலகில் தீவிரவாத இயக்கங்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள இயக்கங்களில் பல இவவாறு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கபட்டதனால் கிளர்ந்தெழுந்தவையே.. அதன் பின்னரான அவர்களின் மனப்பாங்கு குரூரமாகவே இருக்கும் என்பது உலக நியதி...

அண்மையில் வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படமும் இதே கருத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தது.. 5 சிறு வயது இளைஞர்கள், அவர்களை கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவது எது.. அவர்களின் வாழ்கை பாதையில் நிகழும் விடயங்கள் என்ன... அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா அவர்கள் முடிவு என்னவானது என்பதை மிக் நேர்த்தியாக தத்ரூபமாக சொன்ன படம்தான் இந்த ரெணிகுண்டா. ஏற்கனவே தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் ரவுடிகள்,தாதாக்கள்,பாதாள உலக குழுக்கள் எவ்வாறு உருவானார்கள் அவர்களின் செயற்பாடுகள் எப்படியிருக்கும் என்பதை சொல்லியிருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட இதை கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் பண்ணீர்செல்வத்திற்கு ஒரு சலூட்..


5 இளைஞர்கள். எல்லோரும் அறிமுகங்கள்தான் ஆனாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.. படம் பார்த்து முடிந்த பின்னும் சில மணி நேரங்களாவது

மனதில் நிற்கிறார்கள் இதில் தோன்றும் கதாபாத்திரங்கள். குடும்ப கஷ்டத்துக்காக உணர்வுகளை கொலைசெய்து விட்டு உடம்பை விற்று பிழைக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த பெண் உட்பட.. இவவாறான நிலை ஒரு பெண்ணுக்கு கொடுமையிலும் கொடுமையே..


தேவையானயளவு கதாபாத்திரங்கள்,அளவான வசனங்கள், குழப்பமில்லா திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, அமைதியான பின்னனி இசை, போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகும் மெல்லிய காதலும் வாய் பேச முடியாத பெண்ணும், டூயட் பாடல்கள் இல்லை, யதார்த்தமான சண்டைகாட்சிகள், வன்முறை காட்சிகளை காட்சிப்படுத்திய விதம், ஆபாச காட்சிகள் இல்லை ஹீரோயிசம் இல்லை, ஆர்ப்பாட்டங்களோ, அழுகை ஒப்பாரிகளோ இல்லை, சிறந்த இயக்கம் இவை யாவுமே இப்படத்தின் பலம் மற்றும் இப்படத்தின் மீது என்னை கவரச்செய்தது..
ஆரம்பத்தில் இடம்பெறும் ஜெயில் காட்சிகள் கொடுமை.. ஜெயில் என்றாலே இயல்பாகவே இப்படித்தானா எனக்குத்தெரியவில்லை.. கமலின் மகாநதி படத்தில் கூட ஜெயிலில் நடக்கும் கொடுமைகளை மிக அழகாக் சித்தரித்து காட்டப்பட்டிருக்கும் படத்தில் நகைச்சுவைக்கெண்டு நடிகர்களோ காட்சிளோ இல்லை என்றாலும் சில இடங்களை ரசிக்கலாம் சிரிக்கலாம்.. குள்ளமான டப்பா அந்த கருப்பு பெண்ணை காதலிக்கும் காட்சிகள்..

சேது என்ற அரசியல்வாதியை கொலை செய்யும் காட்சியை காட்டாமல்.. பின்பு பங்கர் எப்டிடா அவன கொண்டிங்க என்று கேட்கும் செயல்முறையில் சொல்லிக்காட்டுவதை லாஜிக்கை மறந்து ரசிக்கலாம்.

ஷக்தியை ஜெயிலில் சித்திரவதை செய்யும் போது அவனுக்கு உதவுவதும், அந்த பெண்ணை காதலிக்கிறான் என்று அவளை கூட்டிட்டு போ என்று சொல்வதும், மும்பைக்கு போக பஸ்ஸுக்கு தேவையான காசை மட்டும் எடுத்துட்டு மீதி காசெல்லாம் அவனுக்கே கொடுத்திடுங்கடா என சொல்வதும் கொலைகாரன் ஆனாலும் அவர்களுக்குள்ளும் நல்ல மனசுண்டு என சொல்லும் காட்சிகள்.

இறுதியில் நடாத்தப்படும் கொலைமுயற்சி காட்சி மிக மிக விறு விறுப்பு.. அது தோல்வியடையவே பாண்டு காலில் அடிபட்டு ஓடிவருவதும்,வண்டியை நிறுத்தாமல் செல்வதும், பின்பு அடித்தே கொல்லப்படும் காட்சி பார்வையாளர்கள் மனதை நெகிழவைக்கும் காட்சி.. ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படும் போது அவர்களின் கண்களில் தெரியும் மரன பயமும் அதன் வலியையும் காட்சிப்படுத்திய விதத்திலிருந்தே எவனுக்கும் மரன பயமும் வலியும் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது... அதிலும் குள்ளமான டப்பா போலிஸ் துரத்தும் போது உயர்ந்த சுவரைக்கொண்ட அறைக்குள் மாட்டிக்கொள்வதும், சுவர்களில் ஏற எத்தனிப்பதும் பின் மூலைக்குள்ளே குந்திக்கொள்வதும் பின் கொல்லப்படுவதும் மிக மிக அருமையான காட்சி...

ஒரு வன்முறைக்கதையை கவிதைத்தனமாக கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர் பண்ணீர் செல்வமிடமிருந்து இன்னும் நல்ல தமிழ் சினிமாக்களை எதிர்பார்க்கிறோம்...

அப்படியே ஒரு ஓட்டு குத்துங்கப்பா..அப்டியே ஏதாவது சொல்லிட்டும் போங்கப்பா..

மழையும் குடையும்..!
வானிலிருந்து
மழையாகி
பூமிப்பெண்னை
முத்தமிடும்
பூரிப்போடு
வருகிறேன்..
இடையில்
தடையாய்
குடை நீ...!
தடை போட நீ
என்
மாமன் முறையோ..
அருவியாகி
ஆறாகி
கடலாகியேனும்
நுகர்ந்திடுவேன்
பூமிப்பெண்னை...
அப்போது நீ..
அ(ம)டக்கிக்கொண்டிருப்பாய்.

தூரத்து வானில் விடியல்...!

அதிகாலயிலேயே... எழுந்த ஆப்தீன் இறைவனை வணங்கிவிட்டு மனைவியின் தேநீருக்காய் காத்திருந்தார்...


"இந்தாங்க தேத்தண்ணி....," மனைவியிடமிருந்து...

வெறும் தேநீர்தான் பாலோடு கலந்து பருகுமளவுக்கு வசதியில்லை ஆப்தீன் குடும்பத்துக்கு.

தேநீர் பருகிக்கொண்டே...! " கொஞ்ச நாளா கூலி வேல இல்லாம கையில காசுமில்ல... கடயில போய் கடனுக்கு கொஞ்சம் சாமான் கேட்டா.. ஏதோ பிச்ச கேட்கிறமாதிரி கேவலமா பாக்காங்க...


இடைநடுவே மனைவி... " அதாங்க எனக்கும் ஒன்னும் புரியல்ல சமைக்கிறதுக்கு கூட அரிசி பருப்புன்னு எதுவும் இல்ல... ரெண்டு புள்ளங்கலோட படிப்பு செலவுக்கும் காசு வேணும். இஸ்கூல்லயிருந்து பசியோடு வர்ற புள்ளங்களுக்கு சோத்த குடுக்காம நம்மட கஷ்டமெல்லாம் சொல்லிட்டிருக்கேளுமா... அதுங்களாயவது நல்லா படிக்க வெச்சாத்தான் நம்ம பட்ற கஷ்டம் நாளக்கி அதுங்க படாம நல்லாயிருக்குங்க..!"


தேநீர் கோப்பையுடன்... "முன்னெல்லாம் ஒவ்வொரு நாளும் கூலி வேல செய்தா எவ்வளவாவது காசு கையிலிருக்கும்.. இப்ப அதுக்கும் வழியில்ல. எல்லாத்துக்கும் மெசின் வந்திருச்சி.. நாத்து நட்றதிலிருந்து வேளான்மை அறுப்பு வரையும் எல்லாம் மெசின் போட்டுத்தான் செய்றாங்க.. அதால கூலி வேலக்கி யாரும் ஆட்கள் எடுக்கிறதில்ல.."

" இப்படி எல்லாத்துக்கும் மெசின் வந்துட்டா கூலி வேல செய்ற சனங்க கதி என்னாகுங்க" என்ற மனைவியின் கேள்விக்கு..."எல்லாத்துக்கும் படைச்சவன் ஒரு வழிய வெச்சிருப்பான் பார்ப்போம்" என்ற பெருமூச்சுடன் தேநீரும் தீர்ந்தது புத்துணர்ச்சி மட்டும் எஞ்சியிருக்க...


'ஹஸினா....' 'என்னங்க....'


"எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனயிருக்கு.." 'என்னங்க அது'


"இந்த கூலி வேலய நம்பியிருக்காம ஏதாவது கைத்தொழில் தொடங்கினா எப்டி..."

'அதுக்கு காசுக்கு எங்கங்க போறது'


"காசெல்லாம் தேவையேயில்ல ஹஸினா... நம்மட உடல் உழப்பிருக்கு, தோட்டத்துல மண் தண்ணியிருக்கு, காட்டுக்கு போனா விறகு இருக்கு. இதெல்லாம் வெச்சி தோட்டத்துலயே செங்கள் செய்து வித்தா நாலு காசு கெடக்கிம்தானே.."


'நல்ல யோசனதாங்க... முயற்சி செய்யாமலே தோற்கிறத விட முயற்சி செய்தே தோற்கிறது.. வெற்றி பெறுவதை விட மேலுன்னு பெரியவங்க சொல்லுவாங்க... முயற்சி செய்துதான் பார்ப்போமே...'


"கட்டிடம் கட்றதுக்கு நம்ம ஊரு சனமெல்லாம் பக்கத்து ஊருக்குப்போய்த்தான் செங்கள் வாங்கிட்டு வர்றாங்க. நாமே செய்து வித்தா வாங்கமாட்டாங்களா என்ன...! நம்ம காதர் நானாகிட்ட செங்கள் செய்ற தட்டச்சு இருக்குன்னு சொன்னாரு நான் இப்பவே போய் வாங்கிட்டு வாறேன்.."

'இருங்க ரொட்டி சுட்டிருக்கேன் சம்பல் செய்து தர்றேன் சாப்பிட்டு போங்க" என்ற மனைவியின் குரலோடு.... தூரத்து வானில் விடியல் தெரிந்தது.......


இது எனது முதல் முயற்சி குறைகளைச்சுட்டிகாட்டுங்கள். தயது செய்து ஓட்டு போட மட்டும் மறவாதிர்கள்.. உங்கள் ஓட்டுகள்தான் நிறையபேரிடம் இதை கொண்டு போய் சேர்க்கும்..

வாங்க சாப்பிடலாம்..!

வந்தன்ம் வந்தனம்... வந்த சனம் குந்தனும்...


விருந்தோம்பல் எங்கிறது இப்ப நம்ம ஊர்களிலேயே அருகிப்போகும் ஒரு விஷயமாகவே மாறிக்கொண்டு வருகிறது.. விருதோம்பல்னா என்னன்னு கேட்கிற ஆட்களும் இருக்குங்கோ.. அவங்களுக்கு விளங்கும்படி சொல்லனும்னா "அதாங்க ஊட்டுக்கு விருந்து துண்ன அழக்கிறதுங்கோ"


அதுதான் நம்ம சொந்த பந்தம் நண்பர்கள் எல்லாம் விருந்துக்கு அழைச்சிருக்கேன்.. வந்து ஜமாயிங்க..


எங்க ஊர்ல எல்லாம் சொல்லுவாங்க வீட்டுக்கு எதிரி வந்தாலும் உள்ள கூப்பிட்டு காப்பியோ டீயோ குடுக்கிறதுதான் நல்ல பண்புன்னு. காப்பி டீய சாப்பிட்டு முடிந்தபிறகு நாலு சாத்து சாத்தித்தான் அனுப்புவாங்க அத விடுங்க...

சரி எல்லாரும் வந்திருக்கிங்க முதல்ல ஏதாவது காப்பி டீ கூல்டிரிங்கஸ் சாப்பிடிரிங்களா...? என்னது நேரா விருந்துக்கு போய்டலாமா..

சரி வாங்க உட்காருங்க... அவசரப்படாதிங்க... அவசரப்படாதிங்க... எல்லோருக்கும் தாராளமா உண்டு...

"ஏலே... எல்லாரும் வந்து உடகாந்துட்டாங்க வந்து பரிமாறுலே.."

பொண்ண கூப்பிட்டாச்சு இப்ப வந்து பரிமாறுவா எல்லாரும் வயிறு நிறைய சாப்பிடுங்க.."யோவ் தண்ணியில்லயா.."


"யோவ் இது அப்பிடி வீடில்லயா ஆச்சாரமான வீடுயா.."


"தாகத்துக்கு குடிக்கிற தண்ணிய கேட்டன்யா.."


"அ.. அதா.. நான் ஏதோ அந்த தண்ணின்னு நினச்சிட்டேன்"


"விருந்துக்கு கூப்பிட்டுட்டு இம்ச பண்றான்யா..."


உங்களுக்காக கஷ்டப்பட்டு நாலுவகை புரியானி.. செய்திருக்கு விரும்பினத எடுத்துக்குங்கோ....


பார்வைகளால் இலை விரித்தால்.....


புன்னகைகளால் பரிமாறினால்.....


வார்த்தைகளினால் பசியாறினார்கள்......சரியா சரியா சாப்பிட்டாச்சா... சாப்பிட்டாச்சா..


ஆஹா இன்னும் இருக்குங்க உங்களுக்காக வடலப்பம் செய்திருக்கேன் அதையும் சாப்பிடுங்க..

நல்லபடியா சாப்பிட்டாசசா அப்புறம் கிளம்ப வேண்டியது.. "எனனது" பரிமறின பொண்ணு யாருன்னு தெரியனுமா... அதல்லாம் கேட்கப்படாது...
சரி வயிறு நிறைய சாப்பிட்டிங்கதானே.. அப்புடியே ஒரு ஓட்டு போடரது ஏதாவது திடட தோனிச்சனுனா பின்னூட்டத்துல திட்டிட்டு போறது..

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics