நான் பார்த்த ரேணிகுண்டா..!

நாம் அன்றாடம் போய் வரும் சாலைகளிலாகட்டும். நாம் வாழும் ஊர்களிலாகட்டும் சமூகங்களிலாகட்டும். ஆங்காங்கே சிலர் ரவுடிகளாகவும் காசு கொடுத்தால் எதையும் செய்ய துணிந்தவர்களாகவும் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் நடமாடுவதை நாம் பார்த்திருப்போம்.. அவர்களை பார்த்தாலே ஒரு வெறுப்புணர்வும்,இதெல்லாம் ஒரு பொழப்புண்டு இத செய்றாங்களே என்ற எண்ணமும், அவர்கள் கைது செய்யப்பட்டாலோ தண்டிக்கப்பட்டாலோ மனதில் ஏற்படும் சந்தோஷமும் அச்சமூகத்தில் வாழ்பவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுவதுண்டு..


ஆனால் அவ்வாறானவர்களை, அவர்கள் ஏன் அப்படியானார்கள் என்ற நியாயங்களுடன் திரையில் கான்பிக்கும் பொழுது அவர்கள் செய்பவை நியாயமானவையாகவே தோன்றும் எமக்கு. அவர்கள் பக்கத்திலிருந்து நோக்கும் போது அவர்களின் செயல்கள் மீது நாங்கள் ஈர்க்கப்படுகிறோம்.. இதற்கு காரணம் அவர்களை அப்படி உருவாக்கிவிட்டது இந்த சமூகம்தான்... அவர்களுக்கு நியாயம் அநியாயம் ஒன்றும் புரியாது.

அவர்கள் வாழ வேண்டும் என்றால் யாராவது வாழ்கையிழக்க வேண்டும் அதுவே அவர்களின் கோட்பாடு.அது அவர்களுக்கு தப்பாக புரிவதில்லை..

நியாயங்கள் பறிக்க்ப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட ஒருவன்/கூட்டம்/சமூகத்தினது பின் விளைவுகள் வன்முறையாகவோ குரூரமாகவோ வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை.. தற்போது உலகில் தீவிரவாத இயக்கங்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள இயக்கங்களில் பல இவவாறு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கபட்டதனால் கிளர்ந்தெழுந்தவையே.. அதன் பின்னரான அவர்களின் மனப்பாங்கு குரூரமாகவே இருக்கும் என்பது உலக நியதி...

அண்மையில் வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படமும் இதே கருத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தது.. 5 சிறு வயது இளைஞர்கள், அவர்களை கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவது எது.. அவர்களின் வாழ்கை பாதையில் நிகழும் விடயங்கள் என்ன... அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா அவர்கள் முடிவு என்னவானது என்பதை மிக் நேர்த்தியாக தத்ரூபமாக சொன்ன படம்தான் இந்த ரெணிகுண்டா. ஏற்கனவே தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் ரவுடிகள்,தாதாக்கள்,பாதாள உலக குழுக்கள் எவ்வாறு உருவானார்கள் அவர்களின் செயற்பாடுகள் எப்படியிருக்கும் என்பதை சொல்லியிருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட இதை கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் பண்ணீர்செல்வத்திற்கு ஒரு சலூட்..


5 இளைஞர்கள். எல்லோரும் அறிமுகங்கள்தான் ஆனாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.. படம் பார்த்து முடிந்த பின்னும் சில மணி நேரங்களாவது

மனதில் நிற்கிறார்கள் இதில் தோன்றும் கதாபாத்திரங்கள். குடும்ப கஷ்டத்துக்காக உணர்வுகளை கொலைசெய்து விட்டு உடம்பை விற்று பிழைக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த பெண் உட்பட.. இவவாறான நிலை ஒரு பெண்ணுக்கு கொடுமையிலும் கொடுமையே..


தேவையானயளவு கதாபாத்திரங்கள்,அளவான வசனங்கள், குழப்பமில்லா திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, அமைதியான பின்னனி இசை, போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகும் மெல்லிய காதலும் வாய் பேச முடியாத பெண்ணும், டூயட் பாடல்கள் இல்லை, யதார்த்தமான சண்டைகாட்சிகள், வன்முறை காட்சிகளை காட்சிப்படுத்திய விதம், ஆபாச காட்சிகள் இல்லை ஹீரோயிசம் இல்லை, ஆர்ப்பாட்டங்களோ, அழுகை ஒப்பாரிகளோ இல்லை, சிறந்த இயக்கம் இவை யாவுமே இப்படத்தின் பலம் மற்றும் இப்படத்தின் மீது என்னை கவரச்செய்தது..
ஆரம்பத்தில் இடம்பெறும் ஜெயில் காட்சிகள் கொடுமை.. ஜெயில் என்றாலே இயல்பாகவே இப்படித்தானா எனக்குத்தெரியவில்லை.. கமலின் மகாநதி படத்தில் கூட ஜெயிலில் நடக்கும் கொடுமைகளை மிக அழகாக் சித்தரித்து காட்டப்பட்டிருக்கும் படத்தில் நகைச்சுவைக்கெண்டு நடிகர்களோ காட்சிளோ இல்லை என்றாலும் சில இடங்களை ரசிக்கலாம் சிரிக்கலாம்.. குள்ளமான டப்பா அந்த கருப்பு பெண்ணை காதலிக்கும் காட்சிகள்..

சேது என்ற அரசியல்வாதியை கொலை செய்யும் காட்சியை காட்டாமல்.. பின்பு பங்கர் எப்டிடா அவன கொண்டிங்க என்று கேட்கும் செயல்முறையில் சொல்லிக்காட்டுவதை லாஜிக்கை மறந்து ரசிக்கலாம்.

ஷக்தியை ஜெயிலில் சித்திரவதை செய்யும் போது அவனுக்கு உதவுவதும், அந்த பெண்ணை காதலிக்கிறான் என்று அவளை கூட்டிட்டு போ என்று சொல்வதும், மும்பைக்கு போக பஸ்ஸுக்கு தேவையான காசை மட்டும் எடுத்துட்டு மீதி காசெல்லாம் அவனுக்கே கொடுத்திடுங்கடா என சொல்வதும் கொலைகாரன் ஆனாலும் அவர்களுக்குள்ளும் நல்ல மனசுண்டு என சொல்லும் காட்சிகள்.

இறுதியில் நடாத்தப்படும் கொலைமுயற்சி காட்சி மிக மிக விறு விறுப்பு.. அது தோல்வியடையவே பாண்டு காலில் அடிபட்டு ஓடிவருவதும்,வண்டியை நிறுத்தாமல் செல்வதும், பின்பு அடித்தே கொல்லப்படும் காட்சி பார்வையாளர்கள் மனதை நெகிழவைக்கும் காட்சி.. ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படும் போது அவர்களின் கண்களில் தெரியும் மரன பயமும் அதன் வலியையும் காட்சிப்படுத்திய விதத்திலிருந்தே எவனுக்கும் மரன பயமும் வலியும் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது... அதிலும் குள்ளமான டப்பா போலிஸ் துரத்தும் போது உயர்ந்த சுவரைக்கொண்ட அறைக்குள் மாட்டிக்கொள்வதும், சுவர்களில் ஏற எத்தனிப்பதும் பின் மூலைக்குள்ளே குந்திக்கொள்வதும் பின் கொல்லப்படுவதும் மிக மிக அருமையான காட்சி...

ஒரு வன்முறைக்கதையை கவிதைத்தனமாக கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர் பண்ணீர் செல்வமிடமிருந்து இன்னும் நல்ல தமிழ் சினிமாக்களை எதிர்பார்க்கிறோம்...

அப்படியே ஒரு ஓட்டு குத்துங்கப்பா..அப்டியே ஏதாவது சொல்லிட்டும் போங்கப்பா..

8 comments:

Unknown said...

நல்ல படம் .,

jillthanni said...

ஆம் நண்பா
நானும் பார்த்து வியந்த படம்
அதுவும் அந்த பசங்க சர்வசாதாரணமாக கொலை செய்வது பக்கா ரவுடியிசம் தான் தெரிந்தது

தங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு,அடிக்கடி பன்னுங்க

ரெணிகுண்டாவா ரேணிகுண்டாவா சந்தேகமா இருக்கு...

நாடோடி said...

ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம் ரியாஸ்... கொஞ்ச‌ம் புது ப‌ட‌ங்க‌ளையும் விம‌ர்ச‌ன‌ம் ப‌ன்ணுங்க‌...

பிச்சைப்பாத்திரம் said...

நல்லா இருக்கு. இன்னமும் கூட சில விஷயங்கள் இருக்கு.

கிரி said...

படத்தை ரொம்ப ரசிச்சு பார்த்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்! :-)

எனக்கும் படம் ரொம்ப பிடித்து உள்ளது.. அருமையான திரைக்கதை கடைசியில் முடிவும் சிறப்பு,

Anonymous said...

இத்திரைப்படம் உண்மையிலேயே நல்ல படம்

Anonymous said...

இத்திரைப்படம் உண்மையிலேயே நல்ல படம்

Anonymous said...

Excellent Film

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...