பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய்விட்டது நம் வாழ்கையில்.. அதில் பாடல் விருப்பங்கள் என்பது வெவ்வேறு வகையானவை. சிலருக்கு பழைய பாடல் பிடிக்கலாம் சிலருக்கு இடைக்கால பாடல்கள் பிடிக்கலாம் சிலருக்கு புதிய குத்து பாடல்கள் பிடிக்கலாம்.. அது அவரவரின் ரசனையை பொருத்து மாறுபடும்..
என்னை பொருத்தவரை எல்லா காலத்து பாடல்களையும் ரசிப்பவன் நான் அதிலும் மெல்லிய இசையில் மனதை வருடும் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. பாடல்களில் நான் அதிகம் ரசிப்பது பாடல் வரிகளைத்தான்.. அன்றைய மருதகாசி முதல் இன்றைய நா.முத்துக்குமார், தாமரை, தபூ சங்கர் வரை அனைத்து பாடலாசிரியர்களையும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.
இன்று நான் பகிர்ந்து கொள்ள் போவது. என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் சிலவற்றை.
பூ பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவைப்போன்றது.......(கதாநாயகன்)
ஏனோ தெரியவில்லை இந்தப்பாடல் மீது எனக்கொரு பைத்தியம். எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
அவ்வாரானதொரு ஈர்ப்பு இப்பாடல் மீது எனக்கு. இளையராஜாவின் இசை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.ஜேசுதாசின் குரல் என்றுமே இனிமை. பாடலை இயற்றிய கவிஞர் யாரென்று தெரியவில்லை அவருக்கு ஒரு சபாஷ் போடலாம். இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என மனதோடு பயனிக்கும் இதை கேட்கும் போதெல்லாம். அவ்வளவு அழகுகானவை.
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது..
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது..
அழகு என்பது மெழுகைப்போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
வலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்..
போன்ற எல்லா வரிகளுமே...
ஆனால் ஒரு துரதிஷ்டம். இந்தப்பாடலை அதிகம் நான் கேட்டதில்லை காரணம் இதை தறவிறக்கம் செய்வதற்கான இனையத்தளம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை யாராவது தெரிந்தால் சொல்லுங்களே.. இபபாடலை எங்கே தறவிறக்கலாம். mp3 வடிவில்.
பல்லவியில்லாமல் பாடுகிறேன் பாதையில்லாமல் ஒடுகிறேன்...... (உயிரே உனக்காக்)
பல்லவியில்லாமல் பாடுகிறேன்
பாதையில்லாமல் ஓடுகிறேன்
ஊமைக்காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.
உயிரே உனக்காக
இந்தப்பாடலின் மொத்த வரிகளுமே இவ்வளவுதான். ஆனால் பாடல் பரவசமூட்டுகிறது. லக்ஷ்மி காந்த் பெயார்லாலின் இசையில் எஸ்.பி.பி. அவர்கள் மிக மிக அனுபவித்து பாடியிருக்கிறார்.. இசையின் ஒவ்வொரு வளைவு நெழிவுகளையும் தன் குரலாலே சமாளிக்கிறார்.. அவரின் லா..லா .. உச்சரிப்புகள் மிக அழகு. பாடல் வரிகள் வைரமுத்து சொல்லவே தேவையில்லை.. முத்துக்கள்.
வாழ்கை வாழ்கை மேகம் போல மனிதர்கள் எல்லாம் அதன் துளி போல...... ( பூவேலி)
இந்தப்பாடலை பாடகர் ஸ்ரீநிவாஸ் அனுபவித்து பாடும் விதமே தனியழகு. வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதமானவை
"மனம் ஏதோ ஒன்றை நினைக்க
விதி ஏதோ ஒன்றில் இனைக்க
என்ன பேர் சொல்லி நான் அழைக்க
இது காதலா இதுதான் காதலா இதுவே காதலா"
இந்தப்பாடல் வெளிவருவதற்கு முன்னே நான் எழுதிய கவிதையொன்று..
வாழ்க்கை மேகம் போல
மனிதர்கள் யாவரும்
மழைத்துளி போல
மண்ணில் வீழ்ந்ததும்
சிதறிப் போய்கிறோம்
நீர்க்குமிழ் போல...
இந்தப்பாடலை கேட்டபின்பு நான் வியந்து போனதுண்டு அட நம்ம கவிதை மாதிரியே இருக்கே என்று 'வைரமுத்து நம்ம கவிதைய ஆட்டய போட்டுட்டாரோ...' " டேய் இது உனக்கே ஓவராயில்ல" என்று நீங்க சொல்றது கேட்குது. " Be careful" என்ன சொன்னேன்.
தரைமேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்....... (படகோட்டி)
மீனவர்களின் வாழ்கையை பற்றி நிறைய பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப்பாடலின் தரத்திற்கு வேறொன்றும் இனையாகாது என்பது எனது கருத்து. அவவளவு அருமையான பாடல் இது இந்தப்பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வாலிக்கு ஒரு சபாஷ் போடலாம் அற்புதமான வரிகள். ஒவ்வொரு வரியிலும் மீனவ சமூகத்தின் வாழ்க்கை கஷ்டங்கள் விளங்குகிறது.
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்.
ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆளும் காதல் தேசம் நீதான்....
(இரட்டைவால் குருவி)
இந்தப்பாடலைப்பற்றி தனியொரு பதிவே இட்டிருந்தேன் நான் பிளாக் எழுத தொடங்கிய ஆரம்பத்தில்
இங்கே பார்க்கவும். http://riyasdreams.blogspot.com/2010/04/blog-post.html
ராஜ ராஜ சோழன் நான்
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே... காதல்... தீவே....
மன்மீது சொர்க்கம் வந்து பெண்னாக ஆனதோ,,
உல்லாச பூமி இங்கு உண்டானததே,,,,,
இரட்டை வால் குருவி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் சுவை மாறாது சுகம் மாறாது
அத்தனை நூற்றாண்டுகளின் பின்பும் நல்ல பாடல்களை ரசிக்கும் ரசிகர்கள் மனதில் ஓர் ஓரமாக இந்த பாடல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்றும் பசுமையாக.
அவ்வாறானதொரு பாடலை கொடுத்த இயக்குனர் பாலுமகேந்திரா இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் ஜேசுதாஸ் பாடலாசிரியர் முமேத்தா ஆகியோருக்கு ஒரு சபாஷ் போடலாம்.......
இயக்குனர் பாலுமகேந்திராவின் கற்பனைக்கு இளையராஜாவின் மனதை வருடும் மெட்டுக்கு கொஞ்சம் கூட விலகாமல் சிதையாமல் தனது கவித்துவமான அழகான வரிகளால் உருவம் கொடுத்திருக்கிறார் பாடலாசிரியர் முமேத்தா. இவர்களின் முயற்சிக்கு தன் கம்பீர குரலால் உயிர் கொடுத்து காற்றின் வழியே நம் காதுகளுக்கு எட்ட செய்திருக்கிறார் கே.ஜே. ஜேசுதாஸ்
அந்தி நேரத்தென்றல் காற்று அள்ளித்தந்த தாலாட்டு... (இனைந்த கைகள்)
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு ரயிலில் பயணம் செய்வதாய் உணர்வு எனக்குள்.. அவ்வளவு அருமையான பாடல் இது.. இசையினூடே
ரயில் வண்டி ஓடும் ஓசையையும் மிக அழகாக பாடல் முழுவதிலும். குழந்தை அழும் சத்தத்தை பாடல் நடுவிலும் இனைத்துக்கொண்டதுக்கு இளையராஜாவுக்கு பாராட்டுக்கள். இந்தப்பாடலில் இன்னொரு விஷேசம் எஸ்.பி.பி ஜெயச்சந்திரன்,சுரேந்தர் என மூவரையும் பாட வைத்தது.
இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஒரு ரயில் வண்டி என் மனதுக்குள் ஓரமாக ஓடுவதாய் உணர்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Vaa Kannamma Tamil Song Lyrics in English
Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi Vaa pada pad...
-
சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...
-
The Greatest of All Time! Thalapathy is here. Presenting the song "Spark" from the new Tamil movie "The Greatest Of All Time...
-
தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள் படம் : காதல் கொண்டேன் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா இசை : யுவன் சங்கர் ராஜா பாடல் வரிகள் : ந...
21 comments:
very nice songs.... Good ones! :-)
நானும் ரசித்த வரிகள்தான் ...!!அருமை..
முதல் வந்த சித்ரா அக்காவுக்கு.. முழு வடையும்
இரண்டாவதாக வந்த ஜெய்லானிக்கு பாதி வடையும்
வழங்கப்படுகிறது..
பி.கு. ஜெய்லானிக்கு சட்னி வழங்கப்படமாட்டாது.
அருமையான பாடல்கள்.
அற்புதமான எனக்கும் மிகவும் பிடித்த தெரிவுகள் ரியாஸ்.இசைதான் தனிமை களைப்புப் போக்கும் ஒரு ஊட்டச்சத்துப்போல!
இணைந்த கைகளின் இசை மனோஜ் கியான் என்று நினைக்கிறேன்
நல்ல தேர்வுகள் தான்... நானும் ரசித்து கேட்ட பாடல்கள்...
அருமையான ரசனை உங்களுக்கு,வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே...
//இரண்டாவதாக வந்த ஜெய்லானிக்கு பாதி வடையும்
வழங்கப்படுகிறது..
பி.கு. ஜெய்லானிக்கு சட்னி வழங்கப்படமாட்டாது. //
பாவி மக்கா..!! தொண்டையில அடைக்க போகுது அப்ப தண்ணியவதுசேர்த்து குடு..!!
ஜெய்லனி said
//பாவி மக்கா..!! தொண்டையில அடைக்க போகுது அப்ப தண்ணியவதுசேர்த்து குடு..!! //
ஹி....ஹி...ஹி....
nice
நல்ல ரசனை ரியாஸ் - எனக்கும் இந்த பாடல்கள் பிடிக்கும்.
அருண்மொழிவர்மன் said.
//இணைந்த கைகளின் இசை மனோஜ் கியான் என்று நினைக்கிறேன்//நன்றி உங்கள் தகவலுக்கு நண்பா
தரைமேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்....... (படகோட்டி)
மீனவர்களின் வாழ்கையை பற்றி நிறைய பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப்பாடலின் தரத்திற்கு வேறொன்றும் இனையாகாது என்பது எனது கருத்து. அவவளவு அருமையான பாடல் இது இந்தப்பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வாலிக்கு ஒரு சபாஷ் போடலாம் அற்புதமான வரிகள். ஒவ்வொரு வரியிலும் மீனவ சமூகத்தின் வாழ்க்கை கஷ்டங்கள் விளங்குகிறது.
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்.
இந்த பாடல் எனக்கான சிச்சிவேசன் சாங் நண்பரே :))
அருமையான தேர்வு,வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
சூப்பர் செலக்ஸன்ஸ்.
படகோட்டி பாடல் எனது ஆல் டைம் பேவரைட்.
ivai anaithum rasitha paadalgale.... arumai. middle period songs is always rocks especially Ilayaraja songs...
சித்ரா அக்கா
ஜெய்லானி
உலவு.காம்
ஆசியா அக்கா
ஹேமா அக்கா
அருண்மொழிவர்மன்
நாடோடி
தோமஸ் ரூபன்
LK
SOFTWARE ENGINEER
பாலா
வெறும்பய
ஜீவன்பென்னி
புஷ்பா
உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி..
பாடல்கள் எல்லாம் அருமை!!!!!!
கதாநாயகன், இணைந்த கைகள் - இரண்டு படத்துக்கும் இசை இளையராஜா இல்லை.
கதாநாயகன் - இசை : சந்திர போஸ்
பாடல் வரிகள் எழுதியது வைரமுத்து என நினைக்கிறேன்
பூப்பூத்தது பாட்டின் மூலம் இங்கே இருக்கிறது:
http://www.youtube.com/watch?v=EHNw9LBvcU8
'வைசாக சந்த்யே' என்ற இந்த மலையாளப்பாட்டுக்கு இசை அமைத்தவர் ஒரு தமிழர் தான் - ஷ்யாம் :-)
Post a Comment