தந்தையே உன்னை போற்றுகிறோம்...!



தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்..
கருவறை
மட்டும்தான்
உனக்கில்லை
தாயென்று சொல்ல
உன்னை..
உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
கலைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் வாழவே
நலமாய்...
வலிகள்
எம்மைத்தாக்கினால்
வலிப்பதென்னவோ
உனக்கல்லவா..
துயரங்களால்
எம் விழி
நனைந்தால்
துடைப்பது
உன் விரல்களல்லவா..
சோதனையானாலும்
வேதனையானாலும்
தோல் கொடுக்கும்
தோழன்
நீயல்லவா...
உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்படவேண்டும்
உன் புகழ்
பூவுலகம்
வாழும் காலம் வரை...!



31 comments:

Unknown said...

நல்ல கவிதை ...பாராட்டுக்கள் ...
தந்தையர் தின வாழ்த்துக்கள் ...

இளம் தூயவன் said...

வாழ்த்துக்கள்.

Chitra said...

very nice one! :-)

elamthenral said...

அருமையான கவிதை.. தந்தையர் தின வாழ்த்துக்கள்... நான் போற்ற என் தந்தை எனக்கில்லை...

ஜிஎஸ்ஆர் said...

\\உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
கலைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் வாழவே
நலமாய்...\\

இது இப்படி இருக்க வேண்டுமோ
உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
கலைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் நலமாய்
வாழவே!

என்றும் அன்புடன்
ஞானசேகர்

VELU.G said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்

Riyas said...

ஜிஎஸஆர் said,

//இது இப்படி இருக்க வேண்டுமோ
உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
கலைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் நலமாய்
வாழவே!

என்றும் அன்புடன்
ஞானசேகர்//

இப்படியும் வந்திருக்கலாம்... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஞானசேகர்,,

Riyas said...

கே.ஆர்.பி.செந்தில் மிக்க நன்றி
இளம் தூயவன் மிக்க நன்றி
சித்ரா அக்கா மிக்க நன்றி
velu G மிக்க நன்றி

உங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் கோடி நன்றிகள்..

Riyas said...

புஷ்பா said..
//அருமையான கவிதை.. தந்தையர் தின வாழ்த்துக்கள்... நான் போற்ற என் தந்தை எனக்கில்லை...//

வாங்க புஷ்பா.

உங்கள் நிலைதான் எனக்கும் என் தந்தையும் உயிரோடில்லை.. அவரின் ஞாபகங்களையும் அவரைப்போன்றுள்ள் ஏனைய தந்தையர்களையும் போற்றலாம்தானே...

உங்கள் வருகை தொடரட்டும்....

Robin said...

//உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்படவேண்டும்
உன் புகழ்
பூவுலகம்
வாழும் காலம் வரை...!
// சரியாகச் சொன்னீர்கள்.

நாடோடி said...

ந‌ல்ல‌ க‌விதை ரியாஸ்... த‌ந்தைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்..

ஜெய்லானி said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்

அமைதி அப்பா said...

மிக நல்ல கவிதை.

vasan said...

எங்க‌ள் த‌ந்தைய‌ர் நாடென்ற பேச்சினிலே,
ஒரு 'சக்தி' பிற‌க்குது மூச்சினிலே.
வாழ்க‌, த‌ந்தைய‌ர் தினம், தின‌மும்.

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை ரியாஸ். தந்தையர் தின வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அருமை.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

கவிதை மிக அருமை ரியாஸ். என்சிறுவயதில் தந்தை தவறிவிட்டதால். தந்தையின் அருகாமை கிடைத்தில்லை ஆனாலும் தந்தையை நேசிக்கிறேன்..

ஜீவன்பென்னி said...

எனக்கு இந்த மாதிரியான தின வாழ்த்துக்கள் பிடிப்பதில்லை. ஆனால் இந்த கவிதை நல்லாயிருக்கு. அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Admin said...

அருமை நண்பரே... தொடருங்கள்

மங்குனி அமைச்சர் said...

அருமையான கவிதை

Allinone said...

"தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்.."

மிக அருமையான வரிகள்.
தங்களின் இந்த கவிதை மனதை மிகவும் ஈர்த்துவிட்டது.
இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் மறைந்து போன என் தந்தையை எனக்கு நினைவூட்டியது.பாசமும் நேசமும் மிக்க தந்தைக்கு அர்பணிக்க மனதை தொடும் உணர்ச்சிபூர்வமான கவிதை.

வாழ்த்துக்கள் .

சௌந்தர் said...

உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்படவேண்டும்

சூப்பர் பாஸ்....

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப சூப்பரா இருக்குங்க..!! :-))

Riyas said...

வாங்க ரொபின் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க அமைதி அப்பா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க வாசன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க ராமலக்ஷ்மி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
வாங்க ஜீவன்பென்னி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க சர்ஹீன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க மங்குனி அமைச்சரே உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க ஆனந்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

Riyas said...

வாங்க நாடோடி உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க சௌந்தர் உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க ஜெய்லானி உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

வாங்க அக்பர் உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

Riyas said...

Unknown said...
"தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்.."

மிக அருமையான வரிகள்.
தங்களின் இந்த கவிதை மனதை மிகவும் ஈர்த்துவிட்டது.
இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் மறைந்து போன என் தந்தையை எனக்கு நினைவூட்டியது.பாசமும் நேசமும் மிக்க தந்தைக்கு அர்பணிக்க மனதை தொடும் உணர்ச்சிபூர்வமான கவிதை.

வாழ்த்துக்கள் .

நன்றி நண்பரே உங்களின் பாராட்டுகளே எனக்கான பரிசுகள்

மணிகண்டபிரபு said...

நல்ல கவிதை ரியாஸ்.... உணர்வு பூர்வமான வரிகள். நான் உங்களின் புதிய நண்பன்.

SURYAJEEVA said...

ரைட் ரைட்

Admin said...

தங்களின் இந்த கவிதையினை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html

Seeni said...

nalla irukku!

aalunga said...

நல்ல கவிதை!

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...