பேசும் படங்கள்...II.

கடைசி நொடியிலும் உயிர்வாழ ஒரு போராட்டம்..
எறும்பை கூட வீனாக கொல்லாதீர்கள்.. அதற்கும் உயிருண்டு அதற்குள்ளும் இதயமுண்டு அதில் வலியுமுண்டு..


அப்பாடா கக்கா போட நல்ல இடம் கிடைச்சாச்சு.. ஜாலிதான் எங்களுக்கில்லை வேலிதான்..

ஆத்தாடி கீழே விழுந்தா... குடும்பத்துல என்ன குழப்பமோ இங்க வந்து யோசிக்காரு மனிசன்.

ஐய்யய்யோ நாய் இல்ல பேய் இல்ல மனிசன்.

கொஞ்சம் தள்ளுங்க நாங்களும் படிக்கனும்ல்ல்..
பேப்பர தொரந்தாலே இந்த மனிசப்பயல் செய்ற அட்டகாசம்தான் எங்க பார்த்தாலும்.. எங்கள பத்தியும் கொஞ்சம் போடுங்கப்பா..
ஒரு வினாடிய கூட வீனாக்க மாட்டம்ல்ல்...


சகல வசதிகளையும் கொண்ட கழிவறை... எப்பூடி.

ஓடி விளையாடு பாப்பா...!


ஓடி விளையாடு பாப்பா
என்றும்
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
என்றுரைத்த
முண்டாசுக் கவிஞன்
இன்றிருந்திருந்தால்
கண்ணீர்
சிந்தியிருப்பான்.
முதுகில் உலகை
சுமக்கும்
குழந்தைகளின்
நிலை கண்டு....

கடந்தகாலம்....!

தூக்கம்
கொள்ளையடிக்கப்பட்ட
இரவொன்றில்.
எனக்குப்பிடித்த
இருளோடும்
தனிமையோடும்
உறவாடிக்கொண்டிருந்தேன்...
எங்கெங்கோ சுற்றி
எதையோயெல்லாம்
எட்டிப்பிடித்த மனசு
திசைமாறிய காற்றாய்
திடீரென
பின்னோக்கி நகர்ந்தது
சில ஆண்டுகள்....
இதயப்பறவை
சிறகு முளைத்து
பறக்க தொடங்கிய காலமது
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...
ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...
காயங்கள் இல்லை
தோல்விகளும் இல்லை
வலிகள் மட்டும்
நெஞ்சோடு
தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்.
மழை வந்துபோன பின்னும்
தொடரும்
மேகங்கள் போல....
தேடல்கள்
தொடர்கிறது
காலம் கடந்தும்
கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையில்....!

(கற்பனையல்ல கடந்தகால நிஜம்)

தாய் மடி...!

சில
இரவுகள் வேண்டுகிறேன்
இறைவனிடம்..
தாய்மடியில்
தலைவைத்து உறங்கிட...!

தவிக்கிறது மனசு
மீண்டும்
குழந்தையாகிட
தாயின் சேலைக்குள்
ஒளிந்து விளையாடும்
குழந்தையை
கானும் போதெல்லாம்...!

தாயே
நான் உன்னருகில்தான்
உன் நினைவுகள்
என்னோடு
வாழும் வரை....!

ஆகாயம் நோக்கிப்போன
பறவை
பசித்தால்
பூமிக்கு வருவது போல
நான் எங்கு சென்றாலும்
என் நினைவுகள்
உன்னை நோக்கியே
வரும்...!

பாலைவன தேசத்திலிருந்து
ரியாஸ்..

எண்ணங்களே வாழ்க்கையாக...!

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வந்தர்களாகிக்கொண்டே போவதும். வறியவர்கள் தொடர்ந்து வறுமையில் வாடுவதும் வளர்ந்து வரும் நாடுகளில் இயல்பாகவே கானப்படுகிறது.. ஏன் இந்த ஏற்ற இறக்கம்..? பலமுறை நான் சிந்தித்ததுண்டு.. ஓரே சமூகத்துக்குள் பசிக்கு உணவு தேடி அலைபவனும் உண்டு,பசி என்றால் என்னவென்றே தெரியாதவனும் உண்டு.. இவை அனைத்துக்கும் என்னதான் தீர்வு.


பசித்தவனுக்கு உணவளித்தால் அவனின் அந்த நேர பசி தீரலாம்.. அது தற்காலிகம்தான். அதன் பின் அவனின் உணவுத்தேவைக்கு யார் பொறுப்பு. தொடர்ந்து ஒவவொருவராக உணவளிப்பதா.. அவ்வாறு செய்தால் அவன் பிரச்சினை தீரலாம்.. ஆனால் அதுவே தீர்வாகாது அது சாத்தியப்படவும் மாட்டாது.. ஒரே தீர்வு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படவேண்டும் இது இரண்டு வழிகளில் நிகழலாம்.. முதலாவது குறித்த அரசாங்கத்தின் ஒரு சிறந்த திட்டத்தின் மூலமாக இரண்டாவது தானே உணர்ந்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சிப்பதன் மூலமாக..


இதில் அரசாங்க திட்டங்கள் என்பது இலவசம் என்ற பெயரில் மக்களை சோம்பேரிகளாக்கும் திட்டங்களே.. நான் முன் கூறியது போல பசித்தவனுக்கு உணவளிப்பது போல்தான் இத்திட்டம்... உதாரணமாக இலங்கையில் தற்போது அமுலில் உள்ள "சமுர்த்தி" திட்டத்தை கூறலாம் இதில் வறிய வசதியற்ற குடும்பங்களுக்கு மாதா மாதம் குறிப்பிட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது பொருட்களாக.. ஆகவே கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இது கொஞ்சம் நிவாரணமாக அமைந்தாலும் எத்தனை நாளைக்கு இதுவே தீர்வாக அமையும்.. வேலை ஏதும் செய்யாமல் இதையே நம்பி காலத்தை ஓட்டுபவர்கலும் உண்டு.. இவ்வாறானவர்களின் வாழ்க்கைத்தரம் எங்கே உயரும்.. தொடர்ந்தும் வறுமை வறுமை வறுமைதான்.. இங்கே அரசாங்கத்தை முழுமையாக குற்றம் பிடிக்க முடியாது.. இந்தியாவில் வறியவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் முயற்சிகளை பற்றி எனக்குத்தெரியவில்லை இந்திய நண்பர்கள் சொல்லலாம்..


இங்கு தானாக உணர்ந்து உழைத்து உயருவதே சிறந்த வழியாகலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.. இந்த உயர்வுக்கு முதலில் வழிவகுப்பது நம் எண்ணங்கள் சிந்தனைகள் மாறுபடவேண்டும்.. நம் எண்ணங்கள் எவ்வாறிருக்கிறதோ நம் செயல்களும் அவ்வாறே அமையலாம்.. நம் செயல்களை பொருத்தே நம் வாழ்கைத்தரமும் நிர்ண்யிக்கப்படுகிறது.. "எண்ணங்கள்" இதை ஆங்கிலத்தில் "Attitude" என்பார்கள்.. நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் நம் செயல்களும் சிறந்தவையாகவே இருக்கும்..

உலகில் ஏற்பட்ட அத்தனை தொழில்/கைத்தொழில் புரட்சியின் ஆரம்பம் அவர்களின் எண்ணங்களில் ஏற்பட்ட மாற்றமும் விடாமுயற்சியுமே.. ஜப்பானில் சீனாவில் ஏற்பட்ட வளர்ச்சி அவர்களின் எண்ணங்கள், சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியேயன்றி அவர்களுக்கு எந்தவித அதிஷ்டமும் அடிக்கவில்லை.உலக கோடீஸ்வரர்களாக பெரும் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் சில பேரே பரம்பரை பணக்காரர்களாக இருந்தவர்கள்.. நிறைய பேரின் வாழ்க்கை வரலாற்றை நாம் பார்த்தால் அவர்களின் எண்ணங்கள்,முயற்சி,உழைப்பு மூலமாகத்தான் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது புரியும்..உதாரணத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான 'Warren buffett' ஐ கூறலாம்.


இந்த பரந்துவிரிந்த உலகில் நாம் முன்னேற எத்தனையோ வழிகள் இருக்கலாம்.. அவற்றையெல்லாம் அறிந்து கொள்ள தேடல் வேண்டும்..
குறுகிய நம் சிந்தனைகள்,பார்வைகள் தூரநோக்குடையதாகவும் தெளிவானதாகவும் இருக்கவேண்டும்.. இவற்றுக்கெல்லாம் நமது எண்ணங்கள் நல்லதாகவும் மற்றவருக்கு தீங்காய் அமையாதவாறும் இருக்க வேண்டும்.. அடுத்தவரை வேதனைக்குள்ளாக்கி நாம் கானும் வளர்ச்சி என்றுமே நிலைப்பதுமில்லை வெற்றியளிப்பதுமில்லை இதை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் காங்கிறோம்..

எப்படி உழைப்பது,எப்படி முன்னேறுவது முடியாது, இயலாது,கடினம் என்ற மனதில் ஊறிய ஒரே எண்ணங்களை விடுத்து.. எதுவும் முடியும் முடியலாம் முயற்சித்தால் என்ற எண்ணங்களை மனதில் விதைத்து. தெளிவான் முடிவுகளை நோக்கி பயணித்தால் வாழ்க்கை பயணம் வெற்றியடையலாம்.. நம்பிக்கை கொள்வோம்.. அறிவுரைகள் சொல்லும் அனுபவமோ,வயசோ எனக்கில்லை இது என் மனதில் தோன்றியவைகள் மாத்திரமே.யாருக்கான அறிவுரையும் அல்ல..

பேசும் படங்கள்...!

ஒரு தோட்டாவைக்கூட வீனாக்கமாட்டம்ல..

சொகுசு வாகணம்னு சொல்றது இதுதான் போல
வாங்களே ஒரு ரவுண்டு போகலாம்..


ஏலே....
அடுத்த உலக கிண்ணத்துல எங்களயும் சேர்த்துங்கலே...
கடல்ல படகுதான் ஓட்ட முடியல்ல
இங்கசரி ஓட்டலாம்..
நாங்கலெல்லாம் புத்திசாலிங்க.. புரிஞ்சுதால..டேங்க் ஃபுல் டீஸல்.. போடுங்கலே...

வெள்ளம் வடியும் மட்டும் கொஞ்சம் தூங்கலாம்னுதான்..
 பொலிதீன் பைகள் மீள் உபயோகப்படுத்தப்படவேண்டுமாம் இலங்கை சுற்றாடல்துறை அமைச்சின் தகவல்..

ஏலே.. இந்த பழங்கள பார்ககையில் உனக்கு என்ன புள்ள தோனுது..
 

பெண்தான் அழகானதோ
அழகுதான் பெண்னானதோ...

ஓர் மழைக்காலம்...!

மழை மேகங்கள்

பூமிக்குழந்தை
பசிதீர
பாலூட்டும் தாயானவள்...
பூமி வரும்
மழைத்தூரல்கள்
மனிதன் தேடும்
சந்தோஷ துளிகள்...
மழை பொழியும்
பொழுதுகள்
மனது துள்ளிக்குதிக்கும்
நிகழ்வுகள்...
வறண்ட பூமி
வறுமை வாழ்க்கை
வளம்பெறலாம்
மழைத்துளிகள்
மன்னைத்தொடுகையில்...
மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....!


மழைக்காதலன்...

சுடச்சுட பழைய சோறு...!

ஒரு சமையல் குறிப்பு..


சமையல் கில்லாடிகளான நம்ம அக்காமார்களுக்கு போட்டியா நானும் இன்று சமையல் குறிப்பு தரப்போறன்.. ஏய்யா உனக்கு இந்த வேண்டாத வேல.. ஏன் இந்த கொலவெறி அப்பிடி நீங்க மனசுக்குள் நினைக்கிறது எனக்கு கேட்குதுங்கோ... கண்ட கண்ட மொக்கையெல்லாம் போட்டியே ஒரு சமயல் குறிப்பு போட்டியான்னு நாளைய பதிவுலகம் நம்மல பார்த்து ஒரு கேள்வி கேட்ககூடாது பாருங்க... அதுதான் இந்த முயற்சி அப்பிடியே வாங்க போவோம் சமயலறைக்கு...

நான் இன்றைக்கு சொல்லப்போறது புதிதாக சமைப்பது சமபந்தமாக இல்லிங்கோ... சமைத்த உணவை எப்படி ரீமேக் செய்து எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பது பற்றித்தான்.. இது மத்திய கிழக்கில் வேலை செய்யும் சமைத்து சாப்பிடும் நண்பர்களுக்கு ரொம்பவே பயன்படும்.. அதாவது வேலைக்கு செல்வதால் ஒரு நாளைக்கு ஒரு வேளையே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று வேளையும் சாப்பிடுவதே இங்குள்ள நிலை.. அப்படி சாப்பிடும் போது அந்த உணவு வகைகள் குளிர்ந்த நிலையிலையே கானப்படும் 'குளிர்ல வைத்தா குளிராத்தான்யா இருக்கும் பின்ன சூடாவா இருக்கும்' அப்டி யாரோ சொல்றது கேட்குது.. இதோ வந்துட்டேன்...

அப்படி குளிர்ந்த உணவு வகைகளை அப்படியே சாப்பிட்டால் அதில் அவ்வளவு ருசி இருக்காது.. அதை கொஞ்சம் சுவை கூட்டி சுடச்சுட எப்படி சாப்பிடுவதென்பதை இப்ப பார்க்க போறோம்,,

தேவையானவை

பழைய சோறு
பழைய கறி
ஒரு முட்டை (ஒருவருக்கு)
கொஞ்சம் நெய் அல்லது எண்னெய்

ஒரு பிரைபேனில் அதுதாங்க வறுக்க பொரிக்க எடுபோமே அந்த பாத்திரம் அடுப்பில் வைத்து அதிலே ஒரு சொட்டு நெய் அல்லது எண்னெய் விட்டு கரண்டியால் தடவிக்கொள்ளவும்.. பின் முட்டையை உடைத்து ஊத்தி அதையும் தடவிக்கொள்ளவும்.பின் சோற்றையும் கறியையும் போட்டு நன்றாக கிளரவும். இதற்கு கோழியோ இறைச்சியோ, மாட்டிறைச்சியோ தேவையில்லை சாதாரன பருப்பு, கிழங்கு இருந்தாலே சுவையாக இருக்கும். அதுவும் கறி கொஞ்சம் இருந்தாலே போதும். இறுதியில் பிரைட் றைஸ் போல பழைய சோறு ஆகிவிடும். ஒரு பத்து நிமிடத்தில் பழைய சோறும் கறியும் சுவையான சுடச்சுட சமைத்த உணவாக மாறிவிடும்.. எப்புடி நாங்களும் சமைப்போமில்ல..

இவ்வளவு நாளும் அக்காமார்கள் புதுசு புதுசா எப்படி சமைக்கிறது என்பதைத்தான் சொல்லித்தந்தார்கள் இப்படி ஒன்றும் சொல்லித்தரலையே என்று. எல்லோரும் என்னை புகழ்வது விளங்குது.. வாங்க வாங்க வரிசையில வந்து தாங்க உங்க அன்பு பரிசை.

எங்க போறீங்க நில்லுங்க இன்னும் முடியல்ல... ஒன்று வாங்கினா ஒன்று இலவசம் என்கிறமாதிரி ஒரு சமையல் குறிப்பு படிச்சா ஒரு மருத்துவ குறிப்பு இலவசம். அடுத்ததா ஒரு மருத்துவ குறிப்பு. 'இன்றைக்கு ஒரு வழிபன்னாம போக மாட்டான்' நீங்க சொல்றது கேட்குது.. கொஞ்சம் பொறுத்துக்குங்க..

இப்ப நிறைய பேருக்குள்ள பிரச்சினை தலைமுடி உதிர்வது.. இதற்காக கண்ட கண்ட மருந்துகள், எண்னெய் வகைகள் நிறைய விலை கொடுத்து வாங்கி ஏமாறுகிறார்கள்.. முடி உதிர்வதை தடுக்க,குறைக்க ஒரு இலகு வழி தலையை இரண்டு கை விரல்களாலும் மசாஜ் செய்வது. இதை தனக்குத்தானே செய்துகொள்ளவும் முடியும் பிறரைக்கொண்டு செய்யயும் முடியும்.. வெறுமனே முடியை மட்டும் கிளராமல் கொஞ்சம் அழுத்தமாக செய்ய வேண்டும். இது எப்படி சாத்தியப்படும் என்று விஞ்ஞான விளக்கம் எல்லாம் கேட்கப்படாது.. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் நூற்றுக்கு நூறு வீதம் சாத்தியப்படாவிட்டாலும் கொஞ்சமாவது சாத்தியப்படும்.. இது நான் அனுபவம் மூலம் கண்ட உண்மையும் கூட...

வழுக்கை தலை உள்ளவர்கள் மசாஜ் செய்தால் முடி வளருமா எனக்கேட்டால் இப்போதைக்கு சொல்ல முடியாது.. ஏண்டா வழுக்கை தலை உள்ள எலியை தேடிக்கிட்டிருக்கேன்.. ஏதாவது புதிய மருந்து கண்டு புடிச்சா எலிக்குத்தான் முதல்ல கொடுப்பாங்களாமே.. அதுதான் நானும் எலியை வைத்து ஆராய்ச்சி செய்து பார்க்கலாமென்றுதான்.. ஆனா இன்னும் வழுக்கை தலை உள்ள எலிதான் கிடைக்கல்ல... தாமஸ் அல்வா எடிசன் மாதிரி நாங்களும் யோசிப்போமில்ல...

நான் கடைசியாக இட்ட இடுகைக்கு (முடியல்லயே) தமிழிசில் 43 ஓட்டு போட்டு என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.... கடலில் தூக்கிப்போடப்பட்ட மலையாளி என்ன ஆனார் என நிறைய பேர் கேட்டிருந்தார்கள்... அவர் அப்படியே கடலிலிருந்து கரையேறி இப்போது காட்டுவாசிகள் வாழும் ஒரு தீவில் டீக்கடை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

மறக்காமே ஒரு ஓட்டு போட்டுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்க மக்களே..

முடியல்லயே...!

எனது கணனியில் ஏற்பட்ட குளறுபடியால் இரண்டு மூண்று நாட்களாக நிறையப்பேரின் வலைப்பூக்களுக்கு வரவோ.. பின்னூட்டமிடவோ.. ஓட்டுப்போடவோ முடியவில்லை.. எல்லோரும் மன்னித்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.. அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும்  நேரத்தில் வந்து எட்டிப்பார்த்துவிட்டு ஓடி விடுகிறேன்.. இப்போதுகூட மதிய உணவு இடைவேளையின் போது கிடைத்த அரை மணி நேரத்திலே இந்த குட்டி பதிவு..

சரி வந்ததுதான் வந்துட்டம் ஒரு குட்டி ஜோக்கு... சிரிப்பு வராட்டி திட்டக்கூடாது ஆமா....
மூண்று கோடீஸ்வரர்கள் ஒரு அமெரிக்கர் ஒரு அரேபியர் ஒரு ஜப்பானியர். ஒரு கப்பலில் தன் வேலையாட்களுடன் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். திடிரெண்டு கப்பல் மாலுமியிடமிருந்து ஒரு அறிவித்தல். கப்பலில் ஏற்பட்ட கோளாரின் காரணமாக கப்பல் மூழ்கும் நிலையிலுள்ளதாகவும். அவசரமாக பக்கத்தில் உள்ள துறைமுகம் ஒண்றுக்கு செல்ல வேண்டும் எனவும். அவ்வாறு செல்வதாயின் கப்பலில் தேவைக்கு அதிகமாகவுள்ள பாரமான பொருடகளை கடலில் போடும்ப்டி அறிவுறுத்தப்பட்டது.. கப்பலில் பாரத்தை குறைப்பதனால் மூழ்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம் என்ற நோக்கில்..

இதைக்கேட்டதும் உடனே அமெரிக்கர் தன்னிடமுள்ள துப்பாக்கிகள்,ஆயுதங்கள் அனைத்தையும் கடலில் தூக்கிப்போட்டுட்டு கூறினார்.. இது எங்க நாட்ல அளவுக்கதிகமாகவே இருக்கு அதனால இது தனக்கு தேவையில்லை என்று.. அடுத்ததாக ஜப்பானியர் தன்னிடமுள்ள இலத்திரனியல் உபகரணம் அனைத்தையும் தூக்கிப்போட்டுட்டு கூறினார் இது எங்க நாட்ல தாராளமாகவே கிடைக்குது இதெல்லாம் தனக்கு தேவையில்ல என்று சொன்னார்.. அடுத்ததாக அரேபியர் அவங்க ரெண்டு பேரும் போட்டுட்டாங்க நாம எதை தூக்கிப்போடுறது என்ற குழப்பத்தில் நாலா புறமும் பார்த்துட்டு. யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் பக்கத்தில் இருந்த வேலையாளான மலையாளியை தூக்கிப்போட்டுவிட்டார்.. போட்டுட்டு சொன்னார்.. இவங்க எங்க நாட்டுல தாராளமாகவே இருக்காங்க.. அதனால இவன் எனக்கு தேவையேயில்ல..


நகைச்சுவைக்காக மட்டும்.... மத்திய கிழக்கு வாழ் மலையாள சகோதரர்களே மன்னிச்சிடுங்கப்பா

கைக்கு கை...!


தினமும் மலர்வதும்

உதிர்வதும்
கண்ணீர் பூக்கள்..!

ஒவ்வொரு பொழுதுகளும்
நரகங்களாக
சொர்க்கம்
தேடி வந்தவர்களிடம்...!

உணர்வுகள் சாகடிக்கப்பட்டு
உயிர்வாழ
ஒரு போராட்டம்...!

எதிர்காலம்
எண்ணும் போதே வலிக்கிறது
என்னாகுமோ நாளை..!

கைக்கு கை மாறும்
நுகர்வுப்பொருளாய்
விலைமாந்தர்கள்....!

வாழ்க்கை வாழ்வதற்கே......!!!

பிறந்து விட்டோம்

வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே...!

வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயணத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!

கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!

இப்பயனம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும்
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே...!

இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும்
துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை
ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!

நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...!

வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!


 
நான் பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுதியது அப்போது நிறையபேரிடம் சென்றடையவில்லை அதனால் இப்போது இங்கே....
 
பிடித்திருந்தால் ஏதாவது சொல்லுங்கள்.... மனதை திறந்து

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics