மனசு...!

கனவுகள்
வருவதில்லை எனக்கு
வந்தாலும்
வாசல் தாண்டுவதில்லை...
வந்தவைகளும்
நினைவிலில்லை
கண் விழித்ததும்....
கண்கள் மட்டும்
என் பேச்சு கேட்க
மனசு மட்டும்
அலைகிறது
ஊர் உலகமெங்கும்
அளவு கடந்த
ஆசைகளோடு...
பசியினால்
பதறும் வயிறு
ஒரு புறம்.
தங்கத்தட்டில்
உணவுன்னும் மனசு
மறு புறம்....
மேக மெத்தைவிரித்து
வானவெளியில்
உறங்கிட ஆசையாம்
டைட்டானிக் பட
நாயகி மீது
காதலாம்
யாரிடம் போய் சொல்ல
இந்த மனசின்
அராஜகத்தை....
நினைப்பவை
கிடைப்பதில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை....!
இருந்தும்
இன்னும் திருந்தவில்லை
இந்த மனசு...!

தத்துவபித்துவங்கள்...!

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது ,
கடன் வாங்கித்தான் ஆகனும்

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

டிசம்பர் 31 க்கும் ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால்,
ஜனவரி 1 க்கும் டிசம்பர் 31 க்கும்
ஒரு வருசம் வித்தியாசம் .

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும்
ஆனா,
ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா

குளவி கொட்டினா வலிக்கும் .
தேள் கொட்டினா கூட வலிக்கும் .
ஆனா
முடி கொட்டினா வலிக்குமா

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?

என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

கொலுசு போட்டா சத்தம் வரும் .
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .

ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க ! குவாட்டர் கூட வராது !!!

பாகிஸ்தானிய வெள்ளபெருக்கு..!


பாகிஸ்தானில் பல மில்லியன் கனக்கான மக்களின் வதிவிடங்களும் சொத்துக்களும் வெள்ளநீரால் அடித்துச்செல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.. பல்லாயிரக்கனக்கான மக்கள் உண்ண உணவின்றியும் தங்குவதற்கு வீடுகளின்றியும் தவிப்பதை அன்றாட செய்திகளில் கானக்கிடைக்கிறது...

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி 2000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் 17 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வீடு வாசல்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது ஆனால் சேதவிபரங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதையே கானக்கிடைக்கிறது.. பல நாடுகளில் இருந்தும் உதவிகள் சென்றவண்ணம் உள்ளன.. எங்களால் முடிந்தது அவர்களுக்கான ஆழ்ந்த அனுதாபங்களே.. இயற்கையின் சீற்றத்திலிருந்து
யார்தான் தப்பமுடியும்..

நிகழ்காலம்...!

திறந்தே கிடக்கிறது
மனசின் கதவு
வருவதும்
போவதுமாய்
எதிர்கால கனவுகளும்
இறந்தகால நிஜங்களும்
தவியாய் தவிக்கிறது
இவையிரண்டுக்கிடையில்
சிக்கிக்கொண்ட
நிகழ்காலம்....
தேவைகளும்
ஆசைகளும்
கனவுகளும்
பிறந்துவிட்டது கூடவே
கருவறையிலிருந்து
கால்வைத்தவுடன்...

இறந்தகால இழப்புகளும்
எதிர்கால எதிர்பார்ப்புகளும்
நினைவிலில்லாமல் செய்கிறது
நிகழ்காலத்தை...
சிலர்
நிகழ்காலத்தில்
வாழ்வதேயில்லை
என்கிறது ஒரு ரஷயகவிதை...
"நாளைய வாழ்வு இல்லை என்று
இன்றே வாழ்வது ஞாயமடா"
என்கிறார் 'வைரமுத்து'....
நிலையில்லை
இவ்வையகம்
நினைவில் கொண்டு
நிகழ்காலத்திலும்
வாழ்பபழகுவோம்....

இன்றாவது வருமா...!

காற்றும் வீசியது
மேகங்களும் அலைந்தது
அங்கும் இங்குமாய்..
இன்றாவது
வருமா மழை..
ஏழை விவசாயியின்
ஏக்கங்கள்
வானத்தை அண்ணாந்து
பார்த்தபடி...
மழை வந்தால்
செழிக்கும்
பயிர்கள் மட்டுமல்ல
இவர்கள்
வாழ்வும்தான்...
வறண்ட பூமி
மேகம் தரும் மழை
கொஞ்சம் நம்பிக்கை
கடும் உழைப்பு
இதுதான் சொத்து
இவர்களின்....
உலகிற்கே
உணவு தருபவர்கள்
உண்பதோ
அரை வயிறு சோறுதான்...
இயற்கை கொஞ்சம்
இறங்கவில்லையானால்
ஒட்டிய வயிறுதான்.
தினமும் மனிதன்
புதியவனாகிறான்
புதுப்புது நுட்பங்களுடன்
இவர்கள் இன்னும்
ஆதிவாசிகளாய்
அதே வறுமையுடன்
இன்றாவது வருமா
மழை....!

மௌனங்கள் மொழியாக...!

நாகரீகம்

வெள்ளையனை
வெளியேற்றிய பின்னும்
வெளியேறாமல்
ஒட்டிக்கொண்டது
அவன் நாகரீகம்
மட்டும்...!

விவசாயி

வற்றிய குளம்
வற்றாத வறுமை
ஒட்டிய வயிறு
புதிய உலகின்
பழைய மனிதன்...!

இயற்கை

இறைவனின் கைவண்ணம்
மாற்றம்கானும் உலகில்
மாறாதது..
குழந்தை மனசு
குதூகலிக்கும் போதெல்லாம்
சீற்றம்கொண்டால்
ராட்சசன்...

மழை

பூமிக்காதலியின்
காதலன்
தாகம் தீர்க்கும்
தாய்
பச்சைத்தாவரங்களின்
உணவு
ஏழை விவசாயியின்
உயிர்...!

மௌனம்

கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...!

உனக்காக...!

வார்த்தைகள்
சண்டையிட்டுக்கொள்கின்றன
உன்னைப்பற்றி எழுதும்
கவிதைகளில்
இடம்பிடித்துக்கொள்ள.
நகரப்பேரூந்தில்
இடம்பிடிக்கும்
பயணிகள் போல...!
வார்த்தைகள்
ஓடி ஒளிந்துகொள்கின்றன
உன்னோடு
பேசும் நேரங்களில்
பூச்சாண்டி பயத்தில்
ஓடி ஒளியும்
குழந்தைகள் போல....!

உலகம்
எவ்வளவு அழகானது
உன்னை கானும் பொழுதுகளில்
உலகம்
எவ்வளவு கொடுமையானது
உன்னை கானாத பொழுதுகளில்...!

இரவுகளில்
கனவாய் வருகிறாய்
பகல்களில்
நினைவாய் வருகிறாய்
எப்போதுதான் வருவாய்
நேரில்...!

பாலைவனத்திலும்
பனித்துளிகளாய்
உன் ஞாபகங்கள்
குளிரச்செய்கிறது
மனதை...!

பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு

இந்த தொடர்பதிவிற்கு அழைத்த(மாட்டிவிட்ட) அன்பின் நண்பர் ஜில்தண்ணி யோகேஸிற்கு எனது நன்றிகள்..
பதிவுலகம் முழுக்க இந்தமாதிரி பதிவாத்தான் இருக்கு.. நாம மெதுவா எஸ் ஆகிடலாம்னு பார்த்தா முடியல்ல.. என்னப்பத்தி பெருசா என்னங்க சொல்ல இருக்கா அதனால சிரிசா சொல்றன்..

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மொஹமட் ரியாஸ்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர்தான்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு மறக்கமுடியா அழகிய விபத்து - குழந்தை எழுந்து நடக்கத்தொடங்கிய முதல் நாள் அனுபவம்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் முயற்சித்தேன் முடிந்தது - பிரபலம் என்று சொல்லுமளவுக்கு இன்னுமில்லைங்க..

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆம்.. எனது முதல் பதிவே அவ்வாறானதுதான்..
 ( இங்கு)

விளைவு.. நிறைய நண்பர்களின் அறிமுகமும் கருத்துக்களும்

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறது.. மற்றபடி நேரம் விரயம்தான்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றுதான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நல்லா எழுதும் எல்லா பதிவர்களையும் பார்த்து... சிறுகதை,கதை எழுத ஆர்வமில்லாத என்னை இந்த பொறாமை ஒரு பதிவைத்தந்தது..

அந்தப்பதிவு

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
எனது முதல் பதிவிற்கு பின்னூட்டம் மூலம் பாராட்டியவர்கள்.
ஹாய் அரும்பாவூர்
ராகவன் நைஜீரியா
இருமேனி முபாரக்


நான் எழுதிய கவிதைகளை முதலில் பாராட்டியவர்கள்
மலிக்கா அக்கா
மதுரை சரவணன் சார்
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

எனது முதல் பதிவிலேயும் 50 வது பதிவுலயும் நிறைய கூறியிருக்கிறேன்..

நன்றி...நன்றி..நன்றி...50 வது பதிவு..

விளையாட்டுத்தனமாக எதையாவது கிறுக்குவோம் என்ற எண்ணத்தில் கிறுக்க ஆரம்பித்தது 50 வரையும் வளர்ந்து நிறபது கண்டு பூரிப்படைகிறேன்.. நான் எழுதுபவற்றையும் ரசிப்பார்களா..? என்ற அவநம்பிக்கையில் ஆரம்பித்து இன்று என் எழுத்துக்களையும் ரசிக்க நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்.. என்னையும் 75 பேர் பின் தொடர்கிறார்கள் என்றெண்ணும் போது நம்பவேமுடியவில்லை..


நமது ஆக்கங்களை நமது பதிவுகளை படித்துவிட்டு அதற்காக பாராட்டும் போதும் வாழ்த்தும் போதும். கிடைக்கும் ஆத்ம திருப்தி சந்தோஷம் வேறெங்கு கிடைக்கப்போகிறது எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த ஆத்ம திருப்தி வேறெங்கும் கிடைக்காது.. அது இந்த வலையுலகத்தில் கிடைக்கிறது உலகெங்கிலிருந்தும் எத்தனையோ அன்புள்ளங்களின் அறிமுகமும் ஆதரவும் மூலமாக.. நமது உணர்வுகளை எண்ணங்களை நம் கருத்துக்களை உள்ளேயே வைத்திருக்காமல் இவ்வாறான முயற்சிகளின் மூலம் வெளியிடும் போது மன அழுத்தமும் குறைகிறது..

அபுதாபிக்கு வந்தபிறகே பிளாக் என்றொரு விஷயம் இருப்பதையே அறிந்தேன்.. அதன்பிறகு வெற்றி FM இனையதள முகவரியினூடாக லோசன் அண்ணாவின் வலைப்பக்கத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரின் பதிவுகளையும் மற்றவர்களின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன்.. ஒவ்வொருவரின் எழுத்துக்களும் எனக்கும் ஆசையைத்தூண்டியது எழுதுவதற்கு.. பிறகு தமிழ்மணத்தில் "பிளாக் ஆரம்பிப்பது எப்படி" என்றொரு பதிவு பார்த்தேன் அதன் மூலம் என் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன்.. என் பதிவுகளை பிறருக்கு கொண்டு சேர்க்கும் தமிழிஸ்,தமிழ்மனம்,தமிழ் 10,உலவு.காம் போன்ற திரட்டிகளுக்கும் பிளாக் சேவையை வழங்கும் கூகுளிற்கும் எனது நன்றிகள்..

நான் இலங்கையர் என்றாலும் அதிகமான தமிழ்நாட்டு நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் பார்க்கும் போது நானும் தமிழ்நாட்டில் பிறந்திருக்ககூடாதா என்ற எண்ணம் எனக்குள்.. வலையுலகத்தில் ஒவ்வொருவரும் தனக்கேயுரியவிதத்தில் சிறப்பாக எழுதி வருகிறார்கள். எல்லோருடைய பதிவுகளையும் படிக்க வேண்டும் ஓட்டு போட வேண்டும் ஆசையிருந்தாலும்.. இருக்கும் வேலைகளுக்குமத்தியில் அது முடிவதில்லை ஒரு நாளைக்கு ஒரு சிலரின் பதிவுகளை மட்டுமே படிக்க முடிகிறது.. இதில் நம்மளை தொடர்ந்து ஆதரிக்கும் சிலரின் பதிவுகளும் சில நேரம் விடுபட்டுப்போவதுண்டு..

ஆரம்பத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கலாம் என்று தொடங்கினாலும் சில கட்டுரைகளையும் எனக்குத்தெரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன்.. தொடர்ந்து கவிதை எழுதினால் பார்ப்பவர்களுக்கும் சலித்துப்போய்விடும் என்றபடியால் ஆங்காங்கே சில மொக்கைகளும் பின் சுவாரஷ்யமான படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கமெண்ட்ஸ் என்ற அடிப்படையிலும் என் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் கண்ட கண்ட இடத்தில் கிறுக்குவது நோயாகிவிட்டது இலங்கை தனியார் வானொலிகளான சூரியன் FM வெற்றி FM போன்றவற்றிலும் பலமுறை ஒலித்திருக்கிறது எனது பிரதிகள் ஆனாலும் உண்மையிலேயே அவை கவிதைதானா என்று எனக்குத்தெரியாது இன்றுவரையிலும்..

பயப்படாதிங்க நாந்தான்..
நீங்கதாள்தான் சொல்லவேண்டும் நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா.. முடிந்தால் சொல்லுங்கள் எவ்வகையான பதிவுகள் அதிகம் பிடித்திருக்கிறது..


உங்களுடைய அன்புக்கு என்னிடம் தருவதற்கு ஒன்னுமில்லை நன்றி என்ற ஒன்றைத்தவிர.. இந்த வண்ணத்துபூச்சியை எடுத்துக்கொள்ளுங்கள் என் அன்புபரிசாக..

பேசும் படங்கள்...III

என்னங்க அப்பிடி பார்க்கிறிங்க இதுவும் பேஷன் தான்..
நீங்க மட்டும் இடுப்புக்கு கீழே உடுத்துட்டு பேஷன்னு சொல்லும் போது
நாங்க நெஞ்சுக்கு மேலே உடுத்துட்டு பேஷன்னு சொல்லக்கூடாதாக்கும்..மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு ஹெல்மட் அவசியம் அப்பிடின்னுதானே சட்டம் உண்டு.. அது இரும்புல போடனுமா பிளாஸ்டிக்ல போடனுமா ரப்பரில் போடனுமான்னு இருக்கா..? அதுதான் வீட்டிலிருந்த bucketta தலையில போட்டுட்டமில்ல்ல்ல் எப்பூடி....

ஐ... BMW கழுத..

ஸ்கூல் பஸ்.. சாரி ஸ்கூல் ரிக்ஷா ...

அட அவசரத்திற்கு எதுன்னாலும் என்னங்க...

பூனைக்கு மணிகட்டும் ஆவேசத்துல நாலு பேரும் பூனத்தலையில ஏறிட்டோம்... ஆனா மணிய மறந்துட்டோம் ப்ளீஸ் யாராவது மணிய எடுத்து கொடுங்களே சத்தம் வராம..


மனிசப்பயலுகளா எங்களப்பார்த்தாவது பழகுங்க எப்படி ஒற்றுமையா இருக்குறதுன்னு..
 
ஏமாத்துறதே இவங்க வேலயாப்போச்சு.. முடிஞ்சா குடு இல்லாட்டி போய்யா..

ஒன்றாய் பிறந்தோம்
ஒன்றாகவே செல்கிறோம்
நேருக்கு நேர் மோத
துணிவின்றி..
உண்வைக்காட்டி
உயிரைப்பறிப்பதுதான்
மனிதன் மூளையோ...!

நேர்முகத்தேர்வு..!

நேர்முகத்தேர்வு அதுதாங்க இந்த இண்டர்வீவ் இத எவன் கண்டுபுடிச்சன்னு தெரிஞ்சா அவனுக்கு நாலு சாத்து சாத்தனும் போலிருக்கும் பலருக்கும்.. உண்மைதாங்க நானும் இந்த இண்டர்வீவ் கொடுமையில சிக்கி சின்னாபின்னாமாகி நொந்து நூடுல்ஸாகி வந்தவந்தாங்க.. இண்டர்வீயில் தேர்வாகி இப்ப வெளிநாட்டு வேலையில் இருக்கிறன்னு நெனச்சாலே பிரமிப்பா இருக்கு நம்பவேமுடியல்ல..


வெளிநாட்டு வேலைக்காக வேண்டி முதலாவதாக சென்ற இண்டர்வீவ் இன்னும் மறக்கமுடியவில்லை உள்ள போய் உட்கார்ந்ததும் மூனு பேரு சுத்தி உட்காந்திருந்தாங்க.. பயந்து தொண்டை வாயல்லாம் வறண்டு வார்த்தையே வெளியே வரல்ல... சத்தமா பேசுப்பா கேட்குதில்லன்னு சொன்னாங்க..அதுதான் பேச்சு வரலயே வேற எப்பிடி பேசுவேன்.. வந்ததுக்கு நன்றி போய் வான்னு சொல்லிட்டாங்க..நானும் திரும்பி வந்துட்டன் வேற அங்க நின்னு அழவா முடியும்..

அடுத்ததா இந்த சிரியா எகிப்து லெபனான் காரனுகள் இண்டர்வியுக்கு வந்துடக்கூடாதுன்னு நினைச்சதும் உண்டு ஏன்ணா அவங்க பேசுற ஆங்கிலத்த இலகுவில் புரிஞ்சு கொள்ளமுடியாது. ஒரு முறை அப்பிடித்தான் இந்த நாட்டைச்சேர்ந்த ஒருவனிடம் போய் சிக்கிட்டேன் அடப்பாவி..! அவங்கேட்ட முதல் கேள்வியே எனக்கு என்னென்னு புரியல்ல அப்புறமா 'Sorry'.. ன்னு சொன்னேன் திரும்பவும் அதேகேள்விய கேட்டான் திரும்பவும் எனக்கு என்னன்னு புரியல்ல அப்புறமா.. 'sorry i can't understand' முழுசா சொல்லி முடியல்ல 'sorry you can go' ன்னு சொல்லிண்டாப்பா.. நானும் எவ்வளவு நேரம்தான் தெரிஞ்சமாதிரியே நடிக்கிறது..அவ்வ்வ்வ்வ்வ்வ்


இப்படி இண்டர்வியுக்கு போய் போய் நொந்து போய் உட்கார்ந்திருந்தோம் நானும் என் நண்பனும்.. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம் இனிமே இந்த இண்டர்வீவ் வெச்சு ஆளெடுக்கிற கம்பெனிக்கு போககூடாது.. எவன் C.V ஐ பார்த்துட்டு நேரா வேலைக்கு கூப்புட்றானோ அங்கதான் போகனும்டா.. இப்படி இருக்கும் போதுதான் இந்த அபுதாபி வேலைக்கு பத்திரிகையில் விளம்பரம் வந்திருந்திச்சி.. ஏற்கனவே இலங்கையில் செய்த வேலைக்கும் இதுக்கும் தொடர்பிருந்ததால் அனுபவமும் இருந்தது.. எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடைசியா ஒரு முறை பார்க்கலாமுன்னு கிளம்பிட்டன்..


இண்டர்வியுக்கு போனா அங்க 3 பேர் தேவைக்கு 30 பேர் மட்டு வந்திருந்தாங்க எல்லாரும் டை கட்டி கடும் ஆபிசர் போல வந்திருந்தாங்க நான் சும்மா ஏனோதானோன்னு போயிருந்தேன் அதுலயே பாதி நம்பிக்கை போயிருச்சி.. சரி உள்ளே போய் உக்காந்தாச்சி இப்ப ஸ்டார்ட் இண்டர்வீவ்.. பண்ண வந்தவரு இந்தியா காரரு அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டாரு கேள்வி கேட்டுட்டுருக்கும் போது பாதியில.. நான் கையால மடியால எல்லாம் போட்டு பேசின அறைகுறை ஆங்கிலத்த அவருக்கு சகிக்க முடியல்ல போல.. உனக்கு வேறென்ன மொழி தெரியும்ன்னு கேட்டாரு

நான் தமிழ் தெரியும்ன்னு சொன்னேன்.. உனக்கு தமிழ் தெரியுமா என்று.. தமிழிலேயே வியப்புடன் கேட்டார்.. அப்பாடா இவருக்கும் தமிழ் தெரியும்.. "ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டோம் ஆனால ஆங்கிலேயே மொழியிடமிருந்து சுதந்திரம் பெறவில்லையே" என்று நினைத்த எனக்கு சுதந்திரம் கிடைத்த உணர்வு அத்தருணம்.. அதன்பிறகு அந்த வேலையும் கிடைத்தது.. இன்றுவரை அவர்தான் என் மேனேஜர்.. அவர் பெங்களூர் காரர் தமிழ்நாட்டில்தான் படித்தாராம்.. தமிழ் தெரியும் என்ற ஒரு காரணத்திற்காகத்தான் என்னை வேலையில் சேர்த்தாரோ என்ற எண்ணமும் என்னுள் எழுவதுண்டு..

இதைச்சொல்லும் போதே இன்னும் இருவர் இண்டர்வீயுக்கு போன குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருது அதையும் படிச்சுட்டு போங்க.. 2 நண்பர்கள் இண்டர்வியுக்கு போனாங்களாம். அதுல ஒருத்தனுக்கு அதுதான் முதல் தடவை அடுத்தவனுக்கு கொஞ்சம் அனுபவமுண்டு.. அனுபமில்லாதவன் இவனப்பார்த்து சொன்னானாம் டேய் மச்சான் எனக்கு பயத்துல கை கால் எல்லாம் நடுங்குது உள்ள என்ன கேட்பாங்களே தெரியாது.. நீ முதல்ல போ உன்னிடம் என்ன கேள்வி கேட்குறாங்களோ அத என்னிடம் வந்து சொல்லு அப்புறம் நான் அதக்கேத்தமாதிரி ரெடியாகிட்டு போறேன்னு.. சரின்னு அவன் உள்ள போய் கேட்ட கேள்விக்கெல்லம் பதில் சொல்லிட்டு வெளிய வந்துட்டான்..

இப்போ அடுத்தவன் கேட்டான் மச்சான் என்ன கேள்விடா கேட்டாங்க.. அதுக்கு அவன் எல்லாம் ஜுஜுபி கேள்விடா சும்மா டங் டங் ன்னு பதில் சொல்லிட்டு வந்துட்டன்.. முதலாவதாக இலங்கைக்கு எப்போ சுதந்திரம் கிடைச்சதுன்னு கேட்டாங்க.. 1815 லிருந்து முயற்சி செயது 1948 ல கிடைச்சதுன்னு சொன்னேன்.. அடுத்ததா பிடித்த நபர் யாருன்னு கேட்டாங்க அது காலத்திற்கு காலம் மாறுபடும் இப்பன்னு சொன்னா நீங்கதான்னு சொன்னேன் அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..அடுத்ததா இலங்கை இப்போ அமைதியான நாடா அதப்பத்தி என்ன நினைக்கிறிங்கன்னு கேட்டாங்க அதுக்கு நான் அதப்பத்தி சரியா சொல்ல முடியாது.. சரியா விசாரிச்சுதான் சொல்லனும்னு சொன்னேன்.. அவ்வளவுதான் மச்சான்..

அவ்வளவுதானா.. இத நாங்களும் சொல்வம்ல்ல்ன்னு பில்டப் கொடுத்துட்டு உள்ள போயிட்டான்.. மனசு சிந்தனை எல்லாம் அந்த மூனு கேள்வியும் விடையையும் பத்தித்தான்.. உள்ள போய் உட்காந்தா முதல் கேள்வியா நீங்க எப்ப பொறந்திங்கன்னு கேட்டுட்டாரு அதுக்கு இவன் 1815 லிருந்து முயற்சி செய்து 1948 லன்னு சொல்லிட்டான்.. அதக்கேட்டதும் அவரு.. என்னது... 1815 லிருந்து முயற்சி பண்ணாங்களா...? அடுத்ததா அப்போ உன் அப்பா யாருன்னு கேட்டாங்க.. அதுக்கு அவன் அது காலத்திற்கு காலம் மாறுபடும் இப்பன்னு சொன்னா நீங்கதான்.. அப்பிடின்னு சொல்லிட்டான் அதக்கேட்டதும் அவரு கோபத்துல அடங்கொய்யால உன் அப்பன் நானா..? உனக்கு பைத்தியா இல்ல எனக்கு பைத்தியமா அப்பிடின்னு கேட்டாரு அதுக்கு அவன்.அதப்பத்தி சரியா சொல்ல முடியாது.. சரியா விசாரிச்சுதான் சொல்லனும்னு சொல்லிட்டான்பா.. என்ன கொடும சார் இந்த இண்டர்வீவ்..

கடந்தவார சினிமா...!

கடந்தவாரம் நான் பார்த்த மூன்று வித்தியாசமான் தமிழ்சினிமா பற்றிய என் குறுகிய கண்ணோட்டம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.


மதராசப்பட்டினம்..

கடந்தவாரம் மதராசப்பட்டினம் பார்க்ககூடிய வாய்ப்பு கிடைத்தது..
கொஞ்சம் பழமை,கொஞ்சம் புதுமை, கொஞ்சம் அழகு,கொஞ்சம் வலிமை,கொஞ்சம் ஏழ்மை,கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் ஏக்கம் எல்லாம் சேர்ந்த ஓர் நிறைவு இப்படத்தில்.. நீண்ட காலத்திற்கு மனசின் ஆழம் வரை சென்று தொட்டுச்சென்ற தமிழ்சினிமா.. படத்தில் பெரிய ஸ்டார்கள் இல்லை, பெரிய பிரம்மாண்டங்கள் இல்லை இருந்தாலும் ரசிக்கலாம்..

ஆர்யா வெறுமனே மசாலாத்தனமான ஹீரோயிச கதைகளை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து அசத்துகிறார்.. அடுத்ததாக அந்த ஆங்கிலேயே அழகி எமி பார்வைகளாலேயே மனதை கொள்ளையடித்து செல்கிறாள்.. இன்னும் கண்களுக்குள்ளேயே அலைகிறது அவள் உருவம்.. முகபாவங்கள், அதிகமான காட்சிகளில் கண்களாலேயே பேசுகிறாள்.. அடுத்ததாக இளம் இயக்குனர் விஜய்.. அத்தனை பாராட்டுக்களுக்கும் உரியவர் இவர்தான்.. இவரின் கிரீடம் படத்திலேயே தெரிந்தது இவரின் திறமை. தொடர்ந்து வித்தியாசமான நல்ல சினிமாக்களை எதிர்பார்க்கிறோம் இவரிடமிருந்து.. படம்பார்ப்பது ஒரு பொழுதுபோக்குத்தான் என்றாலும் அதுவும் மனசு திருப்திபடும் வகையிலிருந்தால் திருப்தியல்லவா.. இன்றைய நிறைய படங்கள் கண்களை மட்டும்தான் கவர்கிறது மனதை தொட்டுச்செல்வதில்லை.. மதராசப்பட்டினம் கண்ணையும் கவர்கிறது மனதையும் தொடுகிறது..


காஞ்சிவரம்..

நெசவாளர்களின் வாழ்க்கையை பிரதிபலித்த ஓர் திரைப்படம்.. கதை சுதந்திரத்துக்கு முன்னைய காலத்தில் நகர்வதால் 60,70 களில் வந்த ஓர் திரைப்படம் பார்க்கும் உணர்வு. ஊருக்கே துணி நெய்து கொடுத்தாலும் அவர்கள் வாழ்கை என்றும் ஏழ்மைதான் என்பதை இந்தப்படம் நன்றாகவே உணர்த்துகிறது.. பிரகாஷ்ராஜ் என்ன யதார்த்தமான நடிப்பு.. நடிப்பு என்று சொல்வதைவிட பாத்திரமாகவே வாழ்கிறார் மனிதர்.. இதில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கன தேசிய விருது கூட கிடைத்தது அவருக்கு.. தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை வில்லன் என்ற பெயரில் வீனாக்கிவிட்டதாகவே உணர்கிறேன்... 2009 க்கான சிறந்த படந்துக்கான தேசிய விருதும் இப்படத்துக்கே கிடைத்தது இவ்விருதுகளே என்னை இப்படத்தை பார்க்க தூண்டியது.. படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார்..எத்தனை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருக்குமோ தெரியவில்லை...

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்தவுடன் நடக்கும் நிகழ்ச்சியில் ஒலிக்கும் பாடலில் சில வரிகள் மனதோடு ஒட்டிக்கொண்டது.. அவை கீழே..

பொன்னூஞ்சல் தொட்டிலிலே மயிலிறகு மெத்தையிலே
மானே நீ உறங்கு உறங்கு ஆராரோ...
சூரியனும் சந்திரனும் சாமரங்கள் வீசிடவே
சந்தனமே உறங்கு உறங்கு ஆராரோ..

பூமிப்பந்தை பிஞ்சுகாலால் எட்டி எட்டி நீ உதைத்து
நடைவண்டியில் நாளை நடை பழகு..
தலைவாரி பூக்கள்சூடி தத்தி தத்தி நீ நடந்து
பள்ளி சென்று தமிழ் நீ பழகு...மனைவி ரெடி..

இங்கெல்லாம் இப்பொழுது பொழுதுபோக்கிற்காக வெளியில் சுற்ற முடிவதில்லை.. அவ்வளவு சூடும் வியர்வையும்.. என்னசெய்வது.. இனையத்தில் யூடியுப்பில் ஏதாவது தமிழ் படம் தேடிப்பார்ப்போம் என்று தேடியபோதே இந்தப்படம் சிக்கியது.. பாண்டியராஜன் படம் அப்படியென்றால் நிச்சயம் சிரிக்கமுடியும், அவரின் திருட்டு முழி,ஏதாவது தில்லுமுல்லு,அட்டகாசம் இருக்கும்.. என பார்க்க ஆரம்பித்தேன் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது


இதில் விஷேசம் பழைய நடிகர் தங்கவேலு இதில் நடித்திருந்தார்.. அவர் நடித்த முழுமையான திரைப்படம் இதற்குமுன் நான் பார்த்ததில்லை.. வெகு சிறப்பாக வாத்தியாராக நடிக்கவும் செய்தார் சிரிக்கவும் வைத்தார்.. இதில் மனோரமா வரும் "தந்தி" காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.. முதலில் தந்தி வந்ததும் பிரித்துபார்க்காமலேயே மரனசெய்தி என நினைத்து அழுவதும்.. பின் பாண்டியராஜன அடிபட்டு வைத்தியசாலையில் இருப்பதை அறிவிக்க அனுப்பிய தந்தி வந்தவுடன் அலட்டிக்கொள்ளமல் இருப்பதும் சூப்பர் சீன்கள்.. அந்த காட்சியின் உரையாடல் இங்கே.. தபால்காரன்,மனோரமா,பெரியம்மா,மனோரமா தம்பி

த.காரன்- தந்தி வந்திருக்குமா...
மனோரமா- அ.....
த.காரன்- ஏம்மா நீங்க என்ன செவுடா தந்தி வந்திருக்குன்னு சொல்றன்    பேசாம நிக்கிறிங்க
மனோரமா- தந்திதானே வந்திருக்கு அதுக்கு ஏன் இந்த கத்து கத்துற எங்கயிருந்து வந்திருக்கு
த.காரன்- மெட்ராசிலிருந்துமா...
மனோரமா- என்னமோ மெட்ராஸே வந்தமாதிரி குதி குதின்னு குதிக்கிற
த.காரன்- ஏம்மா தந்தி வந்திருக்குன்னு சொல்றன் அதுக்கொரு பதற்றத்தையே கானோமே..
மனோரமா- என்னமோ எங்கவீட்டுக்கு இதுதான் மொத மொத வர்ற தந்தி மாதிரியில்ல பதர்ற. இதுமாதிரி தந்தி எத்தன பாத்திருக்கேன் தெரியுமா நான்.. சரி சரி குடுத்துட்டு போ
பெரியம்மா- யாரது ராத்திரியில தொந்தரவு பண்றது..
த.காரன்- பெரியம்மா நீங்களாவது சொல்லுங்க வந்திருக்கிறது தந்தின்னு...
பெரியம்மா- தந்தியா.... நான் என்னமோ லெட்டரோ கடதாசியோன்னு பயந்து போயிட்டன் நீ.. வந்து படும்மா..
ராத்திரியில வந்து தூக்கத்த கெடுக்கிறான் விடிஞ்சி வந்து கொடுக்ககூடாதா...
மனோரமா தம்பி- எக்கா அந்த தந்திய குடுக்கா மாப்ள என்னதான் நம்மளுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருக்காருன்னு பார்ப்போம்
மனோரமா- இரு நாளை காலையில நல்ல நேரமா பார்த்து நாலு பெரிய மனிசங்கிட்ட கொடுத்து படிப்போம்..
மனோரமா தம்பி- அக்கா நீ.. ஒருத்திதான் க்கா குடும்ப கௌரவத்தையே கட்டி காத்துட்டு வர்ற
மனோரமா- புரிஞ்சா சரி

பிடிச்சிருக்கா... இல்லையா.. சொல்லுங்க பின்னூட்டத்துல.. ஒரு ஓட்டும் குத்திருங்கப்பா..

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics