கண் போன போக்கிலே கால் போகலாமா...!

நல்லதொரு பதிவு போட்டு ரொம்ப நாளாகிவிட்டது அதிக வேலை மட்டும் காரணமல்ல என் மனதும்தான்.. எழுதுவதற்குரிய நல்ல சூழலோ நல்ல தெளிவான மனதோ அமைவதென்பது கடினமாகவேயுள்ளது.. 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்' அந்த பாடல் வரிகள் போல மனதும் ஓடிக்கொண்டேயிருக்கிறது ஓரிடம் நில்லாமல்.

சரி அப்படி அலையும் மனதை  ஓரிடம் நிறுத்தி எதையாவது எழுதுவோம் என்றால் என்னத்த சொல்வது எப்படி சொல்வது கட்டுரையா சொல்வதா கவிதையா சொல்வதா.. கட்டுரை அதில் ஏதாவது விஷயம் இருக்க வேண்டும். கவிதை என்றால் அதில் கொஞ்சமாவது கவிதைத்தனம் இருக்கவேண்டும் இலக்கியத்தரம் இல்லாவிட்டாலும்.. இப்படி யோசித்துக்கொண்டே பகலும் போகிறது இரவும் போகிறது என்னையறியாமலேயே..இதற்கிடையே  எங்கோ ஓர் பாடல் ஓசை...

கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

அடடா நாலு வரிக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்கள் பல இலக்கியங்களில் பக்கம் பக்கமாக சொன்ன விடயங்களை.. பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு அந்த கவியரசனால் மட்டுமே முடியும்.. என்று மனதில் தோன்றி மறைவதற்குள் அடுத்த வரிகள்

நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்...
உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

அடடா உண்மையாக வாழவேண்டும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்.. அதையும் உணரமுடியவில்லையாயின் உதவாமல்தான் போகும்.. அடுத்த வரிகள் ஆரம்பம்..

புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

அடடா எது நாகரீகம் என்பதை நாலு வரியில் உணர்த்த இதைவிட்டால் வேறு வழியில்லை...  அதற்குள் அடுத்த வரிகள்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

அட்டா என்னத்த சொல்ல என்னத்த சொல்ல.. பாடல் முடிந்தது ஆமா நான் பதிவே போடல்லயே.. வேறொரு நாளைக்கு பார்ப்போம்..

...!

கண்களை மூடிக்கொள்கிறேன்
இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இறந்து மீண்டும்
பிறக்கும்
பிறசவத்தாயாய்...!முடிந்தால் எனது இந்த கவிதைக்கு உங்கள் மனதில் தோன்றும்  தலைப்பைச்சொல்லுங்கள் பின்னூட்டத்தில்..!

சும்மா..!

தொலைதூரம் நோக்கிய ஓர் பயணம்....
பல கோடி பயணிகள்...
பல்லாயிரம் பாதைகள்...
எல்லாம் ஓரிடம் நோக்கியே...
வந்தவர்கள் வாழ்ந்தார்கள் சென்றார்கள்...
வருகிறார்கள் வாழ்கிறார்கள் செல்கிறார்கள்...
வருவார்கள் வாழ்வார்கள் செல்வார்கள்..
வருவதும் வாழ்வதும் போவதும்...
இயல்புதானே வாழ்க்கையின்...
பேரூந்து பயணத்தில் ஜன்னல் வழியே...
காட்சிகள் ரசிக்கும் குழுந்தையாய் நாம்...
வாழ்க்கைப்பயணத்தில்...
எத்தனை மனிதர்கள்...
எததனை நிறங்கள்...
எத்தனை மாற்றங்கள்...
எத்தனை தோற்றங்கள்...
கடந்து போகிறோம் காலகாலமாய்...
எங்கே போனான் என்னவானான்..
ஆடையின்றி வாழ்ந்த ஆதிமனிதன்..
எங்கே போவான் என்னவாவான்..
நவயுக நாகரீக் மனிதன்...
பாதைகள் மாறலாம்...
பயணங்கள் தொடரும்..
ஓரிடம் நோக்கியே.....
என்ன் குழப்பிட்டேனா ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு
போங்க... மக்கள்ஸ்

கொஞ்சம்...!

பூவில் கொஞ்சம்
தீயில் கொஞ்சம்
அழகில் கொஞ்சம்
அன்பில் கொஞ்சம்
ஆனதோ பெண்னென்று...!

மயக்கம் கொஞ்சம்
தயக்கம் கொஞ்சம்
காமம் கொஞ்சம்
காதல் கொஞ்சம்
ஆனதோ அவள் விழியென்று...!

நாணம் கொஞ்சம்
நளினம் கொஞ்சம்
பழமை கொஞ்சம்
புதுமை கொஞ்சம்
ஆனதோ அவள் உடலென்று...!

ராகம் கொஞ்சம்
தாளம் கொஞ்சம்
தாகம் கொஞ்சம்
மோகம் கொஞ்சம்
ஆனதோ அவள் மொழியென்று...!

கொஞ்சம்
கொஞ்சம்
கொஞ்சம்
ஆனதோ அவள் எனதென்று....!

,,,,,,,,,,,,,,,,

வாழலாம் வாருங்கள்..!

மனிதனாக பிறந்துவிட்டோம்
வாழ வேண்டும்
முடியும் வரை
வாழ்க்கைப்பயணம்...
கொட்டிக்கிடக்கிறது இன்பங்கள்
ஆங்காங்கே
அள்ளிக்கொள்வது
நம் கையில்
நம் மனதில்...
திறந்தே கிடக்கிறது உலகம்
திறக்க மறுப்பதென்னவோ
நம் மனதுகள்தான்
திறந்தே கிடக்கட்டும் அது...
துன்பங்கள் துயரங்கள்
கூடவே வரலாம்
நம் நிழல் போல
கடந்துசெல்லுங்கள்
காத்திருக்கலாம்
ஓர் வசந்த காலம்....
நேசியுங்கள் மனிதர்களை
பறிமாறுங்கள் புன்னகைகளை
பூக்கள் பூக்கலாம்
உங்கள் தோட்டத்திலும்...
உலகத்தை ரசியுங்கள்
குழந்தை மனதோடு
வேண்டாம்
கொள்ளை ஆசைகள்...
வாழ்ந்து பார்ப்போம்
வாருங்கள்...!

அனைத்து நண்பர்களுக்கும் ஈத் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.. ரியாஸ்

நகரம் நோக்கி நகரும் எறும்புகள்...!

எங்கு பார்த்தாலும் வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி முன்பு போல் மக்களால் நினைத்தவாறு செலவழிக்கவோ உண்டு மகிழவோ முடிவதில்லை. எல்லாவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் ஆடம்பரத்தை கைவிட்டு சிக்கனத்தை மேற்கொள்ளவேண்டிய நிலை.இதனால் தேவைகளை குறைத்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டனர்.. இந்த நடைமுறையினால தனது அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்த ஒரு பின் தங்கிய கிராமத்து எறும்பு சமுதாயத்தின் கதை.

"முன்பெல்லாம் வீடுகளில் உணவுப்பண்டங்கள் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கும் நாங்களும் கூட்டம் கூட்டமாக சென்று எங்கள் உணவுத்தேவையை தீர்த்து எங்கள் இருப்பிடங்களுக்கும் எடுத்து வந்து வைத்துக்கொள்வோம் இப்ப எல்லாம் உணவு தேடுவதே பெரிய வேலையாகிப்போய்விட்டது" என்றவாறு பல எறும்புகள் பேசிக்கொண்டன. மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழவேண்டியிருப்பதால்.. மழையோடும் வெயிலோடும் போட்டி போட்டுக்கொண்டே வாழவேண்டிய நிலை. அதுவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மிகவுமே பாதித்தது அக்கிராமத்தை.. உணவுக்கே மிகவும் கஷ்டமாகி போய்விட்டது.

இவ்வாறு நாட்கள் செல்ல செல்ல மக்கள் கிராமத்தை விட்டு நகர்புறங்கள் நோக்கி நகர ஆரம்பித்தனர் வேலை தேடும் நோக்கில். இவ்வாறிருக்கும் போது அந்த எறும்புக்கூட்டத்தில் உள்ள அனைத்து எறும்புகளும் ஒன்று கூடி முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது அப்போது ஒரு முதிய எறும்பு பேச ஆரம்பித்தது|"நாம் எல்லோரும இக்கிராமத்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் இது போன்றதொரு பஞ்சமான உணவில்லாத சூழ்நிலை ஒரு போதும் இங்கு ஏற்பட்டதில்லை.. மேலும் நாம் வீடுகளில் உணவு தேடி அங்கும் இங்கும் அலையும் போது மனிதர்கள் விஷம் வைத்து கொல்கிறார்கள்.. கடந்த மாதம் மாத்திரம் ஏராளமான நம் உறவினர்கள் நண்பர்களின் உயிர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது...

இதற்கெல்லாம் ஓரே தீர்வு இங்குள்ள மனிதர்களைப்போல் நாமும் ஏதாவது நகர்ப்புறம் நோக்கி நகரவேண்டியதுதான்.. அங்கு நமக்கான உணவுகள் கிடைக்கலாம் நாம் அங்கு எமது இருப்பிடத்தை அமைத்து சந்தோஷமாக வாழலாம்" என்று அந்த முதிய எறும்பு பேசியது இதற்கெல்லாம் மற்ற எறும்புகளும் தனது சம்மதத்தை தெரிவித்தது.. அதன்படி எப்போது எவ்வாறு ஊரைவிட்டு வெளியேறுவது போன்ற திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.. அதில் முக்கியமாக சில சட்டதிட்டங்களும் கண்டிப்பாக்கப்பட்டன இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஊரைவிட்டு வெளியேறும் முன்பு அந்த எறும்பு சமுதாயத்தின் தலைவனால சொல்லப்பட்ட கட்டளைகள்.

#கூட்டம் கூட்டமாக வரிசையாக ஒழுங்காக ஒற்றுமையாக செல்ல வேண்டும். ஒற்றுமைக்கே உதாரணமாக விளங்கும் நாம் அதை எந்த நேரமும் பின்பற்ற வேண்டும்..
#போகும் வழிகளில் உணவுப்பொருள்கள் இருந்தால் அவற்றை தூக்கிச்செல்லவேண்டும்
#நாங்கள் சிறிதாக இருப்பதால் மனிதர்கள் கண்ணுக்கு புலப்படுவது கடினம் ஆகவே அவர்கள் கால்களுக்கு மிதிபடக்கூடும். அதனால் அவர்கள் வரும் திசையை தவிர்த்து வேறு திசையில் செல்லவேண்டும்.
#மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கவோ அவர்களை தாக்கவோ கூடாது. சில வேளை அவர்கள் உங்களை தொந்தரவு செய்தாலோ கொல்ல முயன்றாலோ உங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அவர்களை தாக்கலாம்.
#போகும் வழிகளில் மனிதர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைபவர்களை தூக்கிச்செல்ல வேண்டும். எங்கள் எடையைவிடவும் கூடுதலான எடையை எங்களால் தூக்க முடியும் என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
#செல்வது நகரம் ஆகையால் அங்கே சனநெரிசல்  அதிகம் இருக்கலாம் ஆகவே அவர்களின் கண்களுக்கு தெரியாமலோ கால்களுக்கு மிதிபடாமலோ செல்ல வேண்டும்.
#அங்கே உள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு கூட்டமாக பிரிந்து செல்ல  வேண்டும். எந்த வீட்டில் அதிக உணவுப்பொருள்கல் கொட்டிக்கிடக்கிறதோ அதை மற்ற கூட்டங்களுக்கு அறியத்தர வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ள வேண்டும் எதிர்கால தேவைக்கு.

என்றவாறு அமைந்திருந்தது அந்த எறும்பு தலைவனின் கட்டளைகள்,
தொடரும் பயணம் நகரம் நோக்கி.....

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics