நாங்களும் பார்த்துட்டமில்ல கடந்த கொஞ்ச நாட்களாகவே பதிவுலத்தில் எந்திரனை கடித்து மென்று விழுங்கி வாந்தியும் எடுத்துவிட்டார்கள் நிறையப்பேர் நான் கொஞ்சம் லேட் எல்லாரும் எல்லாத்தயும் எழுதிட்டாங்க நான் என்னத்த எழுதி என்ன பன்ன என்று நினைத்தே காலம் ஓடிவிட்டது.. நேத்து வந்த பயலெல்லாம் எந்திரன பத்தி எழுதுறான் நீ.. ஆறு மாசமா பதிவுலகத்துல் இருக்கே நீ.. எழுதக்கூடாதா என என் மனசாட்சி என்னையே கேள்வி கேட்குது அதுதான் ஆரம்பிச்சாச்சி..ரெடி ஸ்டார்ட்..
எந்திரனின் கதை இதுதான் அப்பிடின்னு ஆரம்பிச்சா நீங்களெல்லாம் கடுப்பாகிருவிங்கன்னு தெரியும். அதனால டிரக்கட்டா மேட்டருக்கு போயிடுவோம்.. இது வருவதுக்கு முன்னிருந்த எதிர்பார்ப்பு வந்தபிறகு குறைந்து போனது.. காரணம் ஷங்கரிடம் இதைவிட நிறைய எதிர்பார்த்தேன் ஷங்கரின் அன்னியன் திரைப்படம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் எந்திரன் ஏனோ ஏற்படுத்தவில்லை.. இது இந்திய சினிமாவிற்கு புதுசு என்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழினுட்பத்திக்காகவும் பாராட்டலாம் என்றாலும் முழுமனதாக திருப்திபடமுடியவில்லை..
தமிழ் சினிமாவில் ஹீரோ எப்படிப்பட்டவராயிருந்தாலும் காதலிக்கனும் டூயட் பாடனும் என்பது எழுதப்படாத விதியாச்சே.. இதிலும் ரஜினி காதலிக்கிறார் டூயட் பாடுகிறார்.. ஆனால் எவ்வளவு பாடுபட்டும் வயதைத்தான் மறைக்கமுடியவில்லை.. வசீகரன் ரஜினியைவிட சிட்டி ரஜினிதான் கலக்கல் அதுவும் வில்லனாக மாறும் தருனங்களில் நல்ல நடிப்பு..கருப்பு ஆடு உள்ள வந்ததாக கூறிவிட்டு மே,,, மே,,, என்று சொல்வாறே சூப்பர் ஐஸ் படம் முழுக்க வருகிறார் திரைக்கதை அப்படி.
முதலில் சிட்டியை உருவாக்கி செயற்படுத்தும் காட்சிகளில் ஒரு ஆங்கிலேய படம் பார்க்கும் உணர்வு வந்தாலும்.. பின் ஐஸின் மேல் சிட்டிக்கு காதல் வரும் காட்சிகளில் இல்ல இல்ல இது தமிழ் படம்தான் எங்கிற உணர்வைத்தருகிறது.படத்தில் கருனாஸ் சந்தானம் பாத்திரங்கள் கொஞ்சம் சிரிக்க உதவினாலும் மனதோடு ஓட்டவில்லை.. கிராபிக்ஸ் காட்சிகள் அழகு.ஆனால் அதுமட்டும் போதாது ஒரு படத்தின் தரத்தைச்சொல்ல. இது ஒரு மசாலா பொழுது போக்கு படம் என்ற வகையில் பார்த்தால் நல்லதொரு பொழுது போக்குத்தான்.. ஆனால் இதுஒரு மைல்கல் இந்திய சினிமாவையே மாற்றியபடம் என்றால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது..
படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டிருப்பது புரிகிறது..இதுமாதிரியான திரைப்படங்களின் வருகைக்கு இது முதற்படியாக அமையும் என இதை பாராட்டலாம்.. மற்றபடி படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் ஒரு ரோபோவால் அவ்வளவு அவசரமாக ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கமுடியுமா..? இதுமாதிரியான உண்மைக்கு புறம்பான வெறும் கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடிய வகையில் நிறைய ஆங்கிலப்படங்கள் வந்திருக்கின்றன் ஆனால் அதில் கற்பனை மட்டும்தான்.. அதிலும் ஒரு உண்மைதன்மை இருக்கும் இதிலே அது மிஸ்ஸிங்..
பாடல்களை பொருத்தவரை பரவாயில்லை ரகம்.. பாடல் காட்சியமைப்புகளும் அழகு. இரும்பிலே ஒரு இருதயம் முளக்குதே.... புதிய மனிதா பாடல்கள் என்னைக்கவர்ந்தவை ரஹ்மான் பின்னனி இசையிலும் கலக்கியிருக்கிறார்.. இறுதிக்கட்ட காட்சிகள் பாம்புபோல் உருவாக்கப்பட்ட காட்சிகள் நல்ல விருந்து குழந்தைகள் உட்பட.. (ஒரு வேளை இது குழந்தைகளுக்கான படமாயிருக்குமோ சரி விடுவோம் நாமலும் குழந்ததானே...) யாரப்பா அது எகத்தாளமா சிரிக்கிறது...
படத்தின் எடிட்டர் ஆண்டனி.. இசைக்கலவை ரசூல் பூக்குட்டி.. படத்தின் கலை இயக்குனர்.. ஒப்பனைக்கலைஞ்சர்.. நடன இயக்குனர்கள்.. இனை இயக்குனர்கள்.. ஒரு காட்சியில் வந்துபோகும அமரர் ஹனிபா.. வில்லனாக வரும் டென் சொங்கப்பா.. எழுத்தாளர் சுஜாதா.. பாடலாசிரியர்கள் வைரமுத்து,கார்க்கி (யார் இந்த கார்க்கி அவருக்கு பிளாக் எல்லாம் இருக்காமே தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இரானுவ பரிசோதனையில் சிட்டியால் சொல்லப்படும் கணிப்பொறிக்கும் காதல்தந்த கண்ணிப்பொறி.. என்ற கவிதைக்கு சொந்தகாரரான நா.முத்துக்குமார் ஆகியோருக்கும் பாராட்டுகள்.. ஒரு கலைஞ்சனை வெறுமனே குற்றம் மட்டும் சொல்லாமல்.. அவனின் திறமையை ஊக்குவிக்கும்போதுதானே அவனிடமிருந்து புதியவை ஊற்றெடுக்கும்..
ஷங்கரின் வித்தியாசமான பார்வைக்கும் உழைப்புக்கும் கண்டிப்பாக பாராட்டலாம்.. ஆனால் இந்தபடத்த வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் சன் டீவியின் ஓவர் பில்டப்பும் ரஜினி ரசிகர்களின் முட்டாள்தனமான செய்கைகளும் தாங்கமுடியல்ல நான் சொல்ல வந்தத சொல்லியாச்சி இனி நீங்க சொல்றத சொல்லுங்க..

25 comments:
எனக்கு படம் புடித்து இருக்கு
பாத்தாச்சா, ரைட்டு.
எனக்கு அந்த கொசு கிட்ட பேசு காட்சி செம கடுப்பு ஆகிடுச்சுங்க .
அதே மாத்ரி கிலிமாஞ்சாரோ பாடலும் கேக்குரக்கு மட்டும் நல்லா இருக்கு .,
பாகுரக்கு சுத்தமா பிடிக்கலை ..!!
பின்றீங்களே பாஸ்
>>..காரணம் ஷங்கரிடம் இதையவிட நிறைய எதிர்பார்த்தேன் ஷங்கரின் அன்னியன் திரைப்படம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் எந்திரன் ஏனோ ஏற்படுத்தவில்லை.>>>
கரெக்ட்
Accident பட்ட கார் முடி திருத்தும் இடத்தில் இருந்து கிளம்பும் போது திருத்தபட்டது எப்படி ?
சில அனாமிகள் வந்து மிக அனாகரீகமாக திட்டியிருந்தனர் நான் சங்கர் படத்தை கூடாதென்று சொன்னதாக.. நான் சங்கரை எங்கே திட்டியிருக்கேன் அவரின் உழைப்பை பாராட்டித்தானே இருக்கேன்.. முகத்தை மறைத்துக்கொண்டு கண்டதையும் பேசாமல் நேரடியாக நாகரீகமாக விமர்சியுங்கள்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்.. அநாகரீகமாக வந்தவற்றை நீக்கியுள்ளேன்..
@@@ சவுந்தர்
@@@ செல்வா
@@@ செந்தில்குமார்
@@@ raagavans
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@@@ சைவகொத்துபரோட்டா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
சி.பி.செந்தில்குமார் said...
//பின்றீங்களே பாஸ்//
உங்களை விடவுமா பாஸ்
@@@ raagavans said
//Accident பட்ட கார் முடி திருத்தும் இடத்தில் இருந்து கிளம்பும் போது திருத்தபட்டது எப்படி ? //
அதை எப்படி திருத்தினாங்கன்னு ஷங்கரிடம்தான் கேட்கனும் நண்பா..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காததும், அவரவர் எதிர்பார்ப்பை பொறுத்தது.
நீங்களும் எழுதியாச்சா ரியாஸ்.. நீங்கள் சொல்லியிருக்கும் சில விசயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு..
நீங்களும் எழுதியாச்சா?
Thanks dear buddy!
Welcome to : amazingonly.com
by
TS
Rajini rasigargal endru solli kondu thiriyum koothatthai Ilankaikku naadu kadatha vendum. Paalabishekamaam Total Idiots
அருமையான, பாரபட்சமில்லாத பார்வை. ஒரு நடிகனைப் பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக படத்திலுள்ள ஒட்டைகளை எல்லாம் மறைத்து படத்தை ஆகா, ஓஹோ என்று புகழ்பவர்கள் மத்தியில் நடுநிலையான விமர்சனம் செய்துள்ள தங்களுக்கு நன்றி.
//கட்டவுட்டுக்கு ஊற்றிய பாலை எந்திரன் பெயராலோ ரஜினியின் பெயராலோ சில அனாதையில்லங்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் மனிதர்கள்.....// பாலை ஊற்றியதொடு நில்லாமல் அதைப் பதிவாகவும் போட்டு தாங்கள் செய்வது சரிதான் என்று அதை நியாயப் படுத்திக் கொண்டு இருப்பவர்கள் உங்களது இந்தக் கருத்தைப் பார்த்தாவது புத்தி வந்து திருந்தட்டும்.
அருமையான விமர்சனம். !
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!
http://erodethangadurai.blogspot.com/
//இதுமாதிரியான உண்மைக்கு புறம்பான வெறும் கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடிய வகையில் நிறைய ஆங்கிலப்படங்கள் வந்திருக்கின்றன் ஆனால் அதில் கற்பனை மட்டும்தான்.. அதிலும் ஒரு உண்மைதன்மை இருக்கும் இதிலே அது மிஸ்ஸிங்..
//
இன்னும் அந்த அடிமை தனத்துலருந்து மீள முடியலயே அண்ணே.... அவனுங்க செஞ்சா அது கற்பனைக்கு அப்பாற்பட்ட லாஜிக்.... நம்ம ஆளுங்க அதுமாதிரி பண்ணா அது லாஜிக் மீறலாண்ணே...நம்மல நாம தான் தாழ்த்திக்கிறோம்.. அவனுங்களே நம்மாளுங்க திறமைய மதிச்சி US top 10 லயும், UK top 10 லயும் முதலிடம் குடுத்துருக்காய்ங்க....
நாமளாக ஒரு வேலையைச் செய்தால் செய்ததை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், மற்றவனிடம் காசு கொடுத்துப் பண்ணியதை நினைத்து பெருமைப் பட என்ன இருக்கிறது? அமெரிக்கா காரனிடம் காசு கொடுத்து கிராபிக்ஸ் காட்சிகளை எடுத்துவிட்டு தமிழன் சாதித்து விட்டான், அமெரிக்கா காரனுக்கே சவால் விடுமளவுக்கு வந்துவிட்டான் என்பதெல்லாம் பித்துக் குளித்தனம். அப்படியே படமெடுத்தாலும் உண்மையில் முதல் பத்து இடத்தில் இருந்ததா? யாராவது வதந்திகளைப் பரப்பினால் அப்படியே நம்பி விடுவதா? கீழே உள்ள சுட்டியைப் பார்க்கவும்.
//எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் ரேட்டிங்கில் உண்மையில் முதலிடமா ?
http://sangarfree.blogspot.com/2010/10/blog-post.html
//
ஆனா ஒன்னு பாலாபிஷேகம்
கர்பூரா ஆராத்தி
போன்றவைகளை
ரசிகர்கள்
செய்யாமல் நீங்கள் சொல்வது போல் செய்திருந்தால்
அதற்கும் விமர்சனம் வரும்
படம் ரசிகர்களுக்கு பிடிக்கல
படம் பப்படம் என்று விமர்சனம் எழுதுவாங்க
சிலது தவிர்க்க முடியாத செயல்
நல்ல தண்ணி ஆத்துல போயிட்டே இருக்கு
அதுல குடிக்க பயன் படுத்தறது கொஞ்சம் தான்
அதே போல் பால் அபிஷேகம் பண்றதும் அந்த ஒரு நாள் மட்டும் தான்
எவ்வளவோ பால் கெட்டு கீழே கொட்டுவதும் தினமும் நடக்கும் ஒரு செயல்
அது உங்கள் பார்வைக்கு வருவதில்லை
இது பார்வையில் படுகிறது அவ்வளவுதான்
@@@ Jayadeva..
உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..
இதில் நான் கூறியிருப்பவை படம்பார்த்தபோது என் மனதில்தோன்றிய விஷயங்கள்தான்.. நம்மவர்களை குறைத்துமதிப்பிடவோ மட்டம்தட்டவோயில்ல.. அவர்கள் எல்லோரையும் நான் பாராட்டித்தான் இருக்கிறேன்..
@@@முத்துசிவா சொல்வதுபோலும் ஆங்கிலப்படங்களின் மோகத்தினாலும் இருக்கலாம்.. அது அவர்களின் கருத்து அதற்கும் நான் மதிப்பளிக்கிறேன்
@@@ முத்துசிவா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நான் குறித்துக்காட்டியது ஆங்காங்கே உள்ள சில குறைகளைத்தான்.. உங்கள் கருத்துகளோடும் நான் உடன்படுகிறேன்..
@@@ KATHIR = RAY
//எவ்வளவோ பால் கெட்டு கீழே கொட்டுவதும் தினமும் நடக்கும் ஒரு செயல்
அது உங்கள் பார்வைக்கு வருவதில்லை
இது பார்வையில் படுகிறது அவ்வளவுதான் //
நிச்சயமாக கண்முன்னால் நடப்பதைத்தான் விமர்சனம் செய்ய முடியும்.. ஒது ஒன்றும் புதுவிஷயம் இல்லை என்பதை நான் அறிவேன். இருந்தும் இம்முறை கொஞ்சம் ஓவராகவே சிலரின் நடவடிக்கை இருந்தது அதுக்காகவேண்டியே குறித்துக்காட்டினேன்..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நீங்கள் கேட்ட கார்கி ... யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பதனால் ..
இங்கே .., கவிப்பேரரசு வைரமமுத்து அவர்களின் இரண்டாவது மகன், மதன் கார்கி
http://madhankarky.blogspot.com/
Post a Comment