காட்டு ராஜாவின் நிலை

பாகிஸ்தானின் ஒரு பின் தங்கிய நிலையிலுள்ள மிருககாட்சிசாலையில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது.. அந்த சிங்கத்துக்கு ஒரு நாளைக்கு உணவாக 2 கிலோ இறைச்சி மாத்திரம் வழங்கப்பட்டுவந்தது. அந்த உணவு அந்த சிங்கத்தின் பசியை தீர்க்க போதுமானதாக இருக்கவில்லை.. இதிலிருந்து எப்படியாவது விடுதலை பெறவேண்டும் என்ற ஏக்கம் கலந்த எண்ணத்துடன் வாழ்ந்து வந்தது.

அவ்வாறிருக்கும் பொழுது ஒருநாள் துபாய் மிருக காட்சிசாலையின் உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வருகைதந்த சமயம் இந்த மிருககாட்சிசாலையையும் பார்வையிட்டார். அப்போது இந்த சிங்கமும் கண்ணில்படவே அதை துபாய்க்கு கொண்டுவர ஆசைப்பட்டு அந்த நிர்வாகிகளிடம் அனுமதியும் பெற்றார்.

இதைக்கேள்விப்பட்ட சிங்கத்துக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.. துபாய் சொகுசு வாழ்க்கையை நினைத்து கனவு கான ஆரம்பித்துவிட்டது. சொகுசு குளிரூட்டப்பட்ட அறை உணவாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஆடுகள் கிடைக்கலாம் என பேராசை கொண்டது..

நினைத்த்து போலவே துபாய் வந்தாகிவிட்டது.. மிருககாட்சிசாலைக்கு கொண்டுவந்து ஒரு சிறிய அறையில் அடைத்துவைத்து முதல் நாள் காலை உணவாக ஒரு பை வந்தது அதை பிரித்துப்பார்த்ததும் சிங்கத்துக்கு ஒரே ஆச்சரியம் அந்த பைக்குள் ஒரு சில வாழைப்பழம் மட்டுமே இருந்தது.. சிங்கம் நினைத்துக்கொண்டது நாம் இப்போதுதானே வந்திருக்கிறோம் தவறுதலாகயிருக்கலாம் என நினைத்துக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அவ்வாறாகவே நடந்தது அதையும் சிங்கம் பெரிதாக எடுக்கவில்லை மூன்றாவது நாளும் அதை உணவே சிங்கத்துக்கு வழங்கப்பட்டது.. சிங்கத்துக்கு பெரும் கோபம் ஏற்பட்டது உணவு கொண்டுவந்த பையனை இழுத்து அறைவிட்டு கேட்டது உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். நான் யார் தெரியுமா காட்டுக்கே ராஜா. நான் இறைச்சிதான் உண்பேன் என்பது உங்களுக்கு தெரியாதா என்றது.

அதற்கு அந்தப்பையன் அமைதியாக சொன்னான். சார் நீங்கள் காட்டுக்கே ராஜாவாக இருக்கலாம். நீங்கள் இறைச்சி மாத்திரம்தான் உண்பீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்தது குரங்கு வீசாவில் அதனால வாழைப்பழம் மாத்திரமே உங்கள் உணவாக அனுமதிக்கப்படுகிறது என்றான்.. அதைக்கேட்ட சிங்கம் திகைத்துப்போய் வீசாவில் இப்படியெல்லாம் குளறுபடிகள் செய்கிறார்களா.. பாகிஸ்தானுக்கே திரும்பிச்செல்ல ஏதும் வழியுண்டா என விசாரித்தது அப்பாவியாக...

22 comments:

இராகவன் நைஜிரியா said...

சூப்பர்.... விசா குளறுபடிகளை இதைவிட அழகாக சொல்லமுடியாது.

இராகவன் நைஜிரியா said...

சிரிச்சுகிட்டே இருக்கேன்... ஆபிசில் என்னை எல்லோரும் வித்யாசமா பாக்கறாங்கப்பா...

Riyas said...

@@@ இராகவன் நைஜிரியா..

வாங்க சார்.. ரொம்ப நாளைக்கு அப்புறம். மத்திய கிழக்கில் பனிபுரியும் தொழிலாளர்களுக்கு இதுபோன்று நிறைய விசா குளறுபடிகளும் ஏமாற்று வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Admin said...

அருமை றியாஸ்..

குரங்கு வீசாவில வந்ததற்கு சிங்கம் சந்தோசப்படலாம்.. புறா குருவி விசா என்றிருந்தா அதன் பாடு என்ன????????

செல்வா said...

உண்மைலேயே கலக்கலா இருக்குங்க ., விசா குளறுபடிய ரொம்ப ரொம்ப அழகா எழுதிருக்கீங்க .. சத்தியமா கலக்கல் ..சிறுசாவும் இருக்கு , சுவாரஸ்யமாவும் இருக்கு .

செல்வா said...

இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் ..

ஹேமா said...

ரியாஸ்....சிரிச்சு முடியல.உற்று யோசித்தால் உண்மையும்கூட !

அருண் பிரசாத் said...

நிதர்சண நிலை

அரபுத்தமிழன் said...

அப்படித்தான் இங்கே படித்தவர்களுக்கும் சம்பளம்கிற மெயின் மேட்டரை எழுதல்யே :)

Mohamed Faaique said...

nallayirukku... unmai uraikkirathu....

எஸ்.கே said...

ரொம்ப நல்லா இருக்குங்க!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹா..ஹா அருமையா இருக்கு நண்பா...

Thomas Ruban said...

மிக அருமை....

ஸாதிகா said...

சூப்பர்.நல்லா யோசிக்கறீங்க ரியாஸ்.

Admin said...

//அரபுத்தமிழன் said...
அப்படித்தான் இங்கே படித்தவர்களுக்கும் சம்பளம்கிற மெயின் மேட்டரை எழுதல்யே :)//

is there any ul kuththu?? ;)

Chitra said...

விசா வச்சு காமெடி பண்ணிட்டீங்களே!

ஜெய்லானி said...

பாக்கிஸ்தானிக்கு போன வருஷம் இதை சொல்லி எனக்கும் அவனுக்கும் சண்டையே வந்துடுச்சி..!!கடைசியில சிங்கத்தை இந்தியா சிங்கமாவே மாத்திட்டேன் ..!!
ஆனா இது ரியல் கதைதான் .நிறைய இடங்களில் சரியான அங்கிகாரம் கிடைப்பதில்லை என்பதே இதன் அர்த்தம் ..!! :-))

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கதுங்கோ....

Philosophy Prabhakaran said...

நன்றாக புனைந்திருக்கிறீர்கள்...

elamthenral said...

மிக அருமை...

S Maharajan said...

இங்க இருக்கின்ற இந்த நிலையை அருமையா சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழரே!

Unknown said...

மிக அருமை!!!

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...