தேநீர்+நான்+வைரமுத்து

நான் ஒரு தேநீர்க்காதலன். உலகில் எத்தனை எத்தனையோ குடிபாணங்கள் இருந்தபோதிலும் நான் ரசித்துப்பருகுவது தேநீர் மட்டும்தான். ஏனையவைகள் வாயை நனைத்து தொண்டைவழியாக வயிற்றுக்குள் செல்லும் தேநீர் மட்டும் உதடுகளில் பட்டவுடன் இதயம் வரை பரவுகிறது அதன் புத்துணர்ச்சி. கவியரசு வைரமுத்துவுக்கு கூட தேநீர் பிடிக்கும் போல தேநீர் பற்றி மிக அழகான கவிதையொன்றை எழுதியிருக்கிறார். அதில் தேநீர் பருகும் கணங்களை இவ்வாறு சொல்கிறார்.
தேநீர் பருகும் கணங்கள்
சிலநிமிடத் திருவிழாக்கள்
தேநீர்க்கோப்பை
ஒரு
கையடக்க சந்நிதானம்.

உதடுகளில் சூடுகொளுத்தி
கதகதப்பாய் நாவுதடவி
சுவையரும்புகள் ஒவ்வொன்றாய்த்
தொட்டெழுப்பி
இனிப்பு கடந்தொரு துவர்ப்பு பரப்பி
தொண்டையில் நழுவும்போதே
ரத்தக்குழாய்கள் புடைக்க மலர்த்தி 
இருதயத்தின் உணர்ச்சிமயமான பிரதேசத்தை
முறைப்பெண்ணின்
முந்தானைபோல்
சிருங்காரமாய் உரசி
குடலில் விழுந்த மறுகணம்
மூளையின் திரிகளில் அது
சுடர்கொளுத்தும் போது
மோட்சத்தின் பக்கத்து வீதிவரை
சென்று திரும்பும் ஜீவாத்மா.


ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று,ஆகாயம், பூமி இவை யாவும் தேநீரில் உள்ளடக்கம் என தனது கவிதையை தொடர்கிறார் வைரமுத்து.
குவளைத்தேநீரில்
ஐம்பூதம் அடக்கம்
தேயிலைச் செடியின் வேர்வழி புகுந்து
பச்சிலை எங்கும் பரவிய மண்
தேயிலையின் சாரம்வாங்கித்
தன்னிறமிழந்த நீர்.
தேநீர் சுவைக்கத்
தித்திக்கப் பரவிய தீ.
பிஞ்சுத்தேயிலை மணத்தைப்
பிரசாரம் செய்யும் ஒரு துண்டுக்காற்று.
இலை தலைகுளித்த மழைவழியே
துளித்துளியாய் ஆகாயம்.தேநீரை ரசித்து ருசித்து அனுபவித்து இவ்வாறு பருகவேண்டும் என்கிறார் வைரமுத்து அவர்கள்.


பழைய மனைவியின்
முத்தம் போலொரு
சம்பிராதாயமல்ல தேநீர் பருகல்
ஒவ்வொரு மிடரும்
புதிய காதலியின் பசத்தமுத்தம்
இதழ் பருகும்போது
கண்மூடல் போல்
தேநீர் பருகக் கண்மூடவேண்டாமா!


ஆசைக்கோப்பையில் உதடு பொருத்தி
ஓசை மீதுற உருகி உறிஞ்சி
நினைவு மறந்து நிகழ்வு கடந்து
சின்னதாய் ஒரு மரணம் எய்தி
வான்
மண்
இரண்டினிடையே
மேக வெளிகளில்
மிதந்து திரிந்து
பொத்தென்று விழவேண்டும்
பூமியில் மீண்டும்...

பிடிச்சிருந்தா எங்கெல்லாம் ஓட்டுப்பட்டை இருக்குதோ அங்கெல்லாம் ஒரு ஓட்டு குத்திட்டுப்போங்க... அப்படியே ஏதாவது சொல்லிட்டும் போங்க..

கடற்கரைச்சிறுக்கி...!ஒரு மாலை வேளை
மனசுக்கு சுகம் தேடி
நடந்தன கால்கள்
கடற்கரை நோக்கி...
உடம்பில் மோதி
மனதில் நுழைந்து
சுவாசத்தில் கலந்து
உணர்வை தடவிச்சென்றது
எங்கோயிருந்துவந்த
காற்று...!
எவ்வளவு அமைதி
உனக்குள்
ஏன் பொங்கிஎழுந்து
உயிர்ப்பலி கேட்கிறாய்
உன்னை
உசுப்பிவிடுவது யார்?
உறைத்துக்கொண்டது மனசு
உள்ளுக்குள்...
கடல் அழகானது
அதைவிடவும்
அழகாக அங்கேயொருத்தி
கடலை ரசிப்பதா
அவளை ரசிப்பதா
சண்டையிட்டுக்கொண்டன
கண்களும் மனசும்...
கண்கள் மட்டும்
கடலை ரசிக்க
உதவாக்கரை மனசு மட்டும்
அலைந்தது
அவள் பின்னால்...
அவளைத்தொட்ட காற்று
என்னைத்தொடாதா என
ஏங்கித்தவித்தது மனசு..
சூரியனை விழுங்கும்
கடல் போல்
என்னை விழுங்கியது
அவள் பார்வைகள்
காற்று வாங்க வந்தாளா
மனசு பறிக்க வந்தாளா
அந்த கடற்கரை சிறுக்கி...
கடைசியாய்
ஒரு புன்னகையை மட்டும்
தூக்கிவீசிவிட்டு
தூரச்சென்றுவிட்டால்
வீசிய புன்னகையை
மனசு அள்ளிக்கொணடது
அவள் ஞாபகமாய்...
அவ்விடமே வெறுமையானது
அவள் போன பிறகு
அங்கிருக்க பிடிக்கவுமில்லை
கடலும் மறைந்தது
இருள் போர்வைக்குள்.
கால்கள் மீண்டும்
நடந்தன
வீடு நோக்கி...!


சின்னப்புள்ளத்தனமா இருக்கே...!

பாடசாலை காலங்களில் நாம் எழுதிய கட்டுரைகளாகட்டும் கவிதைகளாகட்டும் பின்னாட்களில் படிக்கும் போது சிலது சிரிப்பை வரவழைக்கும், சிலது அடப்பாவி எப்படியெல்லாம் எழுதியிருக்கே, சிலது ஆஹா நல்லாருக்கே என சொல்ல வைக்கும் எவ்வாறாகயிருந்தாலும் அது ஒரு தனி ரசனை ஓர் அழகான அனுபவம். நாம் கடந்துவந்த காலங்களின் சுவடுகள்..


எனக்கும் அவ்வாறன அனுபவம் நிறைய ஏற்பட்டிருக்கு அதில் ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்க போறேன். அன்மையில் பழைய புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்த போது பாடசாலை காலத்தில் கிறுக்கிய டயரி ஒன்னு கிட்டியது அதை புரட்டிப்பார்க்கும்போது அட இதெல்லாம் எழுதியது நாந்தானா என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது.. படிக்கும் காலத்தில் கவிதைன்னா எப்படியிருக்கும் என்று அறியாமலேயே கவிதை எழுதுறோம்ன்னு நினைத்துக்கொண்டு கிறுக்கிய சில கவிதைகள். சிலது சிலேடை, மோனை, உருவகம் உவமையுடன் அழகாகயிருந்தாலும். பல கவிதைகள் சின்னப்புள்ளத்தனமாகவே இருந்தது.


அவ்வாறு சின்னப்புள்ளத்தனமா இருந்த கவிதைகளில் பிரபலம் மகாகவிபாரதி பற்றி எழுதியது. இதை ரொம்பநாளா பிளாக்ல எழுதனும்ன்னு தோன்றினாலும் அந்த முண்டாசுக்கவிஞ்சனை அவமதித்தது போலாகிடும் என்ற காரணத்துக்காக எழுதவில்லை.. இப்போது வெறும் நகைச்சுவைக்காக மட்டும்
தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களே மன்னிச்சிடுங்கப்பா..


மகாகவி பாரதியே
நல்ல வேளை
நீ அன்று பிறந்துவிட்டாய்.
இன்று பிறந்திருந்தால்
சிம்ரனின் இடையிலும்
மனிஷா கொய்ராலாவின்
மார்புக்கு மத்தியிலும்
தேடவேண்டிய நிலை
ஏற்பட்டிருக்கலாம்
உன் தமிழை...!
அந்த நாட்களில் எழுதிய இன்னுமொரு காதல் கவிதையொன்று. இதுக்கெல்லாம் கவிதைன்னு சொன்னா அப்போ கவிதைக்கு என்னன்னு சொல்றது அப்புடியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேள்வியெல்லாம் கேட்கப்படாது ஏன்னா இதெல்லாம் சின்னப்புள்ளயா இருக்கும்போது எழுதினது (இப்பமட்டும் என்ன பெரிய்ய்ய்ய்ய்ய இலக்கியவாதி ரேஞ்சுக்கா எழுதுற அப்புடி யாரோ சொல்றிங்க போல) இதெல்லாம் நமக்குள்ள சகஜமுங்கோ..

புன்னகை என்ற தலைப்பில் எழுதியது..

வின்னில் மின்னிடும்
வின்மீன் போல
உன்னில் மின்னிடும்
புன்னகைப்பூக்களை
பறிக்க நினைக்கிறேன்
ஆனால்
தோன்றி மறையும்
மினனலைப்போல்
என்னை
கடந்து செல்கின்றாய்

எப்படியிருக்கென்று சும்மா சொல்லிட்டுப்போங்க அப்புறம் என் வலைப்பூவின் பெயரை மாற்றலாம் என நினைக்கிறேன் ஏதாவதொரு நல்ல பெயரா சொல்லுங்களே ப்ளீஸ்,,,,,,,,,,

விடியல்....!அதிகாலயிலேயே... எழுந்த ஆப்தீன் இறைவனை வணங்கிவிட்டு மனைவியின் தேநீருக்காய் காத்திருந்தார்...


"இந்தாங்க தேத்தண்ணி....," மனைவியிடமிருந்து...

வெறும் தேநீர்தான் பாலோடு கலந்து பருகுமளவுக்கு வசதியில்லை ஆப்தீன் குடும்பத்துக்கு.

தேநீர் பருகிக்கொண்டே...! " கொஞ்ச நாளா கூலி வேல இல்லாம கையில காசுமில்ல... கடயில போய் கடனுக்கு கொஞ்சம் சாமான் கேட்டா.. ஏதோ பிச்ச கேட்கிறமாதிரி கேவலமா பாக்காங்க...

இடைநடுவே மனைவி... " அதாங்க எனக்கும் ஒன்னும் புரியல்ல சமைக்கிறதுக்கு கூட அரிசி பருப்புன்னு எதுவும் இல்ல... ரெண்டு புள்ளங்கலோட படிப்பு செலவுக்கும் காசு வேணும். இஸ்கூல்லயிருந்து பசியோடு வர்ற புள்ளங்களுக்கு சோத்த குடுக்காம நம்மட கஷ்டமெல்லாம் சொல்லிட்டிருக்கேளுமா... அதுங்களாயவது நல்லா படிக்க வெச்சாத்தான் நம்ம பட்ற கஷ்டம் நாளக்கி அதுங்க படாம நல்லாயிருக்குங்க..!"


தேநீர் கோப்பையுடன்... "முன்னெல்லாம் ஒவ்வொரு நாளும் கூலி வேல செய்தா எவ்வளவாவது காசு கையிலிருக்கும்.. இப்ப அதுக்கும் வழியில்ல. எல்லாத்துக்கும் மெசின் வந்திருச்சி.. நாத்து நட்றதிலிருந்து வேளான்மை அறுப்பு வரையும் எல்லாம் மெசின் போட்டுத்தான் செய்றாங்க.. அதால கூலி வேலக்கி யாரும் ஆட்கள் எடுக்கிறதில்ல.."

" இப்படி எல்லாத்துக்கும் மெசின் வந்துட்டா கூலி வேல செய்ற சனங்க கதி என்னாகுங்க" என்ற மனைவியின் கேள்விக்கு...

"எல்லாத்துக்கும் படைச்சவன் ஒரு வழிய வெச்சிருப்பான் பார்ப்போம்" என்ற பெருமூச்சுடன் தேநீரும் தீர்ந்தது புத்துணர்ச்சி மட்டும் எஞ்சியிருக்க...

'ஹஸினா....' 'என்னங்க....'

"எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனயிருக்கு.." 'என்னங்க அது'

"இந்த கூலி வேலய நம்பியிருக்காம ஏதாவது கைத்தொழில் தொடங்கினா எப்டி..."

'அதுக்கு காசுக்கு எங்கங்க போறது'

"காசெல்லாம் தேவையேயில்ல ஹஸினா... நம்மட உடல் உழப்பிருக்கு, தோட்டத்துல மண் தண்ணியிருக்கு, காட்டுக்கு போனா விறகு இருக்கு. இதெல்லாம் வெச்சி தோட்டத்துலயே செங்கல் செய்து வித்தா நாலு காசு கெடக்கிம்தானே.."


'நல்ல யோசனதாங்க... முயற்சி செய்யாமலே தோற்கிறத விட முயற்சி செய்தே தோற்கிறது.. வெற்றி பெறுவதை விட மேலுன்னு பெரியவங்க சொல்லுவாங்க... முயற்சி செய்துதான் பார்ப்போமே...'


"கட்டிடம் கட்றதுக்கு நம்ம ஊரு சனமெல்லாம் பக்கத்து ஊருக்குப்போய்த்தான் செங்கல் வாங்கிட்டு வர்றாங்க. நாமே செய்து வித்தா வாங்கமாட்டாங்களா என்ன...! நம்ம காதர் நானாகிட்ட செங்கள் செய்ற தட்டச்சு இருக்குன்னு சொன்னாரு நான் இப்பவே போய் வாங்கிட்டு வாறேன்.."


'இருங்க ரொட்டி சுட்டிருக்கேன் சம்பல் செய்து தர்றேன் சாப்பிட்டு போங்க" என்ற மனைவியின் குரலோடு.... தூரத்து வானில் விடியல் தெரிந்தது.......

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் முயற்சித்துப்பார்த்த சிறுகதையொன்று மீள்பதிவாக......

சப்தங்கள் கடந்து வா..!


அமைதியை குழைத்துக் குழைத்துச்
சமைத்த தபோவனம்
பார்க்கும் வெளிஎங்கும்
பச்சை ஆதிக்கம்

கற்புடைப் பெண்டிர்நெஞ்சில்
புகமுடியாத காமுகன் போல்
காடுபுகவியலாமல்
கதிரொளி தவிக்கும்

ஊர்சுற்றிக் களைத்துவரும் காற்று
கிளையேறி இலைமீது கண்ணுறங்கும்

மழைத்துளியோ பனித்துளியோ
மூங்கிலிலை மூக்குகள்
சொட்டிக்கொண்டேயிருக்கும்

நிஷ்டையிலிருந்தார் மாமுனிவர்
நெற்றிப்பொட்டில் உயிர்திரட்டி

"முனிபுங்கவ!
அடியேனைச் சீடனாய்
ஆட்கொள்வீரா?

உமது பாதுகைக்குப் பக்கத்தில்
யானமர இடமுண்டா?

ஜோடிச் சூரியக் கண்கள் திறந்து
முனிவர் வினவினார்.
"யார் நீ?"

துறவறம் பூணவந்த
அரசன் யான்
பொன்னென்ற திடத்திரையை
பெண்ணென்ற ஜடத்திரையை
மண்ணென்ற இடத்திரையை
ஞானவாள் கொண்டு துணித்து விலக்கி
பொய்பொருள் உலகு புறந்தள்ளி
மெய்பொருள் தேடி வந்தேன்
ஆட்கொள்வீர் அய்யன்மீர்

கண்கள் வழி ஆழ்மனம் துழாவிய முனிவர்
மெல்லியதோர் கேள்வி கேட்டார்.

"அப்பனே
என்னென்ன ஓசைகள் நீ
வரும்வழியில் செவியுற்றாய்?

"பறவைகளின் தாய்மொழி கேட்டேன்
சருகுகள் மீது விலங்குகள் ஆடும்
சடுகுடு கேட்டேன்
ஊமைக்கரையோடு நதி நடத்தும்
ஓயாத பேச்சுவார்த்தை கேட்டேன்
பூக்களின் தவம்கலைக்கும்
வண்டினத்தின் வல்லோசை கேட்டேன்
களிறுதேடும் பிடியின்
பிளிறல் கேட்டேன்"

முனிவரின்
ஜோடியச் சூரியங்கள் மூடிக்கொண்டன
"பக்குவம் இல்லை மகனே
தக்கை தரை தொடாது
இன்றுபோய்ச் சில்லாண்டு சென்றுவா!"

சிலஆயிரம் சூரியங்களைப்
பறித்து எறிந்தது வானம்
சிலகோடிப் பூக்களை
உடைத்து உதிர்த்தது வனம்
இரவுகளும் பகல்களும் உருகிஓடிக் கலந்தன
பிரபஞ்சப் பேராழியில்

ஒருநாள்
பனியின் வெண்மையும் கங்குலின் கருமையும்
வடியாததொரு விடிகாலையில்
மீண்டும்
அதேகுரல் அதேமொழி;

"முனிபுங்கவ!
அடியேனைச் சீடனாய ஆட்கொள்வீரா?"

ஜோடியச் சூரியங்கள் மீண்டும் திறந்தன
"இப்போது சொல்!
என்னென்ன ஓசைகள்
வரும் வழியில் செவியுற்றாய்?"

"பிறைவளரும் ஒலிகேட்டேன்
விண்மீங்கள் மொழிகேட்டேன்
மொட்டுகள் மலரும் நுண்ணொலி கேட்டேன்
விடியலை நோக்கி
இரவு நகரும் இசை கேட்டேன்
எனக்குள்
கண்ணீர் ஊறும் ஓசை கேட்டேன்"

முனிவர் உதட்டில் ஞானப்புன்னகை ஒன்று
இழையோடி விழுந்தது

"உட்கார்
பாதுகைக்குப் பக்கத்திலல்ல
என் புலித்தோலின் மிச்சத்தில்"

கிழக்கே
விண்மீங்களைத் துறந்த வானம்
சூரியனை ஈன்று கொண்டிருந்தது.

-வைரமுத்து....

வந்தாச்சு வந்தாச்சு...!

ஊருக்குப்போய் வந்தபிறகு இப்பதான் பதிவுலகம் பக்கம் வர முடிந்தது.. எல்லோரும் நலம்தானே நலமாகத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. ஒரு மாதம் வராமாவிட்டா ரொம்ப பேரு மறந்துட்டாங்க போல நானொன்றும் புதுசு இல்லிங்கோ.. "யாரது அந்த மொக்கையா கவிதைங்கிற பேர்ல் இம்ஸை பண்ணுவியே நீயா" அப்பிடின்னு யாரோ சொல்றது கேட்குதுங்கோ.. ஆமாங்கோ நானேதான்.

ஊர் நிலைமை.

என்னத்த சொல்றது ஊருக்குப்போய் நான்கைந்து நாட்கள்தான் வெயிலையே பார்த்தேன் மழையோ மழை. அப்படியொரு மழை. எங்கள் பகுதிக்கு வெள்ளம் அபாயம் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும்.இம்மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்கிலங்கைதான். வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் ஆயிரக்கணக்கில் முகாம்களில் தஞ்சமடைந்தமை பரிதாபமே. இன்னும் மழை விடாமல் பெய்வதாகவும் அறிய கிடைக்கிறது.

பாடசாலை காலத்தில் கிறுக்கிய சில வரிகள் இப்போது பொருந்தும் என நினைக்கிறேன்..

தூரல் போடும் வானமே
உன் மழைச்சிரிப்பு
உதவட்டும்
சிரிப்பதற்கு மட்டும்.
உன் சிரிப்பு
உலகில்
அளவு கடக்கும் போது
மனிதர்கள் அழுவது
புரிகிறதா..
நாங்கள் சிரிப்பதற்கு
மட்டுமே
வேண்டுகிறோம்
உன் சிரிப்பை
அழுவதற்கல்ல...!


நாட்டு நிலைமை..

நாட்டைப்பற்றி சொல்லப்போனால் முதலில் சொல்லவேண்டும் இலங்கை நெடுஞ்சாலைகள் பற்றித்தான். அவ்வளவு மோசமாக இருக்கிறது இலங்கையின் பாதைகள். பயணம் போனால் பாதையிலேயே அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இலங்கையை இப்போது ஏழைநாடு என்று சொல்லமுடியாதளவிற்கு பாதைகள் வாகனங்கள் அதிகரித்திருக்கிறது.. வாகன்ங்களின் அதிகரிப்பிற்கேற்ப பாதைகள் விஸ்தரிக்கப்படுவதோ புதிய பாதைகள் உருவாக்கப்படாமை போன்றவை பெரும் குறையே.இலங்கையின் நகர்புறங்களை காட்டிலும் கிராம புறங்களின் வளர்ச்சி அதிகமாக கானப்படுகிறது. விவசாயத்துறை அதிக வளர்ச்சி கண்டு வருவதே இதற்கு காரணமாகலாம்.. இயற்கை அழிவுகள் மட்டும் பாதிக்காவிடின் இம்முறை கிராமபுறங்களில் அதிகளவு நெல் மற்றும் தாணிய விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சிறு வெங்காய பயிர் செய்கை நல்ல முறையில் நடைபெற்று மக்கள் அதன் மூலம் நண்மையடைவதை கானக்கூடியதாகயிருந்தது. அதுமட்டுமில்லாமல் இலங்கையின் எல்லா பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணத்துக்கு பஸ் போக்குவரத்து நடைபெறுகின்றமை மகிழ்ச்சியான விடயமாகயிருந்தது..


அப்புறமா...

யாருக்கெல்லாம் கிரிக்கெட் பிடிக்கும் கையத்தூக்குங்க பார்க்கலாம்.. நம்மளுக்கு அதுலதான் பைத்தியமாச்சே.. உலககிண்ணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.. அது சம்பந்தமான பதிவுகளை பின்னாட்களில் போடலாம் என உத்தேசித்திருக்கிறேன்.. இம்முறை நம் ஆசிய மைதாணங்களில் போட்டிகள் நடைபெறுவதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என நினைக்கிறேன்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics